நூறுக்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை

இறுதிப் போரின் பின்னரும், நலன்புரி நிலையத்தில் இருந்த போதும் இராணுவத்தினரிடம் சரணடைந்து ஓர் ஆண்டு புனர்வாழ்வுப் பயற்சியளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 313 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் பெரும்பலானோர் நீதிமன்ற உத்தரவையடுத்து புனர்வாழ்வுப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. சிங்கள…

இலங்கை தலைமை நீதிபதியை பணி நீக்கம் செய்தார் ராஜபக்சே

இலங்கையின் தலைமை நீதிபதி பணியிலிருந்து ஷிராணி பண்டாரநாயக்கவை பணி நீக்கம் செய்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். ஷிராணிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கொண்டுவந்திருந்த கண்டன பணி நீக்கத் தீர்மானத்தை ஆதரித்து நாடாளுமன்றம் வாக்களித்து ஓரிரு நாட்களில் ஜனாதிபதியின் இந்த உத்தரவு வருகிறது. ஷிராணியை பொறுப்பிலிருந்து அகற்றும்…

விடுதலைப்புலி ஆதரவாளர்களை சந்திப்பதாக எதிர்க்கட்சி மீது குற்றச்சாட்டு

இலங்கையின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பிரிட்டனுக்கு பயணமொன்றை மேற்கொண்டு, அங்குள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களை இரகசியமாக சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள காமல்வெல்த் மாநாட்டை சீர்குலைக்க புலி ஆதரவு அமைப்புக்கள் முயற்சிக்கின்றன. இந்நிலையில்…

சர்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை பணிப் பெண்னுக்கு சவுதி அரேபியா நிறைவேற்றிய…

இலங்கை பணிப்பெண்னான ரிசானா நஃபீக் 2005 ஆம் ஆண்டில் தனது பராமரிப்பில் இருந்த குழந்தையை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சவுதி அரேபிய அரசாங்கத்தினால் அவருக்கு மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. 4 மாத குழந்தையை கொலை செய்ததாக தன் மீது சுமத்தப்பட்ட…

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கை அகதிகள் இந்தியாவில் கைது

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்ற இலங்கை அகதிகளை தமிழக காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். தமிழகத்தில் மதுரை, ராமேஸ்வரம் மண்டபம் பகுதிகளில் உள்ள பல்வேறு முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் ஒரு முகவர் மூலம் சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர். இதற்காக 28 பெண்கள், 10…

யாழ் பல்கலைக் கழகம் மீண்டும் திறப்பு; மாணவர்கள் வருகை குறைவு

ஒரு மாத காலத்திற்கு மேலாக முடங்கியிருந்த யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் மாணவர் வருகை மிகவும் குறைந்திருந்ததாகவே தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைக்கழகத்தின் சில வகுப்புகளுக்கான விரிவுரைகள் மட்டுமே நடைபெற்றதாகவும், இதனால் ஏனைய பாடநெறிகளில் பயிலும் மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்திற்கு வந்துவிட்டுச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

தமிழர் ஒற்றுமைக்கு ராமதாஸின் சாதி வெறித்தனம் சவாலாக உள்ளது

மலேசிய மண்ணில் தமிழகத்தின் 'மக்கள் தொலைக்காட்சி'யின் 10-ஆம் ஆண்டு விழா இன்று (09/01/2013) புதன்கிழமை ஈப்போவில் நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு வருகைதரும் பா.ம.க தலைவரும் மக்கள் தொலைக்காட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸை, உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் உன்னிப்பாக அவதானிக்கிறது. உலகத் தமிழர்களின் ஒற்றுமைக்கு ராமதாஸின் சாதி வெறித்தனம் சவாலாக…

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறப்படுகின்றது: கனேடிய அமைச்சர்

இலங்கையில் நீதித்துறை சுயாதீனம், அரசியல் நல்லிணக்கம், மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறல் Read More

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை காரணமாக இலங்கை அகதி தற்கொலை

ஆஸ்திரேலியா, பேர்த் நகரிலுள்ள அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை அகதியொருவர் தனது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன. தற்கொலை செய்துகொண்ட நபரின் மனைவியும் பிள்ளையும் இலங்கையில் வசிப்பதாக…

யாழ் பல்கலைக் கழகம் மீண்டும் ஆரம்பிக்கப்படாவிட்டால்; அது மூடப்படும் :…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்று முதல் முழுமையாக செயற்படத் தொடங்கும் எனவும் கைது செய்யப்பட்டுள்ள நான்கு மாணவர்களும் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படுவார்கள் என தான் நம்புவதாகவும் இலங்கை உயர்கல்வி அமைச்சர் தெரிவித்தார். எனினும் இன்று திங்கட்கிழமை அப்பல்கலைக்கழகம் முழுமையாக செயற்பட ஆரம்பிக்காவிட்டால், அதை மூடுவது என்றும் கடந்த வாரம் நடைபெற்ற…

பள்ளிவாசலையும், முஸ்லிம்களையும் அகற்றக்கோரி புத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்

அநுராதபுரத்தில் மல்வத்தை ஓயா என்னும் இடத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றையும், அங்கு வாழும் முஸ்லிம் குடும்பங்களையும் அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று புத்த பிக்குகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அங்கு அமைந்திருக்கும் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஆகியவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் அங்கு வாழ்ந்து வருகின்ற…

இலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் கற்பிக்க இராணுவத்தினர்!

இலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. வருட இறுதி விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காகப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில், வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு சிங்கள மொழியைக் கற்பிப்பதற்கான செயற்பாடு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.…

‘தலைமை நீதிபதியை விசாரிக்க நாடாளுமன்ற குழுவுக்கு அதிகாரம் இல்லை’

இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க இலங்கை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என, இலங்கை அரசியல் சாசனத்துக்கு நாட்டின் உச்சநீதிமன்றம் வழங்கிய விளக்கத்தின் மூலமாக, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க தொடுத்த இரண்டு மனுக்களை விசாரணைக்கு…

தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும் : அரிமாவளவன் பேச்சு [காணொளி இணைப்பு]

நமக்கென்று ஓர் அமைப்பும் நமக்கென்று ஒரு நாடும் உருவாகினால்தான் இவ்வுலகில் தமிழர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழமுடியும் என்கிறார் தமிழகத்தில் இயங்கும் தமிழர் களம் என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் அரிமாவளவன். செம்பருத்திக்கு இணையத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்தார். தமிழகத்திலும் சரி உலகமெங்கிலும் சரி…

அனைத்துலகத்தின் தலையீடு இல்லாமல் தீர்வு காணமுடியாது : TNA

இலங்கையில் தமிழர்களுக்கான ஓர் அரசியல் தீர்வை அனைத்துல சமூகத்தால் மட்டுமே கொண்டுவரமுடியும் என்றும் அதற்கான அழுத்தத்தை அனைத்துலக சமூகம் இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் ஆற்றல் இன்மையையும் விருப்பமின்மையையும் இலங்கை அரசாங்கம் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.…

இலங்கை நீதித்துறை குறித்து ஐநா சிறப்பு பிரதிநிதி கவலை

இலங்கையில் நீதிபதிகளும், நீதித்துறை அதிகாரிகளும் கூடுதலான அச்சுறுத்தல் மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகின்ற சம்பவங்கள், நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்கு ஊறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக் கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி கவலை வெளியிட்டுள்ளார். தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க மீது கொண்டு வரப்படுள்ள பதவி நீக்க…

தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உலகத் தமிழர்கள் எழுச்சி பெறவேண்டும்

உலகின் பல பகுதிகளில் வாழும் 12 கோடி தமிழர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் நிலைநாட்ட உலகத்தமிழர்கள் அனைவரும் எழுச்சி பெற்று ஓரணியில் இணைய வேண்டும் என தமிழ் அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிள்ளான் நகராண்மைக் கழக கேட்போர் கூடத்தில் மாலை மணி 4-க்கு ஆரம்பமான 'தமிழ்…

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சொந்த நாட்டிற்கே திரும்ப விருப்பம்

ஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சட்டவிரோதமான முறையில் சென்ற மேலும் 30 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சொந்த நாட்டிற்கே திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களை நெஹ்ரூ தீவு முகாமிற்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதன்போது நெஹ்ரூ தீவு முகாமில் இருப்பதைவிட இலங்கைக்கு திரும்புவது மேலானது என தாம் எண்ணுவதாக…

விசாரணைக்கு வருமாறு கஜேந்திரகுமாருக்கு TID அழைப்பாணை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்கு வரவேண்டுமென்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு வருமாறு தனது வீட்டுக்கு கடிதம் வந்துள்ளதாகவும், ஆனால் அதற்கு முன்னதாகவே தான் வெளிநாடு சென்றுவிட்டதால், நாடு திரும்பிய பின்னரே விசாரணைக்கு சமுகமளிக்கமுடியும் என்று தனது கட்சியின்…

ஜெயலலிதா உருவ பொம்மை எரிக்க முயன்ற 6 பேர் கைது

சென்னை சத்தியமூர்த்தி பவன் அருகில், முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை, எரிக்க முயன்ற, அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி தலைவர், சத்தியசீலன் உட்பட 6 பேரை, போலீசார் கைது செய்தனர். டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, அவரை அவமரியாதை…

‘தமிழீழம் மற்றும் தமிழ்த் தேசியத்தின் இன்றைய நிலை’ குறித்த கலந்துரையாடல்

உலகின் எந்த ஒரு இனமும் கண்டிராத துயரையும் இழப்பையும் தமிழீழ தேசமும் தமிழர்களும் கண்டிருக்கிறார்கள். தமிழீழ தேசத்தின் விடுதலையை நெஞ்சினில் சுமந்து நின்ற சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எமது உறவுகளை சொற்ப நாட்களில் கொடூரமாக கொன்று புதைத்தது சிங்கள பேரினவாத அரசு. தாம் நேசித்த தாயை, தந்தையை,…

பிரபாகரன் படத்தை வைத்திருக்கவில்லை : பல்கலைக்கழக மாணவர்கள்

இலங்கையின் வடக்கே யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் தடைபட்டு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகும் நிலையில், அங்கு கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிவகைகள் குறித்து பல்கலைக்கழக நிரிவாகமும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களும் முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, யாழ் பல்கலைக்கழகத்தின் முக்கிய பேராசிரியர்கள் குழு…

ஆஸ்திரேலியாவில் ஈரான் மற்றும் இலங்கை தமிழ் அகதிகளிடையே கைகலப்பு

ஆஸ்ரேலியா, மனுஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கிடையே கிறிஸ்மஸ் தினத்தன்று ஏற்பட்ட கைகலப்பில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஆஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மனுஸ் தீவு அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் ஈரான் அகதிகளுக்கும் இடையில் இம்மோதல் இடம்பெற்றுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் உறுதி செய்துள்ளார்.…