உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
இந்தியாவில் போர் தொடுப்போம்: தீவிரவாத அமைப்புகளுக்கு சலாஹூதீன் அழைப்பு
தலீபான்-அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளை இந்தியாவிற்கு எதிராக போராட ஜிஹாத் கவுன்சில் அமைப்பின் தலைவன் சலாஹூதீன் அழைப்பு விடுத்துள்ளான். ஈராக் நாட்டில் ஆட்சியை நிலைநாட்டி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபெக்கர் அல்-பாக்தாதி இந்தியா மீது போர் தொடுக்கப்போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதனைதொடர்ந்து ஐக்கிய…
தமிழக மீனவர்கள் 36 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையின் தொடரும்…
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 36 பேரை இன்று புதன்கிழமை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது. நெடுந்தீவு அருகே இன்று புதன்கிழமை மாலை தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 5 படகுகளுடன் 23 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட…
வேட்டி விவகாரம்: ஜெயலலிதா எச்சரிக்கை
வேட்டி கட்டத் தடை சர்ச்சை: கிளப்புக்கு ஜெயலலிதா எச்சரிக்கை வேட்டி உடுத்தி வந்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, இது போன்ற விதிகளை அமல்படுத்தும் தனியார் கிளப்புகள், வேட்டிக்கு தடை விதிக்கும் விதிமுறையை நீக்க நடப்புக் கூட்டத்தொடரில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்…
காவிரி: தமிழகத்துக்கு விளக்கமளிக்க நடுவர் மன்றம் மறுப்பு: உச்ச நீதிமன்றத்தை…
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் நிலுவையில் உள்ளதால், 2007-இல் அளிக்கப்பட்ட இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு எவ்வளவு நீர் வழங்கப்படும் என்பது குறித்து விளக்கம் கோரும் தமிழக அரசின் மனுவை தற்போது ஏற்க இயலாது என்று காவிரி நடுவர் மன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.…
இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பில் பாமகவின் கோரிக்கையை மத்திய அரசு…
இலங்கை போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ்.ராமதாஸ் விடுத்த கோரிக்கையை இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைக் குழு இன்று…
பாலியல் குற்றம் செய்த சிறார் குற்றவாளிகளுக்கு தண்டனை விலக்கு தேவையா?
பாலியல் வல்லுறவு, கொலை போன்ற கொடூரமான குற்றங்களை புரியும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சட்டத்திலிருந்து பெறுகின்ற விலக்கு குறித்து உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமையன்று கேள்வி எழுப்பியதோடு இந்த சட்டத்தை மறுஆய்வு செய்வது குறித்து மத்திய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. பாலியல் வல்லுறவு வழக்குகளில் குற்றம் புரியும்…
புகழ்பெற்ற சில இந்திய மூட நம்பிக்கைகள்: இவை உண்மையில் உண்மைதானா…
இந்திய மண் மூட நம்பிக்கை நிறைந்த மக்களால் நிறைந்துள்ளது. ஒவ்வொரு பண்பாடு, மதம் மற்றும் வட்டாரத்தில் அவரவருக்கென ஒரு மூட நம்பிக்கை பட்டியலே உள்ளது. சில மூட நம்பிக்கைகளுடன் விஞ்ஞானபூர்வ காரணங்கள் இணைந்து கொண்டிருந்தாலும், பல நம்பிக்கைகள் மிகவும் முட்டாள்தனமாக தான் இருக்கும். நம் நாடு நாகரீக வளர்ச்சி…
தமிழகத்தை தவிர்த்து இலங்கை விவகாரத்தைக் கையாளுகிறார் மோடி: ஆந்திராவில் பல…
சில தினங்களிற்கு முன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள் சந்தித்தது தொடர்பாக ஆச்சரியமளிப்பதாகவும், அதிர்ச்சியூட்டுவதாகவும் பல செய்திகள் வெளியாகின. இது தொடர்பான திறந்த ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக லங்காசிறி வானொலி நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா அவர்களை…
வேட்டியில் வந்த நீதிபதிக்கு அனுமதி மறுப்பு: சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம்
வேட்டி உடுத்தி சென்றதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கும் வழக்கறிஞர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அமைச்சர் வீரமணி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். தமிழக மாநில சட்டத்துறையின் ஆலோசனை பெற்று, முதலமைச்சர் கவனத்திற்கு இந்த சம்பவம் கொண்டு…
தமிழுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை: கவிஞர் வைரமுத்து வேதனை
தமிழ் மொழிக்கு செம்மொழிக்கு உரிய உயரம் இதுவரை கிடைக்கவில்லை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா அரங்கில் கவிஞர் வைரமுத்துவின் மணிவிழா நடைபெற்றுள்ளது. இதில் பேசிய கவிஞர் வைரமுத்து, உலக நாகரிக வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்த பெரிய மொழி தமிழ் மொழி. படைகலன்…
மன்மோகன் சிங்கை விசாரிக்க சிபிஐ முடிவு? சூடுபிடிக்கும் ஊழல் விவகாரம்
காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட நிலக்கரி ஊழல் விவகாரத்தில், சிபிஐ மன்மோகன் சிங்கை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2004ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் மன்மோகன் சிங், நிலக்கரி அமைச்சகப் பணிகளை கவனித்தபோது, நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். அப்போது, நிலக்கரி சுரங்கங்களை தனியார்களுக்கு…
இந்தியாவில் 248 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு
கடந்த ஆண்டு, இந்தியாவில் 248 வகை புதிய உயிரினங்கள்(விலங்கினங்கள்)கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டுள்ள இந்திய விலங்கியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள மீனினம் ஒன்று இவற்றில் பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும், கிழக்கு இமாயலப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டவை என்று அந்த ஆய்வகத்தின் இயக்குநர் டாக்டர் கே வெங்கட்ராமன்…
