வடக்கில் தொடரும் நிலப்பறிப்பு, இராணுவ பிரசன்னம் – மோடியிடம் முறைப்பாடு

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு இந்தியா உதவியளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் 115 முகாம்களில் உள்ளனர். இந்தநிலையில் குறித்த அகதிகளின் நிலங்கள் இலங்கை இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளமையால் அவற்றை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை,…

இந்த நாடு ஒர் பௌத்த நாடு!– அஸ்கிரிய மாநாயக்கர்

இந்த நாடு ஓர் பௌத்த நாடு என கண்டி அஸ்கிரிய மாநாயக்கர் உடுகம சிறி புத்தரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார். எனினும், பௌத்த மதக் கொள்கைகள் இன்று உதாசீனம் செய்யப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் தர்மத்தை மதிக்கும் மக்கள் சமூகமொன்றை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.…

ஐ.நா விசாரணை! சாட்சியாளரை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும். சர்வதேச மனிதஉரிமை…

ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒத்துழைப்பவர்கள் எவரும் பழிவாங்கப்படமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 6 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன இந்தக் கோரிக்கை உள்ளிட்ட கடிதம் ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தலைவர்ää அதன் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள்; மற்றும் இலங்கை அரசாங்க…

என்னிடம் விட்டுவிடுங்கள்! அதை நான் பார்த்துக் கொள்கிறேன்: கூட்டமைப்பிடம் மோடி…

இலங்கையின் அரசியல் தீர்வு விடயத்தில் 13வது அரசியல் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் போக வேண்டும் என்பதில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அக்கறை கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார். எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே இது குறித்த தீர்மானத்தை…

வெளிநாடுகளில் புலிகளின் செயற்பாடுகளை தடுக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை

வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளைத் தடுக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கனடா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை ஒடுக்கும் நோக்கில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அந்தந்த நாடுகளின் இராணுவப் புலனாய்வுப் பிரிவுகளுடன் இணைந்து பாரியளவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.…

போரில் சிவிலியன்கள் கொல்லப்படவில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம்? –…

போரின் போது சிவிலியன்கள் கொல்லப்படவில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி…

டில்லியிலிருந்து சம்பந்தன் குழுவினர் தமிழ்நாட்டிற்கு திடீர் விஜயம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நேரில் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்திய சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் நேற்று அங்கிருந்து திடீரென தமிழகத்திற்குப் பயணமாகினர். சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே தமிழகத்துக்குச் சென்றுள்ளனர்.…

இலங்கை தமிழர்கள் தமக்கென்று வெளியுறவுக்கொள்கை ஒன்றை வகுக்கவேண்டும்!- கஜேந்திரகுமார்

இலங்கையின் அதிகாரங்களுக்கும் ஆட்சிகளுக்கும் உட்பட்ட தமிழர்கள் தமக்கென்று ஒரு வெளியுறவுக்கொள்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள அவர், நாடு ஒன்றை கொண்டிருக்காத போதும் ஒரு தேசியம் என்ற அடிப்படையில் வெளியுறவு கொள்கை…

வடகொரியா, சிரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளது: நியூயோர்க்…

ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணையாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்காமையின் அடிப்படையில், வடகொரியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. “நெகிழ்வு தன்மையன்ற இலங்கை” என்ற தலைப்பின் கீழ் நியூயோர்க் டைம்ஸ் ஆசிரியர் தலையங்கத்தில் இந்த விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணையாளர்களை…

கூட்டமைப்பினர் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும்: ஜனாதிபதி சீற்றம்

இந்தியாவுக்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குழுவினர் செல்லவுள்ளதை அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் சீற்றமடைந்தாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த தனது கடும் அதிருப்தியை பிரதிநிதி ஒருவர் மூலமாக ஜனாதிபதி, சம்பந்தனிடம் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இந்த விஜயம் குறித்து அரசாங்கத்திற்கு தகவல்…

தமிழினத்தை ஓரம்கட்ட அரசிற்கு முட்டுக் கொடுக்கும் முஸ்லிம் அமைச்சர்கள்: கலையரசன்…

முஸ்லிம்கள் அரசுக்கு முட்டுக் கொடுத்து அமைச்சர் பதவிகளையும் உயர் பதவிகளையும் பெற்றுக் கொண்டு தமிழினத்தை அரசுடன் இணைந்து ஓரம் கட்டுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். நாவிதன்வெளி 11ம் கிராம கிரீன் லைட் விளையாட்டு கழகத்தின் 38ம் நிறைவை கொண்டாடும் விழா கடந்த 17ம் திகதி நடைபெற்றது.…

என்ன செய்யப் போகிறது புதுடில்லி?

