பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நோ ஒமார்: நான் என்ன சொன்னாலும் டிஏபி என்னைப் பின்…
நெல் விதைகள் விநியோகத்தைச் சூழ்ந்துள்ள சர்ச்சை மீது சுருக்கமான விளக்கத்தையே நேற்று விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சர் நோ ஒமார் வழங்கினார். ஏனெனில் தாம் எவ்வளவு பெரிய விளக்கத்தை அளித்தாலும் டிஏபி 'தம்மைப் பின் தொடருவது திண்ணம்' என அவர் சொன்னார். "நான் அது குறித்து விரிவாகப்…
டிஏபி-இன் தேர்தல் பரப்புரை வாகனம் அறிமுகம்
அடுத்த பொதுத் தேர்தல் போட்டிமிக்கதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுவதால் எங்கும் ஆவேசமான தேர்தல் பரப்புரையை எதிர்நோக்கலாம்.அதற்கு ஆயத்தமாக டிஏபி தேர்தல் பரப்புரை வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சிவப்புநிற ட்ரேய்லர்(இழுவை வண்டி) வாகனமான அதனைக் கட்சி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், நேற்று சிரம்பானில் அறிமுகப்படுத்தினார். அதில் டிஏபி-இன்…
இரண்டு இடங்களை வைத்துள்ள டிஏபி பேராளர்கள் ஒன்றைத் தேர்வு செய்ய…
இரண்டு இடங்களை வைத்துள்ள கட்சிப் பேராளர்கள் அடுத்த தேர்தலில் ஒரே ஒரு இடத்தை மட்டும் தேர்வு செய்வதாக அறிவிக்க வேண்டும் என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கேட்டுக் கொண்டிருக்கிறார். "சிறப்புத் தன்மையுடைய' சூழ்நிலைகளில் மட்டுமே ஒரு வேட்பாளர் அதாவது மாநிலச் சட்டமன்றத் தொகுதியிலும் நாடாளுமன்றத் தொகுதியிலும்…
Call for the setting up of a Human…
Media statement by M.Kula Segaran, MP for Ipoh Barat and DAP National Vice Chairman at Parliament House, Kuala Lumpur on 23th October 2012. This morning while answering an oral question in the Parliament on the…
ஏஇஎஸ் பற்றி விளக்கம் பெற பினாங்கு அரசு விருப்பம்
பினாங்குக்குத் தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) பற்றி விளக்கம் தர என்று போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளருக்கு மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. நேற்றைய மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் அதற்கான முடிவு செய்யப்பட்டதாக ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோ ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். “ஏஇஎஸ் மீது மாநில…
DAP seeking to establish a Christian State in…
-Lim Kit Siang, October 13, 2012. Only fools or knaves or those who are both could believe the lies about DAP seeking to establish a Christian State in Malaysia Desperation knows no bounds. This is…
நிக் அசீஸ்: டிஏபி பாஸூக்கு தொந்திரவு கொடுத்ததில்லை
டிஏபி என்றும் பாஸுக்கு தொந்திரவு கொடுத்ததில்லை என்கிறபோது பாஸ் டிஏபியுடன் ஒத்துழைப்பதை எதற்காகக் கண்டனம் செய்கிறார்கள் என்பது தமக்குப் புரியவில்லை என்கிறார் கிளந்தான் மந்திரி புசார் நிக் அசீஸ் நிக் மாட். நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ், உத்துசான் மலேசியா, பெரித்தா ஹரியான், சினார் ஹராபான் உள்பட பல நாளேடுகள்…
‘செலாயாங்கில் ‘டிஏபி ஹுடுட் வேண்டாம்’ என்ற சுரொட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டன
டிஏபி சின்னத்துடன் 'ஹுடுட் வேண்டாம்' எனக் கூறும் சுவரொட்டிகள் செலாயாங் வட்டாரத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி கூறிக் கொண்டுள்ளது. பள்ளிவாசல்களிலும் சூராவ் அறிவிப்புப் பலகைகளிலும் அவை ஒட்டப்பட்டுள்ளதாக சிலாங்கூர் டிஏபி குழு உறுப்பினர் எரிக் தான் கூறினார். "தவறான புரிந்துணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க அந்த சுவரொட்டிகளை அகற்றுமாறு…
பினாங்கை மீண்டும் கைப்பற்ற அம்னோவின் 3-3-3-1 வழி முறையை டிஏபி…
13வது பொதுத் தேர்தலில் பினாங்கு சட்டமன்றத்தில் தனக்கு தற்போது உள்ள 11 இடங்களைத் தக்க வைத்துக் கொண்டு மாநில அரசை பிஎன் மீண்டும் கைப்பற்ற அம்னோ வழங்கியுள்ள 3-3-3-1 வழி முறையை பினாங்கு டிஏபி சாடியுள்ளது. பிஎன் உறுப்புக் கட்சியான கெரக்கான் 2008ல் எந்தத் தொகுதியும் கிடைக்காமல் போன…
பினாங்கில் மிகவும் வெறுக்கப்படும் டிஏபி மாண்புமிகு யார் ?
