பாதிரியார் கடத்தல் சம்பவம் போலீஸ் நடவடிக்கைபோல் உள்ளதாக ஐஓ கூறினாராம்

பாதிரியார்  ரேய்மண்ட்   கோ   காணாமல்போனதை  விசாரித்துவரும்   போலீஸ்  அதிகாரி (ஐஓ)  ஒருவர்,  அச்சம்பவம்  போலீஸ்   நடவடிக்கைபோல்   அமைந்திருப்பதாகக்  குறிப்பிட்டார்   என இன்று   மனித   உரிமை    ஆணைய(சுஹாகாம்)  பொது  விசாரணையில்   தெரிவிக்கப்பட்டது. சுஹாகாமிடம்  சாட்சியம்   அளித்த   ரோஷன்   செலஸ்டின்  கோமஸ்,    தாம்  அக்கடத்தல்   சம்பவம்   பற்றி   புகார்   செய்ய  கிளானா  …

சுப்ரமணியம்: கேமரன் மலை மஇகா-வுக்கே, பிரதமரே தெரிவித்து விட்டார்

கேமரன்  மலை     நாடாளுமன்றத்   தொகுதி   மஇகாவுக்குத்தான்   என்கிறார்   அதன்  தலைவர்   டாக்டர்  எஸ். சுப்ரமணியம். மைபிபிபி   தலைவர்   எம்.கேவியஸ்,  கேமரன்  மலை   மைபிபிக்குத்   திரும்பக்  கொடுக்கப்படும்    என்று   கூறிக்கொண்டிருந்தாலும்   அது   உண்மை   அல்ல    என்று   சுப்ரமணியம்   சொன்னார். “அத்தொகுதி     மஇகாவுக்குத்தான்  என்பதையும்    அது   மற்ற  கட்சிகளுக்கு    மாற்றிவிடப்படாது   என்பதையும்  …

போக்குவரத்து அமைச்சர் : காணாமல் போன MH370-ஐத் தேடும் புதிய…

2014-ல், காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370-ச்சின் தேடலைத் தொடர, கடந்த செவ்வாய்க்கிழமை மூன்று நிறுவனங்களிலிருந்து முன்மொழிவுகளை மலேசியா பெற்றுள்ளது, இருப்பினும், அதுதொடர்பாக இன்னும் முடிவெடுக்கப்படவில்லை எனப் போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய் தெரிவித்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் , 239 பேரை ஏற்றிகொண்டு கோலாலம்பூரிலிருந்து…

போலிஸ் : தம்பூனில் இனமோதல் இல்லை

தம்புனில் மலாய்க்காரர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் சண்டை எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில், ஆண் ஒருவரின் கை வெட்டப்பட்ட நிலையில், பரவலாக உலாவந்த ஒரு வீடியோ தொடர்பில் போலிசார் கருத்துரைத்தனர். மாவட்டத் தலைமை போலீஸ் அதிகாரி, ஏ.சி.பி. சும் சாங் கியோங் போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக…

அக்டோபர் 27-ல் தியான் சுவா விடுதலை செய்யப்படுவார்

ஒரு மாதகால சிறை தண்டணைக்குப் பின், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா அக்டோபர் 27-ல் விடுதலை செய்யப்படுவார். நாடாளுமன்ற அமர்வு அடுத்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. "அவர் அக்டோபர் 27-ம் தேதி விடுவிக்கப்படுவார், நாடாளுமன்ற அமர்வுக்கு நிச்சயம் வருவார்," என்று அவரின் வழக்குரைஞர் என்.சுரேந்திரன் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.…

மலாக்கா மஇகா எண்பது விழுக்காட்டு இந்தியர்களின் வாக்குகளைப் பெறும் நம்பிக்கையில்…

எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் மலாக்கா மாநிலத்திலுள்ள இந்திய வாக்காளர்களில் 80 விழுக்காட்டினர் பிஎன்னுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை கொண்டுள்ளதாக மஇகா மாநில குழு உறுப்பினர் எம். எஸ் மகாதேவன் கூறுகிறார். இந்தியர்களின் நலன்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளதுடன் பல உதவிகளையும் அளித்துள்ளோம்.…

