சொன்ன நேரத்துக்குள் நீர் விநியோகம் சரிசெய்யப்படாவிட்டால் நடவடிக்கை- ஸ்பான் எச்சரிக்கை

சிலாங்கூரில் ஜூலை 23-இலிருந்து 26வரை ஏற்படும் நீர் விநியோகத் தடை சொன்ன நேரத்துக்குள் சரிசெய்யப்படாவிட்டால் தேசிய நீர் சேவை ஆணையம் (ஸ்பான்) பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். நிர்வாகத்தில் மாற்றம் செய்யப் பரிந்துரைக்கும். இவ்விவகாரத்தைக் கடுமையாகக் கருதுவதாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாக்குறுதி அளிக்கப்பட்ட நேரத்துக்குள் நீர் விநியோகம் நிலைநிறுத்தப்பட…

பாலியல் காணொளி தொடர்பில் அன்வார் உதவியாளர் கைதானது மகாதிருக்குத் தெரியாது

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட பாலியல் காணொளி வெளியிடப்பட்டதன் தொடர்பில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் உதவியாளர் ஒருவர் கைதான விவரம் தமக்குத் தெரியாது என்று கூறினார “எனக்குத் தெரியாது, இப்போதுதான் முதன்முதலாகக் கேள்விப்படுகிறேன்", என்று மகாதிர் இன்று கோலாலும்பூரில்…

மாநில உலா வரும் சுல்தான் இப்ராகிம் மக்களைச் சந்திக்க ஆர்வம்

ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிescortsல் 2019க்கான ஜோகூர் மாநில உலாவை மேற்கொள்ளும்போது மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிவார். மழையோ வெய்யிலோ 10 மாவட்டங்களில் 700கிமீ பயணம் செய்வதை எதுவும் தடுக்க முடியாது என்றாரவர். “மக்களைச் சந்திக்கக் காத்திருக்கிறேன். அவர்கள் குறைகளைச் சொல்ல…

எம்ஏசிசி ஊழலற்ற நிறுவனமாக விளங்கும்- லத்தீபா உத்தரவாதம்

மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த் தலைவர் லத்தீபா கோயா எம்ஏசிசி அதிகாரிகள் ஊழலற்றவர்களாக இருப்பதை உறுதிப்படுத்த உறுதிபூண்டிருப்பதாகக் கூறினார். “எம்ஏசிசி-யை ஊழலற்ற நிறுவனமாகத் திகழச் செய்வதே எங்களை எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால்”, என்று எம்ஏசிசி தலைவராகவுள்ள முதலாவது பெண்மணியான லத்திபா அண்மையில் பெர்னாமாவுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டார்.…

இந்தியர்களுக்கு ஒரு புதுக் கட்சி: வேதமூர்த்தி தொடக்கினார்

பிரதமர்துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி, இந்தியர் நலன் காக்க ஒரு புது அரசியல் கட்சி உருவாகி உள்ளதாக இன்று அறிவித்தார். “மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்ஏபி) சங்கப் பதிவகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு விட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார். “இக்கட்சி இந்தியர்களின் அரசியல், பொருளாதார,…

வாக்காளர் வயதைக் குறைக்கும் சட்டவரைவு இரண்டாம் வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்பட்டது

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் வாக்காளர் வயதை 18க்குக் குறைப்பதற்கு வழிகோலும் சட்டவரைவை இரண்டாம் வாசிப்புக்காக இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதைத் தாக்கல் செய்து உரையாற்றிய மகாதிர், அரசமைப்பைத் திருத்தம் செய்ய முனையும் சட்டவரைவுக்கு ஆளும்கட்சியினர் மட்டுமின்றி எதிர்க்கட்சியினரும் ஆதரவளித்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதை…

ஹாலிவூட் தயாரிப்பாளர் ‘1-எம்டிபி தொடர்புடைய’ அன்பளிப்புகளைத் திருப்பிக் கொடுத்தார்

ஹாலிவூட் தயாரிப்பாளரான ஜோய் மெக்பார்லண்ட் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மாற்றான் மகன் ரிஸா அசிஸ் தனக்குக் கொடுத்த பல அன்பளிப்புகளை- அவை 1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்டவை என்பதால்- அமெரிக்க அரசிடம் ஒப்படைத்து விட்டாராம். ஒரு அரிய பிரெஞ்ச் நாட்டு “கிங் கோங்” போஸ்டர், Jean-Michel Basquiat-டின்…

அரண்மனை அறிவிக்காமல் யாரையும் பெர்மைசூரி கிளந்தான் என்று குறிப்பிடக் கூடாது

கிளந்தான் அரண்மனை அது அறிவிக்காமல் தனிப்பட்ட எவரையும் பெர்மைசூரி  கிளந்தான் என்றோ, ராஜா பெரம்புவான் கிளந்தான் என்றோ சுல்தானா கிளந்தான் என்றோ கிளந்தான் இராணியார் என்றோ குறிப்பிடக் கூடாது என்று அறிவித்துள்ளது. இவ்விசயத்தில் கிளந்தான் அரண்மனையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே சரியானதாகக் கருதப்பட வேண்டும் என்று அரண்மனை விவகாரப்…

