ஐந்து வேட்பாளர்கள் விலகினர் 1,823 பேர் வாக்களித்தனர்

பினாங்கில் நிகழும் டிஏபி-யின் 16வது பேரவையில் கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவுக்கான தேர்தலிலிருந்து ஐந்து வேட்பாளர்கள் விலகிக் கொண்டனர். மொத்தம் 1,823 பேராளர்கள் வாக்களித்தனர். சூங் சியூ ஒன், ஜெயபாலன் வள்ளியப்பன், தியோ கோக் சியோங், வயலட் யோங் வூய் வூய், எர் தெக் ஹுவா ஆகியோர் அந்த…

அன்வார் பிரதமராவதை ஆதரிக்கும் கர்பால், பாஸ் முக்கியமான நண்பன் என்றார்

டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங், பக்காத்தான் ரக்யாட் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்துடன் பினாங்கில் டிஏபி-இன் 16வது தேசியப் பேரவைக்கூட்டத்துக்கு வந்திருக்கிறார் என்று தெரிகிறது. பேரவையைத் தொடக்கிவைத்து உரையாற்றிய அவர், 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், பிகேஆர்…

டிஏபி பேராளர்கள் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களை அழியாத மையுடன்…

பினாங்கில் நாளை தொடங்கும் டிஏபி தேசியப் பேரவையில் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும் வாக்களிப்பில் கலந்து கொள்ளும் பேராளர்கள் அழியாத மை பற்றி நேரடி அனுபவத்தைப் பெறுவார்கள். அடுத்த ஆண்டு ஜுன் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டிய 13வது பொதுத் தேர்தலுக்கு கட்சி உறுப்பினர்களை தயார்…

அனைத்து ஊடகங்களும் டிஏபி பேரவைக்கு வரவேற்கப்படுகின்றன

பினாங்கில் இந்த வார இறுதியில் நிகழும் 16வது மூவாண்டு டிஏபி பேரவையில் செய்திகளைச் சேகரிக்க எல்லா ஊடகங்களும் -நாளேடுகள் மாற்று ஊடகங்கள்- அனுமதிக்கப்படும். கட்சியின் புதிய மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் உட்பட அனைத்து நிகழ்வுகள் பற்றி எந்த ஊடகமும் செய்திகளை சேகரிக்கலாம் என அதன் தலைமைச்…

20 டிஏபி மத்திய நிர்வாகக் குழு இடங்களுக்கு 68 பேர்…

டிஏபி கட்சியின் 16வது மூவாண்டு தேசியப் பேரவை இந்த வார இறுதியில் பினாங்கில் நடைபெறுகின்றது. அங்கு நிகழும் கட்சித் தேர்தல்களில் 20 டிஏபி மத்திய நிர்வாகக் குழு இடங்களுக்கு 68 பேர் போட்டியிடுகின்றனர். டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், அவரது புதல்வர்களான கோபிந்த் சிங் டியோ (…

என்ஜிஓ: டிஏபி மத்திய செயலவையில் கூடுதல் மலாய்க்காரர்கள் இடம்பெற வேண்டும்

தன்னை ஒரு பல்லினக் கட்சி என்று கூறிக்கொள்ளும் டிஏபி, அதை நிரூபிக்க, வார இறுதியில் நடக்கும் கட்சித் தேர்தலில் மத்திய செயலவைக்குப் போட்டியிடும் எட்டு மலாய்க்காரர்களில் ஐவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருகிறது. “அது அலங்காரத்துக்காக சொல்லப்படுவதல்ல என்று நினைக்கிறோம்.அதை நிரூபியுங்கள்”, என்று பினாங்கு மலாய் காங்கிரஸ் தலைவர்…

ஜசெக தேசிய மகளிர் அணியின் துணைச் செயளாலராக காமாட்சி தேர்வு

ஜனநாயக செயல் கட்சியின் மகளிர் பேரவை மாநாடு தலை நகர் ஃபெடரல் தங்கும் விடுதியில் நேற்று (09,12.2012) நடைபெற்றது. மகளிர் பிரிவு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது என்றாலும் தேர்தல் முறையில் உச்சமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்தது இதுவே முதல் முறையாகும். 300-க்கும் மேற்பட்ட மகளிர் பேராளர்கள்…

சாமி மேடை உடைக்கப்பட்டது மீது மௌனம் சாதிக்கும் மந்திரி புசார்…

கடந்த மாதம் செப்பாங்கில் சாமி மேடை ஒன்று உடைக்கப்பட்ட விவகாரம் மீது மௌனம் சாதிக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிமை பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ சாடியுள்ளார். "நிலவரம் கடுமையாக இருந்தும் அரசியல் களத்தில் இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் கண்டித்திருந்தும் அப்துல் காலித் இது…

