பேராக்கில் ஐந்தாண்டுகளில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு

அண்மை  வரலாற்றில்   இப்படி   ஒரு   வெள்ளத்தைப்    பார்த்ததில்லை     என்கிறார்கள்   பேராக்   மாநில   மக்கள். செகாரி,  கம்போங்   செமாங்காட்டைச்   சேர்ந்த    பைசல்   முகம்மட்   ரட்ஸி, 32,  அக்கிராமத்துக்கு   வந்த   ஐந்தாண்டுகளில்   இவ்வளவு   மோசமான   வெள்ளப்பெருக்கைக்   கண்டதில்லை     என்றார். “எங்கள்     வீட்டுக்கு   வெளியில்   வெள்ளநீர்    நெஞ்சுவரை    உயர்ந்திருந்தது   கண்டு  அதிர்ச்சி     அடைந்தேன்.…

வெளியில் கசிந்த எம்ஏசிசி ஆவணங்கள்மீதான விசாரணையை புக்கிட் அமான் எடுத்துக்கொண்டது

வெளியில்    கசிந்த   எம்ஏசிசி   சாட்சி   அறிக்கைகள்மீதான   விசாரணை  நடத்தும்  பொறுப்பை     புக்கிட்   அமான்    போலீஸ்     தலைமையகம்   எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்தச்    சாட்சி      அறிக்கைகள்   ஜோகூர்   முன்னாள்   ஆட்சிக்குழு    உறுப்பினர்(எக்ஸ்கோ)    அப்துல்    லத்திப்  பண்டி    சம்பந்தப்பட்ட    ஊழல்    வழக்கு  தொடர்பானவை.   அவை  இரகசிய   ஆவணங்களாகும். இவ்விவகாரம்    தொடர்பில்    நவம்பர்   29வரை    மூன்று  …

ஏன் ஜோகூர் மந்திரி பெசார் விசாரிக்கப்படவில்லை, எம்எசிசியைச் சாடினார் புவா

  ஜோகூர் மாநிலத்தின் நிலம் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அம்மாநில மந்திரி பெசார் சம்பத்தப்பட்டிருப்பது பற்றி ஏன் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) விசாரிக்கவில்லை என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா வினவினார். ஜோகூர் மந்திரி பெசார் காலிட் நோர்டின் இந்த நில…

பிஎன் 14ஆவது தேர்தலுக்கு 95% தயார், ஹமிடி கூறுகிறார்

  எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு பாரிசான் கூட்டணி 95 விழுக்காடு தயாராக இருப்பதாக துணைப் பிரதமரும் பிஎன் துணைத் தலைவருமான அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். அந்த "முக்கியமான நாள்" சீனப் புத்தாண்டிற்குப் பிறகு, அதாவது பெப்ரவரி 16 க்குப் பிறகு, வரலாம் என்று த…

நாடாளுமன்ற மக்களவை நாள் குறிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது

  கடந்த அக்டோபர் 23 லிருந்து 25 நாள்களுக்கு நடைபெற்ற மக்களவைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை நாள் குறிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு இதுதான் அதன் கடைசிக் கூட்டம் என்று பலர் கருதுகின்றனர். மக்களவையின் இக்கூட்டத் தொடரில் 13 மசோதாக்கல் சட்டமாக்கப்பட்டன.

சுரேஸ் : அட்னானைச் சந்திக்கும் வரை, மந்திரி பெசார் அலுவலகத்தை…

எதிர்வரும் டிசம்பர் 12-ம் தேதியன்று, தங்கள் நில உரிமை பிரச்சினைக்காக பஹாங் மந்திரி பெசார் அட்னான் யாக்கோப்பைச் சந்திக்கவிருக்கும் குடியிருப்பாளர்களைக் கைது செய்யக்கூடாது என்று மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) புக்கிட் அமானைக் கேட்டுக் கொண்டது. இதற்கு முன், மந்திரி பெசார் அலுவலகத்திற்கு முன்னால், அட்னானுடனான ஒரு சந்திப்புக்காக…

நாடாளுமன்றம் நாளை கூட கலைக்கப்படலாம், நஜிப்பின் குறும்புப் பேச்சு

14-வது பொதுத் தேர்தல் எப்போது என்று பலர் காத்துக்கிடக்க, நாளைகூட நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று பிரதமர் நஜிப் ரசாக் நகைச்சுவையாகக் கூறியுள்ளார். இன்று நெகிரி செம்பிலானில், முதல் ‘நகர உருமாற்று மையம்’-ஐ (யுதிசி) திறந்துவைத்தபோது, மக்களிடமிருந்து கிடைத்த வரவேற்பைப் பார்த்து அவர் இவ்வாறு கூறினார் “அம்பாங்கானில் இந்த யுதிசி…

இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் ஆறாம் நாள்

நவம்பர் 30, 2017 – நடைப்பயணத்தின் ஆறாம் நாள், அதிகாலை 3.30 மணியளவில் பயணம் தொடங்கியது. இன்று தியாகுவுடன் தோழர் அஞ்சாதமிழன் இணைந்துகொண்டார். நேற்று, உடல்நலக் குறைவால் கடக்கமுடியாத தூரத்தை இன்று கடந்தாக வேண்டும் என்ற வேட்கையோடு, இன்னும் 35 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் லாபிஸ் பட்டணத்தை…

