தஞ்சோங் பூங்கா திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை- அமைச்சு

பினாங்கு     அரசு     தஞ்சோங்  பூங்கா   கட்டுபடி-விலை   வீடமைப்புத்  திட்டத்தைக்  கண்காணிக்கத்   தவறிவிட்டதாக   இயற்கை   வள,  சுற்றுசூழல்   அமைச்சு    கூறியது.  அந்த வீடமைப்புத்    திட்டத்தில்    கடந்த    சனிக்கிழமை    ஏற்பட்ட    நிலச்சரிவில்   பதினொரு   பேர்   பலியானார்கள். அந்த   வீடமைப்புத்   திட்டத்தின்    மேம்பாட்டாளரான    தாமான்   ஸ்ரீபூங்கா    சென்.   பெர்ஹாட்    அனுமதியின்றியே    அத்திட்டத்தை  மேற்கொண்டிருந்ததாக   …

மாட் சாபு: பாஸ் தலைவர்களுக்கு நான் கொடியவன், ஆனால் இரகசியமாக…

  அமனா கட்சியை தோற்றுவித்த ஈராண்டுகளுக்குப் பின்னர், கட்சியின் தலைவர் முகமட் சாபு இன்று ஓர் இரகசியத்தை வெளியிட்டார். பாஸ் கட்சியிலிருக்கும் சில தலைவர்களும் உறுப்பினர்களும் தம்மை ஒரு கொடியவன் என்று பகிரங்கமாக கூறிக்கொண்டிருந்த போதிலும், அவர்கள் தம்மை கட்சியில் மீண்டும் சேர்ந்துகொள்ளும்படி இரகசியமாக கெஞ்சுகின்றனர் என்று அவர்…

பினாங்கு ஃபோரம் : நிலச்சரிவு அபாயங்கள் குறித்து 2 முறை…

தஞ்சோங் பூங்கா கட்டுமான தளத்தில், நிலச்சரிவு ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதை, பினாங்கு அரசுக்கு இரண்டு முறை தெரியப்படுத்தி உள்ளதாக, அரசு சாரா நிறுவனங்களின் கூட்டணியான ‘பினாங்கு ஃபோரம்’  தெரிவித்தது. இவ்வாண்டு மட்டும் இரண்டு முறை, ஜனவரி மற்றும் மே மாதங்களில், நிலச்சரிவு ஏற்படும் சாத்தியம் இருப்பதால், இந்தத் திட்டம்…

மாபுஸ்: பாஸ் வேட்பாளர்களாகப் போட்டியிட்டால், அது மக்களுக்குத் துரோகம் இழைத்ததாகும்

பக்கத்தான் ஹரப்பானுடன் தொடர்ந்து உறவு பாராட்டி வரும் பொக்கோக் சேனா நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் 14 ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார் என்று பாஸ் அறிவுத்துள்ளது பற்றி கருத்துரைத்த மாபுஸ், தாம் போட்டியிட அனுமதிக்கப்பட்டாலும் தற்போதைய சூழ்நிலையில் அதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன் என்று…

பினாங்கு நிலச்சரிவு : 6 பேரின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன

லெங்கோக் லெம்பா பெர்மாய், தஞ்சோங் பூங்கா , ஜார்ஜ் டவுன், மலிவுவிலை வீடுகள் கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இன்று காலை 8 மணிக்கு மீண்டும் தொடங்கின. இதுவரை 6 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, எட்டு பேர் இன்னமும் மண்சரிவில் சிக்கிக் கொண்டுள்ளனர். நேற்று…

நிலச்சரிவு கண்ணிமைக்கும் நொடியில் நடந்துவிட்டது, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்

தஞ்சோங் பூங்கா நிலச்சரிவில் தப்பித்த வங்காள தேசக் கட்டுமான தொழிலாளர்கள் சிலர் கண்ணிமைக்கும் நொடியில், ஏறக்குறைய ஒரு நிமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துவிட்டது என்று கூறியுள்ளனர். “சம்பவம் நிகழ்ந்தபோது நான், கீழ்த்தளத்தில் இரும்பைப் பொறுத்திகொண்டு இருந்தேன். இரும்பு எடுக்க நான் மேலே சென்றபோது, பெரும் சத்தத்துடன் மண் சரிந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன்.”…

