போதும் உங்கள் கபட நாடகம்: அம்னோவைச் சாடினார் சைட் சித்திக்

அம்னோ  தலைவர்கள்  கபட  நாடகம்  ஆடுவதை  நிறுத்திக்  கொள்ள  வேண்டும்  எனச்  சாடினார்  பார்டி  பிரிபூமி   பெர்சத்து   மலேசியா (பெர்சத்து)  இடைக்காலச்  செயல்குழுத்   தலைவர்   சைட்  சித்திக்   சைட்  அப்துல்   ரஹ்மான். “டாக்டர்   மகாதிர்  முகம்மட்   பங்சா  ஜோகூர்   குறித்துக்  கருத்துரைத்தபோது   பலர்,   இவ்வளவு   காலமாக  மலேசியாவில்    தாங்கள்தான்  …

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் ஊழல் பற்றி முதலில் கேளுங்கள், பின்னர் கேட்டறிந்ததை…

தமிழ் நாளிதழ் மலேசிய நண்பனில், மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளன. ஆனால், அவை தப்பானவை. அப்பள்ளியின் நிருவாகத்திற்கு பொறுப்பாளர்களாகிய எங்களிடம் எந்த ஒரு விளக்கமும் கேட்காமல் தான்தோன்றித்தனமாக வெளியிடப்பட்ட செய்திகள் அவை என்று மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் கா. உதயசூரியன் அப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை…

கிர் தோயோ மதம் மாறியவரை இரண்டாவது மனைவியாக ஏற்றார்

  முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் கிர் தோயோ, 51, ஓர் அரசு ஊழியாரான கிரிஸ்டீன் ஸானிதிரா அப்துல்லாவை (39) தமது இரண்டாவது மனைவியாக இன்று திருமணம் செய்து கொண்டார். கடந்த ஏப்ரலில் இஸ்லாத்திற்கு மதம் மாறிய கிரிஸ்டீனை நாட்டில்  நன்கு  தெரிந்திராத ஓர் இடத்தில் அவர்…

மகாதிர்: நஜிப்பின் தந்தையே எதிரணியைச் சேர்த்துக் கொண்டார், நான் ஏன்…

தாம்  டிஏபியுடன்   ஒத்துழைப்பதைக்  குறைகூறுவோருக்குப்   பதிலளித்த    முன்னாள்   பிரதமர்  டாக்டர்  மகாதிர்   முகம்மட்,     பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்கின்   தந்தையார்கூட  எதிர்க்கட்சிகளைச்  சேர்த்துக்  கொண்டு   கூட்டணி  அமைத்தது   உண்டு    என்றார். நேற்றிரவு   கோத்தா  பாருவில்    ஒரு  நிகழ்வில்  உரையாற்றிய  மகாதிர்,  1969  இனக்  கலவரத்துக்குப்    பின்னர்,  அப்போதைய   பிரதமர்  …

சிறார்கள் தன்மூப்பாக மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்க இன்னும் நிறைய செய்யப்பட…

அரசாங்கத்தில்    உயர்பணி   புரிந்து    ஓய்வு  பெற்ற      25  மலாய்க்காரர்களைக்  கொண்ட   அமைப்பான  ஜி-25,   சமயங்களுக்கிடையில் சிவில் திருமணங்கள்   தொடர்பில்   எழும் சர்ச்சைகளை சிவில் நீதிமன்றத்தில் தீர்ப்பதற்கு வகைசெய்யும் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்   அறிவித்திருப்பதை    வரவேற்றுள்ளது. சட்டச் சீர்திருத்த (திருமணமும் விவாகரத்தும்) சட்டம்…

“#தங்காப் எம்ஒ1” பேரணி நஜிப்பின் கொடும்பாவி போலி சிறையில் அடைக்கப்பட்டதுடன்…

  இன்று பிற்பகல் மணி 4.35 அளவில் மிகப் பெரிய அளவிலான பிரதமர் நஜிப்பின் கொடும்பாவியை அனிஸ் ஸயாஃபிக் போலி சிறையில் அடைத்ததுடன் முடிவுக்கு வந்தது. நஜிப்பின் வளர்ப்பு மகன் ரிஸா அசிஸ், நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் மற்றும் வணிகர் ஜோ லோ ஆகியோரின் கொடும்பாவிகளும் அப்போலி…

#தங்காப்எம்ஒ1 பேரணியில் மகாதிர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது

  நாளை டாத்தாரான் மெர்தேக்காவில் நடைபெறவிருக்கும் #தங்காப்எம்ஒ1 பேரணியில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுவதாக முன்னாள் அம்னோ உறுப்பினர் கைருடின் அபு ஹசான் கூறுகிறார். நாளை நண்பகலில் சிறிது நேரத்திற்கு மகாதிர் #தங்காப்எம்ஒ1 பேரணியில் கலந்துகொள்வார் என்றாரவர். மகாதிர் அப்பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என்று…

