பிஎன் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட கட்சியால் கட்டுப்படுத்தக்…

மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆர்எஸ் தனேந்திரன், பாரிசான் நேஷனல் (பிஎன்) கூட்டணி அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், ஒரே அரசியல் சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். "மக்கள் சக்தி கட்சியைப் பிஎன்-இன் ஓர் அங்கமாகப் பதிவு செய்யும் முயற்சியில், பிஎன் கட்சிகளுடன் இணைந்து…

கோவிட் -19 (செப்.19) : 463 உயிரிழப்புகள், மொத்த பலி…

கிதப் (Github) தளத்தில் உள்ள சுகாதார அமைச்சின் தரவு, நேற்று (செப்டம்பர் 18) 324 கோவிட் -19  இறப்புகளைப் பதிவுசெய்தது, இதுவரையிலான இறப்பு எண்ணிக்கை 23,067 ஆக அதிகரித்துள்ளது. அந்த எண்ணிக்கையில், 70 பேர் (21.6 விழுக்காடு) மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன்பே இறந்தனர். அதிகபட்ச இறப்புகள், செப்டம்பர் 11-ம் தேதி…

பி40 இல்லத்தரசிகளுக்கான சொக்சோ பாதுகாப்பு திட்டம் அமைச்சரவைக்குக் கொண்டுச் செல்லப்படும்

மனித வள அமைச்சு, சமூகப் பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ) மற்றும் மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு மூலம், பி40 இல்லத்தரசிகளுக்கு சொக்சோ பாதுகாப்பை வழங்குவதற்கான முன்மொழிவை அமைச்சரவைக்குக் கொண்டுவரும். மனிதவள அமைச்சர் எம் சரவணன், நாடு முழுவதும் சுமார் 2 மில்லியன் இல்லத்தரசிகளை உள்ளடக்கிய இந்த…

அரசு-பிஎச் புரிந்துணர்வு ஒப்பந்தம் : பெஜுவாங் அழைக்கப்படவில்லை – டாக்டர்…

அரசாங்கம் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஒயு) பற்றி விவாதிக்க பெஜுவாங் அழைக்கப்படவில்லை என்று டாக்டர் மகாதீர் முகமது கூறினார். பெஜுவாங் தலைவர், "ஊழல் கூறுகள்" இருப்பதாகக் காணப்படும் எந்தவொரு ஒத்துழைப்பையும் தனது கட்சி ஆதரிக்காது என்றார். "முதலில், இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க…

சினோவேக் பெறுநர்களுக்கு, இங்கிலாந்து பயணம் மிகவும் கடினமாக இருக்கும்

நேற்று, பிரிட்டன் வெளியிட்ட பயண விதிகள், சினோவேக் பெறுநர்களுக்கு இங்கிலாந்துக்கான பயணத்தை மிகவும் கடினமாக்கலாம். புதிய விதிகளின்படி, அக்டோபர் 4 முதல், அஸ்ட்ராஸெனெகா, ஃபைசர், மொடர்னா அல்லது ஜான்சென் தடுப்பூசிகளைப் பெறும் பார்வையாளர்கள் தளர்வான பயண விதிகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்தப் புதிய விதியின் கீழ், பட்டியலிடப்பட்ட தடுப்பூசிகளைப் பெறுபவர்கள்…

கோவிட் -19 : 15,549 புதிய நேர்வுகள், கிள்ளான் பள்ளத்தாக்கில்…

இன்று 15,549 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக, சரவாக் (2,929) உடன் ஒப்பிடும்போது, கிள்ளான் பள்ளத்தாக்கில் தினசரி புதிய வழக்குகளின் எண்ணிக்கை (2,408) குறைவாகவே உள்ளது. தீவிரச் சிகிச்சை பிரிவிலும் (ஐசியு), சுவாசக் கருவியின் உதவி தேவைப்படும் நோயாளிகளின்…

மருத்துவமனை துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் குற்றச்சாட்டுகளால் யு.இ.எம். எட்ஜெண்டா வருத்தம்

பேராக், தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள பஹாகியா உலு கிந்தா மருத்துவமனையில் துப்புரவு சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்ற யு.இ.எம். எட்ஜெண்டா பெர்ஹாட், தனது ஊழியர்களிடம் அநியாயமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு வருத்தம் தெரிவித்தது. ஊழியர்களின் பணிச்சூழலையும் நலனையும் மேம்படுத்த, அந்நிறுவனம் பெரும்பாலும் தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்களையும் தொடர்பு கொள்கிறது…

எம்எம்2எச் கடுமையான நிபந்தனைகள் : ஜொகூர் சுல்தான் வருத்தம், பிரதமரைச்…

‘மலேசியா எனது இரண்டாவது வீடு’ திட்டத்தின் (மலேசியா மை செகண்ட் ஹோம் -எம்எம்2எச்) புதிய கடுமையான நிபந்தனைகளை மறுஆய்வு செய்ய உள்துறை அமைச்சு (கேடிஎன்) மறுத்ததால், ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர் ஏமாற்றம் அடைந்தார். சுல்தான் இப்ராகிமின் கூற்றுப்படி, புதிய நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யுமாறு அவர்…

