வலுப்பெறும் ஓபிஎஸ் அணி! சிதறும் சசிகலா: சோகத்தில் மன்னார்குடி கோஷ்டி

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மேலும் இரண்டு எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. அசோக்குமார், நாமக்கல் தொகுதி எம்.பி. சுந்தரம் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ட்விட்டரில் கூறியதாவது, வாக்களித்த மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பேன். வாக்காளர்களின் குரலை…

ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநர் இப்படி அசாதாரணமாகத் தாமதிப்பது நியாயமா?

ஆளுநர் தாமதிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளுநரின் தரப்பிலிருந்து பார்க்கும்போது, அவர் நடைபெற்ற அனைத்துவிதமான நிகழ்வுகளையும் அலசி ஆராயவேண்டிய காரணம் உள்ளது. அதில் ஒருசில காரணங்களை நாமாக அலசலாம்... அலசல் 1 தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் பார்க்க வந்தபோது பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஜெ அவர்களின் உண்மையான நிலை…

நந்தினி படுகொலை: சீமான் ஆறுதல்- டின்னர் சாப்பிட்ட பொன். ராதாகிருஷ்ணன்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூரில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நந்தினியின் குடும்பத்தினரை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதேபோல மத்தியஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் நந்தினி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நந்தினி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர்…

ரூபாய் நோட்டு வாபஸுக்குப் பிறகு கருப்புப் பணம் அதிகரிப்பு: ப.சிதம்பரம்…

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு நாட்டில் கருப்புப் பணமும், ஊழலும் அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் முன்யோசனையற்ற செயல்பாடுகளால் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிகழ் நிதியாண்டில் 1.5 சதவீதம் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் வியாழக்கிழமை…

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று! 900 காளைகள் சீறிப்…

மதுரை: உலக புக‌ழ் பெ‌ற்ற அலங்காநல்லூ‌ர் ஜல்லிக்கட்டு இ‌ன்று நடைபெறு‌கிறது. இ‌ந்த போ‌ட்டி‌யி‌ல் 900 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட காளைக‌ள் ப‌ங்கே‌ற்‌கி‌ன்றன. காளைகளை அடக்க 1500 இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூரில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். உச்சநீதிமன்ற…

ஜெ. மரணம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட ஆளுநரிடம் ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசகர் ராவிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் வலியுறுத்தினார். பரபரப்பான அரசியல் சூழலில் வியாழன்று தமிழகம் வருகை தந்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ். அவரை ஆளுநர் மாளிகையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் 15…

முதல்வர் பதவிக்காக ஓபிஎஸ்- சசிகலா மல்லுக்கட்டு: ஆளுநர் எடுக்கப் போகும்…

சென்னை: முதல்வர் பதவி விவகாரத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று சென்னை வருகிறார். இந்த விவகாரத்தில் ஆளுநர் வித்யாசகர் ராவ் எடுக்கப் போகும் முடிவு என்ன என்பதற்காக தமிழகமே பெரும்…

நிறைவாகும் வரை… மறைவாக இரு! – ஓ.பன்னீர்செல்வம் கற்றுக்கொடுத்த பாடங்கள்..!

வீடு, அலுவலகம், சமூகவெளி என்று எங்கெங்கே நாம் எப்படி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஒரு பாடத்தை, ஒரே நாளில் கற்றுக் கொடுத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். எதையும் 5 நிமிடம் தள்ளிப்போடுங்கள்:- ‘எந்த ஒரு பெரிய முடிவெடுக்கறதுக்கு முன்னாலயும், அஞ்சு நிமிஷம் யோசி’ என்பார்கள். இவர் அதை 8 மடங்கு…

ஓ.பன்னீர் செல்வத்தின் திடீர் நேர்மைக்குப் பின்னால் பல சந்தேகங்கள்!

சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்து விட்டு திடீரென புரட்சியாளராக மாறியிருப்பதை ஆச்சரியத்தை விட பல சந்தேகங்களையே வலுப்படுத்துவதாக உள்ளது. ஓ.பன்னீர் செல்வம் இதுவரை இப்படி முரண்பாடாக பேசியதில்லை, செயல்பட்டதில்லை. ஆனால் முழுக்க மாறிய மனிதராக இன்று அவர் புது அவதாரம் பூண்டுள்ளார். இது…

கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர்: ஓ.பி.எஸ் பகிரங்க…

சென்னை: என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர், நான் தனியாக இருந்து போராடுவேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டேன். ஆந்திரா சென்று தண்ணீர் பெற்று கொடுத்தது, ஜல்லிக்கட்டு சட்டம் இயற்றியது, வர்தா…

அப்பலோவில் ஒரு நாள் கூட அம்மாவை பார்க்க முடியவில்லை..! மனம்…

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களும் வைத்தியசாலைக்கு சென்றேன். எனினும், ஒரு நாள் கூட அம்மாவை பார்க்க முடியவில்லை என முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்…

நேதாஜியின் வாகன ஓட்டுநர் மறைந்தார்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாகன ஓட்டுநராகவும், அவரது இந்திய தேசிய ராணுவத்தில் கர்னலாக இருந்தவருமான நிஜாமுதீன், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 116. ஆஸம்கர் மாவட்டத்தில் உள்ள தக்வா கிராமத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் வயோதிகப் பிரச்னை காரணமாக நீண்டகாலமாக அவதிப்பட்டு…