வரும் தேர்தலில் தாம் போட்டியிடப் போகும் பினாங்குத் தொகுதியை சுயேச்சை எம்பி-யான தான் தீ பெங் முடிவு செய்து விட்டார். ஆனால் அதனை அவர் இப்போது வெளியிட மாட்டார். "மக்களும் அவரது கட்சியும் மிகவும் வெறுக்கும் மாண்புமிகு-வை (சட்டமன்ற உறுப்பினர்) கொண்ட டிஏபி இடமாகும்," என அந்த நிபோங்…
இங்கே கூ காம் : “நான் இஸ்லாத்துக்கு எதிரானவன் அல்ல”
தமது டிவிட்டர் செய்திக்காக அரசியல் களத்தில் இரு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புக்களை எதிர் நோக்கியுள்ள பேராக் டிஏபி தலைவர் இங்கே கூ காம், தாம் இஸ்லாத்துக்கு எதிரானவர் அல்ல என விளக்கியிருக்கிறார். "நான் இஸ்லாத்துக்கு எதிரானவன் என்னும் தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்," என அவர் சொன்னதாக சினார் ஹரியான்…
டிஏபி: மலேசிய தினத்தில் கூட பிரதமர் பிளவை ஏற்படுத்துகிறார்
மலாய்க்காரர்கள் நிலைத்திருப்பது மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆற்றியுள்ள உணர்ச்சியைத் தூண்டும் உரை, பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது. அது அவரது ஒரே மலேசியா கொள்கைக்கு ஏற்பட்டுள்ள இன்னொரு விரிசல் என டிஏபி பிரச்சாரப் பிரிவுத் தலிவர் டோனி புவா கூறுகிறார். மலேசியா தோற்றம் பெற்ற 49வது…
பினாங்கு DAP தலைமையகம் 13 மாதங்களில் மூன்றாவது முறையாக தாக்கப்பட்டுள்ளது
ஜாலான் ரங்கூனில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள -விஸ்மா டிஏபி என்ற பினாங்கு டிஏபி தலைமையகம் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. வைகறை வாக்கில் அந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. பாதுகாப்புத் தொண்டர் ஒருவர் அதிகாலை 4 மணி வாக்கில் மூன்று மாடிகளைக் கொண்ட அந்தக்…
மஇகா: கோயில் திருட்டு புகார் மீட்டுக் கொள்ளப்படுவதற்கு டிஏபி உத்தரவிட்டது
டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், கோயில் நிதிகள் திருடப்பட்டதாக கூறப்படுவது மீதான போலீஸ் புகாரை மீட்டுக் கொள்ளுமாறு பினாங்கு இந்து அற வாரியத்தின் துணைப் பொருளாளருக்கு உத்தரவிட்டதின் மூலம் 'அதிகார துஷ்பிரயோகம்' செய்துள்ளதாக பினாங்கு மாநில மஇகா குற்றம் சாட்டியுள்ளது. போலீஸ் புகாரை மீட்டுக் கொள்ளுமாறு ஸ்ரீ டெலிமா…
டிஏபி தவிர்த்து எதற்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள்:பிசிஎம் கோரிக்கை
அண்மையில் பேராக்கில் ஒரு நிகழ்வில் டிஏபி உறுப்பினர்கள் “பண்பாடற்ற முறையில் அநாகரிகமாக நடந்துகொண்டார்கள்”என்பதால் அவர்களுக்கு வாக்களிக்குமுன்னர் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்று பார்டி சிந்தா மலேசியா(பிசிஎம்) வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. மக்கள் “டிஏபி-யைத் தவிர்த்து வேறு எதற்கும்” வாக்களிக்கலாம் என்று மொழிந்த பிசிஎம் உதவித் தலைவர் ஹுவான்…
ஹுடுட் மீது இணக்கமில்லை என பாஸ் கட்சியும் டிஏபி-யும் ஒப்புக்…
ஹுடுட் சட்ட அமலாக்கம் மீது மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ள போதிலும் பாஸ் கட்சியும் டிஏபி-யும் அதன் தொடர்பில் தகராறு செய்து கொள்ள மாட்டா. இவ்வாறு பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறுகிறார். அந்த விவகாரம் மீது பாஸ், டிஏபி ஆகியவற்றுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதை அவை…
