உலக நாடுகளில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கிறதா ஜநா?

உலக நாடுகளின் முக்கியமான உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுடனான பிரச்சனைக்கு சர்வதேச பாதுகாப்பு அமைப்பாக விளங்குவது ஐ.நா.சபை. அந்த ஐக்கிய நாடுகள் சபையை நினைக்கவும் மதிக்கவும் செய்யும் வகையில் ஒரு தினம் அக்டோபர் 24 ல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐ.நா. பொதுசெயலாளர் இந்த தினம் பற்றி கூறுகையில்: ஐக்கிய நாடுகள்…

யூதர்களை இந்த உலகத்தை விட்டே அனுப்புவோம்: எச்சரிக்கை விடுக்கும் ஐ.எஸ்…

உலகில் உள்ள அனைத்து யூதர்களையும் அழிக்கபோவதாக எச்சரிக்கை விடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி ஹமாஸ் என்ற இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் யூத தம்பதியை படுகொலை செய்தனர். இதனால் பாலஸ்தீனத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இஸ்ரேலை சேர்ந்த 10 பேரும்…

இந்தியாவுக்கு எதிராகப் புகார்: அமெரிக்காவிடம் ஆதாரங்களை அளித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் நடைபெற்ற நாச வேலைகளில் இந்தியா ஈடுபட்டது என்று குற்றம்சாட்டி, அது தொடர்பான மூன்று ஆவணங்களை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியிடம் பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் அளித்தார். இதுகுறித்து பாகிஸ்தான் அரசு, புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்…

சீனாவுடன் பிரிட்டன் அணுசக்தி ஒப்பந்தம்

பிரிட்டன், சீனா நாடுகள் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது. இந்த ஒப்பந்தின் மூலம், பிரிட்டனின் சமர்செட் பகுதியில் சீனா முதல்முறையாக அணுமின் நிலையம் அமைக்கவிருக்கிறது. 1980-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் அமையவிருக்கும் முதல் அணுமின் உற்பத்தி நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. -http://www.dinamani.com

பிலிபைன்சில் சீன அதிகாரிகள் சுட்டுக் கொலை

பிலிபைன்சிலுள்ள செபு நகரில், சீன அதிகாரிகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செபு நகரில் சீன அதிகாரிகள் ஹோட்டலில் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென சீன தூதரக அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில், 2 தூதரக அதிகாரிகள் சம்பவ…

ரஷ்யாவின் பக்கபலத்தால் மூர்க்கமடையும் சிரியாவின் அரச படைகள்

சிரியாவின் அதிபர் பஷர் அல் அஸ்ஸத், ஆச்சரியப்படும் விதமாக மாஸ்கோவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு அதிபர் விளாடிமிர் புடீனை சந்தித்துள்ளார். சிரியாவில் 2011-இல் மோதல் வெடித்த பின்னர் முதல் தடவையாக அவர் நாட்டுக்கு வெளியில் செல்கின்றார். கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராக விமானத் தாக்குதல்களை நடத்தி ரஷ்யா வழங்கும் ஒத்துழைப்புக்காக…

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண அமெரிக்கா உதவ வேண்டும்: பாகிஸ்தான்

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்கா உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது. அமெரிக்க அதிபர் ஒபாமாவை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் விரைவில் சந்திக்கவுள்ள நிலையில், இவ்வாறு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வாஷிங்டனில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறைச் செயலர் எய்ஜாஸ் அகமது செய்தியாளர்களிடம்…

மேற்கு ஆசியாவில் ஸ்திரமற்ற நிலைக்கு சவூதிதான் காரணம்: ஈரான் குற்றச்சாட்டு

மார்ஸி அஃப்காம் மேற்கு ஆசிய நாடுகளில் அரசியல் ஸ்திரமற்ற நிலையை சவூதி அரேபியா ஏற்படுத்தி வருகிறது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், காலனியாதிக்க மனப்பான்மையுடன் ஈரான் நடந்து கொள்கிறது என்று  ஈரானின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்ஸி அஃப்காம், தலைநகர் டெஹ்ரானில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ஷியா…