ரோபர்ட் குவோக்கின் கனவைத் தடம்புரளச் செய்தவர்கள் அம்னோ தலைவர்கள் என்கிறார்…

  கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக்கின் கனவு நிறைவேறுவதற்கு தடங்களாக இருந்தவர்கள் அம்னோ தலைவர்கள் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் கூறுகிறார். ஒரு வெற்றிபெற்ற மற்றும் ஒன்றுபட்ட தாய்நாடு குவோக்கின் கனவாக இருந்தது. அக்கனவை பல மலேசியர்கள் பகிர்ந்து கொண்டனர் என்று முன்னாள் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினரும்…

மகாதிர், அன்வார்மீது விசாரணைக்கு ஆர்சிஐ பரிந்துரை

  பேங்க்    நெகராவின்   அன்னிய   செலாவணி    இழப்புகளை   ஆராய  அமைக்கப்பட்ட    அரச    விசாரணை  ஆணையம்(ஆர்சிஐ) ,  முன்னாள்    பிரதமர்   டாக்டர்    மகாதிர்   முகம்மட்டும்   அப்போதைய   துணைப்   பிரதமர்    அன்வார்    இப்ராகிமும்   உண்மை   நிலவரத்தை    அமைச்சரவைக்குத்    தெரியாமல்     மறைத்தார்களா   என்பதைக்   கண்டறிய   ஒரு   விசாரணை   நடத்தப்பட    வேண்டும்    எனப்    பரிந்துரைத்துள்ளது.…

குவோக் குறை சொல்வதை நிறுத்தி விட்டு சொத்தைப் பகிர்ந்துக் கொள்வதைத்…

  உழைப்பால் உயர்ந்த "சீனி மன்னன்" ரோபர்ட் குவோக் அவரது வாழ்க்கை வரலாற்று நூல் வழி மலேசியத் தலைவர்கள் பற்றி "நியாயமற்ற" கருத்துகளைத் தெரிவிப்பதை நிறுத்தி விட்டு அவரது தொழிலை இந்நாட்டில் விரிவாக்கம் செய்வதன் வழி அவர் "சொத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்", என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர்…

இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் ஐந்தாம் நாள்

நவம்பர் 29, 2017 – நடைப்பயணத்தின் ஐந்தாம் நாள், உடல் நலக்குறைவால் இன்று நீண்ட தூரம் நடக்க முடியாமல் போனது என்று, நாம் தொடர்பு கொண்டபோது தியாகு வருத்தம் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு 12 மணிவரை, யொங் பேங் வட்டார மக்களுடன் கலந்துரையாடியதை நம்மோடு அவர் பகிர்ந்துகொண்டார். நேற்றிரவு,…

நீதிமன்ற உத்தரவு: குவான் எங், இராமசாமி ஆகியோருக்கு ஹிண்ட்ராப் முன்னாள்…

  ஹிண்ட்ராப் முன்னாள் தேசிய ஆலோசகர் என். கணேசன் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மற்றும் துணை முதலைச்சர் II பி. இராமசாமி ஆகிய இருவருக்கும் தலா ரிம50,000 இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று பினாங்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த வழக்கு டிசம்பர் 4, 2013…

தேர்தலுக்குப் பின்னர் ஜிஎஸ்டியை உயர்த்த அரசாங்கம் எண்ணவில்லை

பொதுத்    தேர்தலுக்குப்   பின்னர்   ஜிஎஸ்டியை  உயர்த்தும்   திட்டம்  எதுவும்   இல்லை    என   நிதி  துணை   அமைச்சர்   ஒத்மான்  அசிஸ்   இன்று   நாடாளுமன்றத்தில்    கூறினார்.  இப்போது  ஜிஎஸ்டி  ஆறு   விழுக்காடாகவுள்ளது. “சில  தரப்புகள்   சில   காரணங்களுக்காக   அவ்வாறு  கூறியிருக்கலாம். “ஆனால்,    ஜிஎஸ்டியைத்   திருத்தி  அமைக்கும்    அல்லது   உயர்த்தும்  திட்டம்     எதுவும்  …

பி.எஸ்.எம். : கிராமப்புற வறுமைக்கு அரசு கொள்கைகளே காரணம், மேல்தட்டு…

உயரடுக்கு மலாய்க்காரர்கள், ஏழை மலாய்க்காரர்களைக் குறைத்து மதிப்பிடுதல், உதவி வழங்கும் துறைகளைத் தனியார்மயமாக்கல் மற்றும் வேலைவாய்பின்மை போன்றவற்றால், மலேசியக் கிராமப்புறங்களில் வறுமை இன்னும் ஒரு தொடர்கதையாகவே உள்ளது. கடந்த 2014 தொடக்கம், தனது கட்சி மேற்கொண்டுவரும் ஆய்வின் அடிப்படையில், வர்க்க அணுகுமுறையில் கிராமப்புற மலாய்க்காரர்களிடையே இருக்கும் பிரச்சனைகளுக்கு, உயரடுக்கு மலாய்க்காரர்கள்தான்…

