இந்தித் திணிப்பை மூடிமறைக்கிறது இந்திய அரசு! தமிழக அரசியல் தலைவர்கள்…

இந்தித் திணிப்பை மூடிமறைக்கிறது இந்திய அரசு! இந்தித் திணிப்பை எதிர்க்கும் தமிழக அரசியல் தலைவர்கள் ஆங்கிலத் திணிப்பை ஆதரிக்கிறார்கள்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை! இந்திய அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் சமூக வலைத்தளங்களில் ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவதை தடை செய்து, கட்டாயம் இந்தியில்…

முஸ்லிம் வன்முறைகளின் எதிராலி! இலங்கை விமானசேவைகளை புறக்கணிக்க தவ்ஹீத் ஜமாத்…

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இனவாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படாத வரை இலங்கையின் விமான சேவைகளான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகியவற்றை புறக்கணிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், குவைத் மற்றும் மஸ்கட் மண்டலங்கள் தீர்மானித்துள்ளன.  அத்துடன்,  இலங்கையில் இருந்து…

இந்தியா வர முடியாமல் ஈராக்கில் தவிக்கும் இந்தியர்கள் : ஆம்னெஸ்டி

புதுடில்லி : ஈராக் நாட்டில் வன்முறை பாதித்த பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள இந்தியர்கள், தங்களது பாஸ்போர்ட்டை திரும்ப பெற முடியாததால், அவர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா கூறியுள்ளது. ஈராக் நாட்டில் ஆளும் அரசிற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. வர்த்தக…

கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்: ஞானதேசிகன் கண்டனம்

கிறிஸ்தவ தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொல்லப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே இதற்கு முன்னர் இப்படிப்பட்ட கொலை சம்பவம்…

தமிழ்நாட்டு சிறப்பு முகாம்களில் தொடரும் அவலம்!

திருச்சி சிறப்புமுகாமில் ஈழ அகதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவரூபன் எனும் 27 வயது வாலிபர் கடந்த ஒரு வருடமாக திருச்சி சிறப்புமுகாமில் எந்தவிதமான வழக்குகளுமின்றி அடைக்கப்பட்டுள்ளார். விடுதலை எப்பொழுது என்றே தெரியாது இருந்து வந்த இவர் தன்னை விடுதலை செய்யக்கோரி…

மோடி அரசின் ஹிந்திக் கொள்கைக்கு ஜெயலலிதாவும் எதிர்ப்பு

மோடி அரசு, மத்திய அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் சமூக ஊடகங்களில் முதலில் ஹிந்தியைப் பயன்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.ஏற்கனவே இது குறித்து திமுக தலைவர் மு.கருணாநிதி தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர்…

கபட நாடகத்தை அரங்கேற்றும் சீனா

சீனா தனது நட்புறவை இந்தியாவுடன் மேம்படுத்த விரும்புவதாக கூறி தொடர்ந்து அத்துமீறல்களை அரங்கேற்றி வருகிறது. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்த சீனா, அவர்களது வெளியுறவு துறை அமைச்சரின் மூலம் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை சமாதானதிற்கானது என குறிப்பிட்டிருந்த சீனா கடந்த சில தினங்களுக்கு…

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்-இலங்கை செல்லும் முஸ்லீம் லீக்

முஸ்லீம்கள் மீதான சிங்களர் வன்முறையைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் குழு ஒன்று இலங்கை செல்வதாக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் காதர் மொஹைதீன் தெரிவித்துள்ளார். காதர் மொஹைதீன் தலைமையில் இந்தக் குழு இலங்கை செல்லவுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர்…

சுரேஷ்குமார் படுகொலை : தமிழகம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பினர்…

இந்து முன்னணி அமைப்பின் திருவள்ளூர் மாவட்ட செயலாளராக இருந்த சுரேஷ் குமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் இந்து முன்னணியினர் நடத்திய சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…

ரஷ்யாவுடன் உயர்மட்ட உறவை விரும்பும் மோடி

புதுடெல்லி, ஜூன் 19- ரஷ்ய துணை பிரதமர் திமித்ரி ரோகோசின் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். மேலும், இந்தியா-ரஷ்யா உறவை மேலும் வலுப்படுத்த மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார். அப்போது ரஷ்யாவை…

ஈராக்கில் கடத்தப்பட்ட 40 இந்தியர்களின் இருப்பிடம் தெரிந்தது: வெளியுறவுத்துறை

புதுடெல்லி, ஜூன். 19- ஈராக்கில் சன்னி கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் சண்டை நீடித்து வருகிறது. கடந்த வாரம் சதாம் உசேனின் சொந்த நகரான திக்ரித்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் அடுத்து மொசூல் நகரை கைப்பற்றினர். நேற்று அவர்கள் மேலும் முன்னேறி தல் அஃபாரை கைப்பற்றினர்.…

