இறுதிக்கட்ட போரில் பிரபாகரனை காப்பாற்ற அமெரிக்கா கப்பல் அனுப்பியது: மஹிந்த…

நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளினதும் மனித உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அகலவத்தையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மனித உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச விவகாரங்கள்…

வடக்கில் போரின் பின்னர் தற்கொலை வீதம் அதிகரிப்பு

இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சமூகத்தில் தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறுகின்ற யாழ் பல்லைக்கழக உளவியல்துறை பேராசிரியர் தயா சோமசுந்தரம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள, சமூக ரீதியான புனர்வாழ்வும் பொருத்தமான பொருளாதார புனர்வாழ்வும் அவசியம் என வலியுறுத்தியிருக்கின்றார். யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் யாழ் மாவட்டத்தில் 1980…

சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக பொருளாதார தடையை எதிர்பார்க்கும் ஐரோப்பிய நிதி…

சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக பொருளாதார, வர்த்தக, நிதித் தடைகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கும், ஐரோப்பிய ஏற்றுமதி கடன் வழங்கும் நிறுவனங்கள், தமது வரைவு உடன்பாடுகளில், தடைகள் குறித்த உட்பிரிவுகளை சேர்க்கத் தொடங்கியுள்ளன. இதற்கமைய, சிறிலங்கா மீது பொருளாதாரத் தடையோ கட்டுப்பாடுகளோ விதிக்கப்பட்டால், ஏற்றுமதிக்கடன் காப்புறுதிகள் இடைநிறுத்தப்படும்.…

இராணுவத்தின் நேரடிக் கண்காணிப்பில் கிழக்கு மக்கள்

ஈழ விடுதலைப் புலிகளை வீழ்த்திய பின்னர் புலிகளை அழித்து விட்டோம் என்ற மமதையில் இலங்கை இராணுவத்தின் அட்டகாசம் நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. வடக்கில் நாளாந்தம் சிறுமிகள் மற்றும் குடும்பப் பெண்களை சிறிலங்கா படையினர் கற்பழிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது உலகமறிந்த உண்மைகள். இவைகள் ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்த…

மத்திய கிழக்குக்கு இலங்கையிலிருந்து மனித உடல் அவயங்களை கடத்தப்படுகின்றன!- நியூயோர்க்…

நியூயோர்க் டைம்ஸ் செய்தி ஒன்றின்படி மத்திய கிழக்குக்காக மனித உடல் அவயவங்களை கொள்வனவு செய்யும், முக்கிய இடமாக இலங்கை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இஸ்ரேலை சேர்ந்த ஒப்ஹிரா டொரின் என்ற பெண் இலங்கையில் உள்ள முன்னாள் காப்புறுதி முகவரிடம் இலங்கையில் இருந்து சிறுநீரகம் ஒன்றை கொள்வனவு செய்யுமாறு…

திருகோணமலை துறைமுக பகுதியில் 1200 ஏக்கர் நிலத்தை சீனாவுக்கு வழங்குவதற்கு…

திருகோணமலை துறைமுகம் அமைந்துள்ள பகுதியிலுள்ள சுமார் 1200 ஏக்கர் நிலத்தை,  நீண்ட கால குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்குவது தொடர்பான விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு  தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்  மற்றும்  புதன்கிழமைகளில் கூடவிருக்கும் கிழக்கு மாகாண சபையின் இம்மாத அமர்வின் போது, இவ்விடயம்…

யாழில் இராணுவத்தில் இணைந்த தமிழ் வாலிபர்களின் சமூகவிரோத செயற்பாடு –…

ஈச்சமோட்டை மற்றும் பாசையூர் பகுதிகளில் இருந்து இராணுவத்திற்கு இணைந்த தமிழ் இளைஞர்கள் தற்போது விடுமுறையில் வீடுகளுக்கு வந்துள்ளனர். இவ்வாறு வந்தவர்கள் தாங்கள் இராணுவம் என்றும் தங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றும் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வகையில் அவர்கள் தங்கள் சமூகத்தை தேர்ந்த பெண் பிள்ளைகளுடன்…

