உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
இராக்கிலிருந்து 600 இந்தியர்கள் நாடு திரும்ப ஏற்பாடுகள்
இராக்கில் நெருக்கடி இல்லாத பகுதிகளில் இருக்கும் கிட்டத்தட்ட 600 இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் இந்த வாரம் துவங்கும் என்று வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருத்தின் தெரிவித்துள்ளார். இராக்கில் இந்தியத் தூதரகம் மேற்கொண்டுவரும் முன்னெச்சரிக்கை முயற்சிகளின் ஒரு பகுதியாக அங்கிருக்கும் இந்தியத் தூதரகத்தின் நடமாடும் அணிகள்,…
பிஎஸ்எல்வி- சி 23 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை சரியாக 9.52க்கு பிஎஸ்எல்வி சி 23 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் 5 செயற்கைக் கோள்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த ராக்கெட் ஏவப்படுவதை நேரில் காண்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றே ஸ்ரீஹரிகோட்டா இந்திய…
சென்னை கட்டிட விபத்து: முதல்வர் வருகைக்காக மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டதா?
சென்னை அடுக்குமாடி குடியிருப்பு விபத்து சம்பவத்தில் மீட்புப் பணிகளை நேற்று முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். சென்னை போரூர் மவுலிவாக்கத்தில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த 13 அடுக்கு மாடி கட்டிடம் கனமழையால் இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில், முதல்வர் மீட்பு பணியை பார்வையிட வந்தபோது, மீட்பு பணிகளை…
இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சி தொடர்பில் இந்திய தேசிய புலனாய்வு…
தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல்களை நடத்த இஸ்லாமிய தீவிரவாதிகளால் இலங்கை, மாலைத்தீவு மற்றும் மலேசியாவினூடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இந்திய தேசிய புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்தவுள்ளது. தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவர் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.…
முல்லைப் பெரியாறு உட்பட நான்கு அணைகள் தமிழகத்திற்கு சொந்தமானவை: கருணாநிதியின்…
முல்லைப் பெரியாறு. பரம்பிகுளம் உட்பட நான்கு அணைகளும் கேரளாவிற்கு கீழே உள்ள அணைகளின் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்றும், அவை தமிழ்நாட்டினால் பராமரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதியின் கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடும் சீனா
அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா வரைபடம் வெளியிட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சீனா தனது அதிகாரப்பூர்வ வரைபடத்தில், அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என தெரிவித்துள்ளது. அதாவது சீனாவின் தெற்கு திபெத்தின் ஒரு பகுதியே அருணாச்சல பிரதேசம் என்று அதில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த…
சென்னையில் 13 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது! 2 பேர்…
சென்னையில் பெய்த திடீர் கனமழையால் 13 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் இன்று மதியம் சூறாவளி காற்றுடன் திடீர் மழை பெய்தது. இதில் பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை போரூர் மவுலிவாக்கத்தில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த…
அருவிகள், வனங்களை மேம்படுத்த ஜெயலலிதா தலைமையில் பாதுகாப்பு ஆணையம்
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மனித வளத்தையும், நாட்டின் வளத்தையும் பாதுகாக்கக்கூடிய இயற்கை சார்ந்த பகுதிகளான காடுகள், மலைப் பிரதேசங்கள் மற்றும் அருவிகள் விழும் பகுதிகளைப் பாதுகாக்க பல முனைப்பான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பாரம்பரியமிக்க இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை…
பா.ஜ., புதுமுக எம்.பிக்களுக்கு அறிமுக வகுப்பு
புதுடில்லி: பா.ஜ.,சார்பில் போட்டியிட்டு தேர்வான புதுமுக எம்.பிக்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று துவங்குகிறது. நடந்து முடிந்த 16-வது லோக்சபா தேர்தலில் பா.ஜ.,சார்பில் மொத்தமாக 282 பேர் எம்.பிக்களாக தேர்வாகினர். இதில் சிலர் நான்கு முதல் எட்டுக்கும் மேற்பட்ட தடைவை பார்லி.,, உறுப்பினர்களாக வலம் வருகின்றனர். பிரதமர் நரேந்திரமோடி உட்பட…
எச்.ஐ.வி,எய்ட்ஸ் தடுப்பு வழிமுறைகள் குறித்து அமைச்சர் கருத்தால் சர்ச்சை
இந்தியாவில் எயிட்ஸ் தடுப்புக்கான பிரச்சாரம் ஆணுறைப் பயன்பாட்டை மட்டும் வலியுறுத்தாமல் குடும்ப உறவின் முக்கியத்துவத்தையும் சொல்லவேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியிருந்தது சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. சமீபத்தில் நியு யார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு மத்திய சுகாதார துறை அமைச்சர் பேட்டி அளித்த போது, இந்தியாவில் எய்ட்ஸ்…
மக்களுக்கு மலிவு விலையில் மருந்து வழங்க10 இடங்களில் ‘அம்மா’ மருந்தகம்…
சென்னை:கூட்டுறவுத் துறை சார்பில், 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள, 'அம்மா' மருந்தகத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் திறந்து வைத்தார்.தமிழகத்தில், நியாயமான விலையில், தரமான மருந்துகளை விற்பனை செய்ய, கூட்டுறவுத் துறையில், புதிதாக, 'அம்மா' மருந்தகம் துவக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம்,…
