டிஏபி: கடன் வாங்குவதைச் சட்டப்பூர்வமாக்க அரசாங்கம் சட்டங்களை திருத்தியது

கடன் வாங்குவதை சட்டப்பூர்வமாக்குவதற்கு அரசாங்கம் வாங்கும் கடன்களுக்கான உச்சவரம்பை "பல முறை" உயர்த்தி விட்டதே நாட்டின் கடன் அளவு அதிகரித்து வருவதற்குக் காரணம் என டிஏபி குற்றம் சாட்டியுள்ளது. "சட்டப்பூர்வ கடன் உச்ச வரம்பு என்பதற்கு அர்த்தமில்லாமல் போகும் வகையில் தனது விருப்பங்களுக்கு ஏற்ப அந்த உச்ச வரம்பை…

மணல் திருட்டு: பொது விசாரணை தேவை என்கிறார் நோ ஒமார்

சிலாங்கூர் மாநிலத்தில் நிகழ்வதாகக் கூறப்படும் மணல் ஊழல் குறித்து பொது விசாரணை நடத்த மாநில அரசாங்கம் ஒப்புக் கொள்ளுமானால் அதற்கான ஆவணங்களையும் சாட்சிகளையும் வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சர் நோ ஒமார் கூறுகிறார். அந்த விசாரணை செல்காட் என்ற திறமை, பொறுப்பு,…

ஏன் ஒரே மலேசியா சின்னம்- ஜாலுர் கெமிலாங்-கை போடலாமே?

"அது உண்மையில் அரசியல் இல்லை என்றால் அதற்குப் பதில் தயாரிப்பாளர்கள் மலேசிய கொடியைப் போடுவதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும்." பிரதமர்: ஒரே மலேசியா சின்னம் அரசியல் அல்ல டூட்: கோதுமை மாவு, சீனி, சமையல் எண்ணெய் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மலேசியா சின்னத்தைப் பொட்டலங்களில் போட வேண்டும்…

காலமான வாக்காளர் பெயர்கள் அண்மைய வாக்காளர் பட்டியலில் இல்லை

2011ம் ஆண்டு நான்காவது காலாண்டுக்கான துணை வாக்காளர் பட்டியல் அண்மையில் நாடு முழுவதும் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதில் பெரிய வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்ட காலமான வாக்காளர்கள் பட்டியல் இல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் ஆத்திரமடைந்துள்ளன. காலமான வாக்காளர் பட்டியல், புதிதாகப் பதிந்து கொண்ட வாக்காளர்கள், முகவரிகளை மாற்றிக் கொண்ட…

டிஎபி இங்கா கோர் மிங் தலை தப்பியது

ஈப்போ மாநகர் மன்ற (எம்பிஐ) டெண்டர் விவகாரத்தில் 2008 ஆம் ஆண்டு டிஎபியின் துணைப் பொருளாளர் இங்கா கோர் மிங் அவரது செல்வாக்கைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலிருந்து அவரை டிஎபி ஒழுங்குமுறைக் குழு இன்று விடுவித்தது. குற்றம் சாட்டப்பட்ட இங்கா, பேராக் முன்னாள் மந்திரி புசார் முகமட் நிஜார்…

வர்த்தகத்தை அரசியலிலிருந்து விலக்கி வையுங்கள், தெங்கு ரசாலி

அரசாங்கத்தில் காணப்படும் வர்த்தகமும் பண அரசியலும் நாட்டுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதன் விளைவாக அரசியல் ஆதரவு, அதிகாரம், தேர்தல் நடைமுறை ஆகியவற்றிலிருந்து வர்த்தகத்தை பிரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று கோலாலம்பூரில் உள்ள அரச சிலாங்கூர் கிளப்-பில் நிகழ்ந்த நண்பகல் விருந்தில் கலந்து கொண்ட 200…

“மலேசியாவின் தலைமகள்” எனத் தவறாகக் கூறியதற்காக கர்ட்டின் பல்கலைக்கழகம் மன்னிப்புக்…

ஆஸ்திரேலியாவின் கர்ட்டின் பல்கலைக்கழகம் ரோஸ்மா மான்சோருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்த போது அவரை மலேசியாவின் தலைமகள் ( first lady of Malaysia ) எனக் குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. அந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது மீதும் "தலைமகள்" என்னும் சொல்லைப் பயன்படுத்தப்பட்டது…