ஆர்பிகே மீது வழக்கு தொடுக்கும் எண்ணத்தை மாற்றிக்கொண்டார் அபாண்டி

சட்டத்துறை     தலைவர்      அபாண்டி    அலி,   தம்மீது   அவதூறு   கூறும்   கட்டுரை   எழுதிய   வலைப்பதிவர்    ராஜா   பெட்ரா   கமருடின்மீது   இன்னும்    வழக்கு    தொடுக்கவில்லை. ராஜா   பெட்ரா   “திவாலானவர்”  என்று    தெரிய   வந்திருப்பதால்   வழக்கு    தொடுக்க   யோசிப்பதாக   அபாண்டி    கூறினார். “இன்னும்   யோசித்துக்கொண்டுதான்    இருக்கிறேன்.    ஆராய்ந்து   பார்த்ததில்    அவர்   திவாலானவர்    என்பது   …

எரிபொருள் விலையைக் குறைப்பீர்: கெர்தாக்

மற்றவற்றோடு   எரிபொருள்   விலையைக்  குறைக்க   வேண்டும்    என்று    கோரும்   மகஜர்   ஒன்று   பிரதமர்   துறை   அலுவலகத்திடம்     இன்று  சமர்ப்பிக்கப்பட்டது. அதனைச்   சமர்ப்பித்த   கெராக்கான்   துருன்கான்  ஹர்கா  மின்யாக் (கெர்தாக்)  அமைப்பு  ரோன்95   பெட்ரோலுக்கு    ரிம1.90ஐ   உயர்ந்தபட்ச     விலையாக   நிர்ணயம்    செய்ய    வேண்டும்   என்று   கேட்டுக்கொண்டது. எரிபொருள்   விலையை   நிலைப்படுத்த    …

பாலி விமான நிலையம் மூன்றாவது நாளாக மூடப்பட்டது

இந்தோனேசியா அதன் இரண்டாவது பெரிய பாலி விமான நிலையத்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக கடும் எரிமலைச் சாம்பல் மேகமூட்டம் காரணமாக இன்று புதன்கிழமை மூடியது. புகைமூட்டத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்தை அதிகாரிகள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். பாலி விமான நிலையம் குறைந்தபட்சம் வியாழக்கிழை காலை மணி 7.00 வரையில் (மலேசிய…

கனியின் ஓட்டுநர் சுடப்பட்டது சம்பந்தமாக இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை,…

  முன்னாள் சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேயிலின் ஓட்டுநர் ஆகஸ்ட் 29 இல் சுடப்பட்டது சம்பந்தமாக போலீசார் இன்னும் யாரையும் கைது செய்யவில்லை என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறினார். நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில், இப்போது வரையில் போலீஸ் யாரையும் கைது செய்யவில்லை…

ஜமாலின் இலவச உணவை நஜிப் சுவைத்தார்

இன்று, தலைநகரில் இருக்கும் அம்னோ தலைவர் ஜாமால் முகமட் யூனுஸ்சின் உணவகத்தில், பிரதமர் நஜிப் இரசாக் இலவச மதிய உணவைச் சுவைத்தார். அந்த உணவகத்திற்கு அவர் சென்றது மற்றும் மக்களோடு அவர் அளவலாவிய படங்கள், பிரதமரின் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. ஜாலான் பஹாங்கில் உள்ள அந்த…

இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் நான்காம் நாள்

நவம்பர் 28, 2017 – இன்று அதிகாலை, 3 மணிக்கெல்லாம், சிம்பாங் ரெங்கம் ஓய்விடத்திலிருந்து தியாகு நடக்கத் தொடங்கிவிட்டார். அவருடன் அஞ்சாதமிழனும் இணைந்து கொண்டார். சற்று விடிந்ததும், தங்கிய இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு வருவதாக கௌதமன் கூற, அவர்களுக்குத் துணையாக தமிழ் இனியன் மகிழுந்தில் செல்ல ஆயத்தமானார். நேற்று,…

அன்வாரை விடுவிக்கக் கோரும் தீர்மானத்தை நாடாளுமன்றம் தள்ளுபடி செய்தது

சிறையில்   உள்ள    எதிரணித்  தலைவர்   அன்வார்   இப்ராகிமை   விடுவிப்பது   மீது   விவாதம்   நடத்தக்   கோரி    என்.சுரேந்திரன் (பிகேஆர்- பாடாங்  சிராய்)   கொண்டுவந்த    அவசரத்   தீர்மானத்தை   நாடாளுமன்றம்    நிராகரித்தது. அன்வார்  வழக்கில்    நீதிமன்றம்   தீர்ப்பளித்து   விட்டத்தைச்   சுட்டிக்காட்டி   மக்களவைத்    தலைவர்    பண்டிகார்   அமின்   மூலியா   தீர்மானத்தை   நிராகரித்தார். “நீதிமன்றத்தில்   நியாயமான  …