பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஐந்து மாதத்தில் 1000 பலாத்கார சம்பவங்கள்: உ.பி. அரசின் பகீர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 1012 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி வரை 1012 பாலியல் பலாத்கார வழக்குகளும்,…
இதுதான் இந்தியாவின் ஒலிம்பிக் அமைப்பினர் ஒலிம்பிக் வீரர்களை கவனித்துக் கொள்ளும்…
# செத்துப் போவேனோ என்று அஞ்சினேன் - ஓபி ஜெய்ஷா # இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் மாரத்தான் ஓடிய பெண் இந்திய சாதனையாளர் ஓபி ஜெய்ஷா. அவர் 42கிமீ தூரத்தை 2 மணி 47 நிமிடத்தில் கடந்திருக்கிறார். ஆனால் அவரது சென்ற ஆண்டு சாதனை 2 மணி 34 நிமிடங்கள்.…
தமிழக மீனவர்களின் 130 படகுகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது: இலங்கை…
யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 130 படகுகளை ஒருபோதும் விடுவிக்கவே முடியாது என்று இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர திட்டவட்டமாக கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மீனவர்களுடான ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கை கடல் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர பேசியதாவது: இலங்கை கடற்பகுதிக்குள் சட்டவிரோதமாக…
சம்பளத்துக்கு காத்திருக்காதீர்கள்…. இந்தியா திரும்புகள்… சவுதி இந்தியர்களுக்கு சுஷ்மா வேண்டுகோள்
டெல்லி: சவுதியில் கொடுக்கப்படாத சம்பளத்திற்காக காத்திருக்காமல், உடனடியாக இந்தியா திரும்புமாறு சவுதியில் உள்ள இந்தியர்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். கச்சா எண்ணெய்யின் விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் சவுதி அரேபியாவில் பல எண்ணெய் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் அங்கு பணிபுரிந்து வந்த 10…
ரியோவில் நான் இறந்திருக்கக் கூடும்: வீராங்கனை கண்ணீர் மல்க பேட்டி
ரியோ ஒலிம்பிக்கில் குடிக்க தண்ணீர் கொடுக்க கூட ஆள் இல்லை, இதனால் நான் இறந்திருக்கக் கூடும் என ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை ஓ.பி.ஜெய்ஷா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெய்ஷா இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வெயில்…
32 தமிழர்கள் குற்றம் செய்யவில்லை என்றால் நிரூபிக்கட்டும்.. ஆந்திர அமைச்சர்…
திருப்பதி: செம்மரக்கடத்தலில் ஈடுபடவில்லை என்றால் அதனை நிரூபித்து 32 தமிழர்களும் விடுதலையாகட்டும் என்று ஆந்திர வனத் துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணரெட்டி தெரிவித்துள்ளார். கடந்த 4ம் தேதி ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி 32 தமிழர்களை ஆந்திர போலீசார் கைது செய்தனர். அவர்கள்…
தகிக்கும் காஷ்மீர் போர்க்களம்.. ஒரே மாதத்தில் 440 பேருக்கு கண்…
டெல்லி: காஷ்மீரில் அடிக்கடி நடந்து வரும் துப்பாக்கி சூட்டில் 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் சிறுமிகளே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜுன் 9 வரையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் 14 சதவீத சிறுவர்கள் காயமடைந்து அறுவை சிகிச்சைக்குள்ளாகியுள்ளனர். ஆகஸ்ட் மாதம் தொடங்கி இதுவரை 93 முறை…
பிரதமர் மோடிக்கு கடிதம்: தற்கொலை செய்து கொண்ட இளம் வீராங்கனை!
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு பஞ்சாபைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீராங்கனை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூஜா (20) என்ற இளம் பெண் பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள கால்சா கல்லூரியில் 2ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.…
120 வயதிலும் ஆரோக்கியத்துடன் எளிமையாக வாழும் மனிதர்!
எளிமையான வாழ்க்கையில் 120 வயதை எட்டியுள்ள அபூர்வ மனிதர். தினமும் ஒரு மணி நேரம் யோகா பயிற்சி செய்வதே அதற்கு காரணம் என்கிறார். வாரணாசி பகுதியில் வாழும், பிரம்மச்சாரியும் துறவியும் ஆன இவர் கடுமையான வறுமையிலும் பல நாட்கள் பட்டினி கிடந்தும் இளம் பருவத்தை கடந்திருக்கிறார். இவருடைய பெற்றோர்…
காவிரியில் தண்ணீர் பெற கோரி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு-சாலை மறியல்:…
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் பெற கோரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர்: தமிழகத்துக்கு ஆண்டுதோறும் காவிரியில் 192 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்ற இறுதி…
இலங்கை ஊடாக சென்று ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்த இந்தியர்கள்
இலங்கை ஊடாக சென்று பல இந்தியர்கள் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கேரளா பிரதேசத்தை சேர்ந்த 21 பேர் இவ்வாறு இணைந்துள்ளனர். இவர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான ஏழு மாதத்திற்குள் இலங்கை ஊடாக சிரியாவிற்கு சென்று ஜ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்துள்ளதாக…
10 ஆண்டுகளாக கண்டுகொள்ளாத அரசு: ஒற்றுமையால் அரசையே மூக்கு மேல்…
தமிழகத்தின், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் ஒன்றாக இணைந்து சொந்த செலவில் சாலை அமைத்து, 10 ஆண்டுகளாக கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகளை மூக்கு மேல் விரல் வைக்க வைத்துள்ளனர். ஆலங்குடியை அடுத்த குப்பகுடி ஊராட்சியில் பூமாங்கொல்லை, மொட்டாத்திக் கொல்லை, கருங்காளிகொல்லை, புல்லான்தோப்பு, பொட்டாத்திக்கொல்லை ஆகிய கிராமங்களை சேர்ந்த…
காஷ்மீரில் மீண்டும் கலவரம்: 5 பேர் பலி
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், முக்கிய சாலையில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பட்காம், அனந்த்நாக் மாவட்டங்களில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. கலவரக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர். இதைத்…
அழிவின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஓர் அற்புதம்! இதன் சிறப்புகள்…
தமிழகத்தில் 30 கோடியாக இருந்த பனைமரங்கள் 5 கோடியாக குறைந்துள்ளன. அதிகரிக்கும் கொசு உற்பத்தி, அழிந்து வரும் சிறு பறவைகள் உட்பட்ட பல கேடுகளுக்கும் பனைமரங்களின் எண்ணிக்கைக்கும் நேர்முக மற்றும் மறைமுக தொடர்பு இருக்கிறது. பனை பல உயிர்களுக்கு அடைக்கலம் பனைமரம் மனிதநல மரம் மட்டும் அல்ல. பல…
செயற்கை கூடுகள் அமைத்து பறவைகளுக்கு இருப்பிடம் வழங்கும் விவசாயி!
