கிளந்தான் காவல்துறை, அந்தக் குழுவினர் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து பேராக் மாநில அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தலை கோரி வருவதாகத் தெரிவித்தது. குவா முசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ கூறுகையில், அவர்கள் ஆகஸ்ட் 29 அன்று குவா முசாங், லோஜிங்கில் உள்ள போஸ் டாகோ வழியாகக்…
‘விருந்துக்கு வாருங்கள், 1எம்டிபியைக் குறைகூறுவோரின் வாயை அடைக்க நல்ல வாய்ப்பு’-…
டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா, இரண்டாவது நிதி அமைச்சர் ஜொகாரி அப்துல் கனியை நிதிதிரட்டும் விருந்து ஒன்றுக்கு அழைத்திருக்கிறார். அங்கு வந்து ஜோகாரி 1எம்டிபி தொடர்பில் அவர் தரப்பு வாதங்களை எடுத்துரைக்கலாம். மே 6ஆம் நாள் நடைபெறும் அவ்விருந்தில் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், …
அபு சாயாப் கும்பலால் கடத்தப்பட்ட ஐவர் மீட்பு; இருவர் நாடு…
கடந்த ஆண்டு லாஹாட் டத்துவுக்கு அப்பால் உள்ள கடலில் அபு சயாப் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட மேலும் மூன்று மலேசியர்கள் பிலிப்பினோ படைவீரர்களால் மீட்கப்பட்டிருப்பதைக் கிழக்கு சாபா பாதுகாப்புத் தளபத்யம்(எஸ்கோம்) உறுதிப்படுத்தியுள்ளது. ஃபாண்டி பக்ரான்,27, முகம்மட் ஜமாடில் ரகிம், 24, முகம்மட் ரிட்சுவான் இஸ்மாயில், 33, ஆகிய மூவரும் …
கடந்த மூன்றாண்டுகளில் மலேசியாவில் சொத்துடமையில் அதிகம் முதலீடு செய்துள்ள நாடு…
மலேசியாவில் சொத்துடமையில் அதிகம் முதலீடு செய்துள்ளவர்கள் யாரென்றால் சீன நாட்டு நிறுவனங்கள்தாம். அவர்கள் கடந்த மூன்றாண்டுகளில் யுஎஸ்$2.1 பில்லியனை சொத்துகளில் முதலீடு செய்துள்ளனர். இதைத் தெரிவித்த சிங்கப்பூர் பைனான்சியல் டைம்ஸ், அதே காலக் கட்டத்தில் சிங்கப்பூர் நிறுவனங்கள் யுஎஸ்985 பில்லியனை முதலீடு செய்ததாகக் கூறியது. ஆஸ்திரேலியா, ஹாங்காங் ஆகியவற்றுடன் …
பெட்ரோனாஸ்: சவூதி அராம்கோவுடன் ரிம31 பி. கூட்டுத்திட்டம் சரியான முடிவே
ஜோகூர் , பெங்கேராங்கில் ரிம31 பில்லியன் செலவில் சவூதி அராம்கோ நிறுவனத்துடன் கூட்டாக மேற்கொள்ளப்படும் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் முயற்சி எனக் குறைகூறப்பட்டுள்ள வேளையில், பெட்ரோனாஸ் அத்திட்டத்தைத் தற்காத்துப் பேசுகிறது. பெட்ரோனாசை “அக் கூட்டுத்திட்டத்தில் ஈடுபடுமாறு யாரும் கட்டாயப்படுத்தவில்லை” என்று பெட்ரோனாஸ் குழும செயல்முறை உதவித் தலைவர் …
குலா: ஒருதலைப்பட்சமான மத மாற்றம் மசோதா குப்பைத் தொட்டிக்கா?
சட்டச் சீர்திருத்தம் (திருமணம் மற்றும் மணவிலக்கு) சட்டம் 1976 க்கு திருத்தங்கள் செய்வதற்கான திட்டம் குப்பையில் போடப்படலாம் என்று ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கவலை தெரிவித்துள்ளார். நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே இருக்கின்றன. ஆனால், முன்மொழியப்பட்ட திருத்தங்கள்…
‘கிட் சியாங்கிடம் சொல்வதுபோல் நஜிப்பைப் பதவி விலகச் சொல்லும் துணிச்சல்…
டிஏபி அடிநிலை உறுப்பினர்கள் லிம் கிட் சியாங்கைக் கட்சி மத்திய செயல்குழுவுக்குத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருவது கட்சியில் அவருக்குள்ள முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது என்று டிஏபி உதவித் தலைவர் தெரேசா கொக் கூறினார். டிஏபி நிகழ்வு எங்கு நிகழ்ந்தாலும் அங்கு உரையாற்ற கிட் சியாங் அழைக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். “நேற்று, …
நஸ்ரி: இது பேராக் நதி; மகாதிர்: அதுதான் எனக்குத் தெரியுமே!
