இந்தியாவும், சீனாவும் இனி, கூட்டாளிகள் என்கிறார் சீனப் பிரதமர்

டெல்லி: இந்தியாவுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்தது, எல்லைப் பிரச்சினை தீர்ந்தது. இந்தியாவும், சீனாவும் போட்டி நாடுகள் அல்ல, கூட்டாளிகள் என சீனப் பிரதமர் லீ தெரிவித்துள்ளார். 3 நாள் அரசு முறை சுற்றுப் பயணமாக இந்தியா வந்திருந்த சீனப்பிரதமர் லீ கெகியாங், நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன்சிங்குடன் விரிவான…

இமயமலையில் ஏறி சாதனை படைத்த காலை இழந்த அருணிமா சின்ஹா

இந்தியாவைச் சேர்ந்த அருணிமா சின்ஹா என்ற ஒரு காலை மட்டுமே கொண்ட பெண் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டதால் ஒரு காலை இழந்த இளம் பெண் அருணிமா சின்ஹா .…

பாதுகாப்பு விஷயங்கள் குறித்து இந்திய ஆப்கான் தலைவர்கள் பேச்சு

இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயமாக வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று பின்னேரம் சந்தித்து பேசுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது ஆப்கானிஸ்தானுக்கான பாதுகாப்பு உதவிகளை அதிகரிக்கக் கோரி கர்சாய் இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்துவார் என்று கருதப்படுகிறது. ஆப்கானிய அதிகாரிகளுக்கு…

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் : தமிழக முதல்வர்

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா-இலங்கை இடையே, கடந்த 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவானது இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என முதல்வர்…

போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்

கடலூரில் இன எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருமண மண்டபம் ஒன்றில் உள்ளரங்குக் கூட்டமாக நடத்திப் பேசினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். பத்து மணிக்குள் பேச்சை முடித்து விட வேண்டும் என்று போலீஸார் வலியுறுத்தியிருந்தனர். அதற்கு முன்னமே 9 மணி…

உயிர்த் தோழியை மணக்க விரும்பிய மாணவி: மறுத்ததால் கத்திகுத்து

பிவானி: ஹரியானா மாநிலத்தில் 17 வயது மாணவி ஒருவர் தன்னுடைய தோழியை மணக்க ஆசைப்பட்டுள்ளார். தோழி மறுத்ததால் அவரை கத்தியால் குத்திய மாணவி கைது செய்யப்பட்டார். ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டம், சன்வார் கிராமத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு படிக்கும் 17 வயது சரிகா (பெயர்…

மீண்டும் தமிழக அமைச்சரவை மாற்றம்?: கலக்கத்தில் அமைச்சர்கள்

சென்னை: தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும்பாலன அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளளனர் என்று கூறப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் போயஸ் கார்டனை விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியேறினார். இதையடுத்து அவர் ஆதரவாளர்கள் சிலர் மீது…

LTTE தலைவர் பிரபாகரன் படம் : நாம் தமிழர் கட்சி…

கடலூரில் இன்று நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவை வாங்க மறுத்த அக்கட்சியின் பொறுப்பாளர் வீட்டில் இந்த நோட்டீசை ஒட்டியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது…

தமிழகத்திலேயே முதல்முறையாக திருநங்கைக்கு அரசு பணி

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைக்கு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த திருநங்கை குணவதி (வயது 23). இவர் எம்.ஏ.(ஆங்கிலம்) முதுகலை பட்டப் படிப்பு மற்றும் கணிப் பொறி ஆசிரியர் பயிற்சி படித்துள்ளார். முதுகலை பட்டம் பெற்று இருந்தாலும், குணவதி திருநங்கையாக இருந்ததால் பல…

ஐபிஎல் போட்டி முறைகேடுகள்: மூன்று கிரிக்கெட் வீரர்கள் கைது

இந்தியா மட்டுமல்லமால் கிரிக்கெட் உலகில் மிகப் பிரபலமாகவும் பல கோடி ரூபாய்கள் பணம் புழங்கும் ஐ பி எல் போட்டிகள் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்திய அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த் உட்பட மூன்று பேர் முறைகேடுகளில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் டில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ்…

தமிழகம் வாழ் இலங்கை அகதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

தமிழகத்தில் வாழ்கின்ற இலங்கை அகதிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ளது. தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கான நலமேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு கட்டமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதுதவிர பாடசாலை கல்வி கற்கின்ற இலங்கை அகதி  மாணவர்களுக்கு பாடநூல்கள், சீருடைகள் மற்றும்…