லகாட் டத்து மாநில சட்டமன்ற உறுப்பினர் தடுத்து வைக்கப்பட்டார்

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) விசாரணைக்கு உதவுவதற்காக லகாட் டத்து சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் யூசுப் அப்டால் நான்கு நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யூசுப், பார்டி வாரிசான் சாபா தலைவர் ஷாபி அப்டாலின் சகோதரர், நேற்று எம்எசிசியின் கோட்டா கின்னபாலு அலுவலகத்தில் அவர் கைது செய்யப்பட்டார். கைது…

மஇகாவின் வண்ணமயமான தீபாவளிக் கொண்டாட்டத்தில் ‘தந்தை’ நஜிப் கலந்துகொண்டார்

பத்துமலை வளாகத்தில் இன்று நடைபெற்ற மஇகாவின் திறந்த இல்ல தீபாவளி நிகழ்ச்சியில் 'தந்தை' நஜிப் ரசாக் கலந்து கொண்டது அந்நிகழ்ச்சியை மேலும் மகிழ்ச்சிகரமானதாக்கியது. காலை மணி 10.30 பத்துமலை வளாகம் வந்தடைந்த பிரதமர் நஜிப்பை மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் மற்றும் இதர கட்சித் தலைவர்கள் வரவேற்றனர்.…

பங்களதேஷ் பணித்திட்டத்திற்கு சுகாராதார அமைச்சின் பணியாளர்கள் தயார்

பங்களதேசத்தில் ரோஹிஞா அகதிகளுக்கு ஒரு தற்காலிக தள மருத்துவமனையை அமைப்பதற்கு 50 லிருந்து 60 க்கும் இடையிலான அதன் பணியாளர்களை அனுப்புவதற்கு சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறினார். பல்வேறு நிபுணர்கள் அடங்கிய குழு இன்னும் பங்களதேசத்திற்கு அனுப்பப்படவில்லை, ஆனால் அக்குழு…

“பூகிஸ்” என்று கூறியதற்காக மகாதிருக்கு எதிராக எதிர்ப்பு

தீவகற்ப மலேசியாவில் பூகிஸ் சமூகத்தைப் பிரதிநிதிக்கும் ஒரு கூட்டத்தினர் அச்சமூகத்தை மகாதிர் அவமதித்து விட்டார் என்று இன்று அவருக்கு எதிராக ஒரு சிறு எதிர்ப்பை அவரின் புத்ரா ஜெயா அலுவலகத்தின்முன் நடத்தினர். பெர்னாமா தகவல்படி, சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்த அச்சிறு கூட்டம் மகாதிர் அச்சமூகத்தை கடற்கொள்ளையுடன் தொடர்புபடுத்திக்…

கேவியஸ்: 17 ஆண்டுகளாக காத்திருக்கிறேன்

கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தாம் கடந்த 17 ஆண்டுகளாக காத்திருப்பததாக மைபிபிபி தலைவர் எம். கேவியஸ் கூறுமிறார். 2003 ஆம் ஆண்டு தேர்தல் தொகுதி எல்லைமறுநிர்ணயத்தின் போது உருவாக்கப்பட்ட அத்தொகுதி அவருக்குக் கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாக அவர் இப்போது கூறிக்கொள்கிறார். அப்போது பிரதமராக இருந்த…

பொருளாதார வல்லுநர் :  எண்ணெய் மானியங்கள் ஏழைகளுக்கு உதவவில்லை

பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றிபெற்றால், பெட்ரோலுக்கான மானியங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவோம் என்ற பக்காத்தான் ஹராப்பானின் எண்ணம் ஏழைகளுக்கு உதவாது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். பிகேஆர் வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறையின் தலைவர் வோங் சென் வெளியிட்ட அறிக்கையில், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாட்டில், ஏழைகளுக்கு எண்ணெய்க்கான…

