மத்திய கிழக்கு மோதல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக, அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் முகமைகள் தங்களின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு வழிகாட்டுதலில், நிதியமைச்சகத்தின் பொதுச் செயலாளர் ஜோஹன் மஹ்மூத் மெரிக்கன் கூறுகையில், 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மீதமுள்ள மதிப்பிடப்பட்ட செலவினங்களை…
பாலியல் வன்முறை: எக்ஸ்கோ குடும்பத்தினரிடம் போலீஸ் விசாரணை
பேராக் ஆட்சிமன்ற உறுப்பினர் ஒருவர் அவரின் வீட்டுப் பணிப்பெண்ணைப் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதன் தொடர்பில் போலீசார் அவரின் குடும்பத்தினர் உள்பட பலரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதைத் தெரிவித்த பேராக் போலீஸ் தலைவர் ரொஸாருடின் உசேன், புகார்தாரரான 23-வயது இந்தோனேசிய பெண் ஓரு பாதுகாப்பான வீட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். ஜூலை…
அமைச்சர்: இளைஞர் வயது வரம்பை நிர்ணயிப்பதில் ஜோகூர் பல்டி அடிப்பது…
இளைஞர், விளையாட்டு அமைச்சர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான், இளைஞருக்கான வயது வரம்பை நிர்ணயம் செய்வதில் ஜோகூர் அடிக்கடி பல்டி அடிப்பது ஏன் என்பதை கண்டறியும் பொறுப்பை ஊடகங்களிடமே விட்டுவிடுவதாகக் கூறினார். “இது ஏன் என்பதை ஊடக நண்பர்கள் ஆராய வேண்டும்”, என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை…
மகாதிரின் பிறந்த நாள் விருப்பம்: எடுத்துக்கொண்ட பணியை முடிக்க வேண்டும்
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு இன்று பிறந்த நாள். இன்று 94 வயதாகும் அவருடைய பிறந்த நாள் விருப்பம் எடுத்த பணியை முடிப்பதுதான். “என் பிறந்த நாள் விருப்பம் மிகச் சாதாரணமானது. மலேசியாவை மீட்புப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும், அதுதான் என் விருப்பம். “நாட்டுக்குப் பணியாற்றுவது கிடைத்தற்கரிய…
பாலியல் தாக்குதல் வழக்கில் பேராக் எக்ஸ்கோ கைது
தன் வீட்டுப் பணிப்பெண்மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டார். இதை உறுதிப்படுத்திய மாநில போலீஸ் தலைவர் ரஸாருடின் உசேன், “சந்தேகத்துக்குரிய அவரை விசாரணைக்கு உதவியாக தடுத்து வைத்திருக்கிறோம்”, என்று தெரிவித்ததாக பெர்னாமா அறிவித்துள்ளது.. அவ்வழக்கு தொடர்பில் மேல்விவரம் எதனையும் அவர்…
அம்னோ மேலும் சில சொத்துகளை விற்கத் திட்டமிடுகிறது
பிப்ரவரி மாதம் மீடியா பிரிமா நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளை விற்ற அம்னோ அதனிடம் உள்ள பங்குகளில் மேலும் சிலவற்றை விற்பதெனத் தீர்மானித்துள்ளது. இதை அதன் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூறினார். ஆனால், அது குறித்து மேல்விவரம் தெரிவிக்க அவர் மறுத்தார். அம்னோ பொருளாளர்தான்…
தடுத்து வைக்கப்பட்டோருக்கு சலித்துப்போன உணவா? மறுக்கிறார் குடிநுழைவு டிஜி
குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் கைருல் ட்ஸாய்மி டாவுட், பிலிப்பினோ தடுப்புக் கைதிகள் தாங்கள் தடுத்து வைக்கப்பட்ட புககிட் ஜாலில் குடிநுழைவுத் தடுப்பு மையத்தின் நிலைமை மோசமாக இருந்ததாகக் கூறியிருப்பதை மறுக்கிறார். “அங்குக் கொடுக்கப்பட்ட உணவு தரக்குறைவானது விலங்குகள் உண்ணத்தான் உகந்தது என்று கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள 14…
எம்ஏசிசி: சந்தேகத்தின்பேரில் நீதிமன்றம் கொண்டுவரப்படுவோருக்கு இனி ஆரஞ்ச் நிற ஆடை…
எம்ஏசிசி சந்தேகத்தின்பேரில் நீதிமன்றம் கொண்டு வருவோர் இனி ஆரஞ்ச் நிற ஆடை அணிய வேண்டியதில்லை. “நிரூபிக்கப்படும்வரை அனைவரும் குற்றமற்றவர்களே என்று கூறும் கூட்டரசு அரசமைப்பு பகுதி 5(1)-க்கு ஏற்ப இம்முடிவு அமைந்துள்ளது”, என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்திபா கோயா இன்று ஓர் அறிக்கையில் கூறினார். “எம்ஏசிசி ஊழல்…
அமனா: பெர்சத்துவின் அழைப்பு கட்சியை வலுப்படுத்தும் முயற்சி, அவ்வளவே