எனக்கு தேனிலவு காலம் என்பதே இல்லை: 30 நாள் அனுபவம்…
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்து சரியாக 30 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்த அனுபவம் குறித்து தனது வலைப்பக்கத்தில் கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, எனக்கு தேனிலவு காலம் என்பதே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவாக மத்தியில் பொறுப்பேற்கும் ஆட்சியாளர்களுக்கு முதல் ஒரு சில…
விரைவில் குஜராத்தின் பாலிதானா நகரமே சுத்த சைவமாக மாறுகிறது
குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாலிதானா நகரமே விரைவில் சுத்த சைவமாக அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான நடைமுறைகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. ஜெயின் சமூக மக்கள் அதிகமாக வசித்து வரும் பாலிதானாவில் 25 சதவீத சிறுபான்மையினரும் இருக்கிறார்கள். அங்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மகாவீர் கோயிலும்…
30 நாள்:சோதனைகளை கடந்து சாதித்துவரும் மோடி அரசு
புதுடில்லி: மோடி பிரதமராக பதவியேற்று ஒரு மாதம் ஆன நிலையில் அவரின் செயல்பாடுகள் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மோடி பிரதமராகபதவியேற்றவுடன் அரசு அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள்வழங்கினார். அதுமட்டுமல்லாது நான்கு கட்டங்களுக்கு மேல் அரசு கோப்புகள் மேஜையில் தங்கியிருக்க கூடாது எனவும், அதிகாரிகள் அனைவரும்…
ஈராக்கில் உள்ள கேரள மக்கள் ஊர் திரும்ப இலவச விமான…
ஈராக்கில் சிக்கியுள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு பத்திரமாகத் திரும்ப வசதியாக அவர்களுக்கு இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் கேரள மாநில அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி…
நாட்டை காப்பாற்ற மோடியின் சிக்கனம்
அமைச்சர்கள் யாரும் புதிய கார்களை வாங்க கூடாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். அண்மையில் மத்திய அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும் , அதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே காரணம் என மோடி குற்றம் சாட்டியிருந்தார்.எனவே நாட்டின் நிதி நிலைமையை சரி கட்ட…
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 46 பேர் விடுதலை
கொழும்பு, ஜூன் 25- இலங்கை சிறையில் உள்ள 46 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த 24 மீனவர்கள் கடந்த 18-ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதேபோல் ராமேஸ்வரம், பாம்பனைச் சேர்ந்த 22…
பொருளாதார ஸ்திரத்தன்மையுள்ள நாடாக உருவெடுக்கிறது இந்தியா
புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச நாடுகளுடன் விரைவில் மேற்கொள்ள உள்ள வர்த்தக உறவுகளால், விரைவில் பொருளாதார ஸ்திரத்தன்மையுள்ள நாடாக இந்தியா உருவெடுக்க உள்ளதாக சர்வதேச ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. சர்வதேச ஆய்வு நிறுவனமான ப்சோஸ் நிறுவனம், பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து 20க்கும்…
கங்கை நதியில் குளித்தால் புற்றுநோய் ஏற்படலாம் : ஆய்வு தரும்…
கங்கை நதியில் குளித்து எழுவது புனிதமாகக் கருதப்பட்டு வரும் சூழ்நிலையில், ஒரு முறை கங்கை நதியில் குளித்தாலே புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்களின் இயல்புகளை குணநலப்படுத்தும் மையம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பமேளா நடந்த போது கங்கை நதியில்…
‘ஆயுதங்கள் குவிப்பதே குறிக்கோள்’- பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெட்லி
புதுடில்லி: வரவிருக்கும் பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு தாரளமாக இருக்கும் என்றும் நாட்டின் பலத்தை வலு<ப்படுத்த ஆயுதங்கள் வாங்கி குவிப்பதே மத்திய அரசின் முக்கிய இலக்காக இருக்கும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார். மூத்த கடலோர காவல்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர்…
சுகர், பிரஷர் மாத்திரைகள் இலவசம்; மோடி அரசின் மெகா தி்ட்டம்
புதுடில்லி : நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது நோய்கள், மனித சமுதாயத்தை அச்சுறுத்தி வரும் நிலையில், பிறப்பு முதல் இறப்பு வரையிலான காலகட்டத்தில், மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் வலி, தொற்றுநோய் பாதிப்பு, நீரிழிவு, ஹைபர் டென்சன் உள்ளிட்ட 50 வகையான நோய்களுக்கான மருந்துகளை மக்களுக்கு இலவசமாக வழங்க,…
பிரதமர் மோடி பிறப்பித்த 3 அதிரடி உத்தரவு
நரேந்திர மோடி, 3 முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நல்ல நிர்வாகத்தை வெளிப்படுத்தி மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டுமெனில் உடனடியாக 3 விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். முதலாவதாக, மத்திய - மாநில அரசுகளிடையேயான உறவை…
கச்சத்தீவு: நிலவியல் ரீதியாக இந்திய நிலப்பரப்பே!
சமீப காலங்களில், நாடுகளுக்கு உள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும், வளர்ந்து வரும் எல்லைப் பங்கீடுகள், மிகப்பெரிய பிரச்னைகளாக உருவெடுத்து வருகின்றன. இந்தியா - இலங்கை இடையே, வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள கச்சத்தீவும், இரு நாடுகளுக்கும் இடையே, மிகப்பெரிய பிரச்னையாக வளர்ந்து வருகிறது. சரித்திர மற்றும் ஆவணங்களின் ஆதாரப்படி, கச்சத்தீவு…