விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் தமிழக மாடலே சிறப்பானது: மக்களவையில் தம்பித்துரை…

மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.. இந்த விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சி எம்பிக்கள்  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து உரையாற்றி வருகின்றனர். இந்த விவாதத்தில் பேசிய அதிமுக எம்பி தம்பித்துரை, விலைவாசி உயர்வை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.…

இந்து மக்கள் கட்சியினர் ஆயுதம் வைத்துக் கொள்ள வேண்டும்: அர்ஜூன்…

இந்து மக்கள் கட்சியினர் இந்து தர்மத்தின்படி ஆயுதம் வைத்துக்கொள்ள ஆயுதங்கள் வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். பாரதப் பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்றதற்கு பழனியாண்டவருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும்பொருட்டு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் செவ்வாய்க்கிழமை பழனிக்கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு செய்தார். முன்னதாக…

குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மகளிர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

      மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகள் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதை கண்டித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மயிலாடுதுறையில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை சோழம்பேட்டை ஊராட்சியில் கடந்த 24.06.2014 அன்று…

கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்: உமாபாரதி

கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற "கங்கா மந்தன்' நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணி தொடர்பாக பாஜக தேசிய கவுன்சில் குழு கூட்டத்தில் பேசினேன். அப்போது…

வறுமைக் கோடு என்பதை விட சாகாக் கோடு என்பதே சரி

இந்தியாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக இந்தியாவின் வறுமை அளவுகோல் சம்பந்தமாக ஆராய்ந்த அரசாங்கத்தின் நிபுணர் குழுவிருடைய பரிந்துரை காட்டுகிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர் குழு இந்தியாவில் வறுமைக் கோட்டின் அளவை மீண்டும் வரையறுத்துள்ளது. கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு…

ஷாரியா நீதிமன்ற உத்தரவுகள் சட்டத்துக்குட்பட்டு அமையவில்லை

இந்தியாவில், ஷாரியா நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் சட்டவிதிமுறைக்கு உட்பட்டது கிடையாது என்று இந்திய உச்சநீதிமன்றம் இன்று திங்கட்கிழமை கூறியிருக்கிறது. இந்த ஷாரியா நீதிமன்றங்கள் சில சந்தர்ப்பங்களில் தனி மனித உரிமைகளில் தலையிடுவதாக உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதி சி.கே.பிரசாத் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்ற வழக்கின் விசாரணையில், மதம்…

முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்குச் சொந்தம்

முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப் பள்ளம், துணக்கடவு ஆகிய அணைகள், தமிழ்நாட்டினால்தான் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன என்றும், இந்த அணைகள் தமிழ்நாட்டிற்குச் சொந்தமானவை என்ற கோரிக்கையும் அணைப் பாதுகாப்புத் தேசியக் குழுவினரால் ஏற்கப்பட்டுள்ளன என்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள ஜெயலலிதா, தி.மு.க.…

கடைசி சீக்கிய மகாராஜா: ‘சோகமாக முடிந்த அத்தியாயம்’

இந்தியாவின் சீக்கிய இராச்சியத்தின் கடைசி ஆட்சியாளரின் உடல், கிழக்கு இங்கிலாந்தில் சஃபொல்க் (Suffolk) வட்டாரத்தில் உள்ள அமைதியான ஒரு நாட்டுப்புறக் கிராமமான எல்வெடின்-இல் (Elveden) 1893-இல் புதைக்கப்பட்டது. இப்போது நூறாண்டுகள் கடந்து, அவரது உடலை இந்தியாவுக்கு மண்ணுக்கு அனுப்பவேண்டும் என்கின்ற கோரிக்கை பிரிட்டனிலுள்ள சீக்கிய சமூகத்திடமிருந்து கிளம்பியிருக்கின்றது. லாஹூர்…

இந்தியர்களை மீட்க உதவிய சதாம் உசேன்!

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் ஈராக்கில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க சதாம் உசேனின் பாத் கட்சியினர்தான் இந்திய அரசுக்கு உதவி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியர்களை மீட்பதில் ஈராக் அரசும், ஈராக் ராணுவமும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு தராததால், மறைந்த சதாம் உசேனின் பாத் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் இந்திய அரசே…

தீவிரவாதிகள் கண்ணியமாக நடந்து கொண்டனர்: செவிலியர் பேட்டி

ஈராக்கில் தீவிரவாதிகள் கண்ணியமாக நடந்து கொண்டதாக, இந்தியா திரும்பிய தூத்துக்குடி செவிலியர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக்கில் இருந்து விமானம் மூலம் கொச்சி திரும்பிய 46 செவிலியர்களில் ஒருவரான தூத்துக்குடியைச் சேர்ந்த மோனிஷா என்பவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி தெரிவிக்கையில், நாங்கள் அனைவரும் பெண்கள் என்பதால் அவர்கள் எங்களை…

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலையை எதிர்க்க பா.ஜ.க முடிவு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது விடுதலைக்கு பா.ஜனதா அரசும் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. கொலைக்குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்து உத்தரவிட்டது. அவர்கள் 20 ஆண்டுகளுக்கு…