அரசாங்கத் தொடர்புடைய வங்கி இயக்குனர் ஊழல் விவகாரத்தில் தடுத்து வைக்கப்பட்டார்

அதிகார  அத்துமீறல்,   ஊழல்  விவகாரங்களுக்காக     அரசாங்கத்  தொடர்புடைய   ஒரு   வங்கியின்  நிர்வாக  இயக்குனரையும்   மேலும்  மூவரையும்    மலேசிய  ஊழல்தடுப்பு    ஆணையம்  கைது  செய்தது.    விசாரணைக்காக   அவர்கள்   மூன்று  நாள்களுக்கு    தடுத்து    வைக்கப்பட்டனர். 40-வயதான  வங்கி  இயக்குனரிடமிருந்து  ரிம20,000- ரிம30,000  மதிப்புள்ள  ஆறு  கடிகாரங்களை  மலேசிய  ஊழல்தடுப்பு    ஆணையம்  கைப்பற்றியது.…

பிரதமர் வாக்களித்தபடி சரவாக் எஸ்பிம் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கினார்

நஜிப்   அப்துல்    ரசாக்   சரவாக்  எஸ்பிம்   மாணவர்களுக்கு  அளித்த   வாக்குறுதியை  இன்று  நிறைவேற்றினார்.  அவர்கள்  ஒவ்வொருவருக்கும்  மடிக்  கணினி  வழங்கப்படுகிறது. ஏப்ரல்   மாதம்,  சரவாக்,   சுங்கை   லாடோங்   பள்ளிக்குச்  சென்றிருந்தபோது  பிரதமர்  அம்மாநிலத்தில்  கல்வித்  தரத்தை  உயர்த்த  ஆர்வம்   கொண்டிருப்பதாகக்  குறிப்பிட்டார்.  அதன்  பொருட்டு   அம்மாநில   எஸ்பிஎம்  மாணவர்களுக்கு  …

மகாதிரின் குடிமக்கள் பிரகடனச் செயலகத்திலிருந்து தம்ரின் வெளியேறினார்

முன்னாள்  துணைப்  பிரதமர்   கப்பார்  பாபாவின்  புதல்வர்    தம்ரின்  அப்துல்  கப்பார்,  குடிமக்கள்  பிரகடனச்   செயலகத்திலிருந்து  விலகுவதாக    அறிவித்துள்ளார். “தீர   ஆலோசித்த  பின்னர்    மகாதிர்   தலைமையில்    செயல்படும்   குடிமக்கள்   பிரகடனச் செயலகத்திலிருந்து    விலக   முடிவெடுத்தேன்”,  என்று  தம்ரின்   இன்று   அறிக்கை  ஒன்றில்   கூறினார். முன்னாள்  அம்னோ  உறுப்பினரான   தம்ரினுக்குப்  …

எம்ஏசிசி: பெரிய மீனோ, சின்ன மீனோ, ஆதாரம் அவசியம்

மலேசிய  ஊழல்தடுப்பு   ஆணையம்  “பெரிய  மீன்,  சின்ன  மீன்”  என்று  வேறுபாடு  பார்த்து   செயல்படுவதில்லை,   என்ன  ஆதாரம்  இருக்கிறதோ   அதன்  அடிப்படையில்தான்   செயல்படுகிறது  என அவ்வாணையதின்   அதிகாரி   முகம்மட்  ஜமிடான்   அப்துல்லா    கூறினார். “எம்ஏசிசி-இல்   நாங்கள்  பெரிய  மீன்,  சின்ன  மீன்  என்று   தேர்ந்தெடுத்து   வேலை  செய்வதில்லை. “விசாரணை  …

இதற்குமுன் நிகழ்ந்திராத’ மிகப் பெரிய ஊழல்; மேலும் 30 டிபிகேஎல்…

‘கடந்த  வாரம்    கோலாலும்பூர்  மாநகர்  மன்றத்தின்  ‘டத்தோ  ஸ்ரீ’  பெற்ற   நிர்வாக   இயக்குனர்  ஒருவரைக்  கைது   செய்த  மலேசிய  ஊழல்தடுப்பு   ஆணையம் (எம்ஏசிசி)     அம்மன்றத்தைச்  சேர்ந்த   மேலும்  30  அதிகாரிகளை  விசாரணைக்கு  அழைக்கும். மாநகர்  மன்றத்தில்   “இதற்குமுன்  நிகழ்ந்திராத”  அளவுக்கு  மிகப்  பெரிய ஊழல்  நிகழ்ந்திருப்பதாக    எம்ஏசிசி    நம்புவதாக   …

நஜிப்: சமயங்களுக்கிடையில் எழும் சிவில் திருமணங்கள் சம்பந்தமான விவகாரங்கள் சிவில்…