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் 2.80 கோடி வேலைவாய்ப்பு: மோடி அரசின் புரட்சிகர…

புதுடில்லி : உள்நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் தயாரிப்பிற்காக கூடுதல் நிதி ஒதுக்கி, அதன் மூலம் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து, 2.80 கோடி புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், உள்நாட்டில்…

இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்! – வைகோ கண்டனம்

இலங்கைத் தீவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக, சிங்கள இனவாத வெறி பிடித்த குழுக்கள், தாக்குதல் நடத்தி வருவது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த வன்முறையில் ஈடுபட்ட பொதுபலசேனா என்ற அமைப்புக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன். பௌத்த மதத்தின் பெயரில் செயல்படும் இந்த வன்முறைக்குழு, இலங்கைத் தீவில், பௌத்த மதத்தைத்…

இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழில் பேரணி

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதைக் கண்டித்து இன்று யாழில் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் பேரணியானது, இன்று காலை 10.30க்கு நல்லூர் கைலாச பிள்ளையார் கோவில் முன்றலில் ஆரம்பமாகி இந்திய துணைத் தூதரகத்தை நோக்கி சென்றது. இந்திய துணைத்…

உத்தர பிரதேச பள்ளி-கல்லூரிகளில் மாணவிகளுக்கு தற்காப்புக் கலை: முதல்வர் உத்தரவு

லக்னோ, ஜூன் 17- உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வரும் நிலையில், பெண்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்க வேண்டும் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். பெண்களுக்கு உதவி செய்வதற்காக 24 மணி நேரமும் செயல்படும் இலவச ஹெல்ப்லைனை (1090)…

இலங்கை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கவும்: இந்திய அரசிடம் திருமாவளவன் கோரிக்கை

இலங்கை வாழ் இஸ்லாமிய சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக சிங்கள இனத்தைச் சேர்ந்த பௌத்த துறவிகள் முஸ்லிம் மக்கள் மீது…

சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது!

இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இலங்கையின் அளுத்கம, பேருவளை ஆகிய இடங்களில் சிங்களர்கள் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.…

உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும்: வெள்ளையன்

மயிலாடுதுறை,ஜூன்.16– தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் அன்னிய சார்பு கொள்கையே. விதை விற்க கூட அமெரிக்க நிறுவனம், சமையல் எண்ணை இறக்குமதி என்று…

அத்துமீறலை நிறுத்தினால்தான் பாகிஸ்தானுடன் பேச்சு: இந்தியா திட்டவட்டம்

எல்லைப் பகுதியில் அத்துமீறல்களை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜம்மு- காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்…

டெல்லி செங்கோட்டையில் இஸ்லாமிய கொடி பறக்க வேண்டும்: அல்கொய்தாவின் காணொளியால்…

இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் நடத்த காஷ்மீர் இளைஞர்களுக்கு அல்கொய்தா இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்கொய்தாவின் மூத்த தளபதிகளில் ஒருவரான மெளலானா ஆசிம் உமர் என்பவர் ”காஷ்மீர் முஸ்லிம்களுக்கு" என்ற தலைப்பில் பேசிய காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த காணொளியில், பாகிஸ்தான் மற்றும்…

பாகிஸ்தான் எல்லை மீறினால் ராணுவம் பதிலடி கொடுக்கும்: அருண் ஜேட்லி

எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால் தகுந்த பதிலடி கொடுக்கும் திறன் இந்திய ராணுவத்துக்கு உள்ளது என்று மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். ஜம்மு-காஷ்மீரில் 2 நாள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை ஸ்ரீநகருக்கு சென்ற அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ""எல்லையில் பாதுகாப்பு தொடர்பான…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதிக்க மாட்டோம்: மத்திய அமைச்சர்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார். இதுகுறித்து கர்நாடக மாநிலம், தும்கூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அவசியமற்றது. எந்தக் காரணத்தைக் கொண்டும் கர்நாடக மாநிலத்துக்கு எதிரான காவிரி மேலாண்மை வாரியத்தை…

பொருளாதாரத்தை வலுப்படுத்த கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வரும் ஆண்டுகளில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசு நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மோடி பிரதமராக பதவியேற்று 3 வாரங்கள் ஆகியுள்ள நிலையில், அவர்…