பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
யாழ் குடாவில் நிலங்களை கையகப்படுத்த இராணுவம் முயலுகிறதா?
யாழ் குடாநாட்டில் இராணுவ முகாம் தேவைக்காக எடுக்கப்படவுள்ள காணிகளை அளப்பதற்கு நில அளவையாளர்கள் முற்பட்டபோது, அதனை காணி உரிமையாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்த்து தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், யாழ் குடாநாட்டில் இராணுவ முகாம்களுக்காகப் புதிதாக காணிகள் சுவீகரிக்கப்படவில்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய கொழும்பில் செய்தியாளர்களிடம்…
போர்க்குற்ற விசாரணைக் குழுவுக்கு விசா வழங்க மறுப்பதா? ராமதாஸ் கண்டனம்!
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது சிறீலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இடைவிடாத முயற்சி காரணமாக சிறீலங்கா…
பிரிவினையினை தூண்டாத வகையில் கூட்டமைப்பு செயற்படுமாயின் அதற்கு அரசாங்கம் தடையாக…
நாட்டில் பிரிவினைவாதத்திற்கு துணை போகவில்லை என கூட்டமைப்பு கூறுவது முற்றிலும் பொய்யானதாகும் என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நாட்டின் ஒற்றுமையினை ஏற்படுத்தும் நோக்கில் இணக்கப்பாடொன்றினை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு நகர்கின்றதெனில் அது வரவேற்கத்தக்க விடயமே. பிரிவினையினை தூண்டாத வகையில் தொடர்ந்தும் கூட்டமைப்பு செயற்படுமாயின் அதற்கு அரசாங்கம்…
சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி
பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி இலங்கை அரசாங்கத்தை நோக்கிச் சாய்ந்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்த சுப்பிரமணின் சுவாமி, சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசித் தீர்க்க வேண்டும் என்றும் இலங்கையில்…
வடக்கில் பொதுமக்களின் விருப்பமின்றி காணிகள் சுவீகரிக்கப்படாது என ராஜபக்ச சொல்ல…
வடக்கில் பொதுமக்களின் விருப்பமின்றி அவர்களது காணிகள் சுவீகரிக்கப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தெளிவாகச் சொல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை அச்சுவேலி, இராச வீதியில் பொதுமக்களுடைய 53 பரப்புக் காணிகளை இராணுவ முகாமிற்கு சுவீகரிக்கும் நோக்கில்…
போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டால், வடக்கில் ஏன் இராணுவம் குவிக்கப்படுகிறது?:…
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது உண்மையென்றால் வடக்கில் ஏன் அவ்வளவு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கில் பாரியளவில் அமைதி நிலவினால் ஏன் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.…
ஏழு முக்கிய புலித் தலைவர்கள் மலேசியாவில்…
ஏழு முக்கிய புலித் தலைவர்கள் மலேசியாவில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம், மலேசிய அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சந்தேக நபர்களின் ஆள் அடையாள விபரங்களை இலங்கை அரசாங்கம் மலேசிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கியுள்ளது. முல்லைத்தீவு பதுங்கு குழியொன்றிலிருந்து மீட்கப்பட்ட ஆவணங்களிலிருந்து குறித்த புலி…
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை மூன்று நாடுகளில் நடத்தப்படவுள்ளது!- ஐக்கிய…
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற சர்வதேச விசாரணைக்குழு தமது விசாரணை அமர்வுகளை மூன்று நாடுகளில் நடத்தவுள்ளது. இதன்படி, நியூயோர்க், ஜெனீவா மற்றும் பாங்கொக் ஆகிய நாடுகளிலேயே இந்த அமர்வுகள் நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. தமது விசாரணை அமர்வை இலங்கையில் நடத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம்…
இராணுவ மயப்படுத்தல்கள் அதிகரித்துள்ளன! வடக்கின் ஆளுனராக சிவிலியன் ஒருவரை நியமிக்கவும்!–…
நாட்டில் இராணுவ மயப்படுத்தல்கள் அதிகரித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். வடக்கின் ஆளுனராக இரண்டாவது தடவையாகவும் இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கில் லயனல் பெர்னாண்டோ என்ற சிங்கள ஆளுனர் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றியீட்டலாம் என்ற கருத்து நிலவியது. அவ்வாறான ஓர் சிவிலியன் ஒருவரை ஆளுனராக…
ஐ.நா விசாரணைக்குழு இணைப்பாளரை சந்திக்க விடுத்த அழைப்பை இலங்கை நிராகரித்துள்ளது!
இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஐ.நா விசாரணைக்குழுவின், இணைப்பாளர் சன்ட்ரா பெய்டாஸ் அம்மையார், ஜெனிவாவில் உள்ள இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவை சந்திப்பதற்கு விடுத்த அழைப்பை, இலங்கை நிராகரித்துள்ளது.. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, சன்ட்ரா பெய்டாஸூக்கும் ஜெனிவாவில்…
த.தே.கூட்டமைப்பைத் தடை செய்ய, அது மண் குதிரை அல்ல: அரியநேத்திரன்…
தமிழர்களின் பலமிக்க கட்சியான த.தே.கூட்டமைப்பினை தடை செய்வதென்பது சர்வ சாதாரணமான விடயம் அல்ல என்பதனை ஜாதிக ஹெல உறுமயவும், தேசிய சுதந்திர முன்னணியும் புரிந்து கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். அண்மையில் இந்த இரண்டு கட்சிகளும் கூட்டாக இணைந்து த.தே.கூட்டமைப்பினை தடை செய்ய வேண்டும்…
சர்வதேச அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி ஆணைக்குழு, போர்க்குற்ற விசாரணைக் குழுவாக…
இலங்கையில் போர் முடிவடைந்து ஐந்து வருடங்களின் பின்னர் சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் காரணமாக இலங்கை அரசாங்கம், போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளுர் விசாரணையை நடத்த வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளது. இதனடிப்படையிலேயே காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் முகமாக சர்வதேச நிபுணர்கள் மூவரை, இலங்கை அரசாங்கம் நியமிக்க வேண்டியேற்பட்டது என்று…
போர்க்குற்றம் தொடர்பில் நியாயமான விசாரணையை எதிர்பார்க்கிறேன்: சர்வதேச நிபுணர்- ஆணைக்குழுவின்…
இலங்கை ஜனாதிபதியால் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்காக நியமிக்கப்பட்ட மூன்று சர்வதேச ஆலோசனை நிலை நிபுணர்களின் தலைவர் நியாயமான விசாரணையை முன்னெடுக்கவே தாம் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க சர்வதேச ஆலோசனை குழு ஒன்றை ஜனாதிபதி கடந்த வாரத்தில் நியமித்தார்.…
மகிந்தர் மோடியை எப்படி வலைக்குள் விழுத்தினார் : ரகசிய தகவல்…
மகிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மோடியை தனது வலைக்குள் வீழ்த்திவிட்டார் என்று, கொழும்பில் உள்ள உயர்மட்ட அரசியல் பிரமுகர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. இனி இந்தியா குறித்து நாம் கவலைகொள்ளத் தேவையில்லை, என்று மகிந்தரின் பரிவாரங்கள் இந்த அரசியல் பிரமுகர்களுக்கு தற்போது கூறிவருகிறார்கள். இதன் பின்னணி என்ன ?…
தமிழின அழிப்பில் இன்பம் கண்ட இலங்கை முஸ்லிம்கள் பாவத்தின் சுமையை…
அநியாயங்களையும் அட்டூழியங்களையும் இஸ்லாம் வெறுக்கின்றது. அதை வெறுக்கின்ற மக்களாகவும் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அநியாயங்கள் என்கின்ற போது அதில் மனித உரிமை மீறல்கள் அடங்குகின்றது. ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அரசின் சொகுசு வாழ்க்கையும் ஆடம்பர வாழ்க்கையும் கண்ணை மூடிவிட்டது. ஈவிரக்கத்தையும் மறைத்து விட்டது. மனித…
இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார்
இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ஆருப் ராஹா இன்று மாலை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து பேசப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தாம் இலங்கையில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்புக்கள் பயன் தருபவையாக இருந்தன…
சர்வதேச விசாரணைக் குழுவின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது: ஐ.நா…
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட குழுவின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட முடியாது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை…
புலிகளின் வான் தாக்குதல்களை மலேசியாவில் கைதான குசாந்தனே மேற்கொண்டுள்ளார்?
தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் அண்மையில் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட குசாந்தன் என்ற புலி உறுப்பினரே மேற்கொண்டுள்ளார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு, கட்டுநாயக்க, கொலன்னாவ, கெரவலபிட்டிய மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களை குசாந்தன் வழி நடத்தியுள்ளார்.…
153 அகதிகள் வழக்கு விசாரணை இன்று மெல்பேர்ணில் இடம்பெறுகிறது- அகதிகள்…
இலங்கை அகதிகள் 153 பேரின் வழக்கு விசாரணை இன்று அவுஸ்திரேலியா, மெல்பேர்ணில் இடம்பெறவுள்ளது இதன்போது இந்து சமுத்திர பகுதியில் ஏதோ ஒரு இடத்தில் அவுஸ்திரேலிய சுங்கக் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 153 இலங்கையர்கள் தொடர்பில் வாதவிவாதங்கள் இடம்பெறவுள்ளன. இந்த அகதிகள் ஜன்னல்கள் அற்ற, காற்றுப் புகாத கப்பல் அறைகளில்…
தமிழ் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகிவரும் அரசாங்கம்
தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கத்தின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது. அரசியல் தீர்வுக்கான இணக்கப்பாட்டை எட்டிக்கொள்வதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெற முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாகக் கூறிவருகின்ற நிலையில், அரசாங்கம் இவ்வாறான தீர்மானத்துக்கு…
குறுகிய நோக்கத்தை கைவிட்டால் பிரச்சினைக்கு தீர்வைக் காணலாம்: இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர்
குறுகிய மனப்பான்மையை விட்டு செயற்படும் போது 13வது அரசியல் அமைப்பு, தமிழக மீனவர் பிரச்சினை மற்றும் கச்சத்தீவு பிரச்சினை என்பவற்றை தீர்த்துக் கொள்ள முடியும் என்று இலங்கை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுதர்சன் செனவிரட்ன இந்திய நாளிதழ் ஒன்றுக்கு இந்த கருத்தை தெரிவித்துள்ளார். வரலாறுகளை பகிர்ந்து கொள்ளல்,…
கோத்தபாய- இந்திய விமானப் படைத் தளபதி சந்திப்பு: இராணுவ உறவு…
இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் அருப் ராஹா, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நேற்று சந்தித்து பேசியுள்ளார். நேற்று முன்தினம் இலங்கைக்கு விஜயம் செய்த அவர், நேற்றுக் காலையில், இலங்கை விமானப் படைத் தலைமையகத்துக்கு சென்றிருந்தார். விமானப் படைத் தளபதி எயர் மார்சல் கோலித குணதிலக…
ஐ.நா.விசாரணைக்குழு முன் புலம்பெயர் தமிழர்கள் சாட்சியமளிக்க வேண்டும்!- தமிழ் கூட்டமைப்பு…
கடந்த 15ம் திகதி முதல் இலங்கைக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஐ.நா.விசாரணைக்குழு முன் புலம்பெயர் தமிழர்கள் அணிதிரண்டு சென்று சாட்சியமளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற…