அன்வார் பிஎஸ்ஆர்மீது மீனவர்களைச் சந்தித்தது ‘வெறும் நாடகம்’- கெராக்கான் சாடல்

பினாங்கு தென்பகுதி கடல்மீட்புத் திட்டம்(பிஎஸ்ஆர்) தொடர்பில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மீனவர்களைச் சந்தித்துப் பேசியது “வெறும் நாடகம்” என்றும் மீனவச் சமூகத்தவருக்கு உதவும் நோக்கம் அவருக்குத் துளியும் இல்லை என்றும் கெராக்கான் கட்சி சாடியுள்ளது. மலேசியாகினியிடம் பேசிய கெராக்கான் துணைத் தலைவர் ஓ தொங் கியோங் அச்சந்திப்பில்…

லொக்மான் ஆடம் செக்ஸ் காணொளிகளை இந்தோனேசியா எடுத்துச் செல்கிறார்

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லொக்மான் ஆடம், பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஓரினப் புணர்ச்சிக் காணொளியை ஜகார்த்தாவில் உள்ள ஒரு தடயவியல் நிறுவனத்திடம் கொடுத்துச் சோதிப்பதற்காக எடுத்துச் செல்கிறார். “காணொளி எனக்குச் சொந்தமானதல்ல என்பதால் என்னால் அந்த நிறுவனத்தின் பெயரை வெளியிட முடியாது. “சோதனை முடிவுகள்…

பந்தாய் மானிஸ் பிரதிநிதி பெர்சத்துவிலிருந்து விலகி அம்னோவில் சேர்ந்தார்

மூன்று மாதங்களுக்குமுன் பெர்சத்துவில் சேர்ந்த பந்தாய் மானிஸ் முன்னாள் பிரதிநிதி அப்துல் ரஹிம் இஸ்மாயில், நேற்று மீண்டும் அம்னோவில் சேர்ந்தார். பெர்சத்துவில் இருந்தபோது “அரசியல் ரீதியில் முடங்கிக் கிடந்தததாக” அவர் கூறினார். ரஹிமைத் தவிர்த்து சாபாவின் ஐந்து தொகுதிகளில் செயல்குழு உறுப்பினரில் பலர் பெர்சத்துவிலிருந்து விலகி அம்னோவுக்குத் திரும்பிச்…

ஜோகூரில் 18 சட்டவிரோத தொழிற்சாலைகள் மூடப்படும்

ஜோகூர், பாசிர் கூடாங்கில் இவ்வாரம் தொடங்கி 18 சட்டவிரோத தொழிற்சாலைகள் மூடப்படும். அங்கு சுமார் 250 தொழிற்சாலைகளைப் பரிசோதித்துப் பார்த்தபின்னர் அதிகாரிகள் அம்முடிவுக்கு வந்திருப்பதாக த மலேசியன் இன்சைட் ஜோகூர் சுற்றுச்சூழல் துறை (டிஓஎ) இயக்குனர் வான் அப்துல் லத்திப் வான் ஜப்பாரை மேற்கோள்காட்டிக் கூறியுள்ளது. “வெவ்வேறு துறை…

பி.எஸ்.எம். கட்சியின் புதியத் தலைவராக ஜெயக்குமார் தேர்வு

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர், டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் மலேசிய சோசலிசக் கட்சியின் புதியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காஜாங்கில், கடந்த 3 நாட்களாக நடைபெற்ற கட்சியின் 21-வது தேசிய மாநாடு நேற்று முடிவுற்ற நிலையில், கட்சியின் புதியத் தலைமைத்துவம் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர்…

அம்னோவைக் கேடயமாக பயன்படுத்த வேண்டாம்: நஜிப்புக்கு கைரி வலியுறுத்து

முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், அம்னோ தலைவர்கள் நீதிமன்ற வழக்குகளிலிருந்து தப்பிக்க கட்சியை ஒரு “கேடயமாக”ப் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தினார். இன்று பாடாங் ரெங்காஸ் அம்னோ தொகுதி ஆண்டுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கைரி, அடிநிலை கட்சி உறுப்பினர்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள்…

பெற்றோர் தீ அணைப்பு வீரர்களுக்கு உதவச் சென்றபோது பிள்ளைகள் தீயில்…

அவர்களின் பெற்றோர் இருவரும் நேற்றிரவு பூலாவ் இண்டா தொழிலியல் பூங்காவில் தீப் பற்றிக்கொண்ட ஓர் இராசன ஆலையில் நெருப்பை அணைப்பதற்குப் போராடிக் கொண்டிருந்த தீயணைப்பு வீரர்களுக்கு உணவு சமைக்கச் சென்று விட்டார்கள். நூர் சலசபில்லா முகம்மட் பக்ருல் கைர்,16, அவரின் தங்கை நூர் அயின் சுமய்யா,13, இருவரும் பந்திங்…