100 கோடி செலவில் மதுரையில் தமிழ்த் தாய் சிலை: ஜெயலலிதா…

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் 100 கோடி ரூபாய் செலவில் தமிழ்த்தாய் சிலை ஒன்று நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அமெரிக்காவிலுள்ள சுதந்திர தேவி சிலையைப் போல, தமிழர்களின் கலை இலக்கியச் செல்வங்களையும் கட்டிடக்கலை நாகரீகப் பெருமைகளையும் உலகுக்கு பறைசாற்றும்படி தமிழ்த்தாய் சிலை…

தொலைக்காட்சி நிகழ்ச்சியால் அவமானம் : வாலிபர் கொலை

திருச்சி உறையூரை சேர்ந்த முருகானந்தம். சில நாட்களுக்கு முன்பு கடத்தி வரப்பட்டு கொடைக்கானல் வனப்பகுதியில் கழுத்தை அறுத்து, எரித்து கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சரணடைந்த சரவணன் 28, மணிவண்ணன் 21, கள்ளக்காதலி சுதா 36, முருகானந்தத்தின் தாய் பாப்பாத்தி 60, தந்தை கந்தசாமி 80 ஆகியோரை திருச்சி போலீசார்…

சோனியாகாந்தி பாதுகாப்புக்கு பெண் கமாண்டோ படை

வி.வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பை சிறப்புப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த கமாண்டோ வீரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களில் தற்போது 35 பெண் கமாண்டோக்களே உள்ளனர். இவர்கள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடை பெற உள்ளதால் வி.வி.ஐ.…

இந்திய ரயில்வே அமைச்சர் பதவி விலகினார்

ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்திய ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். ரயில்வே துறையில்இடமாற்றம் செய்ய ஒருவர் கொடுத்த பணத்தை வாங்கிய தனது மருமகன் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சல் ராஜினாமா செய்துள்ளார். பன்சல் ராஜினாமா செய்ய வேண்டும்…

கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி

கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் Read More

பாகிஸ்தான் சிறையில் தாக்குதலுக்கு உள்ளான சரப்ஜித் சிங் மரணமானார்

பாகிஸ்தான் சிறையில் கைதிகளால் தாக்கப்பட்ட நிலையில் மரணமான சரப்ஜித் சிங்கின் கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார். 1990 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக நடந்த குண்டுவெடிப்புகளில் 14 பேர் பலியானமை குறித்து பாகிஸ்தானிய நீதிமன்றம் ஒன்றினால்…

இராமதாஸ் கைது எதிரொலியாக தொடரும் வன்முறைகள்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் இராமதாஸ் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் ஆங்காங்கே வன்முறைகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள பாலம் ஒன்றில் புதனிரவு வெடிகுண்டு வெடித்ததில், பாலத்தில் ஒரு மீட்டர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்து மேலும்…

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இலங்கை அகதி தற்கொலை முயற்சி

செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து விடுதலை பெற எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் சசிதரன் (21) என்ற இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அவர் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனிடையே, செங்கல்பட்டு முகாமிலுள்ள மூன்றுபேர் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த…

இலங்கைத் தமிழர்கள் குறித்து வைகோவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம்

துபாயில் தவித்த 19 இலங்கை தமிழர்களை இலங்கைக்கு அனுப்பாமல் வேறு நாடுகளுக்கு அனுப்ப, வெளியுறவுத் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவுக்கு, பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க., வெளியிட்ட அறிக்கையில்,  ‘’ துபாயில் உள்ள 19 இலங்கை தமிழர்களை…

இந்திய பரப்புக்குள் சீனத் துருப்புக்கள்; இந்தியா எச்சரிக்கை

இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கத் 'தக்க நடவடிக்கை' எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோனி சீனாவை எச்சரித்துள்ளார். இந்திய நிலப்பரப்புக்குள் சீனப் படையினர் முகாம் அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, இந்தியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அந்தோனி…

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட்

ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிடிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகாததால் நெல்லை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜயகாந்த் ஆஜராகவில்லை. இதனால் நெல்லை 3வது நீதிமன்றத்தின் அடிசனல் செசன்ஸ் நீதிபதி பிடிவாரண்ட்…

பெங்களுரூ பா.ஜ. அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு: 13 பேர்…

பெங்களூரு : பெங்களூருவில் பா.ஜ. அலுவலகம் அருகே இன்று பைக்கில் வைக்கப்பட்டிருந்த ‌குண்டு வெடித்தது. இதில் 8 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் தற்போது பெங்களுரூவில் குண்டுவெடித்துள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களுரூவையடுத்த, மல்லேஸ்வரம்…