நான்கு அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும் என்கிறது டிஏபி

குவாந்தான் கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் அரிய மண் தொழில் கூடத்தின் கழிவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை அந்த லைனாஸ் நிறுவனம் நிராகரித்து விட்டதைத் தொடர்ந்து அது அமைவதற்கு அனுமதி அளிப்பதில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நான்கு அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும் என டிஏபி…

“முஸ்லிம் அல்லாதார் மீது இஸ்லாமியச் சட்டங்களை அமலாக்குவது பாஸ் தோற்றத்தைப்…

கிளந்தானில் உள்ள முஸ்லிம் அல்லாதாருக்கு  இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பாஸ் கட்சியின் மிதவாதத் தோற்றத்தைப் பாதிக்கும் என டிஏபி இளைஞர் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் அந்தோனி லோக் எச்சரித்துள்ளார். இது பக்காத்தான் ராக்யாட் மீதான முஸ்லிம் அல்லாதாரின் நம்பிக்கையை ஒரளவுக்குப் பாதித்துள்ளதாக அவர்…

கிட் சியாங்: அம்னோ ஆதரிக்க மறுப்பதால் ஒரே மலேசியா கோட்பாடு…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொல்வது போல ஒரே மலேசியா கோட்பாடு உறுதியற்றதாக இருப்பதற்கு அம்னோ அதனை ஆதரிக்க மறுப்பதே காரணம் என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். "நஜிப் தேவை இருப்பதால் ஒரு தோற்றத்தை அளிக்கிறார். தமது ஒரே மலேசியாக் கொள்கைக்கு அம்னோ…

அந்த ஊராட்சி மன்றச் சதிகாரர்கள் மீது பாஸ் நடவடிக்கை எடுக்க…

முஸ்லிம் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட அண்மைய விவகாரங்களில் தவறு செய்துள்ள ஊராட்சி மன்ற 'சதிகாரர்கள்' மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு டிஏபி பாஸ் கட்சியைக் கேட்டுக் கொண்டுள்ளது. பக்காத்தான் ராக்யாட்டுக்குள் உறவுகள் சீர்குலைவதைத் தவிர்ப்பதற்கு அது அவசியம் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். பாஸ்…

பிகேஆர் பலவீனமாக இருப்பதால் டிஏபி-க்கு மலாய் ஆதரவு கூடுகின்றதா ?

பினாங்கில் குறிப்பாக கெப்பாளா பாத்தாஸ் போன்ற தலைநிலப் பகுதிகளில் டிஏபி செல்வாக்கு கூடி வருவதாக பினாங்கு டிஏபி மாநாட்டில் பேசிய பேராளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 1978ம் ஆண்டு தொடக்கம் கெப்பாளா பாத்தாஸ் தொகுதி எம்பி-யாக முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட்  படாவி இருந்து வருகின்றார். அந்தத் தொகுதியில் டிஏபி…

இந்திய சமூகத்துக்கு டிஏபி ஆற்றியுள்ள பங்கு அலட்சியம் செய்யப்பட்டுள்ளது

பினாங்கு மாநில அரசாங்க நிதி உதவியுடன் மாதம் இரு முறை வெளியிடப்படும் புல்லட்டின் முத்தியாரா (Buletin Mutiara) என்ற சஞ்சிகையில் இந்திய சமூகத்துக்கு மாநில அரசாங்கம் செய்துள்ள நன்மைகள் பற்றி போதுமான அளவுக்குச் செய்திகள் இடம் பெறவில்லை என மாநில டிஏபி சோஷலிச இளைஞர் பிரிவு உதவித் தலைவர்…

பக்காத்தானில் மலாய்க்காரர்களிடமே தொடர்ந்து அதிகாரம் இருக்கும் என்கிறது டிஏபி

புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் ஆட்சி புரியும் போது மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழப்பர் என்னும் தோற்றத்தை அளிப்பதற்கு அம்னோ முயலுவதை அதன் அண்மைய ஆண்டுப் பொதுக் கூட்டம் உணர்த்துவதை டிஏபி உறுப்பினர்கள் அறிந்திருக்க வேண்டும் என பினாங்கு மாநில டிஏபி தலைவர் சாவ் கோன் இயாவ் கூறியுள்ளார். 13வது பொதுத்…

பினாங்கு தனது ‘பொன்னான’ எதிர்காலத்தை இழக்கக் கூடாது

பினாங்கு மாநில டிஏபி மாநாட்டில் அதன் தலைவர்கள் மிகுந்த நம்பிக்கையைக் காட்டிய போதிலும் எதிரிகளுடைய வலிமையை குறைவாக மதிப்பிட வேண்டாம் என கட்சி உறுப்பினர்களுக்கு தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் நினைவுபடுத்தியுள்ளார். வரும் தேர்தலில் கூட்டரசு நிலையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கும் பினாங்கை மீண்டும்…