  சமயங்களுக்கிடையில் சிவில் திருமணங்கள் பற்றி எழும் சர்ச்சைகளை சிவில் நீதிமன்றத்தில் தீர்ப்பதற்கு வகைசெய்யும் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புக்குண்டுள்ளதாக பிரதமர் நஜிப் இன்று கூறினார். சட்டச் சீர்திருத்த (திருமணமும் விவாகரத்தும்) சட்டம் 1976 க்கான சட்ட திருத்தம் அடுத்த அக்டோபர் நாடாளுமன்ற அமர்வில் தாக்கல் செய்யப்படும் என்றாரவர்.…

பிலிப்பீன் இஸ்லாமிய தீவிரவாதிகள் பிணையாளியின் தலையைத் துண்டித்தனர்

தென்   பிலிப்பீன்சில்   பிணையாளி  ஒருவருக்குப்  பிணைப்பணம்   கொடுக்கப்படாததால்   ஆத்திரமடைந்த   இஸ்லாமிய   தீவிரவாதிகள்  பிணையாளியின்  தலையைத்    துண்டித்ததாக   இராணுவப்  பேச்சாளர்,  மேஜர்  பிலிமோன்  டான்  கூறினார். பெட்ரிக்  ஜேம்ஸ்   அல்மோடாவர்  என்று  அடையாளம்  கூறப்பட்ட   அப்பிணையாளியின்  துண்டிக்கப்பட்ட   தலை   மணிலாவுக்கு   ஆயிரம்   கிலோமீட்டர்   தெற்கே   ஜோலோ  தீவின்    ஒரு  கிராமத்தில்  …

நம்வீ-இன் தடுப்புக் காவலை நீட்டிக்க நீதிமன்ற உத்தரவைப் பெறும் போலீசின்…

பினாங்கு  மெஜிஸ்திரேட்  நீதிமன்றம்  ஒன்று,  ரேப்  கலைஞர்   வீ  மெங்   சீ(நம்வீ)) -இன்   தடுப்புக்  காவலை  நீட்டிப்பதற்காக  போலீஸ்   செய்துகொண்ட  மனுவைத்   தள்ளுபடி   செய்தது. காவலை  நீட்டிப்பதற்கான   மனு  தள்ளுபடி  செய்யப்பட்டாலும்   போலீசார்   நம்வீயை   விடுவிக்கவில்லை.  நம்வீயை  ஆகஸ்ட்  22-இலிருந்து  நான்கு  நாள்களுக்கு  விசாரணைக்காக    தடுத்து  வைக்கத்தான்  ஏற்கனவே …

சீனத் தூதர்: 1எம்டிபி முதலீடு மலேசியப் பாதுகாப்புக்கு மருட்டல் ஆகாது

சீனா  1எம்டிபி-இல்   முதலீடு   செய்வது   மலேசியாவின்  பாதுகாப்புக்குப்   பாதகமாக  அமையாது   என  மலேசியாவுக்கான  சீனத்   தூதர்  ஹுவாங்   ஹூய்   காங்  உறுதி   கூறுகிறார். மாறாக,  அது,    ஏற்ற இறக்கமாக  உள்ள  மலேசியாவின்  நிதி  நிலவரத்தை   நிலைப்படுத்த  உதவும்   என்றாரவர்.  ஹுவாங்,  சிலாங்கூர்,  சுங்கை  லோங்கில்  யுடார்   மாணவர்களுக்கு  நிதி…

டான்ஸ்ரீகள் மூவரும் உண்மையை எடுத்துரைக்க வேண்டும்: அம்னோ மகளிர் வலியுறுத்து

முன்னாள்   உயர்  அரசு  அதிகாரிகள்  மூவரும்,  அவர்கள்     காட்டிக்  கொடுக்கப்பட்டார்கள்  என   முன்னாள்  பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்     கூறுவதைக்  கேட்டுக்கொண்டு   அமைதியாக  இருக்கக்  கூடாது   என  அம்னோ  மகளிர்  பகுதி   தகவல்  தலைவர்   ரோஸ்னி  ஸகாரி  கூறினார். பேங்க்  நெகாரா  முன்னாள்  ஆளுனர்  ஸெட்டி  அஹ்தார்  அசிஸ், …

ஆயுதப்படைகளின் தலைவர் தேசிய பாதுகாப்பு மன்ற டிஜி

இராணுவ  அதிகாரி   ஒருவர்   தேசிய   பாதுகாப்பு  மன்றத்தின்   தலைமை  இயக்குனராக (டிஜி)   நியமிக்கப்பட்டுள்ளார். அம்மன்றத்தின்    முதலாவது   தலைமை  இயக்குனராக    ஆயுதப்  படைகளின்  தலைவர்   ஜெனரல்   சுல்கிப்ளி  முகம்மட்  ஸின்   நியமனம்  செய்யப்பட்டிருப்பதை   துணைப்  பிரதமர்   ஜாஹிட்  ஹமிடி   நேற்று  நியு  யோர்கில்   அறிவித்தார். “தேசிய  பாதுகாப்புக்கும்   தற்காப்புக்கும்  நிலவும் …