கோவை மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தனது பாக்கு மற்றும் தென்னை மர தோட்டத்தில் செயற்கை பறவை கூடுகள் அமைத்து பறவைகளின் புகலிடமாக மாற்றி வருவது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காளிபாளயம் கிராமத்தை சேர்ந்த இளம் விவசாயி அன்புசெல்வன். இவருக்கு சொந்தமாக ஐந்து…
குஜராத்: தலித் குடும்பங்களுக்கு 5 ஏக்கர் நிலம் தராவிட்டால் ரயில்களை…
ஒரு மாத காலத்திற்குள் குஜராத்தில் உள்ள ஒவ்வொரு தலித் குடும்பத்துக்கும் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படாவிட்டால், குஜராத்தில் ரயில்களை தடுப்போம் என்று இந்தியாவின் தாழ்த்தப்பட்ட இனமான தலித் சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கூறியுள்ளனர். தங்களுடைய பாரம்பரிய தொழில்களில் ஒன்றாக கருதப்படும் இறந்த கால்நடைகளை அகற்றும் பணியை இனி செய்ய…
இந்தியாவுக்கு எதற்காக பதக்கம் கிடைக்கவில்லை? பின்னணி காரணங்கள் என்ன?
பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் அதிக பதங்களை வென்று சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் தொடர்ந்து முன்னிலை வகுந்து வருகின்றன. ஆனால், ரியோ ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியா ஒரு பதக்கம் கூட வாங்கவில்லை. இதன் பின்னணி காரணங்கள் என்ன? என்பதை அறிந்துகொள்ள இந்த…
ஒரேநாளில் 5.5 கோடி மரங்களை நட்டு கின்னஸ் சாதனை!
இந்தியாவில் அதிகமான மக்கள்தொகை கொண்ட உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ஒரேநாளில் 81 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஐந்தரை கோடி மரங்களை நட்டு கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம்பிடித்துள்ளது. அதி மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 7-ம் திகதி எட்டே மணி நேரத்தில் பத்து லட்சம் மரக்கன்றுகளை…
கற்பழிப்பில் இருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும் என்று நடிகர்…
70-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சுதந்திர தின விழா வாழ்த்து தெரிவித்து 73 வயது நடிகர் அமிதாப்பச்சன் டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார். அதில், “கற்பழிப்பு சம்பவங்களில் இருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும். இதனை உறுதிப்படுத்த ஒவ்வொருவரும் உறுதிமொழி…
ஷாக் ட்ரீட்மென்ட், சொத்து அபகரிப்பு, குழந்தைகள் சித்ரவதை: ஈஷா யோகா…
கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்து குவிகின்றன. இது யோகா மைய ஆதரவாளர்களை கவலை அடைய வைத்துள்ளது. கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. கோவையை சேர்ந்த பேராசிரியர்…
ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு: இஸ்லாமிய மத போதகர் கைதால் பரபரப்பு
கேரள மாநிலம், கண்ணனூர் அருகே ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின்பேரில் முஸ்லீம் மத போதகர் முகமது ஹனீஃப்பை பொலிசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பொலிசார் அளித்துள்ள தகவலில்: கேரளத்தில் கடந்த 8ம் திகதி 21 பேர் காணாமல் போயினர். அவர்களில் 17 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 4…
டெல்லியில் மரணித்தது மனித நேயம்: பலியானது உயிர்
இந்தியத் தலைநகர் டெல்லியில் போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலை ஒன்றில், சிறிய வேன் மோதி விபத்துக்குள்ளான நபர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்குப் போராடி சாலையிலேயே இறந்துவிட்டார். அந்த வழியாகச் சென்றவர்கள் யாரும் அவரைக் காப்பாற்ற முன்வராததே அதற்குக் காரணம். இணையத்தில் பரவி வரும் இந்த விபத்தின்…
வழிதவறிய மகன்: கூலிப்படை வைத்துக் கொன்ற தந்தை!
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், வழித்தவறிச் சென்ற தனது மகனை கூலிப்படை வைத்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மிட்னாப்பூரைச் சேர்ந்த அஷோக் த்விவேதியை, கூலிப்படை வைத்து மகனைக் கொலை செய்த குற்றத்துக்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மார்ச் 6ம் திகதி…
