உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
லோக்பால் சட்டத்தை குப்பை தொட்டியில் தான் போடவேண்டும் – அன்னா…
புதுடெல்லி : இந்திய மத்திய அரசு கொண்டு வரும் லோக்பால் சட்டம் குப்பைத் தொட்டியில் போட மட்டுமே தகுதியானதாக இருக்கும் என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் தேவை என்று போராடி வரும் அன்னா ஹசாரே புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய அரசு…
இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கடன் வழங்குகிறது ஜப்பான்
கம்போடியா தலைநகர் பினோம் பென்னில் இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற இந்திய பிரதமர் மன்மோகன்சிங், இன்று ஜப்பான் பிரதமர் யாஷிஹிகோ நோடாவை சந்தித்து இரு நாட்டு உறவு பற்றி இருவரும் ஆலோசினை நடத்தினார். அப்போது வெளிநாட்டு அபிவிருத்தி நிதி திட்டத்தின்கீழ் தென்னிந்தியாவின் 2-ம் கட்ட…
இந்தியாவிற்கு எதிராக வங்கதேசத்தில் 55 தீவிரவாத முகாம்கள்
அகர்தலா: இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபடும், 55 வங்கதேச தீவிரவாத முகாம்கள் பட்டியலை, வங்கதேச இராணுவ அதிகாரியிடம் வழங்கிய இந்திய அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர். இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம், மிகவும் ஏழ்மை நாடு. இந்தியாவின், திரிபுரா, மேகாலயா, மிசோரம் மற்றும் அசாம் ஆகிய…
இந்திய பிரஜைகளில் ஒருவராக உணர்கிறேன்: ஆங் சாங் சூச்சி
புதுடில்லி: இந்தியாவில் இருக்கும் போது, இந்திய பிரஜைகளில் ஒருவராக உணர்வதாக மியான்மர் எதிர்க்கட்சித்தலைவர் ஆங் சாங் சூச்சி தெரிவித்துள்ளார். டில்லி வந்துள்ள மியான்மர் எதிர்க்கட்சித்தலைவர் ஆங் சாங் சூச்சி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று காலை டில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில்…
பர்மிய எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி இந்தியா வருகை
பர்மிய எதிர்க்கட்சித் தலைவியும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூச்சி, ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியத் தலைநகர் டில்லிக்கு வந்திருக்கிறார். புதன்கிழமையன்று அவர்நேரு நினைவு உரையாற்றுகிறார். அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்துப்பேசுகிறார். இந்தியா, பர்மிய இராணுவ அரசாங்கத்துடன் உறவாட 1990-களில் முடிவெடுத்த பின்னர், இந்திய அரசுக்கும்,…
உளவாளியாக செயல்பட்ட இந்திய இளவரசிக்கு சிலை
இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரிட்டனின் ஒரு உளவாளியாக செயல்பட்ட இந்திய அரச குமாரியை கௌவுரவப்படுத்தும் வகையில் அவரின் சிலை இலண்டனில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இராஜ குடும்பத்தைச் சேர்ந்த நூர் இனியத் கான் என்ற இளம்பெண், இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனின் அதி விசேட உளவுத் துறையில் சேர்ந்தார்.…
அமைச்சர்கள் வெளிநாடு செல்ல தடை: இந்திய மத்திய அரசின் அதிரடி
புதுடெல்லி: வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை குறைக்க வேண்டும், மடிக் கணினி வாங்கக்கூடாது, அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்று மத்திய அமைச்சகங்களுக்கு இந்திய மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம், அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. அதில், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை பட்டியலிட்டு,…
காதல் திருமணம் : தருமபுரியில் தலித் வீடுகளுக்கு தீ வைப்பு
தருமபுரியைச் சேர்ந்த வன்னியர் இனப் பெண்ணும் அப்பகுதி தலித் இளைஞர் ஒருவரும் காதல் திருமணம் செய்துகொண்டது கலவரத்தில் முடிந்திருக்கிறது. அந்தத் திருமணத்தால் மனமுடைந்த பெண்ணின் தந்தை நேற்று தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட தலித்துக்களின் வீடுகள், விஷமிகளால் தீவைக்கப்பட்டிருக்கிறது. அந்த மக்கள் அண்டையிலுள்ள பகுதிகளில் தஞ்சமடைந்திருப்பதாகத்…
ஏமாறுவோர் இருந்தால் ஏமாற்றுவோரும் இருப்பர்: கருணாநிதி
சென்னை: "கடந்த ஆண்டு நவம்பரில், பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக முதல்வர், தற்போது மக்கள் அதை மறந்திருப்பர் என்ற எண்ணத்தோடு, பஸ் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்" என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். "பசும்போன் தேவர் விழாவை ஒட்டி, முன் எச்சரிக்கையாக இல்லாதது, அரசுத் துறை…
ஆந்திராவில் ‘நிலம்’ புயல் : இதுவரை 22 பேர் பலி;…
ஐதராபாத்: ஆந்திராவில் நிலம் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 4 நாட்களில் அங்கு 22 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 60 ஆயிரம் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் உருவான நீலம் புயல் கடந்த 31ம் தேதி, மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.…
இந்தியாவில் குடித்த அமுத பானமே ஆயுளின் ரகசியம் என்கிறார் 110…
பிரிட்டனின் மிகவும் வயதுகூடிய நபரான ரெக் டீன் ஞாயிறன்று தனது நூற்று பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இவர் இளைஞராக இருந்தபோது இந்தியாவில் இவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு விநோத அமுத பானம்தான் அவருடைய நீண்ட ஆயுளின் ரகசியம் என்று தாங்கள் நினைப்பதாக ரெக் டீனின் மகன் கிறிஸ்டோஃபர் கூறினார்.…
‘நிலம்’ புயலை பயன்படுத்திக் கொண்ட திரைப்பட இயக்குநர் மணிரத்னம்
சென்னை: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இதுதான் போல, கடல் படத்தை இயக்கி வரும் இயக்குநர் மணிரத்னம், 'நிலம்' புயலை பயன்படுத்தி சில முக்கிய காட்சிகளை எடுத்துள்ளார். கடந்த புதனன்று வங்கக் கடலில் உருவான 'நிலம்' புயல் காரணமாக, தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளே அல்லோலகல்லோலப் பட்டது. ஆனால், புயல்…
உலகப் பொருளாதார நெருக்கடியில் இந்தியாவும் சிக்கிக் கொண்டது!