புதுடில்லியில் பா.ஜ.க. அரசாங்கம் அமைந்து சரியாக மூன்று மாதங்களுக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து இந்திய அரசாங்கம் பேச்சுக்களை நடத்தியிருக்கிறது. புதுடில்லியில் பா.ஜ.க. அரசு அமைந்தவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர், ஜூலையில் அழைப்பு விடுக்கப்படும் என்று கருதப்பட்டது. ஆனால், சுமார்…

தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் தீர்வே தேவை- இந்தியா

இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றுக்கொடுக்கும் அரசியல் தீர்வு ஒன்று தேவை என்று இந்தியா அறிவித்துள்ளது இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் சயீட் அக்பருடீன் இதனை இன்று இதனை செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார் ஐக்கிய இலங்கைக்குள் சமஅந்தஸ்து சமஉரிமைää மற்றும் இறைமை நீதியான தீர்வு ஒன்றே இலங்கை தமிழர்களுக்கு அவசியம்…

இந்தியா – சீனா -பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஐ.நா விசாரணை…

இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு தகவல்களை வழங்குவதனை நிராகரித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா…

தமிழக முதல்வரை விரைவில் சந்திப்போம்!- டில்லியில் நிருபரிடம் கூட்டமைப்பினர்

இலங்கைத் தமிழர் நிலைமை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேசத் திட்டமிட்டுள்ளோம் என்று இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  எம்.பிக்களான மாவை. சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் தெரிவித்தனர். இது தொடர்பாக நேற்றைய தினம் டில்லியில்  நிருபரிடம் அவர்கள் கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும்…

பொதுமக்களின் அனைத்து நிகழ்வுகளையும் வேவு பார்க்கும் புலனாய்வுப் பிரிவினர்!

பொது மக்களின் அனைத்து நிகழ்வுகளையும் இலங்கை அரசாங்கம் தமது புலனாய்வு பிரிவினரைக் கொண்டு வேவு பார்த்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய சமாதான பேரவை இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. தற்போது திருமணவீடுகள், செயலமர்வுகள், பொது வைபவங்கள், மத வழிபாடுகள் போன்ற அனைத்து நிகழ்வுகளையும் புலனாய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர். இது…

ஐ.நா விசாரணை குழு முன் தமிழினப் படுகொலை தான் என்பதை…

  ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தமது விசாரணைக்கான ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இவ்விசாரணக்கு சரியான ஆதாரங்களை சரியான முறையில் சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதன் மூலம், எமது மக்களின் விடுதலைக்கான பாதையைத் திறப்போம். அன்பான கனடியத் தமிழ் உறவுகளே! ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்றுக்…

வடகிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஐநாவுக்கு எழுதிய கடிதம் தீர்மானமாகிறது

வடமாகாண சபை (ஆவணப்படம்) இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைப் பேரவையினால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையை விரிவான முறையில் நடத்த வேண்டும் என்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளைச் சேர்ந்த 33 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடித விபரங்கள் வியாழனன்று வடமாகாண சபையில்…

இலங்கை சீனாவுடன் கொண்டுள்ள வலுவான உறவுகள் குறித்து இந்தியாவுக்கு எந்த…

இலங்கையும் சீனாவும் தமக்கிடையே வலுவான உறவைப்பேணி வருகின்றமை தொடர்பில் பா.ஜ.க. தலைமையிலான இந்திய அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கொழும்பில் நடைபெறும் பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்துகொண்டு சீன பிரதிநிதிகள் குழு எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு…

தமிழர்களின் வாக்குகளின்றி மகிந்தவினால் வெல்ல முடியும்! புலிகளுக்கு இந்தியா பயிற்சி…

தமிழர்களின் வாக்குகள் இன்றி ஜனாதிபதியினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பாதுகாப்பு கருத்தரங்குகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் வாக்குகள் இன்றியே ஜனாதிபதியினால் தேர்தலில் வெற்றியீட்டக்…

இந்தியப் பிரதமரை சந்திக்க கூட்டமைப்பினர் டில்லி பயணம்

இந்தியப் பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினரை சந்திப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் டில்லி செல்கின்றனர். அந்தக் குழு வியாழக்கிழமை கொழும்பிலிருந்து புறப்படுகிறது. சம்பந்தர் தலைமையிலான அந்தக் குழுவினர் அதிகாரப் பகிர்வு உட்பட பல விஷயங்களை இந்தியத் தரப்புடன் பேசவுள்ளனர். எனினும் என்னென்ன விஷயங்கள் டில்லியில் விவாதிக்கப்படும்…

இந்திய பிரதமரை எதிர்பார்க்கும் இலங்கையர்கள் – நாட்டுக்கு வருமாறு ஜனாதிபதி…

இலங்கையர்கள் எதிர்ப்பார்ப்பதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி இலங்கைக்கு வரவேண்டும் என்று இலங்கை மக்கள் எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு செய்தியாளர்களை நேற்று சந்தித்தபோதே ஜனாதிபதி இதனைக்குறிப்பிட்டார். சீன ஜனாதிபதி, ஜப்பானிய பிரதம மந்திரி…

விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பான் கீ மூன் கோரிக்கை

இலங்கை தொடர்பில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையில் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகளின் மூலம் அங்கு…