தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை அடுத்து சிங்கள இராணுவத்தினர் இடமாற்றம்!

தமிழகம்: தமிழ் அமைப்புகளின் கடும் எதிர்ப்பையடுத்து குன்னூரில் தங்க வைக்கப்பட்டிருந்த இரு இலங்கை இராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு கருதி வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குன்னூரில் நடைபெறும் இராணுவ பயிற்சி முகாமில் கலந்துக் கொள்ள 10 நாடுகளிலிருந்து இராணுவ அதிகாரிகள் வந்துள்ளனர். முகாமில் பங்கேற்க வந்துள்ள…

தனி ஈழத் தீர்மானம்: பல்டி அடித்த கருணாநிதி!

தமிழகம்: திமுக தலைவர் மு. கருணாநிதி அடுத்த மாதம் சென்னையில் தனது கட்சி நடத்தவிருக்கும் டெசோ மாநாட்டில் தனி ஈழம் கோரி தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாது எனக் கூறியிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை (15.07.2012) கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார். அச்சந்திப்பு குறித்து அதிகாரபூர்வமாக…

ஒபாமா கருத்துக்கு இந்திய எதிர்கட்சிகள் எதிர்ப்பு

புதுடில்லி: பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டை இந்தியா இழந்து வருகிறது என அமெரிக்க குடியரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் கருத்துக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியின் நிலோட்பால் பாசு, நமது பொருளாதாரம் மற்றும் சந்தையை திறந்து விட வேண்டும் என…

இராணுவ வீரரை அடித்து உதைத்த பொதுமக்கள்!

இந்தியா அசாம் மாநிலத்தில் இராணுவ வீரர் ஒருவர், விறகு சுமந்து கொண்டு சென்ற இளம் பெண்ணைக் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாமின் சிப்சாகர் மாவட்டத்தில், நெட்டை புஹூரி வனப்பகுதியில் விறகு சுமந்து கொண்டு பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது…

இலங்கை படையதிகாரிகள் தமிழகத்தில்: குன்னூரில் பரபரப்பு

தமிழகத்தில் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்கடன் என்ற இடத்தில் உள்ள இந்திய இராணுவ பயிற்சி மையத்திற்கு இலங்கை இராணுவத்தின் 57-ம் பிரிவு படையணியின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் மற்றும் கடற்படையின் ரியர் அட்மிரால் எஸ்.என்.ரணசிங்க ஆகிய இருவரும் பயிற்சிபெற வந்திருக்கும் சம்பவத்தால் அப்பகுதியில்…

ஓரின சேர்க்கையில் காந்திக்கு ஈர்ப்பா? சர்ச்சைக்குரிய கடிதத்தால் பரபரப்பு!

இந்தியாவின் தேசப் பிதாவாகக் கருதப்படும் மகாத்மா காந்தி, தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த போது, அவருக்கும் ஜெர்மன் யூதரான, ஹெர்மன் கேலன்பேக் என்ற கட்டிடக்கலைஞருக்கும் இடையே இருந்த நட்பில், பாலியல் ரீதியான கவர்ச்சியும் இருந்ததாக அமெரிக்க எழுத்தாளர், ஜோசப் லெலிவெல்ட் , கடந்த ஆண்டு எழுதிய, “ Great Soul-…

இலங்கையில் வழிபாட்டு இடங்கள் தாக்கப்படுவதற்கு சென்னையில் எதிர்ப்பு

இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கூறி சென்னையில் சர்வமதத் தலைவர்கள் பங்குபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கு இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், அழிக்கப்படுவதாகவும் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகிறார்கள். அப்படியான ஒரு போக்கு…

“மன்மோகன் பெரிதாக சாதிக்கவில்லை”; டைம் பத்திரிகை கடுமையாக விமர்சனம்

இந்தியர் பிரதமர் மன்மோகன் சிங், பெரிதாக எதையும் சாதிக்கவில்லை, பொருளாதார சீர்திருத்தம் மேற்கொண்டு, வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை இட்டுச் சென்று, சாதனை புரியாதவர் என, அமெரிக்காவின் பிரபல, 'டைம்' பத்திரிகை கடுமையாக விமர்சித்துள்ளது. இந்திய பிரதமராக, தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட…

சிறீலங்கா போகமாட்டேன் என பாடகர் கரிகரன் உறுதியளிப்பு!

தமிழர் நல பேரியக்கத்தின் முற்றுகைப் போராட்டத்தையடுத்து சிறிலங்கா கொழும்பு இசை நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டேன் என பாடகர் கரிகரன் உறுதியளித்துள்ளார். தமிழர் நல பேரியக்கம் மராட்டிய மாநில உறுப்பினர்கள் நேற்று வியாழக்கிழமை பாடகர் கரிகரன் வீட்டை முற்றுகையிட்டு, கொட்டும் மழைக்கு மத்தியிலும் காலையில் இருந்து கரிகரன் இசை நிகழ்வில்…

சிங்கள படையினருக்கு சென்னையில் பயிற்சி; ஜெயலலிதா கண்டனம்!