சசிகலா முதல்வராக பதவியேற்க தடை கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம்…

டெல்லி: தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது. அதிமுக எம்.எல்.ஏ..க்கள் கூட்டத்தில் சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதையடுத்து சசிகலாவும் தாம் முதல்வர் பதவியை ஏற்கப் போவதாக கூறியுள்ளார். சசிகலா…

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது.. தொடரும் இலங்கையின் அட்டூழியம்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. அவர்களுடைய 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் 2 படகுகளுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியல் ரோந்து…

தமிழகத்தின் முதல்வராகிறார்… மக்களுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத சசிகலா!

சென்னை: ஜெயலலிதா மறைந்து சரியாக இரண்டாவது மாதங்கள் ஆன நிலையில் தமிழக முதல்வராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டுள்ளார் . கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். 30 நாட்கள் முடியும் முன்பாகவே பொதுச்செயலாளரான சசிகலா, இரண்டே மாதத்தில் ஆட்சியை…

முதல்வர் கனவு சசிகலாவுக்கு பேரிடி- சொத்து குவிப்பு வழக்கில் ஒருவாரத்தில்…

டெல்லி: முதல்வர் பதவியில் உட்கார்ந்துவிட தயாராகிவிட்ட சசிகலாவுக்கு டெல்லியில் இருந்து இன்று வந்துள்ள செய்தி பேரிடியாகத்தான் இருக்கும். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஒருவாரத்தில் வழங்க இருக்கிறது உச்சநீதிமன்றம். 1991-96-ம் ஆண்டு முதல்வராக இருந்த…

சசிகலா முதல்வராவதை தடுங்கள்.. ஜனாதிபதிக்கு கோரிக்கைவிடுத்து கையெழுத்து இயக்கம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக அனுமதிக்க கூடாது என்றும், தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றும் குடியரசு தலைவருக்கு கோரிக்கைவிடுத்து, கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது. தமிழ் அரசன் என்பவர் change.org என்ற பிரபல கையெழுத்து இயக்க வெப்சைட் மூலம் இக்கோரிக்கையை வைத்துள்ளார். ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்தியாவின் ஒரு மாநிலத்தை…

பண மதிப்பு நீக்கத்தால் கருப்புப் பணம் ஒழியவில்லை: ப. சிதம்பரம்

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழியவில்லை என மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். தஞ்சாவூரில் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற பண மதிப்பு நீக்கம் - மக்கள் படும் வேதனை என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் அவர்…

ஜல்லிக்கட்டு விழா.. அதிரும் அவனியாபுரம்… அதிகாலையிலேயே காண குவிந்த பொதுமக்கள்!!

மதுரை: அவனியாபுரத்ததில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பல தடைகைள தாண்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைப்பெற்று வருவதால் அதனை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்து வருகின்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் கடந்த 3 ஆண்டுகளாக தடைவிதித்திருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும்…

காவிரியில் திறந்துவிடப்பட்ட கழிவுநீர்… இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 50 சாயப்பட்டறைகள்

நாமக்கல் அருகே கழிவுநீரை காவிரியில் திறந்துவிட்ட 50க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. வருவாய்த்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அனுமதியின்றி சாயப்பட்டறைகளை நடத்தி வரும் உரிமையாளர்கள் பீதியடைந்துள்ளனனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 200 சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இதில் 50 சாயப்பட்டறைகள் மட்டுமே சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, அரசு…

தமிழ்நாட்டின் ஆறுபடை வீடு அறக்கட்டளை, மலேசிய நாட்டுக்குள் மூக்கை நுழைக்க…

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில், தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் கடந்த 230 ஆண்டுகளாக பினாங்கு தமிழ் மக்களால் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றது. தமிழர்கள் வழிபடும் முருகக் கடவுளை அறக்கட்டளை பராமரித்து வருகின்றது. ஆலயக் குழுத் தலைவராக பினாங்கு மாநிலத் துணை முதல் அமைச்சரும், ஈழத் தமிழர்களின் காவல் அரணுமான…

சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க உதவிய தொழிலதிபர்… விஜயகுமார் புத்தகத்தில்…

சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க தொழிலதிபர் ஒருவர் உதவியதாகவும் கண் அறுவை சிகிச்சைக்கு வந்தபோது வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அதிரடிப்படைத் தலைவராக இருந்த விஜயகுமார் தம்முடைய புத்தகத்தில் எழுதியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. 30 ஆண்டுகாலம் தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு சவாலாக விளங்கியவர் சந்தனக் கடத்தல் வீரப்பன்.…

இழுத்தடித்த அதிகாரிகள்: நெல் மூட்டையிலேயே உயிரை விட்ட விவசாயி!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அடுத்த மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (68). 3 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தார். அறுவடை முடிந்து 35 மூட்டைகளை விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கடந்த 29ம் தேதி கொண்டு வந்திருந்தார். ஆனால், விற்பனை கூடத்தில் மூட்டைகளை வைக்க குடோன் வசதி இல்லை.…