நிறைவடைந்தது மவுலிவாக்கம் மீட்பு பணி: 67 பேர் பலி, 27…

சென்னையில் மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டிடம் விபத்துப் பகுதியில் கடந்த 7 நாட்களாக நடந்து வந்த மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மவுலிவாக்கத்தில் பிரைம் சிருஷ்டி என்ற கட்டுமான நிறுவனத்தினர் கட்டிவந்த 11 அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 28ம் திகதி இடிந்து விழுந்தது. இதனையடுத்து, அன்று…

பாக்கு நீரிணையில் “இந்தியா” என்ற பெயர்ப் பலகை

தென் பாக்கு நீரிணையின் 5வது தீவுப் பகுதியில் “இந்தியா” என்ற மற்றுமொரு பெயர்ப் பலகை நிறுவப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் செல்வதை தடுக்கும் நோக்கிலேயே இந்த பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ளதாக மண்டபம் கரையோர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மண்டபம் மாவட்ட நிர்வாகி கே நந்தகுமாரின் பணிப்பின்பேரில் இந்த…

மோடி வருகையை எதிர்த்து காஷ்மீரில் கடையடைப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரின் சில பகுதிகளில் பிரிவினைவாதிகள் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக பள்ளிக்கூடங்களும் வணிக நிறுவனங்களும் கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஸ்ரீநகரின் சிலபகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தடுக்கும் முயற்சியாக, அதிகாரிகள் பொது மக்களின் நடமாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளனர். பாஜக தலைமையிலான…

குழந்தைகள் இறப்பைத் தடுக்க 4 இலவச தடுப்பு ஊசிகள்: நரேந்திர…

குழந்தைகள் இறப்பு சதவீதத்தைக் குறைக்க 4 தடுப்பு ஊசிகள் மத்திய அரசு திட்டத்தில் புதிதாக சேர்க்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சர்வதேச நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ரோட்டா வைரஸ், ருபில்லா, போலியோ தடுப்பு ஊசி, ஜப்பானிய…

காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி: பாகிஸ்தான்

பிரதமராகப் பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு முதல் முறையாக வெள்ளிக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், "காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி' என்று பாகிஸ்தான் வியாழக்கிழமை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் தஸ்னீம் அஸ்லாம் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம்…

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம்: “ஆதாரம் இன்றி கைது செய்யக்கூடாது”

வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க, போதிய ஆதாரமின்றி இந்தச் சட்டத்தின் கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்தச் சட்டம் பழிவாங்கும் நோக்கில் சில சமயங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்தத்…

உச்ச நீதிமன்ற நீதிபதி நியமன விவகாரம்: தலைமை நீதிபதியின் கருத்துக்கு…

உச்ச நீதிமன்ற நீதிபதி நியமன விவகாரத்தில் பா.ஜ.க அரசு நடந்து கொள்ளும் முறை குறித்து தலமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தால் பிரதமர் நரேந்திரமோடி வருத்தம் அடைந்துள்ளார். முன்னதாக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வக்கீலுமான கோபால் சுப்பிரமணியம் உள்பட 4 பேரை உச்ச நீதிமன்றா நீதிபதிகளாக நியமிக்குமாறு மூத்த…

இந்திய மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

கச்சதீவில் மீன் பிடிப்பது தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், மீனவ நல அமைப்புகள் போராட்டத்தினை தீவிரப்படுத்த முயற்சித்துள்ளன. கச்சதீவை மீட்டு, அங்கு தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமைகள் வழங்க வேண்டும்…

சென்னை கட்டிட விபத்து: விசாரணைக் கமிஷன் நியமனம்

கட்டிட விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன   சென்னையில் கடந்த சனிக்கிழமை நடந்த 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 53 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளுக்கு…

பன்னாட்டுச் சட்ட விதிகளின்படி கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்…

தமிழக மீனவர்களின் உயிருக்கும் வாழ்வாதார உரிமைக்கும் உத்தரவாதம் கிடைக்க, கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத் தீவு தொடர்பான ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும்…

இந்திய எல்லைப்புற மக்களுக்கு ராணுவ பயிற்சி : மத்திய அரசு…

இந்திய - சீன எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை எதிர்கொள்ளும் வகையிலும், தங்களை தற்காத்துக் கொள்ளவும் அங்கு வாழும் மக்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அண்டை நாடுகளுடன் எப்போதும் நட்புறவையே விரும்பினாலும், அவர்களது ஊடுருவல்களை எந்த நேரத்திலும் சமாளிக்கும் வகையில் இந்தியாவை தயார்…

தமிழகத்தின் கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழிலேயே தீர்ப்பு

தமிழ்நாட்டில் அமைந்துள்ள சார்நிலை மற்றும் கீழ் நீதிமன்றங்களில் இனி வரும் காலங்களில் தமிழ் மொழியில் மட்டும் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்பு வழங்க வழிவகுக்கும் சுற்றறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின்…