உத்துசான் மூன்றாவது முறையாக டிஏபி-யுடன் சர்ச்சை

முஸ்லிம்கள் டிஏபி-யை ஆதரிப்பது பாவம் என கூறிக் கொள்ளும் கட்டுரையை வெளியிட்ட உத்துசான் மலேசியா மீது பினாங்கு டிஏபி போலீஸில் புகார் செய்துள்ளது. பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக உத்துசானை நீதிமன்றங்கள் இரண்டு முறை தண்டித்துள்ள போதிலும் அந்த மலாய் நாளேடு…

பிரதமரின் ஊழல்-ஒழிப்பு தம்பட்டமெல்லாம் என்னவாயிற்று?, டிஎபி

வங்கி தகவல்களைக் கசிய விட்டார் என்பதற்காக பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லிமீது வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது ஊழலை எதிர்ப்பதாக மார்தட்டிக்கொள்ளும் நஜிப் அப்துல் ரசாக்கின் நிர்வாகத்துக்கு ஒரு சறுக்கலாக விளங்கப்போகிறதென்று சாடியுள்ளார் டிஏபி பரப்புரை தலைவர் டோனி புவா. அரசாங்கம், ரபிஸி அம்பலப்படுத்திய நேசனல் ஃபீட்லாட் கார்ப்பரேசன்(என்எப்சி) ஊழலில்…

அம்னோவின் 4 ஆர் ஆட்டங்கள் அம்பலமாகி விட்டன, கிட் சியாங்

தேர்தல் வரலாற்றில் மிக மோசமானதாகவிருக்கும் என்று கருதப்படும் பதிமூன்றாவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை நிலைநிறுத்தவதற்காக அம்னோ 4 ஆர் (Race, Religion, Rulers and Riots) பொய் ஆட்டங்களை அதன் தேர்தல் வியூகத்தின் மையமாகக் கொண்டுள்ளது அம்பலமாகி விட்டது என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம்…

டிஏபி: “அம்னோவுக்குத்தான் கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு உண்டு; எங்களுக்கு இல்லை”

டிஏபி, தனக்கு கம்யூனிஸ்டுகளுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை வலியுறுத்தி சீனாவின் கம்முனிஸ்டுக் கட்சியுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பது பிஎன்தான் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. 2009 அக்டோபர் 12-இல்,அம்னோ இளைஞர் பகுதி, பிஎன் இளைஞர்களுக்கும் சீனாவின் கம்முனிஸ்டு இளைஞர் லீக்கு(சிஒய்எல்)க்குமிடையில் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள நிரந்தர செயலகம் ஒன்றை அமைத்தது என்று…

தண்ணீர் தட்டுப்பாடா, சபாஷ் ஆதாரங்கள் காண்பிக்க வேண்டும்

சிலாங்கூரிலும் கோலாலம்பூரிலும் மிகப் பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாட்டு நேரலாம் என்று கூறும் சபாஷ் அவ்வாறு கூறுவதற்கு அடிப்படையாகவுள்ள தகவல்களை வெளியிட வேண்டும் என்கிறார் கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு. அந்த வகையில் 2012 ஜனவரியிலிருந்து 2012 ஜூலை 15வரை அணைக்கட்டுகளிலிருந்தும் ஆறுகளிலிருந்தும் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அனுப்பப்பட்ட சுத்திகரிக்கப்படாத…

இந்தியர் பிரச்னைகளை முஹைடின் விவாதிக்க வேண்டும் என ஜோகூர் டிஏபி…

ஜோகூரில் உள்ள இந்திய சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்னைகளை விவாதிக்க முன் வருமாறு துணைப் பிரதமரும்  முன்னாள் ஜோகூர் மந்திரி புசாருமான முஹைடின் யாசினுக்கு ஜோகூர் எதிர்த்தரப்புத் தலைவர் பூ செங் ஹாப் சவால் விடுத்துள்ளார். அதே விவகாரம் மீது அம்னோவுடன் விவாதம் நடத்த விரும்புவதாக பிகேஆர் ஏற்கனவே அம்னோவுக்கு…