ஜோகூர் சுல்தான்: மகாதிர் வாயை மூடிக் கொண்டிருப்பது நல்லது

முன்னாள்   பிரதமர்   டாக்டர்    மகாதிர்   முகம்மட் ‘பங்சா  ஜோகூர்’  குறித்து  மனம்போன  போக்கில்  கருத்துரைப்பதை  விடுத்து   வாயைப்  பொத்திக்  கொண்டிருப்பது   நல்லது   என  ஜோகூர்  சுல்தான்   சுல்தான்   இப்ராகிம்  இஸ்கண்டார்    அறிவுறுத்தியுள்ளார். மகாதிர்  நேற்று   ஒரு  கருத்தரங்கில்   பேசியபோது   ஜோகூர்   தேசியவாதம்   மலேசியாவுக்கு   ஆகாது   என்றும்   அதன்  விளைவாக  …

TangkapMO1 பேரணியில் அரசியல்வாதிகள் கை மேலோங்க இடமளிக்கப்படாது

ஆகஸ்ட்     27-இல்   தங்காப்எம்ஓ1  பேரணிக்கு  ஏற்பாடு  செய்துள்ள    மாணவர்   கூட்டணி   தங்களுக்கு   ஆதரவளிக்கும்     அரசியல்   கட்சிகளின்   கை  பேரணியில்  மேலோங்காதிருப்பதை   உறுதி   செய்ய  தக்க   நடவடிக்கைகளை   எடுத்துக்  கொண்டிருக்கிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள்   ஒன்றுசேரும்  இடமான  டட்டாரான்  மெர்டேகா  வந்தடைந்ததும்   எல்லாமே  மாணவர்களின்   திட்டப்படிதான்  நடக்கும்  என   TangkapMO1  பேரணி  பேச்சாளர் …

மகாதிர்: டான்ஸ்ரீகள் நால்வர், அவர்களில் ஒருவர் காட்டிக்கொடுத்திருக்கலாம்

டான்ஸ்ரீ  குழுவில்  மொத்தம்  நால்வர்,   அவர்களில்  ஒருவர்தான்   மற்றவர்களைக்  காட்டிக்கொடுத்திருக்க    வேண்டும்   என  டாக்டர்   மகாதிர்   முகம்மட்  கூறினார். இதற்கு   முன்னர்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு   எதிராக   சதி செய்ததாகக்   கூறப்படும்   டான்ஸ்ரீ  மூவரில்  ஒருவர்தான்  துரோகியாக  மாறிக்  காட்டிக்கொடுத்தார்  என்று   மகாதிர்  கூறி  வந்தார்  என்பது   …

தங்கம் வென்ற ஆசியான் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்நாள் முழுக்க இலவச…

ரியோ  ஒலிம்பிக்   போட்டியில்    தங்கப்  பதக்கம்  வென்ற   ஆசியான்  விளையாட்டு  வீரர்களும்   வீராங்கனைகளும்   வாழ்நாள்   முழுக்க   தன்  விமானங்களில்   இலவசமாக    பயணம்  செய்யலாம்   என  ஏர்ஏசியா   அறிவித்துள்ளது. “இந்த     ஒலிம்பிக்   போட்டி  ஆசியான்  பெருமைப்படத்தக்க   ஒன்றாக  அமைந்தது.  ஆசியானில்   வேர்களைக்  கொண்ட   ஏர்ஏசியா  நமக்கு   மட்டற்ற  மகிழ்ச்சியைத்  தந்தவர்களுக்கு …

பினாங்கு பிஎன் தலைவர் பதவியை கெராக்கானிடமிருந்து பறித்துக்கொள்ளும் எண்ணம் அம்னோவுக்கு…

அம்னோ,   பினாங்கு  பிஎன்   தலைவர்  பதவியை    பினாங்கு  கெராக்கான்   தலைவர்    டெங்  சாங்   இயோவிடமிருந்து  பறித்துக்கொள்ளத்  திட்டமிடுவதாகக்   கூறப்படுவதை    அம்மாநில   பிஎன்   தலைவர்கள்   மறுத்தனர். ஞாயிற்றுக்கிழமை,   தாசெக்   குளுகோரில்   டெங்கிடம்   அது  குறித்து   கேட்டதற்கு,  “எனக்குத்  தெரியாது.   யார்  அப்படிச்  சொன்னார்களோ   அந்த  கெராக்கான்  மூத்த    தலைவரிடமே   அது    …