நிலச்சரிவு : பாரிசான் தலைவர்கள் பினாங்கு அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுகின்றனர்

இன்று காலை, பினாங்கு தஞ்சோங் பூங்காவில் நடந்த நிலச்சரிவு சம்பவம் குறித்து, பிரதமர் நஜிப் தனது சோகத்தை வெளிபடுத்தினார். "தேடல் மற்றும் மீட்பு பணி நன்றாக செல்ல, நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்," என்று அவர் தனது டுவிட்டர் வழியாகக் கூறினார். இன்று இரவு 8 மணிக்கு நிறுத்தப்பட்ட தேடும்…

குவான் எங் : நிலச்சரிவு சோகமான நிகழ்வு, மாநில விசாரணை…

ஜோர்ஜ் டவுன், தஞ்சோங் பூங்கா, லெங்கோ லெம்பா பெர்மாயில், மலிவு விலை வீட்டுத் திட்டக் கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு பற்றி விசாரிக்க, சிறப்பு விசாரணை ஆணையத்தை மாநில அரசு அமைக்கவுள்ளது. இன்று அதிகாலையில் ஏற்பட்ட அந்நிலச்சரிவில், புதையுண்ட 14 பேரில், மூவர் இறந்துவிட்டனர், படுகாயம் அடைந்த ஒருவர்…

ஷாபியின் கைது ஹரப்பானுக்கு நல்லதுதான்

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பார்டி வாரிசான் சாபாவின் தலைவர் ஷாபி அப்டாலை கைது செய்தது ஒருவகையில் சாபா மக்களுக்கும் பக்கத்தான் ஹரப்பானுக்கும் நல்லதுதான் என்று ஓர் அமனா பேராளர் அக்கட்சியின் மாநாட்டில் கூறினார். அமனா தலைவர் முகமட் சாபுவின் கொள்கை உரை மீதான விவாதத்தில் பங்கேற்று…

பினாங்கில் நிலச்சரிவு: மூவர் இறந்தனர்; 11 பேர் புதையுண்டர்

  பினாங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று தொழிலாளர்கள் இறந்ததுடன் 11 பேர் புதையுண்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மலேசியர், மற்ற இருவரும் வங்காளதேசிகள். பினாங்கு மாநகர் மன்ற தலைவர் மரிமுனா ஷரீப் நிலச்சரிவு தஞ்சோங் பூங்காவில் ஏற்பட்டதை உறுதிப்படுத்தினார். இச்சம்பவம் காலை மணி 8.30 அளவில் ஏற்பட்டது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின்…

ஹரபான் பதிவை ஆர்ஓஎஸ் இழுத்தடிக்கிறதே: மகாதிர் ஆதங்கம்

பக்கத்தான்  ஹரபான்   அதன்   நான்கு   கட்சிகளையும்    அதிகாரத்துவ  கூட்டணியாக   பதிவு     செய்ய  சங்கப்  பதிவக (ஆர்ஓஎஸ்) த்திடம்   மனு   செய்துள்ளது.   ஆனால்,  ஆர்ஓஎஸ்   அதைக்   கண்டுக்கொள்ளாதிருக்கிறது   என  முன்னாள்  பிர்தமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்    குறைப்பட்டுக்  கொண்டார். ஹரபான்   அதன்  மனுவைத்   தாக்கல்     செய்து    நான்கு   மாதங்களாயிற்று. ஆர்ஓஎஸ் …

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை: நஜிப்பின் இலக்கு

எதிர்வரும்  பொதுத்தேர்தலில்    பாரிசான்   நேசனல்  மூன்றில்   இரண்டு  பங்கு   பெரும்பான்மை   பெற    வேண்டும்    என்பது    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்  இலக்குகளில்   ஒன்று. இன்று   பிஎன்  ஒருங்கிணைப்பாளர்களுக்காக  நடைபெற்ற   தேர்தலுக்கு-முந்திய  கூட்டமொன்றில்   நஜிப்    இதைத்    தெரிவித்தார். “பிரதமர்  மூன்றில்  இரண்டு  பங்கு    பெரும்பான்மை    பெறுவது   குறித்து   குறிப்பிட்டார்.   மூன்றில்-இரண்டு …