பெரிதும் பேசப்பட்ட நஸ்ரி-மகாதிர் விவாதம் திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. இருப்பினும், அவ்விருவரும் கோலக்கங்சாரில் சந்தித்தனர். சென்டோல் குடித்தனர். நேற்றிரவு பெர்சத்து ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகாதிர் என்ன நடந்தது என்பதை ஏளனத் தொனியுடன் விவரித்தார். நஸ்ரி விவாதம் வேண்டும் என்கிறார். "ஆனால் அவரது கட்சி…
அம்னோவுக்குத் திரும்ப மாட்டேன்: முகைதின் யாசின் திட்டவட்டம்
நஜிப் அப்துல் ரசாக் அம்னோ தலைவர் பதவியிலிருந்து விலகினாலும்கூட தாம் அம்னோவுக்குத் திரும்பிச் செல்லப் போவதில்லை என்று அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் முகைதின் யாசின் கூறினார். இப்போது, பார்டி பிரிபூமி பெர்சத்து(பெர்சத்து)வின் தலைவராக உள்ள முகைதின் நேற்றிரவு பேராக், பாடாங் ரெங்காஸில் அவரது கட்சி ஏற்பாடு செய்திருந்த …
எம் & என் விவாதம் இல்லை, சென்டோல் விருந்து இருந்தது
முன்னாள் பிரதமர் மகாதிரும் சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சர் நஸ்ரியும் இன்று அவர்கள் இருவரும் விவாதம் நடத்த வேண்டியிருந்த கோலகங்சாரில் சந்தித்தனர். இன்று மதியம் நஸ்ரி பெர்சத்து பரிவாரத்தை டாத்தாரான் சயோங் லெம்பாவில் சந்தித்தார். அங்கு அவர் மகாதிருடன் சென்டோல் சுவைத்தார். அவர்களுடன் மகாதிரின் துணைவியார் சித்தி…
நாடற்ற குழந்தைகளுக்கு மரபணு ஒத்திருப்பு போதாதா?, ஃபிரிடம் கேட்கிறது
பெற்றோர் உறவை நிர்ணயிப்பதற்கு "மறுக்க முடியாத ஆதாரம்" மரபணு ஒத்திருப்பு. அந்த ஆதாரத்தை ஏற்க தேசிய பதிவு இலாக (என்ஆர்டி) ஏன் மறுக்கிறது என்று குடிமக்கள் அமைப்பான ஃபிரிடம் கேட்கிறது. பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் அவர்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள குடியுரிமைக்கான உரிமையைப் பெற அவர்கள் இன்னும் என்னதான் செய்ய வேண்டும்…
ஹாடி பாஸை குழப்பமடையச் செய்கிறார், மகாதிர் கூறுகிறார்
பாஸ் கட்சி பெர்சத்துவுடன் ஒத்துழைக்க இயலாத குழப்பமான நிலைக்கு அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடிதான் காரணம். அவருக்கு பிறரை ஈர்க்கும் திறனுடைய தனிமனிதப் பண்பியல் இல்லை என்று மகாதிர் முகமட் கூறுகிறார்.. "நான் சமீபத்தில் கூறியபடி, அக்கட்சி மிகுந்த குழப்பத்தில் இருப்பதை நான் உணர்கிறேன். "சில சமயங்களில்…
ஹோஸ்னி முபராக் விடுவிக்கப்பட்டார்
எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபராக் சுமார் 6 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின்னர் இன்று விடுதலையாகி வீடு திரும்பினார். முப்பது ஆண்டுகளுக்கு எகிப்தின் அதிபராக ஆட்சி செய்த முபராக் 2011 ஆம் ஆண்டில் எகிப்தில் நடந்த புரட்சியில் வீழ்த்தப்பட்டார். 2011 ஆம் ஆண்டில் நடந்த புரட்சியின் போது…
மகாதிர்: கிராம மக்களுக்கு 1எம்டிபி என்றால் புரியாது, ஆனால் ஜிஎஸ்டி…
கிராம மக்களால் 1எம்டிபி போன்ற ஊழல் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முடியாது, ஆனால் அவர்களுக்கு வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு சம்பந்தப்பட்ட முணுமுணுப்புகள் இருக்கின்றன என்று பெர்சத்துவின் தலைவர் மகாதிர் கூறுகிறார். ஜிஎஸ்டி அவர்களுக்குப் புரியும். வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு அவர்களுக்குப் புரியும், பெட்ரோல் விலை அதிகரிப்பு அவர்களுக்குத் தெரியும்,…
அனுவார், அந்த ரிம50,000 ஐ யுனிகேஎல் மாணவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்,…
டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இனவாதியா என்பது பற்றிய கட்டுரைக்கு ரிம50,000 ஐ அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசா கொடுப்பதற்கு மாற்றாக அதை யுனிவர்சிட்டி கோலாலம்பூர் (யுனிகேஎல்) மாணவர்களுக்கு கொடுப்பது நல்லதாகும் என்று பிகேஆரி உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி ஆலோசனை…
கிட் சியாங் மீதான கட்டுரைப் போட்டி பரிசுத் தொகையை ரிம50,000…
டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஓர் இனவாதி மற்றும் சர்வாதிகாரி என்று கூறியிருந்த அம்னோவின் தகவல் பிரிவு தலைவர் அனுவார் மூசா, அவரின் இத்தன்மைகள் குறித்து எழுதப்படும் மிகச் சிறந்த கட்டுரைக்கு அவர் அறிவித்திருந்த பரிசுத் தொகையை ரிம50,000 க்கு உயர்த்தியுள்ளார். இன்று அனுவார்…