ஹாடி: பக்காத்தானில் மிகவும் வலுவானது பாஸ் கட்சியே, டிஏபி அல்ல

அடுத்த பொதுத் தேர்தலில் டிஏபி அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் எனச் சொல்லப்படுவதை பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங் நிராகரித்துள்ளார். பக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் அந்த இஸ்லாமியக் கட்சியே வலிமை வாய்ந்தது என அவர் சொன்னார். டிஏபி-யைக் காட்டிலும் கூடுதலான இடங்களில் பாஸ் போட்டியிடும் என்றும்…

டிஏபி ‘இட ஒதுக்கீட்டில்’ ஆதிக்கம் செலுத்துவதாக கூறும் உத்துசான் செய்தியை…

டிஏபி அடுத்த பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 90ல் போட்டியிட்டு புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றுமானால் தனது தலைவர் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு வகை செய்துள்ளதாக உத்துசான் மலேசியா இன்று முதல் பக்கத்தில் வெளியிட்ட தலைப்புச் செய்தியை டிஏபி நிராகரித்துள்ளது. அந்தச் செய்தி "குப்பை,குப்பை, குப்பை" என…

சபாஷ் வழக்கு: டிஏபி புவா-வுக்காக 200,000 ரிங்கிட்டைத் திரட்டுகிறது

சபாஷ் எனப்படும்  Syarikat Bekalan Air Selangor பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா-வுக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கில்  சபாஷ்-க்கு கொடுக்குமாறு உத்தரவிடப்பட்ட 200,000 ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை செலுத்துவதற்கு டிஏபி நிதி திரட்டுகின்றது. நீர் வள உரிமைகளுக்காக 1 ரிங்கிட் எனப் பெயரிடப்பட்டுள்ள முதலாவது…

அம்னோவின் இன்னொரு நிலக்கொள்முதல் முறைகேடு, டிஏபி அம்பலம்

செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லிம், சிலாங்கூர் தஞ்சோங் காராங் அம்னோ டிவிசன் சம்பந்தப்பட்ட இன்னொரு நிலக்கொள்முதலிலும்  முறைகேடு நிகழ்ந்திருப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார.2001-இல் அந்தத் தொகுதி வாங்கிய 1.2ஹெக்டர் நிலத்துக்கு ரிம3.17மில்லியன் கழிவு வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். குறிப்பிட்ட அந்த நிலத்தின் மதிப்பு  ரிம3.3மில்லியன் என்று…

குலசேகரனுடன் பொது விவாதத்திற்கு மஇகா தலைவர் பழனிவேல் தயாரா?

இந்தியர் நலன் காக்க பொது விவாதம் செய்வதற்கு மஇகா தேசியத் தலைவர் ஜி. பழனிவேல் தயார் என்றால் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரனும் தயாராக இருப்பதாக ஈப்போ பாராட் ஜசெக செயலாளர் டாக்டர் ஜெயபாலன் கூறினார். இந்தியர்களின் தங்களின் உரிமைகளை இழந்துள்ளனர் என்பதற்கு குலா பல்வேறு…

மலாக்கா சட்டமன்றம் ஐந்து டிஏபி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது

மலாக்கா மாநிலச் சட்டமன்றம் ஐந்து டிஏபி உறுப்பினர்களை நடைமுறை விதிகளை மீறியதற்காகவும் குழப்பத்தை விளைவித்ததற்காகவும் ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்துள்ளது. கோத்தா லக்ஸ்மணா உறுப்பினர் பெட்டி சியூ ஜெக் செங், கெசிடாங் சட்டமன்ற உறுப்பினர் கோ லியோங் சான், ஆயர் கெரோ உறுப்பினர் கூ போய் தியோங், பண்டார்…

டிஏபி, பிஎன்-னை வீழ்த்த புதிய வாக்காளர்கள் உதவுவர் என நம்புகிறது

"ஊழல், அதிகார அத்துமீறல், சேவகர்களுக்கு உதவுவது" ஆகியவற்றைக் கொண்ட  பிஎன்-னின் 55 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு புதிதாக பதிவு செய்து கொண்டுள்ள மூன்று மில்லியன் வாக்காளர்களில் பெரும்பகுதியினர் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்தால் போதும் என டிஏபி நம்புகின்றது. "அந்த வாக்காளர்களில் 70 விழுக்காட்டினர்…

