பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஆயுதம் ஏந்திய போலிஸ் பாதுகாப்புடன் கோவிலுக்கு வந்த இலங்கை அகதி
பூந்தமல்லி இலங்கை அகதிகள் முகாமிலிருந்து அகதி ஒருவர் தமிழக, புதுவை காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் திருநள்ளாறு கோவிலில் சனிக்கிழமை தரிசனம் செய்தார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசிக்க வருவர். நிகழ்வாரம் சனிக்கிழமை காலை 12.45 மணிக்கு ஆயுதம் ஏந்திய…
இலங்கையில் வெள்ளத்தின் சீற்றம் இன்னும் குறையவில்லை; 41 பேர் பலி
இலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். வவுனியாப் பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மழையின் காரணமாக வீடுகளில் நீர் புகுந்ததால் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் பாடசாலைகள்…
கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு சிங்களப் படையினர் எச்சரிக்கை
இலங்கையின் கிழக்கே, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் கிராமத்தில் மக்கள் இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமோ அல்லது வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடமோ முறைப்பாடு செய்யக்கூடாது என்றும் இராணுவத்தினர் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள்…
இலங்கையில் கிழக்கே கரையைநோக்கி கடல்பாம்புகள் படையெடுப்பு- பீதியில் மக்கள்!
மட்டக்களப்பு: இலங்கையில் சிவப்பு மழை, விண்கற்கள் விழுதல், நாய்களின் மர்ம மரணம் போன்றவற்றைத் தொடர்ந்து புதிய பீதியாக கடல் பாம்புகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்திருக்கின்றன. தமிழர் பிரதேசமான இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள குளத்தில் பெரும் எண்ணிக்கையிலான பாம்புகள் நேற்று காலை படையெடுத்திருக்கின்றன.…
புலிகளை நினைவுகூருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: ராஜபக்சே
இலங்கையில் போர் நடைபெற்றுமுடிந்து சில ஆண்டுகள் கடந்தாலும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட ஒன்று. ஆகவே புலிகள் அமைப்பை நினைவு கூறுவதை தாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையின் தெற்கே சிங்கள கிளர்ச்சியாளர்கள் ஜே.வி.பி.யினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலைப்…
படகுகளைத் தடுக்க இலங்கை- ஆஸ்திரேலியா கூட்டுத் திட்டம்
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் ஆட்களை கொண்டுசெல்லும் சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக இலங்கையின் புலனாய்வு மற்றும் ஆயுதப் படையினருக்கு பயிற்சி வழங்கப் போவதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பாப் கார் தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலமாக தஞ்சம்கோரி வருவோரை தடுத்து நிறுத்தும் ஆஸ்திரேலிய அரசின் முக்கிய செயற்திட்டத்தின்…
தமிழருக்காக குரல்கொடுத்துவந்த சிங்களவரை நாடுகடத்திய சிங்கப்பூர் அரசு
இலங்கை அரசின் தமிழருக்கெதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல்கொடுத்து வரும் ஆஸ்திரேலிய Read More
வவுனியாவில் விடுதலைப் புலிகளை சந்திக்கிறார் இந்திய இராணுவ தளபதி
கொழும்பு: இந்திய இராணுவ தளபதி பிக்ரம் சிங் நாளை மறுநாள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். இந்திய இராணுவ தளபதி பிக்ரம்சிங் தலைமையில் மூத்தஈராணுவ அதிகாரிகள் அடங்கிய குழு இலங்கைக்கு புதன்கிழமையன்று செல்கிறது. இந்த பயணத்தின் போது இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே…
‘இராணுவத்தில் சேர்ந்த பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகவில்லை’
இலங்கை இராணுவத்தில் சேர்க்கப்பட்டு சுகவீனம் உற்று கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 தமிழ் பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவர்கள் எவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ளார். அந்தப் பெண்கள் உள்மன முரண்பாடு என்னும் உள நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும், போருக்கு பின்னரான நிலையில் வன்னியில் பல இடங்களில்…
ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேரை இறுதிப் போரில் காணவில்லை!