அரசியல் பிரச்னைக்கு தீர்வு காண உதவி: இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை
இலங்கையில் நல்லிணக்கப் பணிகளை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்தியாவின் உதவியைக் கோரியுள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் கூறியுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசிய அவர், இலங்கையின் கண்டி நகரில் இதுகுறித்து சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் பேசினார். அப்போது,…
பாதுகாப்புத் துறை: அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில் எச்சரிக்கை தேவை:…
முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும்போது மத்திய அரசு எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார். முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ""உள்கட்டமைப்புத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு எங்களது…
கர்நாடகத்தில் மாணவர்களிடையே கைபேசியை தடைசெய்ய பரிந்துரை
இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களிடையே கைபேசி பாவனையை தடைசெய்ய வேண்டும் என்று மாநில சட்டசபை உறுப்பினர்கள் குழுவொன்று பரிந்துரை முன்வைத்துள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பல்வேறு பாலியல் தொந்தரவுகள் மற்றும் வன்முறைகளுக்கு கைபேசி பயன்பாடு முக்கிய காரணமாக இருந்துள்ளதாகவும் பெண்கள் மற்றும் சிறார் நல்வாழ்வுக்கான அனைத்துக்…
‘ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல்…
புதுடில்லி:'ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல் சட்டத்தின், 370வது பிரிவை, ரத்து செய்ய வேண்டும்' எனக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அரசியல் சட்டத்தின், 370வது சட்டப்பிரிவு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கிறது. 'இந்தச்…
அமெரிக்கா வருமாறு மோடிக்கு ஒபாமா முறைப்படி அழைப்பு
வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்கா வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ஒபாமா அனுப்பிய அழைப்பிதழ் கடிதத்தை அந்நாட்டு வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ், தில்லியில் மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்து வழங்கினார். இச் சந்திப்பின் போது, தேசியப்…
இலங்கை மீதான ஐநா விசாரணை: ‘இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை’
இந்தியா வந்திருக்கும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று வெள்ளிக்கிழமை புதுடில்லியில் சந்தித்து பேசினார். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் இந்திய மீனவர்கள் விவகாரம், இலங்கை உள்நாட்டு போரில் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் மற்றும் இருநாட்டு…
இந்து தலைவர்கள் கொல்லப்படும் சம்பவங்கள்: குடியரசுத் தலைவரிடம் சுப்பிரமணியன் சுவாமி…
தமிழகத்தில் இந்து தலைவர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் முறையிட்டதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் சுப்பிரமணியன் சுவாமி வியாழக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "இந்திய அரசியல்வாதிகளால் வெளிநாடுகளில்…
சாவின் விளிம்பிலுள்ள பொருளாதாரத்துக்கு சஞ்சீவினி மருந்து: மோடி பாராட்டு
மக்களவையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ள பட்ஜெட், சாவின் விளிம்பில் இருக்கும் இந்தியப் பொருளாதாரத்துக்கு சஞ்சீவினி மருந்தைப் போல புத்துயிர் அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: ஏழைகள் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கியிருப்பவர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கை…
இந்திய பட்ஜெட் : பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என அரசு…
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதல் நிதிநிலை அறிக்கையை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். வரிவிலக்குக்காக வரையறுக்கப்பட்ட விளிம்பினை உயர்த்தி, மக்களின் வரி சுமை குறைக்கப்பட்டுவதாக இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பல புதிய திட்டப்பணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த…
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இந்தியர்களா?
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இந்தியர்களும் இணைந்துள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்றை உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஈராக்கில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி உலகையே உலுக்கி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இந்தியாவிலிருந்து 18 பேர் சேர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை உளவுத்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த 18 பேர் சிரியாவிலும் ஈராக்கிலும் ஆயுத…
ஆயுட்கைதி விடுதலை: மாநில அரசுகளின் பதில் கோருகிறது உச்சநீதிமன்றம்
ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு உள்ளதா என்பது குறித்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் கோரியுள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கபட்டவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு உரிமை உள்ளதா என்பது தொடர்பில் நடைபெற்று…