கோவிட் -19 (செப்.18) : 388 உயிரிழப்புகள், மொத்தம் 22,743

கிதப் (Github) தளத்தில் உள்ள சுகாதார அமைச்சின் தரவு, நேற்று (செப்டம்பர் 17) கோவிட் -19 காரணமாக மொத்தம் 388 இறப்புகளைப் பதிவுசெய்தது, இதுவரையிலான இறப்பு எண்ணிக்கை 22,743 ஆக அதிகரித்துள்ளது. அந்த எண்ணிக்கையில், 64 பேர் (16.49 விழுக்காடு) மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பே இறந்தனர். 388 இறப்புகளில், 192…

RM30 சம்பள உயர்வு கோரி, பஹாகியா மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள்…

ஈப்போ, உலு கிந்தா, பஹாகியா மருத்துவமனையில், ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களாகப் பணிக்கு அமர்ந்தப்பட்ட 40 பேர், நியாயமான சம்பள உயர்வு RM30 உட்பட, பல கோரிக்கைகளை முன்வைத்து, அந்த மனநல மருத்துவமனைக்கு வெளியே இன்று போராட்டம் நடத்தினர். ஜனவரி 1-ம் தேதி, பேராக், பினாங்கு, கெடா மற்றும் பெர்லிஸில்…

நோய்த்தொற்று குறையத் தொடங்கியது -17,577 புதிய நேர்வுகள்

சுகாதார அமைச்சு இன்று 17,577 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. சிலாங்கூர் 2,646 நேர்வுகளையும், கோலாலம்பூர் 366 நேர்வுகளையும் பதிவு செய்து, கிள்ளான் பள்ளத்தாக்கில் நேர்வுகள் தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றன. இருப்பினும், சரவாக் தொடர்ந்து அதிக நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்தாலும், இறப்பு எண்ணிக்கை கடந்த…

ஏதிஎம் ஆட்சேர்ப்புக்கு இன அடிப்படையிலான ஒதுக்கீடு இல்லை

மலேசிய ஆயுதப் படையில் (ஏதிஎம்) இணைய, இனம் சார்ந்த ஒதுக்கீடு இல்லை என்று அதன் தளபதி ஜெனரல் அஃபெண்டி புவாங் கூறினார். பாதுகாப்புப் படைகளில், ஒரே ஓர் இனத்திற்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது என்ற சமூகத்தின் அவப்பெயர் தவறானது, ஏனெனில் சேவைக்கான ஆட்சேர்ப்பு நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்…

அன்வரின் அவதூறு வழக்கு : கேஜேவின் மேல்முறையீட்டு விசாரணை தொடர…

எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் தாக்கல் செய்த அவதூறு வழக்குக்கு எதிராக - நீண்டகாலமாக தாமதமாகி வந்த - கைரி ஜமாலுதீனின் சட்டக் குழுவின் விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் கண்டித்துள்ளது. மூன்று நீதிபதிகள் அடங்கியக் குழுவின் தலைவரான, லீ ஸ்வீ செங், கைரியின் தற்காப்பு குழு தலைவர் உடல்நிலை…

தேவைப்படும் நாடுகளுக்குத் தடுப்பூசிகளை வழங்கவும் – அதிகத் தடுப்பூசி பெற்ற…

அதிகக் கோவிட் -19 தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட நாடுகள், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்குத் தங்கள் மருந்தளவுகளை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள், நேற்று ஒரு கூட்டறிக்கையில் இந்த…

கோவிட் -19 (செப். 17) : 346 இறப்புகள், இது…

கிதப் (Github) தளத்தில் உள்ள சுகாதார அமைச்சின் தரவுகளின் படி, கோவிட் -19 காரணமாக நேற்று (செப்டம்பர் 16) மொத்தம் 346 இறப்புகள் பதிவாகியுள்ளன, இதனால் இறப்பு எண்ணிக்கை 22,355 ஆக உயர்ந்துள்ளது. அந்த எண்ணிக்கையில், 105 பேர் (30.35 விழுக்காடு) மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பே இறந்தனர்.…

போதைப்பொருள் கடத்தல் தடுப்புச் சட்டம் – 2020 முதல் 25…

2020 முதல் இந்த ஆண்டு ஜூன் வரையில், போதைப்பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 25 இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஜைனுடின் இன்று நாடாளுமன்றப் பதிலில் தெரிவித்தார். குற்றத் தடுப்பு சட்டம் 1959 (போகா), பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம்…