சிரியா முழுவதுமாக அழிவதை விரும்பவில்லை: அமெரிக்கா

சிரியாவில் ரஷ்ய விமானப் படை தாக்குதல் நடத்தி வருவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக நீண்ட காலமாகவே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஐஎஸ் தீவிரவாதிகள் உட்பட பல்வேறு போராட்டக் குழுக்களும்…

சிரியாவில் வலுவிழந்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம்

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா ராணுவம் அங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வெளித்தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் இறுதியில் இருந்து தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வரும் ரஷ்யா, தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் சிரியாவில் வலுவிழந்து வருவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ரஷ்ய பிரதமர்…

விலங்குகளை சித்ரவதை செய்வதின் உச்சக்கட்டம்: இறைச்சி கூடத்தை அதிரடியாக மூடிய…

பிரான்ஸ் நாட்டில் விலங்குகளை கொடூரமாக சித்ரவதை செய்து கொல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் சம்பந்தப்பட்ட இறைச்சி கூடத்தை மூட மேயர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தெற்கு பிரான்ஸில் Abattoir d'Ales என்ற இறைச்சி கூடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த இறைச்சி கூடத்தில் வருடத்திற்கு 3,000 குதிரைகள், 20,000…

முத்தரப்பு கூட்டு கடற்படைப் பயிற்சி சீனாவுக்கு எதிரானது அல்ல: அமெரிக்கா

வங்காள விரிகுடா கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் மேற்கொண்டுள்ள கூட்டுப் பயிற்சி, சீனாவுக்கோ அல்லது வேறெந்த நாட்டுக்கோ எதிரானது அல்ல என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக இக்கூட்டுப் பயிற்சியில் ஜப்பான் பங்கேற்க சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியா-ஜப்பான் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஆசியாவுக்கு…

அலெப்போ நகரில் சிரியா ராணுவம் தாக்குதல்

ரஷிய வான்வழித் தாக்குதல்களின் உதவியுடன் சிரியா ராணுவம் அந்த நாட்டின் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதலை வெள்ளிக்கிழமை தொடங்கியது. சிரியாவில் ரஷியப் போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்கள் மீது கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி சிரியா ராணுவம் கிளர்ச்சியாளர்கள்…

உலகின் முதல் பணமில்லா நாடாகிறது ஸ்வீடன்!

ஸ்டாக்ஹோம்: உலகின் முதல் பணமில்லாத நாடு என்ற பெருமையைப் பெறுகிறது ஐரோப்பாவின் முக்கிய நாடான ஸ்வீடன். ஸ்கான்டிநேவிய தீபகற்பத்தின் முக்கிய, பெரிய நாடு ஸ்வீடன். உலகின் அனைத்து நாடுகளிலும் ரொக்கப் பணம்தான் முக்கிய மாற்றுக் கருவியாக செயல்படுகிறது. அனைத்து பரிமாற்றங்களுக்கும் மூலமே பணமாக உள்ளது. ஆனால் முதல் முறையாக…

ஐரோப்பாவுக்குள் வரும் குடியேறிகளை தடுக்க துருக்கி இணக்கம்

ஐரோப்பாவுக்குள் வந்திருக்கும் குடியேறிகளை தடுப்பதற்கு மேலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க துருக்கி இணங்கியுள்ளது. பெரும் நிதியுதவிகள், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் துருக்கியின் பிரஜைகள் இலகுவில் வரக்கூடிய வாய்ப்பை வழங்குதல் போன்ற உதவிகளுக்கான பதில் நடவடிக்கையாகவே துருக்கி இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. பிரசல்ஸில் நேற்றுப் பின்னிரவு நடந்த பேச்சுவார்த்தையில் துருக்கிக்கு கூடுதல்…

உலக அளவில் அதிக கோடிஸ்வரர்களை உடைய நாடு: அமெரிக்காவை பின்னுக்கு…

உலக அளவில் அதிக கோடிஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது. ஷாங்காயை சேர்ந்த ஹூருன் ஆராய்ச்சி நிலையம் உலகில் அதிக பில்லினியர்களை கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் முறையாக அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. அதாவது…

