அரசியல் பலம் என்பது இனி தனிப்பட்ட மேலாதிக்கத்தை வைத்து அளவிடப்படாது என்பதை அம்னோ உறுப்பினர்கள் உணர வேண்டும். மாறாக, சமநிலை மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு ஊக்கியாக செயல்படும் திறனை வைத்தே அது அளவிடப்படும் என்று ஜம்ரி அப்துல் காதிர் இன்று தெரிவித்தார். தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் அம்னோ…
குவாந்தான் சிவப்பு மண்டல பகுதியாக மாறியுள்ளது
கோவிட்-19 சிவப்பு மண்டல பகுதி 24 இடங்களாக அதிகரித்துள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இது நேற்று நண்பகல் நிலவரப்படி ஏற்பட்ட மாற்றமாகும். மலேசியா சுகாதார அமைச்சின் முகநூல் (பேஸ்புக்) பதிவின்படி, சமீபத்திய சிவப்பு மண்டலம் குவாந்தான் பகுதி ஆகும். "வீட்டில் இருங்கள், கூடல் இடைவெளியை கடைபிடியுங்கள், தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுங்கள்"…
23 நாட்களுக்குப் பிறகும், மீறல்கள் இன்னும் உயர்ந்து கொண்டே இருக்கிறன
இன்று, COVID-19 பாதிப்பைத் தடுப்பதற்காக நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு செயல்படுத்தப்படும் 23வது நாள். ஆனால் உத்தரவு முடிவுக்கு வருவதற்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், அதனை மீறும் வழக்கு புள்ளிவிவரங்கள் அதிகரிப்பைக் காட்டும்போது கவலைகள் எழுந்துள்ளன. உண்மையில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் நூர்…
MCO – ஹரி ராயா முடியும் வரை நீட்டிக்க மருத்துவ…
மலேசிய மருத்துவ குழு, ஹரி ராயா கொண்டாட்டம் முடியும் வரை நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை நீட்டிக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அக்குழுவின் கூற்றுப்படி, அதிக எண்ணிக்கையானோர் கிராமத்திற்குத் திரும்புவது கோவிட்-19 பாதிப்பை மோசமாக்கும் என்றுள்ளனர். நெடுஞ்சாலைகளில் நிறுத்தங்கள் மற்றும் ஓய்வு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக கூடினால் கூடல் இடைவெளியை…
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலத்தை தீர்மானிக்க பிரதமருக்கு உதவுகிறது சுகாதார…
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீட்டிக்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க, சுகாதார அமைச்சு பிரதமர் முகிதீன் யாசின் மற்றும் அவரது அமைச்சரவைக்கு பல பரிந்துரைகளை முன்வைக்கும். டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தினசரி பாதிப்புகளின் அதிகரிப்பு கட்டுப்பாட்டில் இருந்தாலும், கிருமியை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் தொடரும் என்று அவர் வலியுறுத்தினார்.…
தூதரகங்கள் தங்களின் குடிமக்களின் தேவைகளை உறுதிசெய்ய வேண்டும்
மேம்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் கீழ் உள்ள கோலாலம்பூரின் சிலாங்கூர் மேன்ஷன் மற்றும் மலையன் மேன்ஷன் கட்டடங்களில் வசிக்கும் தங்களின் குடிமக்களுக்கு வேண்டிய தேவைகளை வழங்குமாறு அரசாங்கம் வெளிநாட்டு தூதரகங்களை கேட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 6,000 பேரில் 97 சதவீதம் பேர் வெளிநாட்டினர் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி…
கோவிட்-19: மேலும் இரு மரணங்கள், மொத்த பாதிப்பு 4,119
கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக மலேசியா மேலும் இரண்டு இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது. இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 65 ஆகி உள்ளது. இன்று ஒரு ஊடக மாநாட்டில், சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், 166 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும், இன்றுவரை…
MCO – இன்று முதல் குற்றவாளிகளுக்கு RM1,000 அபராதம்
இன்று முதல் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறும் நபர்கள் மீது RM1,000 அபராதம் நடைமுறைக்கு வருகிறது. நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறும் குற்றவாளிகளுக்கு அபராதத்தை செலுத்த இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது என்றுன் அப்படிச் செய்ய தவறும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்நோக்குவர் என்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை…