இலங்கை விமானப்படை வீரர்கள் ஒன்பது பேர், தாம்பரம் விமானப்படை நிலையத்தில் தொழில்நுட்பப் பயிற்சி பெற வந்துள்ளதாக வெளியான தகவல், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. "இது தமிழ் இனத்துக்கு எதிரான இந்திய மத்திய அரசின் நடவடிக்கை" என கண்டித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, "வீரர்களை உடனே இலங்கைக்கு திருப்பி…

பிரணாப்- சங்மா வேட்பு மனுக்கள் ஏற்பு

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களின் மனுக்களும் பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சிகளின் வேட்பாளர் பி ஏ சங்மா முறையிட்டிருந்தார்.…

கடைசி வரிசையில் போராட கருணாநிதி தயார்

"சென்னை மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். "சிறைநிரப்பும் போராட்டத்தில், நானும் கலந்து கொள்ள எனக்கு பேரவா தான். ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கூட, மற்றவர்களைக் கலந்து கொள்ளச் செய்து விட்டு, ஒதுங்கியிருந்து, ஓய்வெடுத்துப் பழக்கப்பட்டவன் நானல்ல"  தமிழக…

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படை அட்டூழியம்

இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலில் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், படகில் ஏற்பட்ட பழுதை சரி செய்து ‌கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, 13 மீனவர்களை சிறைபி‌டித்து இலங்கை அழைத்துச்…

மும்பை தாக்குதலுக்கு இந்தியர்கள் உதவி : பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் : மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியர்களே உதவி புரிந்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி கூறியதாக அங்கிருந்து வெளிவரும் பத்தி‌ரிகை பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. மும்பை தாக்குதலை கண்காணித்து நடத்தியதாக மத்திய பாதுகாப்புப் படையினரால் அபு ஜிண்டால் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அதிகாரி…

குடிப்பழக்கத்தை கைவிட நூதன போராட்டம் !

பொதுமக்களிடம் அதிகரித்து வரும் குடிப்பழக்கத்தை கைவிட வலியுறுத்தி, மதுக்கடை முன்பு, திரளான பெண்கள் திரண்டு, நீண்ட வரிசையில் நின்றதால், குடிமகன்கள் மது வாங்க முடியாமல் தவித்தனர். கேரள மாநிலத்தில், மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, மாநில அரசு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. என்றாலும்,…

லஷ்கர் தீவிரவாதிகளிடம் நவீன கடற்படை: இந்தியாவை தாக்க பயிற்சி

மும்பை தாக்குதலை நடத்திய தீவிரவாதி அபுஜிண்டால் சமீபத்தில் டெல்லி போலீசாரிடம் பிடிபட்டான். அவனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் ஜிண்டால் மூலம் கிடைத்து வருகிறது. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளிடம் நவீன கடற்படை இருக்கும் தகவலை…

வழக்குகளை பொடி பொடியாக்க நித்யானந்தா ரகசிய யாகம்?

தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளிலிருந்து விடுபடவும், போலீசாரின் நெருக்கடியில் இருந்து தப்பிக்கவும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நித்யானந்தா தனது சீடர்கள் மூலம் ரகசிய யாகம் வழிபாடுகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24-ம் தேதி, நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திரு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆனித் திருவிழா…

ஒரு அனுபவமே போதும் என்கிறார் அப்துல் கலாம்

இந்திய குடியரசுத் தலைவராக ஒருமுறை பதவி வகித்துவிட்டேன். அந்த அனுபவமே எனக்குப் போதுமானது என்று இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். இந்திய மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், சூரியஒளி, காற்றாலை மூலம் மாற்று எரிசக்தி தயாரிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.…

மும்பாய் தாக்குதல் சூத்திரதாரி அபு ஹம்ஸா கைதானார்

மும்பாய் நகரின் மீது 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களை திட்டமிட்ட முக்கிய இந்திய சந்தேக நபர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அபு ஹம்ஸா என்று அழைக்கப்படும், சையது சபியுதீன், மும்பாய் மீது தாக்குதல் நடத்திய 10 துப்பாக்கிதாரிகளை, தொலைபேசி மூலம் பாகிஸ்தானின்…

குடியரசுத் தலைவர் தேர்தல்: சாங்மாவுக்கு பாஜக, பிரணாபுக்கு சிபிஎம் ஆதரவு

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி சாங்மாவை ஆதரிப்பதாக அறிவித்தாலும், தேசிய ஜனநாயக முன்னணியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அந்தக் கூட்டணியில் இருக்கும் ஒரு பிரதான கட்சியான ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியால் முன்நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு தனது ஆதரவை…

இந்தியாவில் அதிகரிக்கும் இளவயது தற்கொலைகள்

அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாகவும், தற்கொலை செய்துகொள்பவர்களில் 60 சதவீதம் பேர் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளம்பருவத்தினர் என்றும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. உலக அளவில் மக்கள் தொகை அடிப்படையில், அதிகபட்சமானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகள் குறித்து லான்செட் என்கிற மருத்துவ…