டெல்லி: உலகப் பொருளாதார நெருக்கடியில் இந்தியாவும் சிக்கிக் கொண்டு தவிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இந்திய மத்திய அமைச்சரபை மாற்றத்துக்கு பிறகு முதன்முறையாக இன்று புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய மத்திய நிதி அமைச்சர் ப.…
ஐ.நா. துணைப் பொதுச்செயலாளரிடம் டெசோ தீர்மானம் வழங்கப்பட்டது
நியூயார்க்: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நியூயார்க் நகரில் ஐ.நா. சபை துணைப் பொதுச்செயலாளரை சந்தித்து ‘டெசோ' மாநாட்டு தீர்மானங்களை வழங்கினார். சென்னையில் நடைபெற்ற ‘டெசோ' மாநாட்டின் தீர்மானங்களையும், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் வழங்கப்பட உள்ள மனுவினையும், கருணாநிதி சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க.…
காவிரி விவகாரம்: தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!
புதுடெல்லி: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நவம்பர் 15-ஆம் தேதிக்குள் 5.5 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக மாநிலத்திற்கு காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நேற்று, இந்தியமத்திய நீர்ப்பாசனத்துறை செயலர் டி.வி. சிங் தலைமையில்.காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்திற்கு வருகிற நவம்பர் 15 ம் தேதிக்குள்…
‘நிலாம்’ புயல் கரையைக் கடந்தது; பலத்த காற்றுடன் கன மழை
தமிழகத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்ய காரணமாக இருந்துவந்த 'நிலாம்' புயல் மகாபலிபுரம் அருகே கரையைக் கடந்தது. உள்ளூர் நேரப்படி மாலை 4 மணி தொடங்கி இரண்டு மணி நேரம் புயல் கரையைக் கடந்தது. அதேமயம் 90 கிலோமீட்டர் வேகம்கொண்ட பலமான காற்று…
தமிழகத்தை இன்று புதன்கிழமை புயல் தாக்கலாம் என எச்சரிக்கை!
இலங்கையில் புயல் அச்சம் நீங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் ஆந்திராவிலும் சில பகுதிகளை இன்று புதன்கிழமை புயல் தாக்கலாம் என்று தென்னிந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் நாட்டிலும் ஆந்திராவிலும் கடுமையான மழைபெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் வடக்கு கரையோரத்திலேயே புயல் கரையை கடக்கலாம்…
பரமக்குடி அருகே நடந்த தாக்குதலில் மூவர் பலி;
மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை நாளான நேற்று செவ்வாய்க்கிழமை, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நிகழ்ந்த மோதல்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் தேவர் ஜெயந்தி அமைதியாகவே நடந்தேறியது, அங்கே நிலைமை கட்டுக்குள்ளேயே இருப்பதாக என்று அதிகாரிகள் கூறுகின்றனர். முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் இறந்த நாளான நேற்றைய…
தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை : முதல்வர் ஜெயலலிதா…
சென்னை: தமிழ்நாட்டில் சிறப்பு காவல் இளைஞர் படை உருவாக்கப்படும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த படையினர் இரவு ரோந்து மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று வெளியிட்ட அறிக்கையில்; "தமிழகத்தில் போலீசாருக்கு உதவியாக…
நிருபரை ‘நாயே’ என்று திட்டி மிரட்டிய விஜயகாந்த் மீது கொலை…
சென்னை: ஜெயா டிவி செய்தியாளரை நாய் என்று கூறித் திட்டி மிரட்டிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது சென்னை விமான நிலைய போலீஸார் கொலை மிரட்டல், அவதூறாகப் பேசுதல், காயம் ஏற்படுத்துதல், வழிமறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம்…
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ராஜினாமா
இந்திய மத்திய அமைச்சரவை, நாளை மாற்றி அமைக்கப்பட உள்ள நிலையில், வெளியுறவு அமைச்சர், எஸ்.எம். கிருஷ்ணா, நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை, நேற்று மதியம், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைத்தார். அதே நேரத்தில், தற்போது சூழ்நிலை சாதகமாக இல்லாததால், நாளைய அமைச்சரவை மாற்றத்தில்…
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 34
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. வடகிழக்குப் பருவமழைக்கு மொத்தம் 20 பேர் பலியாகி இருந்த நிலையில் மேலும் 14 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று அரசு வெளியிட்ட அறிக்கையில்,…
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்
புதுடெல்லி : இந்திய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளார். ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரான முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 21 பில்லியன் டாலர் என்று போபர்ஸ் பத்திரிகை கூறியுள்ளது. முகேஷ் அம்பானி சொத்து மதிப்பில் கடந்த 3…