சேவியர்: இந்தியச் சமுதாயத்தில் மாற்றத்தைக் கொணர்வதற்கு இத்தீபத்திருநாளில் மனதில் சபதம்…

டாக்டர் சேவியர் ஜெயக்குமார், கெஅடிலான் தேசிய உதவித் தலைவர், கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர், அக்டோபர் 17, 2017.     தீபாவளி நாள் மட்டுமின்றி  நம் எதிர்காலத்தையே  ஒளிரச்செய்யும்  மாற்றத்தை நம் குழந்தைகளுக்கு வழங்குவதே, அவர்களுக்கு நாம் வழங்கும் சிறந்த தீபாவளி பரிசாகும். இந்நாளில் நமது அடுத்த…

ஸாகிட்: மியன்மாரின் விவகாரங்களில் தலையிடுவது மலேசியாவின் நோக்கமல்ல

  ரோஹிஞா இன மக்களின் அவலநிலை குறித்து மலேசியா தொடர்ந்து பேசிவருகிறது. ஆனால், மலேசியாவுக்கு மியன்மாரின் உள்விவகாரங்களில் தலையிடும் நோக்கம் இருந்ததே இல்லை என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறினார். மலேசியா அது குறித்து பேசிவதற்கான காரணம் சூழ்நிலை இப்போது ஒரு மனிதாபிமான பிரச்சனையாக மாறியுள்ளது…

நஜிப்: இந்தியச் சமூகத்தின் ஆசைகள் எம்ஐபியில் செதுக்கப்பட்டுள்ளன

  தேசிய முதன்மை நிலைக்கு ஒப்ப இந்நாட்டு இந்தியச் சமூகத்தின் மீது பிரதமர் நஜிப் நிச்சயமான தாக்கத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளார். இவ்வாண்டின் தீபாவளி கொண்டாட்டம் மிகச் சிறப்பானது ஏனென்றால் அவர்களின் எதிர்பார்ப்புகளும் விருப்பங்களும் கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்ட மலேசிய இந்தியப் பெருந்திட்டத்தில் (எம் ஐபி) செதுக்கப்பட்டுள்ளன என்று நஜிப்…

ஹரப்பான் கொள்ளைக்கார ஆட்சி எதிர்ப்பு அலுவலக உறுப்பினருக்கு போலீஸ் அழைப்பாணை

  பெட்டாலிங் ஜெயா, பாடாங் திமோரில் நடைபெற்ற கொள்ளைக்கார ஆட்சி எதிர்ப்புப் பேரணியின் அலுவலகத்தைச் சேர்ந்த உறுப்பினர் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். பெட்டாலிங் ஜெயா கழக உறுப்பினர் லிம் இ வெய், 27, அமைதியாக ஒன்றுகூடுதல் சட்டம் 2012, செக்சன் 15(1) (பிஎஎ) கீழ் விசாரிக்கப்படுகிறார் என்று வழக்குரைஞர்…

ஸாகிட்: ரோஹிங்யா அக்திகளுக்கு மலேசியா மருத்துவமனை கட்டும்

பங்களாதேஷ், கோக்ஸ் பஜாரில் ரோஹிங்யா இன அகதிகளுக்கு ரிம3.5 மில்லியன் மருத்துவமனையை மலேசியா கட்டும் என்று மலேசிய துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறினார். மலேசிய இராணுவப் படையின் மருத்துவப் பிரிவு இந்த மருத்துவமனையைக் கட்டும். தொடக்கத்தில் இது 50 படுக்கைகளைக் கொண்டிருக்கும். பங்களாதேஷ் பிரதமர் ஷீக்…

