சமீபத்தில் கங்காரில் இடிக்கப்பட்ட இந்து கோவில் தொடர்பான சிவில் வழக்கை எதிர்கொள்ளத் தயார் என பெர்லிஸ் மந்திரி பெசார் அபூ பக்கர் ஹம்சா தெரிவித்துள்ளார். 1965-ஆம் ஆண்டு தேசிய நிலச் சட்டத்தின் கீழ், அந்தக் கோவிலை இடிப்பதற்கு மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று அவர் கூறியதாக வட்டாரங்கள்…
மந்திரி புசார் பதவி இரண்டு தவணைக்கு மட்டுமே- ஜோகூர் பக்காத்தான்…
ஜோகூரில் மந்திரி புசாராக இருப்பவர் இரண்டு தவணைகளுக்கு மட்டுமே அப்பதவி வகிப்பார் என்று பக்காத்தான் ரக்யாட் உறுதியளித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட மாநில தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்த உறுதிமொழி தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜோகூர் மாஜு டான் பெர்கபாஜிகான் (Johor Maju dan Berkebajikan) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அவ்வறிக்கை, பக்காத்தான்…
நுருல் இஸ்ஸா நிகழ்வில் பெர்சே அம்பிகா
வாக்காளர் பட்டியல் குறைபாடு போன்ற கவலைகள் இருந்தாலும் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா, எப்படியோ முயன்று பெர்சே அமைப்பின் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனை தம் கூட்டம் ஒன்றுக்கு அழைத்து வந்திருந்தார். நேற்றிரவு பங்சாரில் ஒரு சிறிய இடத்தில் அக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 400 பேர் இடித்துப்…
2000 ஏக்கர் நிலம் எங்கே? குலா மீண்டும் கேட்கிறார்
-எம். குலசேகரன், ஏப்ரல் 13, 2013. மீண்டும் மீண்டும் நான் கேட்டுக்கொண்டே இருக்கும் கேள்விதான் இது. இருந்தாலும் பிரச்சனை தீராதவரையில் பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியான நான் கேட்கவேண்டும் என்ற கட்டாயத்தில் கேட்கிறேன். 8 மாதம் ஆட்சியில் இருந்த பாக்கதான் கட்சியைப் பார்த்து நீங்கள் தமிழ்ப் பள்ளிகளுக்கு ஒன்றுமே செய்யவில்லை…
விஜய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 14, 2013. இந்நாட்டு இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய விஜய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்விஜய சித்திரைப் புத்தாண்டு, இந்நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வெற்றியை அளிக்க வேண்டும். நாட்டில் செல்வங்களின் சீரழிவை தடுக்க வேண்டும். ஊக்கமுடன் ஒற்றுமையும், புரிந்துணர்வும்…
நாட்டில் வறுமையும் இல்லாமையும் அதிகரித்தால் அமைதி நிலவாது: அதற்கு பக்கத்தான்…
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 13, 2013 ஐந்து ஆண்டுகளுக்கு முன் நாட்டில் சில மாநிலங்களில் சிறிய ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்த மக்கள் வழங்கிய அதிகாரத்தைக் கொண்டு எவ்வளவு நேர்மையாக, உண்மையாக மக்களுக்குச் சேவையாற்ற முடியுமோ அதைச் செய்தோம். குறிப்பாக, சிலாங்கூர் மக்களுக்கு 5 ஆண்டுகள் சேவையாற்ற…
தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை ஹிண்ட்ராப் இன்னும் முடிவு செய்யவில்லை
13வது பொதுத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழு இன்னும் முடிவு செய்யவில்லை. ஏனெனில் மலேசிய இந்திய ஏழைகளை உயர்த்துவதற்கு தான் வழங்கிய பெருந்திட்டத்துக்கு பிஎன், பக்காத்தான் ராக்யாட் அங்கீகாரத்துக்காக அவற்றுடன் ஹிண்டராப் இன்னும் பேச்சு நடத்திக் கொண்டிருப்பதாக அதன் தேசிய…
வேட்பாளர் நியமன நாளுக்கு இரண்டு நாள் முன்னதாக ஆர்ஒஎஸ் டிஏபி…
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பினாங்கில் நடைபெற்ற டிஏபி கட்சியின் மூவாண்டுப் பேரவையில் மத்திய நிர்வாகக் குழுத் தேர்தல்களின் போது நிகழ்ந்த நிர்வாகக் குளறுபடி தொடர்பில் செய்யப்பட்டுள்ள புகார்கள் மீதான விசாரணையில் கலந்து கொள்ளுமாறு ஆர்ஒஎஸ் என்ற சங்கப் பதிவதிகாரி அலுவலகம் டிஏபி-யைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஏப்ரல் 9ம் தேதியிடப்பட்ட…
ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் கிறிஸ்துவர்கள் அதிருப்தி
தேர்தல் ஆணையம் மே 5 ஞாயிற்றுக்கிழமை வாக்களிப்பை வைத்திருப்பதை கண்டித்த சரவாக் கிறிஸ்துவர்கள், தேர்தல் ஆணையம் தங்களைக் கவனத்தில் கொள்ளவில்லைபோல் தெரிகிறது என்று குறைபட்டுக்கொண்டனர். மலேசியா பல இனங்களையும் சமயங்களையும் கொண்ட நாடு என்பதையும் இங்கு மக்கள்தொகையில் சுமார் 10 விழுக்காட்டினர் கிறிஸ்துவர்கள் என்பதையும் ஆணையம் மறந்ததுபோலும் என்றவர்கள்…
BR1M பெற்றவர்களுக்கு பிஎன் தலைவர் நஜிப் கடிதம் அனுப்பியுள்ளார்
BR1M என்ற ஒரே மலேசியா உதவித் தொகை (BR1M) பெற்றவர்களுக்கு பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கடிதம் அனுப்பியுள்ளார். நேற்று அவர்களுக்கு அந்தக் கடிதங்கள் கிடைத்தன. "BR1M, அரசாங்கத்தின் அக்கறையைக் காட்டுகின்றது. உங்கள் நல்வாழ்வை உறுதி செய்ய வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்கும் முயற்சியே அதுவாகும்." "வரும்…
பாஸ், ஆயர் ஈத்தாமில் முஸ்லிம்-அல்லாத ஒருவரைக் களமிறக்குகிறது
பாஸின் ஆயர் ஈத்தாம் வேட்பாளராக பாஸ் ஆதரவாளர் காங்கிரஸ் (பிஎஸ்சி) தலைவர் ஹு பாங் செள அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த இஸ்லாமிய கட்சியின் வேட்பாளராக முஸ்லிம்-அல்லாத ஒருவர் களமிறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட் இன்று காலை ஜோகூர் பாருவில் அந்த அறிவிப்பைச்…
பெர்சே: தேர்தலில் அமைதிகாக்கும் உறுதிமொழியா, அதற்கு வேறு இடம் செல்லுங்கள்
வரும் தேர்தலில் அமைதிகாக்க உறுதிகூறும் ஆவணத்தில் கையொப்பமிட வேண்டும் என்று முன்னாள் டிஏபி உதவித் தலைவர் துங்கு அசிஸ் இப்ராகிம் விடுத்துள்ள கோரிக்கையை பெர்சே இயக்கக்குழு நிராகரித்துள்ளது. ஏனென்றால், தேர்தல்கள் அமைதியாக நடப்பதைத்தான் பெர்சே என்றுமே வலியுறுத்தி வந்திருக்கிறது என்று அக்குழு கூறிற்று. எனவே, துங்கு அசிஸ் தேர்தலில்…
செக்ஸ் வீடியோ கறை படிந்த பிஎன் பிரச்சாரத்தின் தொடக்கம்
"அது உண்மையாக இருந்தாலும் எந்தத் தாக்கமும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் பல முறை அந்தத் 'தந்திரத்தை' பயன்படுத்தி விட்டார்கள்" இன்னொரு செக்ஸ் வீடியோ இந்த முறை ஒரு பாஸ் தலைவர் எனக் கூறப்பட்டது அடையாளம் இல்லாதவன்#36465711: அம்னோவுக்கு எதுவும் விளங்கவே இல்லை. அது தொடர்ந்து செக்ஸ் வீடியோக்களை…
போலீஸ்: பொதுத் தேர்தலின் போது சொஸ்மா தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது
13வது பொதுத் தேர்தலில் சொஸ்மா என அழைக்கப்படும் பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது எனப் போலீஸ் உறுதியளித்துள்ளது. பிரச்சாரத்தின் போது தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலை ஏற்படுத்துகின்றவர்கள் மீது மட்டுமே அந்தப் புதிய சட்டம் பயன்படுத்தப்படும் என தேசியப் போலீஸ் படைத் தலைவர் செயலகத்தை…
‘அது அம்னோவின் அப்பட்டமான அவதூறு’ என்கிறார் முஸ்தாபாவின் வழக்குரைஞர்
பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியை பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் அஸ்முனி அவி, அந்த செக்ஸ் வீடியோவில் காணப்படும் மனிதர் தமது கட்சிக்காரர் எனக் கூறப்படுவதை மறுத்துள்ளார். முஸ்தாபா தம்மை அவரது பிரதிநிதியாக நியமித்துள்ளதாகவும் அவர் சொன்னார். அவர் அவி அண்ட் கோ என்னும் வழக்குரைஞர் நிறுவனத்துக்குத் தலைமை தாங்குகிறார்.…
சிலாங்கூர் மந்திரி புசார் : பெர்சே முதலில் ‘உண்மைகளை அறிந்து…
சிலாங்கூர் பராமரிப்பு அரசாங்கம் என்ற முறையில் மாநில நிர்வாகம் மீது 'சந்தேகம்' கொள்வதற்கு முன்னர் பெர்சே உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என அதன் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் கேட்டுக் கொண்டிருக்கிறார். காலித்-தின் பராமரிப்பு அரசாங்கம் பல விதிமுறைகளை மீறியுள்ளதாகக் கூறி 'பெயர் குறிப்பிட்டு அவமானப்படுத்தும்"…