இலங்கை இராணுவ நீதிமன்ற விசாரணையின் முன்னேற்றம் என்ன? ஐநா குழு…

ஐநா மனித உரிமைகள் குழு, எதிர்வரும் ஒக்டோபரில் கூடும் போது இலங்கையில் போரின் போது பொதுமக்களின் இறப்புக்கள் குறித்து இராணுவ நீதிமன்றம் நடத்திய விசாரணைகளின் முன்னேற்றம் உட்பட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன என்று இலங்கையின் செய்தித்தாள் ஒன்று கூறுகிறது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு, தமது…

இந்திய வீட்டுத் திட்டத்தை இராணுவத்தினருக்கு வழங்குமாறு அழுத்தம்!

இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்தியாவின் வீட்டுத் திட்டத்தின் கீழ் சிறிலங்காவின் இராணுவத்தினருக்கும் வீடுகளை ஒதுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹாவிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் தகவல்கள் இதனைத்…

அச்சுறுத்தலுக்கு அடிபணியாது நவிப்பிள்ளை செயற்பட்டதாலேயே அரசுக்கு ஆத்திரம்!- இரா.சம்பந்தன்

ஐநா மனிதஉரிமை ஆணையாளர் நவிபிள்ளை இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு அடிபணியாது பக்கச்சார்பின்றி நேர்மையாக நீதியாகச் செயற்பட்டு வருகின்றார். அதனால் ஆத்திரம் கொண்டுள்ள அரசாங்கம் அவர் மீது குற்றச்சாட்டி விமர்சித்து வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவி்த்தார். அரசாங்கம் இவ்வாறு ஏனையோர் மீது குற்றஞ்சாட்டுவதை விட்டு விட்டு,…

கதிர்காமக் கந்தனையும் விட்டு வைக்காத ராஜபக்ஷவினர்: சில்லறைகளை அள்ளும் சஷீந்திர

கதிர்காம முருகன் ஆலயத்தில் உள்ள உண்டியல்களில் சேர்ந்து வரும் காணிக்கைகளில் 80 வீதத்திற்கும் அதிகமான தொகை சாக்கு பைகளில் போடப்பட்டு ஆலயத்திற்கு வெளியில் எடுத்துச் செல்லப்பவதாக ஆலயத்தின் பூசகர்கள் தெரிவித்துள்ளனர். கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே சஷீந்திர ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார செலவுகளுக்காக உண்டியில் பக்தர்களால் போடப்படும் சில்லறைகள்…

19 நாட்கள் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி மட்டுமே ஐ.நா விசாரணை…

19 நாட்கள் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் மட்டுமே ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை நடத்த உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் மட்டுமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்…

நவி.பிள்ளை கூடாது! ஹுசைன் பக்கச்சார்பின்றி நடந்து கொள்வார்: இலங்கை நம்பிக்கை

இலங்கைக்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணையின்போது மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது செல்வாக்கை செலுத்தி வருவதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கைக்கு செல்லாமலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு நம்பகமான விசாரணையை மேற்கொள்ளும் என்று நவநீதம்பிள்ளை கூறியிருப்பதை கொண்டே இலங்கையின் வெளியுறவு அமைச்சு தமது…

வறட்சியின் பிடியில் வட இலங்கை : 2.5 லட்சம் மக்கள்…

வட இலங்கையில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது இலங்கையில் போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வட மாகாணத்தில் மட்டும் வறட்சியின் காரணமாக இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அங்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டக் குடும்பங்கள் இவ்வகையில் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் நிலவும் கடும் வறட்சி காரணமாக…