பக்கத்தான் ஹரப்பான் தலைமை மன்றக் கூட்டம் இன்று நடைபெறவுள்ள வேளையில் அமனா உயர் தலைவர்கள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மலாய்க் கட்சிகளை பெர்சத்துவில் வந்து சேருமாறு விடுத்த அழைப்பு “வழக்கமான” ஒன்றுதான் என்றும் அது கட்சியை வலுப்படுத்தும் ஒரு முயற்சி என்றும் கூறினர். இன்று நாடாளுமன்றத்தில் அமனா…
கைரி :இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன், நன்றி
அம்னோ ரெம்பாவ் எம்பி, கைரி ஜமாலுடின் அம்னோவைவிட்டு வெளியேறப் போவதில்லை என்று கூறியுள்ளார். பக்கத்தான் ஹரப்பானுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அவர் அளித்துள்ள பதில் அப்படித்தான் நினைக்க வைக்கிறது. “இருக்கும் இடத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்”, என்றவர் இன்று நாடாளுமன்றத்தில் தன்னைச் சூழ்த்து கொண்ட செய்தியாளர்களிடம் கூறினார். அப்படியானால்…
ஊராட்சித் தேர்தல்: ஆண்டு இறுதிக்குள் அமைச்சரவையிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்
வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு ஊராட்சித் தேர்தல்களை மீண்டும் கொண்டுவருவது மீதான அறிக்கையை அமைச்சரவையிடம் வழங்கும் என அதன் துணை அமைச்சர் ராஜா கமருல் பாஹ்ரேன் ஷா கூறினார். அடுத்த ஆண்டுக்குள் அதன்மீது முடிவெடுக்கப்படலாம் என்றாரவர். “அமைச்சரவையிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் அது விவாதித்து முடிவெடுக்கும். ஆண்டு இறுதிக்குள் முடிவெடுக்கப்படலாம்”,…
‘உதவிப் பதிவாளர்கள் நியமனம் வாக்காளராவதை எளிதாக்கும்’
கோத்தா மலாக்கா எம்பி கூ போய் தியோங் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை உதவிப் பதிவாளர்களா(ஏஆர்ஓ)க நியமிக்கும் தேர்தல் ஆணைய (இசி) முடிவை வரவேற்றுள்ளார். “2011-இல் 5,729 ஏஆர்ஓ-கள் வாக்காளர் பதிவில் இசிக்கு உதவியாக இருந்தார்கள். “ஆனால், 2017-இல் 205 ஏஆர்ஓ-கள்தான் இருந்தனர். ஏனென்றால் அப்போதைய இசி ஏஆர்ஓ-களின் பதவிக்…
நசிர் ஹஷிம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு பிஎஸ்எம் தலைவர் பதவியிலிருந்து…
பார்டி சோசியலிஸ் மலேசியா(பிஎஸ்எம்) தலைவர் டாக்டர் முகம்மட் நசிர் ஹஷிம் தலைவர் பதவியிலிருந்து விலகுவார் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக அப்பதவியில் இருந்து வந்துள்ளார். நசிர், அவரின் உதவியாளர் எம்.சரஸ்வதியுடன் வரும் வெள்ளிக்கிழமை பதவியிலிருந்து விலகுவார் என பிஎஸ்எம் மத்திய செயல் குழு உறுப்பினர்…
டிங்கியை எதிர்க்க கொசுக்கள்
சுகாதார அமைச்சு நாட்டில் டிங்கி நோய் கண்டவர் எண்ணிக்கை பெருகி வருவதால் அந்நோயைக் கட்டுப்படுத்த Wolbachia பெக்டிரியாக்களைக் கொண்ட ஏடிஸ் வகை கொசுக்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. 2017, மார்ச் தொடங்கி சிலாங்கூரில் ஏழு இடங்களில் அந்த வகை கொசுக்களைக் கொண்டு சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டு அவை வெற்றிகரமாக…
ஹாஸிக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்
பிகேஆர் சாந்துபோங் இளைஞர் தலைவர் ஹாஸிக் அப்துல்லா அப்துல் அசீஸ், அண்மையில் கட்சிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வார். ஹாஸிக், கட்சித் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலிமீது “ ஊழல் குற்றச்சாட்டை ஆதாரமில்லாமலேயே சுமத்தியது” உள்பட, கட்சியின் ஒழுங்குவிதிகளை மீறி நடந்து கொண்டதாக பிகேஆர் கட்டொழுங்குக் குழு…
ஜொகூர் இந்தியர்களின் நல்வாழ்வில் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது, ஆட்சிக்குழு…
ஜொகூர் மாநிலத்தில், இந்திய சமூகம் பாதுகாக்கப்படவில்லை, அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற கூற்றை, தானும் மாநில அரசும் கடுமையாக மறுப்பதாக ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் இராமகிருஷ்ணன் சுப்பையா கூறியுள்ளார். “இந்திய சமூகத்தின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டில், மாநில அரசு எப்போதும் அக்கறை கொண்டுள்ளது, குறிப்பாக தமிழ்ப்பள்ளிகள் பிரச்சினைகளில்…