எதிர்திசையில் வாகனத்தை ஓட்டிய பெண்ணுக்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு
வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு எதிர்திசையில் காரை ஒட்டிச் சென்று ஆடவர் ஒருவருக்கு மரணத்தை விளைவித்த பதின்ம வயது பெண், ஏற்கனவே எம்பிடேமின் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில் இன்று புக்கிட் மெர்தாஜம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், போதைப்பொருள் உட்கொண்டு காரோட்டியதாக மேலும் ஒரு குற்றம் அவர்மீது சுமத்தப்பட்டது.…
‘கிட் சியாங் இனவாதியா?’ போட்டி நடத்தும் அனுவாருக்கு எதிராக போலீஸ்…
அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா இனவாதத்தைத் தூண்டி விடுவதாகவும் லிம் கிட் சியாங்கின் உயிருக்கு அபாயத்தை உண்டுபண்ணுவதாகவும் குற்றஞ்சாட்டி அவருக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. “எல்கேஎஸ் ஓர் இனவாதி, இஸ்லாத்துக்கு எதிரி, 51 ஆண்டுகளாக ஒரு சர்வாதிகாரியா இருந்து வந்துள்ளார், உண்மையா” என்ற தலைப்பில் கட்டுரை …
ஆய்வு: பிரிம் தொடர்வதையே மலேசியர்கள் விரும்புகிறார்கள்
மலேசியர்களில் பெரும்பாலோர் அரசாங்கம் 1மலேசியா மக்கள் உதவித் திட்ட(பிரிம்)த்தின்வழி அளிக்கும் நிதிஉதவியைப் பெரிதும் வரவேற்பதை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று காண்பிக்கிறது. காஜிடாடா ஆய்வு மையம், பேராசிரியர் சைட் அராபி ஐடிட் மேற்பார்வையில் 1,031 பேரிடம் தகவல் சேகரித்தது. அவர்களில் 68.7 விழுக்காட்டினர் பிரிம் உதவித் தொகை கொடுக்கப்படுவதைப் …
13 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின் வெற்றி கண்ட செமினி தோட்டத்…
தங்களுடைய முன்னாள் தோட்ட முதலாளியான சைம்டார்பியுடன் 13 ஆண்டுகால போராட்டம் நடத்தி செமினி தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 17 குடும்பங்களைச் சேர்ந்த 21 தொழிலாளிகள் ஒன்றரை மாடி குறைந்த விலை வரிசை வீடுகளைப் பெறுவதோடு 13 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்ட…
முக்ரீஸின் சொத்து குறித்து ஜெர்லுனில் விவாதிக்க அவருடைய முன்னாள் உதவியாளர்…
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பெர்சத்து) துணைத் தலைவர் முக்கிரீஸ் மகாதிரின் சொத்துகள் குறித்து பகிரங்கமாக விவாதிக்க அவரின் முன்னாள் சிறப்பு அதிகாரி ஹரிஸ் செ மாட் சவால் விடுத்துள்ளார். முக்ரீஸ் எப்படி பணக்காரர் ஆனார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள், சொந்த முயற்சியாலா அல்லது…
நஜிப் “மிகக் கேடு கெட்ட பிரதமர்” என்ற மிகச் சிறந்த…
ஒரு பதிலடி நடவடிக்கையாக, முன்னாள் சட்ட அமைச்சர் ஸைட் இப்ராகிம், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாட்டின் "மிகக் கேடு கெட்ட பிரதமர்" என்ற தலைப்பிலான மிகச் சிறந்த கட்டுரைக்கு ரிம10,000 பரிசுத் தொகையாக அளிக்க முன்வந்துள்ளார். அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் முசா டிஎபி…
கிட் சியாங்: என்னைக் காணவில்லை என்று கூறும் சுவரொட்டிகளுக்கு நாளை…
டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், கேளாங் பாத்தா தொகுதியில் தம்மைக் காணவில்லை என்று பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளுக்கு நாளை மறுமொழி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். கோலாலும்பூரில் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் லிம், நாளை மாலை கேளாங் பாத்தாவில் அவ்விவகாரம் குறித்து பேசப்போவதாகக் கூறினார். “இன்று …
ராஜா போமோ நடவடிக்கைகள் ஹராமானவை, ஜாகிம் பிரகடனம்
தம்மை ராஜா போமோ என்று சுயமாக முத்திரை குத்திக் கொண்டு அலையும் இப்ராகிம் மாட் ஸின்னின் செயல்பாடுகள் ஹராமானவை என மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாகிம்) பிரகடனப்படுத்தியுள்ளது. பல மாநிலங்களின் ஃபாட்வா குழுக்கள் இப்ராகிமின் சடங்குமுறைகளை ஆராய்ந்து பார்த்ததில் அவை இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானவை என்ற முடிவுக்கு …