கெடா ஹரபான் தலைமைத்துவ வரிசை அறிவிப்பு முக்ரிஸ் தலைவர்

நான்கு   எதிர்க்கட்சிகளின்  கூட்டணியான   பக்கத்தான்  ஹரபான்,  கெடாவுக்கான   அதன்   தலைமைத்துவ  வரிசையை   நேற்றிரவு    அறிவித்தது. பக்கத்தான்  ஹரபான்   தலைவரும்    பார்டி     பிரிபூமி   பெர்சத்து   மலேசியா(பிபிபிஎம்)  அவைத்   தலைவருமான     டாக்டர்   மகாதிர்    முகம்மட்   “மலேசியாவைக்   காப்போம்   பேரணி  மற்றும்  விருந்து”  நிகழ்வில்   அந்த    அறிவிப்பைச்   செய்தார். கெடா   பக்கத்தான்  ஹரபான் …

பூகிஸ் சமூகத்தை கடற்கொள்ளைக்காரர்கள் என்று கூறவில்லை, மகாதிர்

  கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஹரப்பான் கொள்ளைக்காரர் ஆட்சி எதிர்ப்பு பேரணியில் தாம் பூகிஸ் சமூகத்தை அவமதித்து விட்டதாக கூறப்படுவதை மகாதிர் மறுத்துள்ளார். நேற்றிரவு, அலோர் செதாரில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட செராமாவில் பேசிய மகாதிர் தாம் கூறியிருந்த கருத்து "பணத்தைத் திருடும் திருடர்களை நோக்கி கூறபட்டதாகும்"…

ஷாபி நான்கு நாள்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்

  பார்டி வாரிசான் சாபா தலைவர் ஷாபி அப்டால் அவரது பிறந்த நாளை சிறைக்கம்பிகளுக்கு பின்னால் கழிக்கவிருக்கிறார், ஏனென்றால் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) அவரை நான்கு நாள்களுக்கு தடுப்புக்காவில் வைப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளது. ஷாபி நேற்றிரவு மணி 9 அளவில் எம்எசிசியால் கைது செய்யப்பட்டார். உயர்…

மகாதிர்: பொய் சொல்வதை நிறுத்துங்கள், நஜிப்பால்தான் பெல்லியு மாஸிருந்து வெளியேறினார்

தமது சொந்த விருப்பத்தின் பேரில்தான் மாஸின் தலைமைச் செயல்முறை அதிகாரி பெல்லியு மாஸிலிருந்து வெளியேறினார் என்பதை மகாதிர் முகம்மட் நம்பவில்லை. மாறாக, பிரதமர் நஜிப்பின் தலையீட்டினால்தான் பெல்லியு விலகினார் என்று மகாதிர் கூறுகிறார். "பொய் சொல்வதை நிறுத்துங்கள். அந்த நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் நிர்வாகி ஆகியோருக்குத் தெரிவிக்காமல் நஜிப்…

ஷாபி கைது: வாரிசான் கட்சியை முடக்குவதுதான் நோக்கமாம்

பார்டி   வாரிசான்     சாபா (வாரிசான்)  தலைவர்   ஷாபி   அப்டால்  கைது   செய்யப்பட்டதன்   நோக்கமே    அக்கட்சியை    முடக்கிப்  போடுவதுதான்    என  டாக்டர்   மகாதிர்   முகம்மட்     கூறினார். பிரதமர்    நஜிப்     அப்துல்    ரசாக்தான்   ஷாபியைக்  கைது    செய்யும்    உத்தரவிட்டார்  என்றும்   பக்கத்தான்   ஹரபான்   தலைவருமான   மகாதிர்   கூறினார். “வாரிசானை   முடக்கிப்  போடவும்  …