பி.எஸ்.எம். : ஹாடி, டாக்டர் எம் கூற்றுப்படி, நல்ல யோசனைகள்…
சொத்து அறிவிப்பு என்பது சோசலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகளுடைய யோசனை என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியதைத் தொடர்ந்து, அதேபோன்று கூறப்பட்ட வேறு சில சம்பவங்கள் பற்றி மலேசிய சோசலிசக் கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ் அருட்செல்வன் கருத்துரைத்துள்ளார். அவற்றுள், டோல் கட்டணத்தை அகற்றுதல் மற்றும்…
நஜிப்பின் மாற்றான் மகன்மீது பணச்சலவை செய்ததாக ஐந்து குற்றச்சாட்டுகள்
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மாற்றான் மகன் ரிஸா அஸிஸ் மீது 1எம்டிபி-இலிருந்து கள்ளத்தனமாகப் பெறப்பட்ட பணத்தை நல்ல பணமாக்கும் முயற்சியில் - பணச்சலவை செய்யும் முயற்சியில் - ஈடுபட்டதாக இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. செஷன்ஸ் நீதிபதி ரோசினா ஆயோப் முன்னிலையில்…
டிஎன்பியுடன் மற்றவர்களும் மின்சார விநியோகம் மேற்கொள்ள அனுமதிக்கப்படலாம்
மின்சார விநியோத்தில் புதியவர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் திட்டம் குறித்து அரசாங்கம் ஆலோசிக்கிறது. அதன் தொடர்பில் விரைவில் முடிவு காணப்படும். அத்திட்டம் அமலுக்கு வந்தால் தீவகற்ப மலேசியாவில் தெனாகா நேசனல் பெர்ஹாட் மட்டுமே ஏகபோக மின் விநியோக நிறுவனமாக இருக்கும் நிலை முடிவுக்கு வரும். “மின் விற்பனையைத் தாராளமயமாக்கும் அப்பரிந்துரையை…
பல்வேறு சமயத்தவரிடையே புரிந்துணர்வை மேம்படுத்தும் முயற்சியில் பினாங்கு கபித்தான் பள்ளிவாசல்
பினாங்கின் 217 ஆண்டு பழமையான கபித்தான் கிள்ளிங் பள்ளிவாசல் சமூகங்களிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தும் முயற்சியாக எல்லாரையும் குறிப்பாக முஸ்லிம்- அல்லாதாரை வருக வருக என வரவேற்கிறது. ஜார்ஜ்டவுன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு வருகையாளர்கள் ஜூலை 6ஆம் 7ஆம் நாள்களில்( நாளையும் ஞாயிற்றுக்கிழமையும்) அப்பள்ளிவாசலைச் சுற்றிப்பார்க்க அழைக்கப்படுகிறார்கள்.…
பாசீர் கூடாங் மாசு பிரச்சனைக்கு முழுமையான தீர்வு தேவை, ஜொகூர்…
உயிர் சேதம் எதுவும் இல்லையென்றாலும், இரண்டாம் முறையாக ஏற்பட்டுள்ள காற்று தூய்மைகேடு பிரச்சனை, பாசீர் கூடாங் வட்டார மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அவ்வட்டார மக்களின், குறிப்பாக குழந்தைகளின் சுகாதாரம், இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என ஜொகூர் மாநில மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், அமைச்சு…
பிஜே-இல் ஜாலான் செமாங்காட் ‘ஜாலான் புரொபசர் கூ கே கிம்’-ஆக…
சிலாங்கூர் அரசு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஜாலான் செமாங்காட்டைப் பிரபல வரலாற்றுப் பேராசிரியரைச் சிறப்பிக்கும் வகையில் ஜாலான் புரொபசர் கூ கே கிம்-ஆக பெயர்மற்றம் செய்துள்ளது. பெயர் மாற்றத்துக்கு சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இணக்கம் தெரிவித்ததாக சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி இன்று ஓர் அறிக்கையில்…
இரத்தான பிரதமருடன் கேள்வி நேரம் மீண்டும் வருகிறது
பிரதமர்துறை அமைச்சர் லியு வுய் கியோங் பிரதமருடன் கேள்வி நேரம் அங்கம் தேவையில்லை என்று சொல்லி 10 நாள்கூட ஆகவில்லை அதற்குள் அவரே அக்டோபர் மாத நாடாளுமன்ற அமர்வு தொடங்கி பிரதமருடன் கேள்வி நேரம் தொடர்ந்து இடம்பெறும் என்று இன்று அறிவித்தார். பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அடிக்கடி…
இந்தியாவில் தேடப்படும் நபரான ஜாகிர் நாய்க் கிளந்தானில் சுற்றுப் பயணம்
சர்ச்சைக்குரிய சமயப் பிரச்சாரகர் டாக்டர் ஜாகிர் நாய்க் அடுத்த மாதம் கிளந்தானில் சுற்றுப்பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகம்மட் பாட்ஸ்லி ஹசான் தெரிவித்தார். ஜாகிருக்கும் அவரைத் திருப்பி அனுப்ப மறுக்கும் மகாதிருக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 7-இலிருந்து ஆகஸ்ட் 10வரைக்குமான அந்நிகழ்வுக்கு ஏற்பாடு…
