கிட் சியாங்: மகாதிர் ஊழல்வாதி என்று நான் சொன்னதே இல்லை

டாக்டர் மகாதிர் முகம்மட் ஒரு ஊழல்வாதி என்று தான் குற்றஞ்சாட்டியதே இல்லை என்கிறார் டிஏபி-இன் மூத்த தலைவர் லி கிட் சியாங். “அவர் ஊழல் செய்திருப்பதாக என்றும் நான் சொல்லியதில்லை. நான் பேசிய பேச்சுகளை எல்லாம் நீங்கள் பார்க்கலாம். எல்லாமே பத்திரமாக இருக்கும். டாக்டர் மகாதிர் ஊழல்வாதி என்று…

ஈராண்டு என்ற காலக்கெடுவெல்லாம் கிடையாது, முக்ரிஸ் சொல்வது உண்மையே –…

பிரதமர் பதவியை ஈராண்டுகளில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பது என்ற காலக்கெடு எதுவும் கிடையாது என்று கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் கூறியிருப்பது உண்மைதான் என்கிறார் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி. அண்மையில் நிகேய் ஆசியன் ரிவியு பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் முக்ரிஸ் கூறியதாக…

காணாமல்போன ஜெர்மானியர் மூலு தேசிய பூங்காவில் இறந்து கிடந்தார்

சரவாக்கில், மூலு தேசியப் பூங்காவில், குவா ரூசா குகையைச் சுற்றிப் பார்க்கச் சென்ற ஜெர்மன் நாட்டுச் சுற்றுப்பயணி ஒருவர் இன்று காலை மணி 7-க்கு இறந்து கிடக்கக் காணப்பட்டார். பீட்டர் ஹொவர்காம்ப்,66, என்ற அந்த ஜெர்மானியரும் ரொவிசால் ரோபின்,20, என்ற உள்ளூர் சுற்றுப்பயண வழிகாட்டியும் குவா ரூசா குகையில்…

குடிநுழைவுத் துறையில் சீரமைப்பு தேவை- எம்பி கோரிக்கை

கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்ட நைஜீரியர் ஒருவர் இறந்து போனதை அடுத்து குடிநுழைவுத் துறையின் வழக்கமான நடைமுறைகள் (SOP) திருத்தப்பட்டுச் சீரமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். லிம் கொக் விங் பல்கலைக்கழகத்தின் பிஎச்டி மாணவரான ஓர்ஹியோன்ஸ் இவான்சிஹா தாமஸ் என்ற அந்த நைஜீரியர்…

‘புதிய மலேசியாவில் முற்போக்குப் போராட்டம்’ – பி.எஸ்.எம். கட்சியின் 21-வது…

எஸ் அருட்செல்வன் | பினாங்குத் தீவின் தென்பகுதியில் நடந்துவரும் கடல் மீட்புத் திட்டத்திற்கு மறுப்புத் தெரிவிக்க ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான பினாங்கு மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நானும் அவர்களுடன் இணைந்தேன் நாடாளுமன்றத்தின் முன் கூடியிருந்தபோது, ஒரு மூத்த பத்திரிகையாளரைச் சந்திக்க நேர்ந்தது. என்னிடம் பேச்சு கொடுத்த அவர், இன்னும்…

ஜோகூர் என்ஜிஓ: அரண்மனை தலையீடு இருந்ததா, ஆதாரம் என்ன?

இளைஞருக்கான வயது வரம்பை நிர்ணயிப்பதில் அரண்மனை தலையீடு இருந்ததாகக் கூறப்படுவதற்கு ஜோகூர் மந்திரி புசார் டாக்டர் ஸஹ்ருடின் ஜமாலும் எக்ஸ்கோ உறுப்பினர் ஷேக் உமர் பாக்ரிப்பும் பதிலளிக்க வேண்டும் என்று அரசுசார்பற்ற அமைப்பான என்ஜிஓ டேவான் மூடா வலியுறுத்தியுள்ளது. இளைஞர் வயது விவகாரத்தில் ஜோகூர் அரசு இரண்டு தடவை…

எக்ஸ்கோமீது போலீஸ் விசாரணை முடிவதற்காக டிஏபி காத்திருக்கிறது

டிஏபி, வீட்டுப் பணிப்பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் பால் யோங்மீது நடவடிக்கை எடுப்பதற்குமுன் போலீஸ் விசாரணை முடிவதற்குக் காத்திருப்பதாக அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். “போலீஸ் விசாரணையின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். அதன் அடிப்படையில்தான் எந்தவொரு நடவடிக்கையும் அமைந்திருக்கும்”, என்றாரவர்.…

ஒராங் அஸ்லிகள் கருத்தடை செய்துகொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டார்களா?

சுகாதார அமைச்சு அதிகாரிகள் ஓராங் அஸ்லி பெண்களைக் கருத்தடை செய்துகொள்ளும்படிக் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் செய்தி உண்மையா என்பதைக் கண்டறிய புத்ரா ஜெயா ஒரு விசாரணைக் குழுவை அமைக்கும். மலேசியாகினியில் வெளிவந்த அச்செய்தியைப் படித்து “அதிர்ச்சி” அடைந்ததாக பிரதமர்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூறினார். அச்செய்தியில் தெமியார் இன உரிமைகளுக்காக போராடி…