IPCMC மகஜர் பினாங்கு டிஏபி இளைஞர்களுக்கு பிரச்னையைக் கொண்டு வந்துள்ளது

போலீஸ் புகார்கள், நன்னடைத்தை மீது சுயேச்சை ஆணையத்தை அமைக்குமாறு கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை சமர்பித்ததற்காக டிஏபி சோஷலிச இளைஞர் பிரிவு மீது போலீஸ் அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து நேற்று அந்தப் பிரிவு  புகார் செய்துள்ளது. அடையாளம் தெரிவிக்கப்படாத போலீஸ் அதிகாரி ஒருவர் அந்தப் புகாரைச் சமர்பித்த பின்னர்…

பினாங்கு டிஏபி மாநாடும் பொதுத் தேர்தல் பற்றிக் கவனம் செலுத்துகின்றது

டிசம்பர் மாத மத்தியில் டிஏபி தேசியப் பேரவை நடத்தப்படவிருக்கின்றது. அதற்கு இன்னும் இரண்டு வாரம் இருக்கும் வேளையில் அந்தக் கட்சியின் பினாங்கு மாநில மாநாடு வரும் ஞாயிற்றுக் கிழமை தொடங்குகிறது. புத்ராஜெயாவை பிஎன் -னிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்ற பக்காத்தான் ராக்யாட் இலட்சியத்துடன் டிஏபி பேராளர்கள் பினாங்குக் கூட்டத்தில்…

அந்த ‘மலிவான நிலத்தின்’ நடப்பு மதிப்பு 300 மில்லியன் ரிங்கிட்…

பிஎன் -னுக்கு மலிவாக விற்கப்பட்டதாகக் கூறப்படும் சந்தை மதிப்பை 20 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 300 மில்லியன் ரிங்கிட்டாக செக்கிஞ்சாங் சட்ட மன்ற உறுப்பினர் இங் ஸ்வீ லிம் உயர்த்தியுள்ளார். அவர் முதலில் மொத்தம் 33.5 ஏக்கார் பரப்புள்ள நிலம் ஒரு சதுர அடி ஒரு ரிங்கிட் என்ற விலையில்…

‘விளம்பர ஆசை’ பிடித்த டிஏபி என பிஎன் சாடல்

எதிர்வரும் தேர்தலில் மீண்டும் வேட்பாளராகும் வாய்பைப் பெருக்கிக்கொள்ள தனது சட்டமன்ற உறுப்பினர்களைத் தயார்படுத்தும் டிஏபி-இன் முயற்சிமீது வெறுப்பைக் கொட்டுகிறது பிஎன். “மக்கள் தங்கள் எதிர்காலத்தை எந்தக் கட்சியிடம் ஒப்படைப்பது என்பதில் விழிப்பாக இருக்க வேண்டும்”, என்று கொம்டார் பிஎன் ஒருக்கிணைப்பாளர் லோ சை தெக் கூறினார். டிஏபி-இன் “உண்மை…

முடி திருத்துவோர் சர்ச்சை பக்காத்தானிலிருந்து டிஏபி விலக வேண்டும் என்ற…

சீனர் மற்றும் முஸ்லிம் அல்லாதவருடைய 'கௌரவத்தைக் காப்பாற்றும் பொருட்டு' பாஸ் 'திரும்பத் திரும்ப அத்துமீறல்களில்' ஈடுபடுவதால் டிஏபி பக்காத்தான் ராக்யாட்டிலிருந்து விலக வேண்டும் என மசீச கேட்டுக் கொண்டுள்ளது. "சீனர் மற்றும் முஸ்லிம் அல்லாதவருடைய கௌரவத்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் பாஸ் தொடர்ந்து அத்துமீறல்களிலும் ஒடுக்குமுறையிலும் ஈடுபடுவதை தடுக்கும்…

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நஜிப்பா? முக்ரிஸ் மகாதீரா?

-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், நவம்பர் 22, 2012. மக்கள் கூட்டணி எதிர்வரும் பொதுத்தேர்தலில் மத்திய அரசை கைப்பற்றிவிடும் என முழு மனதோடு நம்பிக்கை வைத்து ஜ.செ.க-த் தலைவர் கர்ப்பால் சிங் பிரதமராக வர வாய்ப்புத் தர வேண்டும் என்கிறார் முன்னாள் அம்னோ தலைவரும் முன்னாள்…

அமைச்சர் பதிலளிக்க மறுத்ததால் பாடுங்கான் பிரதிநிதி ஆத்திரம்

பாடுங்கான் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் வோங் கிங் வை, டாயாக் இனச் சிறார்களுக்கு வலுக்கட்டாயமாக இஸ்லாமிய கல்வி போதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு மாநில சமூகநலன். மகளிர், குடும்ப மேம்பாட்டு அமைச்சர் பாத்திமா அப்துல்லா பதிலளிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்துள்ளார். “அப்படிக் கூறப்படுவது உண்மையா என்று கேட்டிருந்தேன்”, என்று வோங் செய்தியாளர்களிடம்…