மூன்று அமைப்புகள் பிஎன்னில் இணை உறுப்பியம் பெற்றன

பாரிசான் நேசனல் இணை உறுப்பினர்களாக ஏற்கப்பட்ட மூன்று அமைப்புகளில் காபோங்கான் வவாசான் ஜெனரசி ஃபெல்டாவும்(GWGF) ஒன்று எனப் பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக் அறிவித்துள்ளார். மற்ற இரண்டு அமைப்புகளில், ஒன்று முன்னாள் கெமாஸ் உறுப்பினர் சங்கம் மற்றது மலாய்க் குத்தகையாளர் சங்கம். பிஎன்னில் இணை உறுப்பியம் பெற 11…

அம்ப்ரின் புவாங் தலைமைக் கணக்காய்வாளராக மீண்டும் நியமனம்

அம்ப்ரின் புவாங், மீண்டும் ஓராண்டுக் காலத்துக்குத் தலைமைக் கணக்காய்வாளராக  நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.அவரது நியமனம் பிப்ரவரி 23-இலிருந்து அமலுக்கு வருவதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் முகம்மட் சிடிக் ஹசான் இன்று அறிவித்தார். அவர் மீண்டும் நியமனம் செய்யப்படுவதற்கு பேரரசர் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக ஓர் அறிக்கையில் அவர் கூறினார். அம்ப்ரின் 2006…

அரசாங்கக் கடன் அளவு மொத்த உள் நாட்டு உற்பத்தியில் இப்போது…

எம்பி பேசுகிறார்: கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 2011-2012ம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையின் படி நமது கூட்டரசு அரசாங்க கடன் 2011ம் ஆண்டு இறுதியில் 455.7 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. அந்த அளவு 2010ம் ஆண்டு அளவை விட 11.9 விழுக்காடு கூடுதலாகும். அண்மைய ஆண்டுகளாக நமது கடன் அளவு…

உதவித் தொகைப் பொருட்கள் மீது ஒரே மலேசியா சின்னம் பற்றி…

உதவித் தொகை கொடுக்கப்படும் பொருட்கள் மீது ஒரே மலேசியா சின்னத்தை வைப்பதைக் கட்டாயமாக்கும் அரசாங்க நடவடிக்கை பிஎன் -னுக்கு ஆதரவாக வாக்குகள் திசை மாறும் நிலை ஏதும் இருந்தால் அதன் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "அவர்கள் அந்தச் சின்னத்தைப்…

சிலாங்கூர் 15 பில்லியன் ரிங்கிட் செலவில் அடிப்படை வசதி மேம்பாட்டுத்…

சிலாங்கூர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 15 பில்லியன் ரிங்கிட்டைச் செலவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தகவலை மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் இன்று வெளியிட்டார். அந்தத் தொகையில் 7.4 பில்லியன் ரிங்கிட் சிலாங்கூரில் மூன்று முதல் நான்கு…

அம்னோ தனது கோட்டையைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுகிறது

"நகரத்தில் வாழும் அகமட், ஆ சொங்குடனும் முத்துவுடனும் மற்றவர்களுடனும் இணைந்து வேலை செய்கிறார். இன வேறுபாடின்றி அவர்கள் தங்களது தலைக்கு உயரே ஒரு கூரையை நிர்மாணிக்க போராடுவதை அவர் அறிந்துள்ளார்." 'பெல்டா குடியேற்றக்காரர்கள் பக்காத்தானை ஆதரிக்க அச்சத்தைப் போக்க வேண்டியுள்ளது ஸ்விபெண்டர்: அம்னோ இப்போது பெல்டா குடியேற்றக்காரர்களிடம் திருடுவதற்கு…

இனிவரும் தேர்தல்களில் அழியா மை பயன்படுத்தப்படும்

பொதுத் தேர்தல்களில் அழியா மையைப் பயன்படுத்தப்படுவது பற்றிய அறிவிப்பு அரசு இதழில் பிப்ரவரி 13-இல் வெளியாகியிருப்பதாக தேர்தல் ஆணைய(இசி)த் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப் தெரிவித்தார். அதனை அடுத்து அழியா மையை 13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்த இசி திட்டமிட்டிருக்கிறது. ஆனால், அந்த மையை இன்னும் வாங்கவில்லை.ஏனென்றால் மையை…