‘டத்தோ விருது டிஏபி-க்கு மிகவும் சிக்கலான பிரச்னை’
டத்தோ விருதுகளுக்காக டிஏபி அரசியலில் ஈடுபடவில்லை என அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று கூறியுள்ளார். ஆனால் அத்தகைய விருதுகளை ஏற்றுக் கொள்வதில்லை என்ற தனது எழுதப்படாத விதியை மாற்றுவது மீதான அரசிய ரீதியில் உணர்ச்சிகரமான பகுதிக்குள் செல்ல அவர் மறுத்து விட்டார். "இது…
அரசியல் ஆய்வாளர் ஒங் கியான் மிங் டிஏபியில் சேர்ந்தார்
பிரபல அரசியல் ஆய்வாளரான ஒங் கியான் மிங் டிஏபியில் சேரப்போவதாக இன்று அறிவித்தார். பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அவர் அக்கட்சியில் சேர்வது அந்த மாற்றரசுக்கட்சிக்கு ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. “முக்கியமான தேசிய விவகாரங்களில் டிஏபியின் நிலைப்பாடு என் அரசியல் நம்பிக்கைகளுடன் ஒத்துப்போகிறது. “ஆய்வாளர் என்ற நிலையிலிருந்து விலகி அரசியலில் பங்கேற்கும்…
கசிந்த கூட்டக் குறிப்புக்கள்: டிஏபி பிகேஆரிடமிருந்து பதில் கோருகிறது
வெளியில் கசிந்து விட்ட பிகேஆர் கட்சியின் கூட்டக் குறிப்புக்களில் காணப்படும் விவரங்கள் மீது டிஏபி, பிகேஆர்-இடம் விளக்கம் கோரியுள்ளது. அந்தக் குறிப்புக்களில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கை இழிவுபடுத்தும் கருத்துக்களும் அடங்கியுள்ளன. லிம்-மை மாநில பிகேஆர் தலைவர் மான்சோர் ஒஸ்மான் 'கர்வம் பிடித்த' தலைவர் என…
கட்சி தாவலுக்கு எதிரானச் சட்டத்தை முன்மொழிய டிஎபி தயார்
டிஎபி கட்சி தாவலை எதிர்க்கிறது; அது வாக்காளர்களுக்கு இழைக்கும் பெரும் துரோகம் என்பதால் அதனை என்றுமே ஆதரித்ததில்லை என்று டிஎபியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறினார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி அல்லது சம்பந்தப்பட்ட கட்சி மக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படக்கூடாது ஏனெனில் அவர்களுக்கு அவ்வாறு செய்யும் உரிமை…
மலாய் டிஏபி தலைவர் ஒருவர் ஹுடுட் மீதான மௌனத்தைக் கலைக்கிறார்
பினாங்கைச் சேர்ந்த மலாய் டிஏபி தலைவர் ஒருவர் இறுதியில் ஹுடுட் சட்டம் மீதான மௌனத்தை கலைத்துள்ளார். அந்த விவகாரம் தொடர்பில் டிஏபி-யில் உள்ள மலாய் தலைவர்கள் அமைதியாக இருப்பது அவர்களுக்குத் தலைமைத்துவப் பண்புகள் இல்லை என்பதைக் காட்டுவதாக உள்ளூர் அரசு சாரா அமைப்பு ஒன்று கூறியதைத் தொடர்ந்து மாநில…
‘நிலைக்குத்தி விட்ட அனீபா விலக வேண்டும் என பக்காத்தான் கூறுகிறது
வெளியுறவு அமைச்சர் அனீபா அமான் தமது கடமைகளைச் சரிவரச் செய்யவில்லை எனக் கூறப்படுவதைத் தொடர்ந்து அவர் பதவி துறக்க வேண்டும் என பக்காத்தான் ராக்யாட் கோரியுள்ளது. நேற்றிரவு கூடிய பக்காத்தான் செயலகம் அனீபா தமது பணிகளை முறையாகச் செய்யவில்லை என்பதை ஏகமனதாக ஒப்புக் கொண்டதாக டிஏபி அனைத்துலகப் பிரிவுச்…
‘டிஏபி-யை முஸ்லிம்கள் ஆதரிப்பதைத் தடுப்பது சிறுபிள்ளைத்தனமானது, தீவிரமானது’
டிஏபி-யை முஸ்லிம்கள் ஆதரிப்பது ஹராம் என இஸ்லாமிய ஆசிரியர் அப்துல்லா சாஆமா சொல்லியிருப்பது, 'விநோதமானது', 'தீவிரமானது', 'தீவிரமானது', 'காலத்துக்கு ஒவ்வாதது' என பெர்லிஸ் முப்தி ஜுவாண்டா ஜயா வருணித்துள்ளார். அவை இஸ்லாமியப் போதனைகளை பிரதிபலிக்கவில்லை என்பதாலும் கூட்டரசு அரசமைப்பு, ஜனநாயகம் ஆகியவற்றுக்கு புறம்பாக இருப்பதாலும் அத்தகைய கருத்துக்களை பொருட்படுத்தக்…