டிஏபி தன் முகத்தில் தானே கரி பூசிக்கொண்டது

பினாங்கு மசீச, பினாங்கு துறைமுக ஆணையம்(பிபிசி)பற்றி விசயம் புரியாமலேயே பேசிக் கொண்டிருப்பதாக தன் எதிரியான டிஏபியைச் சாடியுள்ளது. பிபிசிக்கும் பினாங்கு துறைமுகம் செண்டிரியான் பெர்ஹாட்(பிபிஎஸ்பி)டுக்குமிடையேயுள்ள வேறுபாட்டைக்கூட புரிந்துகொள்ளாமல் பினாங்கு துறைமுகம் பற்றிய விவகாரத்தை டிஏபி பெரிதுபடுத்தி வருவதாக மாநில மசீச மகளிர் தலைவி டான் செங் லியாங் சுட்டிக்காட்டினார்.…

பினாங்கு டிஏபி நடத்திய கூட்டத்துக்கு பெருந்திரளாக மக்கள் திரண்டனர்

தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் உட்பட பல இந்தியர் பிரச்னைகளை விவாதிப்பதற்காக நேற்று பினாங்கில் டிஏபி ஏற்பாடு செய்த கூட்டத்தில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். ஜார்ஜ் டவுனில் உள்ள பினாங்கு சீனர் நகர மண்டபத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொண்டனர். மாநில டிஏபி தலைவரும்…

கணபதி ராவ்: மஇகா இளைஞர் பிரிவு குற்றச்சாட்டு “முட்டாள்தனமானது”

சிலாங்கூர் மாநில டிஎபி செயலவை உறுப்பினர் வி. கணபதி ராவ், தம்மையும் தமது சகோதரரையும் கடந்த வாரம் தாக்கிய நபர்கள் பிகேஆர் உறுப்பினர்கள் என்று மஇகா இளைஞர் பிரிவு கூறியிருப்பதை நிராகரித்ததோடு அது முட்டாள்தனமான குற்றச்சாட்டுகள் என்றார். "இதெல்லாம் முட்டாள்தனமான குற்றச்சாட்டுகள்" என்று அவர் மலேசியாகினியிடம் இன்று கூறினார்.…

டிஏபி:வாக்காளர் பதிவை நிராகரிக்கும் அதிகாரம் இசிக்கு உண்டு

தேர்தல் ஆணையம்(இசி) கூறிக்கொள்வதுபோல் அல்லாமல், போதுமான விவரங்களைக் கொண்டிருந்த பதிவுப்பாரங்களை நிராகரிக்கும் அதிகாரம் அதற்கு உண்டு என்கிறது டிஏபி. இன்று காலை அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங்கும் தேசிய பரப்புரைப் பிரிவுச் செயலாளர் டோனி புவாவும் பல்வேறு காரணங்களுக்காக…

DAP Forum: Malaysian Indians lagging behind

A forum to discuss the social and economical problems faced by Indians in Johor was organised by Johor DAP Gelang Patah branch on May 26, 2012. Around hundred over local Malaysian Indians participated in the…

டிஏபி: வான் அகமட் வாக்காளர்களை அவமதிக்கிறார்

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும் என மலேசியர்களில் 92 விழுக்காட்டினர் விரும்புவதாகக் கூறும் மெர்தேக்கா மய்ய ஆய்வு முடிவுகளை தேர்தல் ஆணையம் (இசி) நிராகரித்துள்ளது - அந்த அமைப்பு சுயேச்சையாக இயங்கவில்லை என்பதை மெய்பிப்பதாக டிஏபி கூறுகிறது. அந்த ஆய்வு முடிவுகளை 'அற்பமானவை' என…

டிஏபி: கருத்துக் கணிப்பு முடிவுகள் பெர்சே 3.0 பேரணியை நியாயப்படுத்தியுள்ளன

அரசாங்கம் தூய்மையான நியாயமான தேர்தல்களை உறுதி செய்யத் தவறி விட்டதை தேர்தல் பிரச்னைகள் மீது நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் முடிவுகள் "அப்பட்டமாக காட்டுவதாக" என டிஏபி கூறுகிறது. ஆகவே ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணி நடத்தப்பட்டதை அந்த முடிவுகள் நியாயப்படுத்தியுள்ளன. "திரட்டப்பட்ட புள்ளி விவரங்கள்.....…