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் பின்னர் ஒரு இலட்சத்து ஆறாயிரம் பொது மக்களை காணவில்லை என இலங்கைக்கான பிபிசியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் பிரான்சிஸ் ஹெரிசன் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசித்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தால்…
ஆஸ்திரேலியாவிலிருந்து 42 பேர் இலங்கைக்கு நாடு கடத்தல்
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று புகலிடக் கோரிக்கை நிராக்கரிக்கப்பட்ட 42 பேர் இன்று இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைய செல்லுபடியற்ற விசா மற்றும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க தகுதியின்மை உள்ளிட்ட காரணங்களால் குறித்த இலைங்கையர்களது புகலிடக் கோரிக்கை…
இலங்கையின் பல பாகங்களிலும் பறக்கும் கற்கள் : மக்கள் பீதி
இலங்கையின் பல பகுதிகளில் இரவு வேளைகளில் பறக்கும் ஒளிப்பிழம்புகளை தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் கம்பஹா, சிலாபம், அநுராதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் தென்பட்ட இந்த ஒளிப்பிழம்புகள் அனேகமாக ஒரு கோளாக இருக்கலாம் என இலங்கை…
இலங்கை முழுவதும் சட்டவல்லுநர்கள் போராட்டம்
இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை வாபஸ்பெறுமாறு கோரி, இலங்கையின் பல பாகங்களிலும் சட்டவல்லுநர்கள் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த தீர்மானத்துக்கு எதிராக சுமார் ஒரு மணிநேரம் பணி புறக்கணிப்பை மேற்கொள்ளுமாறு நாடெங்கிலும் உள்ள சட்டவல்லுநர்களை சட்டவல்லுநர்கள் சங்கம் கேட்டிருந்தது. இப்படியான ஒரு…
‘இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் ஐ.நா படையை நிறுத்த வேண்டும்’
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் அந்நாட்டு சிங்கள இராணுவத்தை வெளியேற்றிவிட்டு தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை ஐக்கிய நாடுகள் படையை நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக் கழக…
நீதிபதி ஷிராணிக்கு ஆதரவாக கொழும்பில் மேலும் ஒரு ஆர்ப்பாட்டம்
இலங்கையின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக அரசாங்கம் கொண்டுவந்துள்ள பதவி நீக்க கண்டன நடைமுறை மீட்டுக்கொள்ளபடவேண்டும் என்று வலியுறுத்தி அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ள்ளனர். அரசியல் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளை மீறி அரசாங்கம் தலைமை நீதிபதியை பதவிறக்க முயல்கிறது என…
அனைத்துலக மனித உரிமைகள் தினம்: இலங்கையில் அமைதி ஆர்ப்பாட்டங்கள்
அனைத்துலக மனித உரிமைகள் தினத்தையொட்டி இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்த்தில், கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளமையை எதிர்த்தும், அவர்கள் அங்கிருந்து வெளியேற…
போர்க்குற்றிவாளி சவேந்திர சில்வாவை தென்னாப்பிரிக்கா நிராகரித்தது!
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களோடு சம்மந்தப்பட்டவர் என்று செயற்பாட்டாளர்களால் வர்ணிக்கப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை தென் ஆப்பிரிக்காவுக்கான இலங்கைத் துணை தூதராக நியமிப்பதை அந்த நாடு ஏற்கவில்லை என்று ஒரு வழக்காடும் அமைப்பு தெரிவித்துள்ளது. சவேந்திர சில்வாவை தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பும் முடிவை அமைச்சரவை ஒப்புக்…
தியாகி திலீபனின் நினைவுச் சின்னம் சிங்கள இனவாதிகளால் அழிப்பு
யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் நினைவுச் சின்னம் அடையாளம் தெரியாதவர்களினால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இது சிங்கள இனவாதிகளின் அட்டூழிச் செயலாக இருக்ககூடும் என கருத்தப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினராகிய திலீபன் இந்திய அமைதிப்படை இலங்கையின் வடபகுதியில் நிலைகொண்டிருந்த போது, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து…
‘பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை’யாக யாழில் பல தமிழர்கள் கைது
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை எனக் கூறி இலங்கையின் வடக்கே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு போலிசாரால் 25 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து 'பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக' குற்றம்சாட்டப்பட்டு யாழ்ப்பாணம் பகுதியில் 10 பேர்…
‘தமிழ் மாணவர்களுக்கெதிரான அடக்குமுறை முட்டாள்தனமானது’
இலங்கையின் வடக்கே யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையானது முட்டாள்தனமான செயலாகும் Read More
தமிழ் மாணவர்களின் கைதைக் கண்டித்து உலகமெங்கிருந்தும் எதிர்ப்பலைகள்!
சிங்கள இனவாத அரசின் இந்த அடக்குமுறையினைக் கண்டித்தும் கைதான மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டிருக்கும் படையினரை வெளியேறும்படி தெரிவித்தும் கனடாவில், பிரித்தானியா, பிரான்ஸ் என பல நாடுகளிலுள்ள பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அந்நாட்டில் வாழும் ஏனைய இன மாணவர்களும் இணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களில்…
மீண்டும் குழு அமைக்கிறார் ஐநா செயலாளர் பான் கீ மூன்!
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின்போது ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சாள்ஸ் பெட்றி குழுவின் அறிக்கையை, மதிப்பீடு செய்து அதன் பரிந்துரைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு புதிய குழுவொன்றை ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ளார். ஐ.நாவின் பிரதிச் செயலர் ஜோன் எலியாசன்…
ஆயுதத்தை தூக்குமாறு சிங்கள அரசாங்கமே கோருகின்றது : மனோ எம்பி…
ஆயுதங்களை தூக்குவதற்கு நாம் விரும்பவில்லை எனினும் சிங்கள அரசாங்கமே மீண்டும் ஆயுதத்தை தூக்குமாறு தமிழ் இளைஞர்களிடம் கோருகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் நிலையான சமாதானத்தை எதிர்பார்க்க முடியவில்லை என்பதுடன் தமிழர்கள் மீண்டும் ஆயுதத்தை தூக்குவதற்கான சூழ்நிலையை…