அடையாள அட்டைக்கு ஏற்பாடு செய்யவில்லை, பிறகு என்ன இந்தியர் மேம்பாட்டுத்…

  நாடற்ற இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்க முடியாதென்றால், மலேசிய இந்தியர்கள் மேம்பாட்டுத் திட்டம் (எம்ஐபி) பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை என்று கூறுகிறார் டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். தமிழ் இடைநிலைப்பள்ளிகளுக்கு அனுமதி அளித்தல், இந்திய மாணவர்களுக்கு நல்ல பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு மற்றும் ஒவ்வொரு…

தீயணைப்பு இலாகா: தாஃபிஸ் பள்ளிகளில் பாதி பாதுகாப்பானதல்ல

  தீ மற்றும் மீட்பு இலாகா சோதனையிட்ட 956 தாஃபிஸ் பள்ளிகளில் பாதி பள்ளிகள் மட்டுமே பாதுகாப்பானவை என்று ஊடகச் செய்திகள் இன்று கூறுகின்றன. மீதமுள்ள பள்ளிகள் தீயினால் பாதிக்கக்கூடிய அபாயத்தில் இருக்கின்றன. அவை உடனடியாக தீ பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், அல்லது சட்ட…

ரிம 1.5 பில்லியன் மோசடி – விளக்கமளிக்க ‘டத்தோ’ ஒருவர்…

இன்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.), சபாவில் கிராமப்புற அபிவிருத்தி நிதிகளில் நடந்த மோசடி குறித்த விசாரணைகளுக்கு உதவ, ‘டத்தோ’ அந்தஸ்து கொண்ட தொழிலதிபர் ஒருவரை அழைத்தது. ஆதாரங்களின்படி, கிராமப்புற மற்றும் கூட்டரசுப் பிரதேச அபிவிருத்தி அமைச்சின் ஒப்புதல் பெற்ற, குறைந்தபட்சம் 7 நிறுவனங்களை அத்தொழிலதிபர் தனது…

அஸ்மின் அலி : நான் தவளை அல்ல, பிகேஆர்-உடன் தொடர்ந்து…

சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, பி.கே.ஆர். கட்சியிலேயேத் தான் தொடர்ந்து இருக்கப்போவதாக கூறியுள்ளார். கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸ்மின் அலியைக் கட்சி மாறச் சொல்லிய முன்னாள் மந்திரி பெசார் டாக்டர் அபு ஹசான் ஓமாரின் ஆலோசனைக்கு, அஸ்மின் இவ்வாறு பதிலளித்துள்ளார். “அஸ்மின் நற்குணங்கள் கொண்டிருக்கிறார். அவர் ஒரு…

காலிட்: நான் அவர்களுடன் சேரவில்லை; அவர்கள் என்னுடம் சேரலாம்

    முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் தமக்கு முன்னாள் பாரிசான் மந்திரி பெசார்களுடன் சேர்ந்து கொள்ளும் நோக்கம் இல்லை என்று கூறுகிறார். மாறாக, அந்த மூன்று பிஎன் மந்திரி பெசார்களும், முகம்மட் கிர் தோயோ, அபு ஹசான் ஒமார் மற்றும் முகம்மட் முகம்மட் தாய்ப்,…

எம்.டி.யூ.சி. : வெளிநாட்டு தொழிலாளர்கள் இறக்குமதி விதிமுறையைத் தளர்த்தும் அமைச்சரவை…

மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்.டி.யூ.சி), உற்பத்தித் துறையில் 100% வெளிநாட்டு தொழிலாளர்களைப் பணிக்கமர்த்தும் விதியை இலகுவாக்குவதற்கான முடிவை இரத்து செய்யுமாறு அமைச்சரவையைக் கேட்டுக்கொண்டுள்ளது. அமைச்சரவையின் இந்த முடிவு, அதிர்ச்சி அளிப்பதாகவும், இது முற்றிலும் நியாயமற்ற ஒரு முடிவு என்றும் எம்.டி.யூ.சி.-யின் தலைமைச் செயலாளர், ஜெ.சோலமன் கூறினார். உள்துறை துணையமைச்சர்…