பாகிஸ்தானில் மத உரிமைக்கு அச்சுறுத்தல்

பாகிஸ்தானில் மத உரிமைக்கு அச்சுறுத்தல், நிலவி வருவதால் அந்த நாட்டை "அச்சுறுத்தல்மிக்க நாடுகள்' பட்டியலில் சேர்க்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும், அதிபர் பதவி வேட்பாளருமான மார்கோ ரூபியோ அந்த நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 2014-ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மத உரிமைகளின்…

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு வல்லரசு நாடுகள் மறைமுகமாகத் தடை விதிப்பதா?…

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு, வல்லரசு நாடுகள் மறைமுகமாக விதிக்கும் தடைகள், ஏற்கெனவே மர்மமாக இருக்கும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நடைமுறைகளில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று ஐ.நா.வில் இந்தியா கண்டனம் தெரிவித்தது. மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஜகியுர் ரஹ்மான் லக்வியை…

அமெரிக்கா, ரஷ்யாவுக்கு எதிராக “புனிதப்போர்”: உலக இஸ்லாமிய இளைஞர்களுக்கு அழைப்பு…

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு "புனிதப்போர்" நடத்துவதற்காக இஸ்லாமிய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவந்த நிலையில், சமீபத்தில் ரஷ்யாவும் தங்களது முதல் தாக்குதலை ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது நடத்தி சாதனை படைத்தது. தற்போது,…

ரஷ்யா விமானங்களின் இடைவிடாத குண்டுமழை… இழந்த நகரங்களை மீட்கிறது சிரியா…

அதே நேரத்தில் சிரியாவின் லடாக்கியா மாகாணத்தில் ஜபாத் அல் நுஸ்ரா என்ற அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் பல நகரங்களைக் கைப்பற்றி தம் வசம் வைத்திருந்தனர். ரக்கா, அலெப்போ, டெய்ர் எஸ்ஸார், பால்மிரா ஆகிய பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தலைநகர் டமாஸ்கஸ் அருகே வரை தங்களது ஆதிக்கத்தை விரிவாக்கம்…

ரஷ்ய விமானம் மீது தாக்குதல் நடத்தலாம்- அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது…

ஈராக் வான் பரப்பினுள் ஐ.எஸ் தீவிரவாதிகள் நிலைகள் மீது தாக்குதல் நடத்த என ரஷ்ய விமானம் வந்தால் அதனை தாக்குமாறு அமெரிக்கா தனது விமானிகளுக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சற்று முன்னரே இந்த உத்தரவை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டு உள்ளது. இதனை அன் நாட்டின் தலைவர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ளார்…

ஆயுளை அதிகரிக்கும் சைக்கிள் பயணம்!

ஆம்ஸ்டர்டாம் : வாரத்தில் 74 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால், நமது வாழ்நாட்களில் 6 மாதகாலம் அதிகரிக்கும் என நெதர்லாந்து நாட்டு பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நெதர்லாந்து நாட்டின் உட்ரெச்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்ததாவது: உலக சுகாதார மையத்தின் அட்டவணையின்படி, நெதர்லாந்தில் சுமார் 6,500 பேர்…

சித்ரவதை செய்வதே ஜிகாதி ஜானின் பொழுதுபோக்கு: விடுதலையான ஐ.எஸ். பிணையக்கைதி…

ஐ.எஸ்.தீவிரவாதிகளால் பிடிக்கப்படும் பிணையக்கைதிகளை கொடூரமாக சித்ரவதை செய்வதே ஜிகாதி ஜானின் பொழுது போக்கு என விடுதலையான பிணையக்கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். Danish புகைப்படக்காரரான Daniel Rye Ottosen சிரியாவின் உள்நாட்டு கலவரங்களால் பாதிப்புக்குள்ளான மக்களின் புகைப்படதொகுப்பை உருவாக்கும் பொருட்டு அலெப்போ சென்றிருந்தார். சிரியா சென்ற மூன்றாவது நாளில் ஐ.எஸ்.தீவிரவாதிகளால்…