ஊடகங்களிடம் பேசாதீர்: பாதிரியார் குடும்பத்தாருக்கு போலீசின் கண்டிப்பான உத்தரவு

கடந்த   பிப்ரவரி   மாதம்   கடத்தப்பட்ட    பாதிரியார்    ரேய்மண்ட்   கோ   குடும்பத்தாரிடம்    ஊடகங்களிடம்   பேசக் கூடாது   என்றும்   மெழுகுதிரி  ஏந்திய நினைவேந்தல்  நிகழ்வுகளில்   கலந்துகொள்ள     வேண்டாம்   என்றும்  போலீசார்  வலியுறுத்தி  இருந்தனராம். கோவின்   துணைவியார்   சூசன்னா  லியு,   மார்ச்  6-இல்   சிலாங்கூர்   குற்றப்புலனாய்வுத்   துறைத்   தலைவர்    பாட்சில்   அஹமட்டைச்    சந்தித்தபோது   …

எம்ஏசிசியால் கைது செய்யப்பட்ட ஷாபி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

நேற்று, பார்டி வாரிசான் சாபா தலைவர் முகம்மட் ஷாபி அப்டால் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டபோது அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். “அவருக்கு இரத்த அழுத்தம் உண்மையில் மிகவும் உயர்ந்திருந்தது. “அதனால்தான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எம்ஏசிசி அதிகாரிகள் அவரை…

ஷாபியைக் கைது செய்வதற்கு சட்ட அடிப்படை ஏதும் இல்லை, எம்பி…

  பார்டி வாரிசான் சாபாவின் தலைவர் ஷாபி அப்டாலைக் கைது செய்வதற்கு மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திற்கு (எம்எசிசி) சட்ட அடிப்படை ஏதும் இல்லை என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்குரைஞருமான என். சுரேந்திரன் கூறுகிறார். எம்எசிசிக்கு விசாரணை நடத்துவதற்காக கடப்பாடு இருக்கிறது. ஆனால், கைது செய்வதற்கு சில…

ஹாடி: ஹரப்பானுக்கு அளிக்கும் ஒரு வாக்கு மகாதிரின் கொடுமைக்கு அளிக்கும்…

பாஸ் கட்சிக்கு அளிக்கும் ஒரு வாக்கு பிஎன்னுக்கு அளிக்கும் ஒரு வாக்காகும் என்று மகாதிர் கூறியிருந்தார். அதற்குப் பதிலடியாக, ஹரப்பானுக்கு அளிக்கும் ஒரு வாக்கு மகாதிரின் கொடுமைக்கு அளிக்கும் வாக்காகும் என்று இஸ்லாமியக் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சினார் ஹரியானிடம் கூறினார். மகாதிர் செய்த தவறுகளுக்காக…

ஷாபி அப்டால் எம்எசிசியால் கைது செய்யப்பட்டார்

பார்டி வாரிசான் சாபா தலைவர் ஷாபி அப்டால் இன்றிரவு மணி 9.00 அளவில் மலேசிய  ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் (எம்எசிசி) கைது செய்யப்பட்டார். முன்னதாக, செபூர்னா நாடாளுமன்ற உறுப்பினரான ஷாபி கோத்தா கினபாலு அனைத்துலக விமானநிலையத்திலிருந்து நேராக எம்எசிசி அலுவலகத்திற்கு அவரது வழக்குரைஞருடன் சென்றார். சாபாவுக்கான மேம்பாட்டு நிதியிலிருந்து…

மந்திரி கைரி மலேசியாகினியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லையாம்

புத்ரா ஜெயாவில் இன்று நடைபெற்ற இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் நிகழ்ச்சியிலிருந்து மலேசியாகினி வெளியேற்றப்பட்டது. செய்தியாளர் கூட்டத்திற்கு முன்பு இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் கைரி ஜமாலுடினின் உதவியாளர் அங்கிருந்த செய்தியாளர்களிடமிருந்து அவர்களின் கேள்விகளைச் சேகரித்தார். அதன் பின்னர், செய்தியாளர்களின் மேசைக்குத் திரும்பி வந்த அந்த உதவியாளர் மலேசியாகினியை…