விமான நிறுவனங்கள் பணத்தை திருப்பித் தர வேண்டும் – Matta
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு விமான நிறுவனங்கள் பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் "கடன்" வழங்கக்கூடாது என்றும் மலேசியாவின் பயண முகவர்கள் சங்கம் (Matta) தெரிவித்துள்ளது. பணத்தைத் திருப்பித் தர மறுத்த விமான நிறுவனங்கள் மீது அரசாங்கம் மெளனம் சாதிப்பது குறித்து மட்டா (விமானப்…
MCO – சபாவின் ஒராங் ஊத்தான்களுக்கு ஆசீர்வாதமாக அமைந்துள்ளது
கோவிட்-19 பாதிப்பை தொடர்ந்து நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகள் ஒராங் ஊத்தானுக்கு ஒரு ஆசீர்வாதமாக அமைந்துள்ளன. இது சபாவில் அச்சுறுத்தப்பட்ட ஒரு உயிரினமாகும். மார்ச் 18 முதல் ஏப்ரல் 14 வரை நடைமுறைக்கு வந்த நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு, இங்குள்ள செபிலோக் வனவிலங்கு புகலிடத்தை மூடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளது. மேலும் இது…
சரவாக் காவல்துறைத் தலைவர் நேர்மறை கோவிட்-19 பாதிப்பு
சரவாக் காவல்துறைத் தலைவர் அய்டி இஸ்மாயில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. தொண்டை வலி காரணமாக நேற்று மதியம் சரவாக் பொது மருத்துவமனைக்கு சென்றதாக அய்டி மலேசியாகினியிடம் தெரிவித்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்க மருத்துவமனை நேற்று இரவு அவரை அழைத்தது. "நான்…
23 மாவட்டங்கள் இப்போது சிவப்பு மண்டலமாக உள்ளன
சரவாக்கில் கோத்தா சமராஹான் மற்றும் சிலாங்கூரில் செப்பாங் ஆகியவை கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து இப்போது சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கூச்சிங்கிற்குப் பிறகு சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்ட சரவாக்கின் இரண்டாவது மாவட்டம் கோத்தா சமராஹான் ஆகும். இதற்கிடையில், 40க்கும் மேற்பட்ட நேர்மறை கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்த பின்னர் செப்பாங்…
அதிகமான அரசியல்வாதிகள் தொழில்நுட்ப வல்லுநர்களின் பதவிகளை எடுக்கின்றனர்
ஜாக்ரி கிர், இன்று சமூக பாதுகாப்பு அமைப்பின் (Pertubuhan Keselamatan Sosial (Perkeso) தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக சபாக் பெர்னம் எம்.பி. முகமட் பாசியா முகமட் பாக்கே நியமிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது. அவர் பெர்சத்து கட்சி உறுப்பினர் ஆவார். தனது ராஜினாமாவை உறுதிப்படுத்தும் ஒரு…
பெர்சத்து தலைவர் பதவிக்கு முக்ரிஸ்-முகிதீன் நேரடி மோதல்
பெர்சத்து தலைவர் பதவிக்கான போட்டியில் முகிதீன் யாசினுக்கும் முக்ரிஸ் மகாதீருக்கும் இடையிலான போட்டி நிழவுகிறது. பெர்சத்துவின் தேர்தலுக்கு தகுதியான வேட்பாளர்களின் பட்டியலின் படி இது தெரிகிறது. போட்டியிடவிருந்த முகமட் பைஸ் அஸ்லீ ஷாமினின் பெயர், வேட்புமனு மூடப்பட்டபோது பட்டியலில் இடம் பெறவில்லை. பெர்சத்துவின் துணைத் தலைவர் பதவிக்கு முன்னாள்…
கோவிட்-19: 171 புதிய நோய்த்தொற்றுகள், சுலாவேசி மதக் கூட்டப் பங்கேற்பாளர்…
மலேசியாவில் இன்று 171 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் மொத்தம் 3,963 தொற்றுநோய்களைக் கொண்டுவந்துள்ளது என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். மார்ச் 17 முதல் மார்ச் 24 வரை சுலாவேசியில் நடந்த ஒரு மதக் கூட்டத்தில் கலந்து…
கிட்டத்தட்ட அனைத்து மலிண்டோ ஏர் ஊழியர்களுக்கும் ஊதியம் இல்லை
கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து ஏப்ரல் முதல் அதன் ஊழியர்கள் ஊதியம் பெறாத விடுப்பு எடுக்க வேண்டும் என்று மலிண்டோ ஏர் முடிவு செய்துள்ளது. மலிண்டோ ஏர் தலைமை நிர்வாக அதிகாரி முஷாபிஸ் முஸ்தபா பக்ரி, தனது ஊழியர்களில் குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே வேலைக்கு வர வேண்டும் என்றும்…
KL-இல் மேலும் இரண்டு கட்டிடங்கள் பூட்டுதலின் கீழ் வைக்கப்பட்டன
கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து தலைநகரில் உள்ள சிலாங்கூர் மேன்ஷன் (Selangor Mansion) மற்றும் மலாயன் மேன்ஷன் (Malayan Mansion) ஆகிய இரண்டு கட்டிடங்களும் இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளின் கீழ் வைக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் அமைந்துள்ள அந்த கட்டிடத்தில் 15 நேர்மறையான கோவிட்-19 நோய்த்தொற்று…
30-40% அதிகமான தொழிலாளர்கள் ஊதியக் குறைப்பு, பணிநீக்கம் செய்யப்படும் அபாயத்தில்…
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME) பராமரிப்பு தொகுப்பில் இடம்பெறாத தொழிலாளர்களைப் பாதுகாக்க, அவசர பணி விதியை (Peraturan Kerja Kecemasan) அறிமுகப்படுத்துமாறு மலேசிய தொழிலாளர் சங்கம் (MTUC) நேற்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஊதிய மானியங்களைப் பெறும் முதலாளிகள் ஆறு மாதங்களுக்கு தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை…
சாலைத் தடைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்படும் –…
சமூக ஊடகங்களில் காவல்துறையினரைப் பற்றி எதிர்மறையான கருத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும் சாலையோரத் தடைகளை நிர்வகிக்கும் காவல்துறையினரின் புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்கும் நபர்கள் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று காவல்துறை தலைவர் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்தார். இது பொறுப்பற்ற நடவடிக்கை என்றும், நடமாட்டக் கட்டுப்பாடு…
புத்ராஜெயா, ஜாசின், ரெம்பாவ் இப்போது கோவிட் சிவப்பு மண்டலத்தில் உள்ளன
கோவிட்-19 நேர்மறை பாதிப்பில் புத்ராஜெயா, ஜாசின் மற்றும் ரெம்பாவ் இப்போது சிவப்பு மண்டலத்தின் கீழ் உள்ளன. இந்த மூன்று பகுதிகளும் நாட்டின் 19, 20 மற்றும் 21வது பகுதிகள் என்று பெயரிடப்பட்டுள்ளன. நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி, புத்ராஜெயாவில் 41 பாதிப்புகளும், மலாக்கா ஜாசினில் 42 பாதிப்புகளும்,…
காவல்துறை: பெந்தோங் கைதி மரணம், கோவிட்-19 கிருமியால் ஏற்படவில்லை
பெந்தோங் மாவட்ட காவல் தலைமையகத்தில் சமீபத்தில் இறந்த கைதி ஜி. ஹெஸ்டஸ் கெவின், கோவிட்-19 கொரோனா கிருமியால் பாதிக்கப்படவில்லை என்று பெந்தோங் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் யூசோப் யூனிஸின் கூற்றுப்படி, 30 வயதான அந்நபர் கோவிட்-19 சோதனைக்காக பெந்தோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னர்…
சுகாதாரத்தை பராமரிக்கவும் – செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு சுகாதார அமைச்சின் இயக்குநர்…
கோவிட்-19 விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளைப் பாதித்ததாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா சுகாதாரத்தை பராமரிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். "செல்லப்பிராணிகளைப் பொறுத்தவரை, பெரும்பாலோர் அதனை அவர்களின் குடும்பத்தின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர்”. "செல்லப்பிராணிகளிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் நாம் விலகி இருக்க முடியாவிட்டால், விலங்குகள்…
கோவிட்-19: 131 புதிய நோய்த்தொற்றுகள், 236 பேர் குணமடைந்தனர்
கொரோனா வைரஸ் | மலேசியாவில் இன்று 131 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இன்றுவரை மொத்தம் 3,793 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். அவர் இன்று ஒரு புதிய மரணத்தையும் அறிவித்தார். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 62…
பெந்தோங் போலிஸ் காவலில் மரணம், விசாரணை மேற்கொள்ள சுவாராம் அழைப்பு
பெந்தோங் காவல் நிலையத்தில் 30 வயது இளைஞரின் மரணம் குறித்து விசாரிக்க சுவாராம் இன்று அழைப்பு விடுத்துள்ளது. போலிஸ் காவலில் இருந்தபோது இறந்த ஜி. ஹெஸ்டஸ் கெவின் எவ்வாறு நடத்தப்பட்டார் என்பது குறித்து ஓர் அறிக்கையில் கேள்விகளை எழுப்பியுள்ளார் சுவாராம் நிர்வாக இயக்குனர் சிவன் துரைசாமி. மனித உரிமை…