செக்ஸ் வீடியோவுடன் தனக்கு தொடர்பு இல்லை என்கிறது பிகேஆர்
அண்மையில் வெளியான செக்ஸ் வீடியோவுடன் பிகேஆர் உறுப்பினர்களை பல வலைப் பதிவாளர்கள் தொடர்புபடுத்தி எழுதியிருப்பது அபத்தமானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் என பிகேஆர் இன்று வருணித்துள்ளது. குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட கிரிமினல் ஒருவர் (வலைப்பதிவாளர் பாப்பாகோமோ) அந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் சொன்னார். அத்தகைய…
செனபோன் மலேசியாவுக்குள் நுழைய சட்ட நடவடிக்கை எடுக்கிறார்
மலேசியாவுக்குள் தாம் நுழைவதற்கு மறுப்புத் தெரிவிக்கும் குடி நுழைவுத் துறை நோட்டீசை ரத்துச் செய்து நாட்டுக்குள் நுழைய அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளும் நீதித் துறை மறு ஆய்வு விண்ணப்பத்தை ஆஸ்திரேலிய சுயேச்சை செனட்டர் நிக் செனபோன் தாக்கல் செய்துள்ளார். அவரது வழக்குரைஞர் ரஞ்சித் சிங் வழியாக அந்த விண்ணப்பம்…
சுங்கை சிப்புட்டில் சாமிவேலு சாதிப்பாரா?
தேர்தல் கண்ணோட்டம் : மஇகா முன்னாள் தலைவர் ச.சாமிவேலு, கடந்த பொதுத் தேர்தலில் கைமாறிப்போன சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை பிஎன்னுக்கு மீட்டுத்தர முடியும் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார். இதற்காகவே கடந்த சில மாதங்களாக அதையே தம் படை வீடாக்கிக் கொண்டிருக்கிறார். நேற்று மலேசியாகினியுடன் தொலைபேசிவழி உரையாடிய…
“நமது நேரம் வந்து விட்டது, மே 5ல் வரலாறு படைப்போம்”
உங்கள் கருத்து : 'ஊழல், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவுவது, வெறித்தனம், சட்ட நிலை பின்பற்றப்படாதது ஆகியவற்றை இந்த நாட்டிலிருந்து விரட்டும் நாள் அதுவாகும்' '13-வது பொதுத் தேர்தல் வேட்பாளர் நியமனம் ஏப்ரல் 20, தேர்தல் மே 5' சின்ன அரக்கன்: மலேசியர்கள் பெருமை கொள்ளக் கூடிய எடுத்துக்காட்டுத் தலைமைத்துவத்தில்…
டிவி3-க்கு எதிராக நிஸார் கொண்டு வந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி…
WWW1 கார் எண் தகடு மீதான பிரச்னை தொடர்பில் டிவி3 என அழைக்கப்படும் Sistem Televisyen Malaysia Bhd-க்கு எதிராக முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஸார் ஜமாலுதின் தாக்கல் செய்த 50 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதி…
அண்மைய செக்ஸ் வீடியோ போலியானது என பாஸ் உதவித் தலைவர்…
பக்காத்தான் ராக்யாட் மூத்த தலைவர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட அண்மைய செக்ஸ் வீடியோ 'போலியானது' என பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா கருதுகிறார். "அது ஜோடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட வீடியோக்களைக் கூட அவர்கள் தயாரிக்க முடியும் என்றால்…
இன்னொரு செக்ஸ் வீடியோவில் இந்த முறை பாஸ் தலைவர் ஒருவர்…
வேட்பாளர் நியமன நாளுக்கு இன்னும் எட்டு நாட்கள் இருக்கும் வேளையில் மூத்த பாஸ் தலைவர் ஒருவர் அடையாளம் தெரியாத மாது ஒருவருடன் செக்ஸ் உறவு வைத்திருந்ததாக கூறப்பட்ட வீடியோ ஒன்று பல அம்னோ வலைப்பதிவுகளில் நேற்று தொடக்கம் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஹோட்டல் அறை ஒன்றில் எடுக்கப்பட்டதாக நம்பப்படும்…
நேர்மையாக நடந்து கொள்ளுமாறு ஒசிபிடி-களுக்கு ஐஜிபி அறிவுரை
போலீஸ் படையின் நேர்மையை நிலை நாட்டும் பொருட்டு தேர்தல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் எந்தத் தரப்பு பக்கமும் சாய வேண்டாம் என தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் எல்லா மாவட்ட போலீஸ் தலைவர்களுக்கும் (ஒசிபிடி) அறிவுரை கூறியுள்ளார். "தேர்தல்களின் போதும் போலீசாரின் பங்கும் கடமையும் வழக்கமானதே- அதாவது அமைதி,…