இளைய தலைமுறை பள்ளிகளில் அதிக பாகுபாட்டை எதிர்கொள்கிறது – ஆய்வு

ஒரு கணக்கெடுப்பின்படி, இளையத் தலைமுறை, பழையத் தலைமுறையை விட பள்ளியில் பாகுபாடு அனுபவங்களால் அதிகம் பாதிக்கப்படுகிறது என்று தெரியவந்துள்ளது. பள்ளி படிப்பை முடித்த 2,441 பேரிடம், பள்ளியில் அவர்களின் அனுபவங்களைப் பற்றி கேட்டது அடிப்படையில் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. கணக்கெடுப்பின் அடிப்படையில், வயது முதிர்ந்தவர்களுடன் ஒப்பிடும்போது, 18-30 வயதினர்,…

ஜிஇ15-க்கான சின்னம் : சரியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் –…

அடுத்த பொதுத் தேர்தலில் (ஜிஇ) பி.எச். பயன்படுத்தும் சின்னம் மீதான சர்ச்சைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று அக்கூட்டணியின் தலைவர் அன்வர் இப்ராகிம் கூறினார். பி.கே.ஆர். சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கட்சி உறுப்பினர்கள் சிலர் பரிந்துரைத்ததாகவும், அதே நேரத்தில் உறுப்பு கட்சிகள் பி.எச். சின்னத்தைப் பயன்படுத்த…

ஆடாம் அட்லி, இளம் ஆர்வலர்கள் குழு பிகேஆரில் இணைந்தனர்

முன்னாள் மாணவர் தலைவர்கள் ஆடாம் அட்லி மற்றும் அஷீக் அலி சேதி அலிவி உட்பட, 20 இளம் ஆர்வலர்கள் இன்று பிகேஆர்-இல் இணைந்தனர். குழுவின் பிரதிநிதிகள், உறுப்பினர் படிவங்களைக் கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிமிடம் இன்று காலை, சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் நடந்த ஒரு…

18,815 புதிய நேர்வுகள், கெடாவில் ஐசியு படுக்கைகளின் பயன்பாடு 105…

சுகாதார அமைச்சு இன்று 18,815 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்து, மொத்த நேர்வுகளின் எண்ணிக்கையை 2,049,750 -ஆக பதிவு செய்துள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் புதிய நேர்வுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சரவாக் அதிகபட்ச தினசரி எண்ணிக்கையான 3,660 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. வழக்குகள், ஜோகூர் 2,206 வழக்குகள்,…

மகாதீரை எம்.பி.என். தலைவராக நியமிப்பதாக இஸ்மாயில் சப்ரி உறுதியளித்தார் –…

நாடாளுமன்றம் | முஹைதீன் யாசினுக்குப் பதிலாக, தேசிய மீட்சி மன்றத்தின் (எம்.பி.என்.) தலைவராக டாக்டர் மகாதீர் முகமது நியமிக்கப்படுவார் என்று இஸ்மாயில் சப்ரி யாகோப் முன்பு உறுதியளித்ததாக முக்ரிஸ் மகாதீர் கூறினார். இருப்பினும், அந்தப் பெஜுவாங் தலைவர், எம்பிஎன் நிறுவுதல் ஆரம்பத்தில் மகாதீரின் முன்மொழிவாக இருந்தபோதிலும், அது செயல்படுத்தப்படவில்லை…

எஸ்.தி.பி.எம். மாணவர்களின் பொதுப் பல்கலைக்கழக விண்ணப்பங்களின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது

மலேசிய உயர்கல்விச் சான்றிதழ் (எஸ்.தி.பி.எம்.) மற்றும் அதற்கு நிகரான சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கான பொது பல்கலைக்கழக (யூ.ஏ.) அமர்வு 2021/2022 சேர்க்கைக்கான விண்ணப்பங்களின் முடிவுகள், இன்று மதியம் 12 மணி முதல் செப்டம்பர் 25 வரை இயங்கலையில் அறிவிக்கப்படும் என்று உயர்க்கல்வி அமைக்சு (கே.பி.தி.) தெரிவித்துள்ளது. https://jpt.utm.my, http://jpt.uum.edu.my, https://jpt.unimas.my, http://jpt.ums.edu.my மற்றும் http://jpt.umt.edu.my ஆகிய…

அரசு-பிஎச் புரிந்துணர்வு ஒப்பந்தம் : ஊழல் எதிர்ப்பு அமைப்பு வருத்தம்

அரசாங்கம் - பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தேசிய ஊழல் எதிர்ப்பு திட்டத்தின் (என்ஏசிபி) மூன்று சீர்திருத்தப் பகுதிகள் இல்லாதது கண்டு, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மலேசியா (திஐ-எம்) அதிருப்தி அடைந்துள்ளது. "இரு தரப்பு சட்டமியற்றுபவர்களின் நல்ல நோக்கங்களும் நல்லெண்ணமும் அடுத்த சில மாதங்களில் தெளிவான சட்ட…