“தாஜுடின் -ஜிஎல்சி தீர்வு ஊழலை மறைப்பதாகும்”

வர்த்தக செல்வந்தர் தாஜுடின் ராம்லி-க்கும் ஜிஎல்சி என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையில் அண்மையில் உடன்பாடு காணப்பட்டுள்ள தீர்வு அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழலை "மறைக்கும்" நோக்கத்தை கொண்டுள்ளதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அஞ்சுகிறார். "தாஜுடின் அந்த வழக்கைத் தொடர்ந்தால் அந்த நேரத்தில் இருந்த பிரதமர், நிதி அமைச்சர்…

உதவித் தொகைப் பொருட்கள் மீது ஒரே மலேசியா சின்னம் பற்றி…

உதவித் தொகை கொடுக்கப்படும் பொருட்கள் மீது ஒரே மலேசியா சின்னத்தை வைப்பதைக் கட்டாயமாக்கும் அரசாங்க நடவடிக்கை பிஎன் -னுக்கு ஆதரவாக வாக்குகள் திசை மாறும் நிலை இருந்தால் அதன் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "அவர்கள் அந்தச் சின்னத்தைப் போட்டால்…

ஒரே மலேசியா சின்னம் அரசியல் அல்ல என்கிறார் பிரதமர்

கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை தாயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மலேசியா சின்னத்தைத் தங்களது பொட்டலங்களில் சேர்க்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குவது அரசியல் நடவடிக்கை அல்ல என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "ஒரே மலேசியா என்பது அரசியல் அல்ல, அது மலேசியாவைப் பற்றியது," என நஜிப் கூறினார். கோலாலம்பூரில் நேற்று…

பங்சாரில் மேபேங்க் ஊழியர்களின் 3 மணி நேர மறியல்

இன்று பின்னேரத்தில் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 200 மேபேங்க் ஊழியர்களும் தொழிற்சங்கவாதிகளும் பங்சார் மேபேங்க்கின் முன் கூடி மேபேங்க் ஊழியர்களை மட்டும் அங்கத்தினர்களாகக் கொண்ட தொழிற்சங்கம் (in-house union. It is also called "coffin-union") ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். செந்நிற உடை…

901 விசாரணை: போலீஸ் அச்சுறுத்தல் என்கிறது பிகேஆர்

கோலாலம்பூரில் ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்துக்கு முன்பு ஜனவரி 9ம் தேதி பேரணி நடத்துவதற்கு அனுமதி கொடுத்திருந்த போதிலும் அந்தப் பேரணியை ஏற்பாடு செய்தவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றவர்களை பதிவு செய்யும் சாத்தியத்தை போலீஸ் ஆராய்ந்து வருகிறது. எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளும் போராளிகளும் அடங்கிய 17 தனிநபர்கள் மீது செந்தூல் மாவட்ட…

ஒரே மலேசியா சின்னம் இல்லை என்றால் அரசாங்க உதவித் தொகையும்…

சீனி, கோதுமை மாவு, சமையல் எண்ணெய் ஆகிய மூன்று கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அரசாங்க உதவித் தொகைகளை தொடர்ந்து அனுபவிக்க விரும்பினால் இம்மாதத் தொடக்கத்திலிருந்து அந்த பொருட்களை விற்பனைக்கு அனுப்பும் போது அதன் பொட்டலங்களில் ஒரே மலேசியா சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும். என்றாலும் தயாரிப்பு நிறுவனங்கள் அந்த…

கானின் உண்ணாவிரதப் போராட்டம் இப்போதைக்குக் கைவிடப்பட்டது

தனி ஒருவராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தீக்குளிக்கப்போவதாகவும் மிரட்டியவர் அடுத்து பகாங் மந்திரி புசார் இல்லத்துக்குமுன் போராட்டத்தைத் தொடர்வது பற்றி ஆலோசித்து வருகிறார். சிருவான் கெமிலாங் நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் ஒருவரான கான் ஈ செங், திங்கள்கிழமையிலிருந்து உண்ணாவிரதம் இருந்துவந்தார்.நேற்று அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். என்றாலும், போராட்டம் வெற்றிபெறவில்லை…