சிறீலங்காக்கு எதிரான விசாரணை குழு! ஐ.நா. ஆணையை மீறிய செயற்பாடு…

இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் குழுவானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறிய செயற்பாடு என அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். அவ்வாறு குழு வொன்றை நியமிப்பதாயின் அந்தக் குழுவானது நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நோக்கிலானதாக அமைய வேண்டுமே தவிர நாட்டைத்…

தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் நில அபகரிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது…

வலி.வடக்கில் உள்ள காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையினை இடித்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர், தொழிற்சாலையில் உள்ள இரும்புப் பொருட்களை இரவோடு இரவாக தென்னிலங்கைக்கு கடத்திச் செல்கின்றனர் என்று வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவித் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார். மேலும் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாங்களில் தங்கியுள்ள மக்களை அங்கேயே…

இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த உத்தரவு –…

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதி கொண்டாடப்படும் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இதனடிப்படையில் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை, விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட…

மஹிந்த நியமித்த சர்வதேச நிபுணர்கள் குழு சிறீலங்காவை சென்றடைந்தது

காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள மூன்று சட்ட மேதைகளை உள்ளடக்கிய சர்வதேச நிபுணர்கள் குழு, நாட்டை வந்தடைந்துள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் 4.359 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஆணையுடன்…

செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் சாட்சியங்களை பதிவு…

செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் அண்மையில் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக தேசிய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வடக்கின் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் அண்மையில் கொழும்பு, மருதானைக்கு அழைக்கப்பட்டு சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் ஓர் கருத்தரங்கு நடத்தப்பட்டிருந்தது. இந்த கருத்தரங்கின் போது போர் காலத்தில் காணாமல்…

காணாமல் போனோரின் போராட்டங்களை தடுப்பது வெட்கத்துக்குரியது!- நிமல்கா பெர்னாண்டோ

காணாமல் போனோர் தொடர்பான போராடங்களுக்கு தடைகளை ஏற்படுத்த முடியாது என்று காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் பொது அமைப்பு எச்சரித்துள்ளது. கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் போது உரையாற்றிய அமைப்பின் இணைப்பாளர் நிமல்கா பெர்ணான்டோ, காணாமல் போனோர் பிரச்சினை…

ஐ.நா போர்க்குற்ற விசாரணை, சகல இலங்கையர்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும்!: நவநீதம்பிள்ளை

இலங்கைக்கு விஜயம் செய்யாமலேயே போர்க்குற்றங்கள் குறித்து ஆக்கபூர்வமான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஐ.நா விசாரணைக்குழு தகவல்களை சேகரிக்க இலங்கைக்குள் வர அனுமதி வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை…

பற்றைக் காட்டிற்குள் ஆதிவாசிகளைப் போன்று வாழும் வசாவிளான் மக்கள்

வலி.வடக்கு வசாவிளான் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட 35 குடும்பங்கள் அரசாங்க அதிகாரிகளாலும், அரசியல் தலைமைகளினாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில், கடந்த 25 வருடமாக கைதடி – நுணாவில் பகுதியில் உள்ள பற்றைக் காட்டிற்குள் ஆதிவாசிகளின் வாழ்கைக்கு ஒப்பான வாழ்க்கையினை வாழ்ந்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தொழில் வாய்ப்பு, சுகாதரம், கல்வி,…

காணாமல் போனோர் எண்ணிக்கை: பிரஜைகள் குழு மீது ஆணைக்குழு சாடல்

காணாமல் போனோர் எண்ணிக்கை-- பிரஜைகள் குழு "சொல்வதைச் செய்வதில்லை" என்கிறார் மேக்வெல் பரணகம மன்னார் மாவட்டத்தில் 1.47 லட்சம் பேர் காணாமல் போயிருப்பதாக சிற்சில சமயங்களில் கூறப்பட்டிருக்கின்ற போதிலும், காணாமல் போயிருப்பவர்கள் பற்றி விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அங்கிருந்து 312 முறைப்பாடுகளே கிடைத்திருப்பதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர்…