வீட்டு வேலைக்காக இலங்கை பெண்கள் சவுதி அரேபியா செல்ல தடை

துபாய் : இலங்கை பெண்கள், சவுதி அரேபியாவில், வீட்டு வேலை செய்ய செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில், இலங்கையை சேர்ந்த, ஐந்து லட்சம் பெண்கள், வீட்டு வேலை செய்கின்றனர். இவர்கள், அந்நாட்டு எஜமானர்களால் பல்வேறு கொடுமைக்கு ஆளாகின்றனர். வீட்டு வேலை செய்யும் பெண்களின் உடலில் ஆணி அடிப்பது,…

தமிழீழ தலைநகரில் சுதந்திர தின நிகழ்வை கொண்டாடிய ராஜபக்சே

இலங்கையின் 65-வது சுதந்திர தின நிகழ்வு கிழக்கு நகரான திருகோணமலையில் நேற்று திங்கட்கிழமை (04-02-2013) நடைபெற்றது. நாட்டில் எல்லோரும் சம உரிமையோடு வாழ்வதே நல்ல தீர்வு என்று சுதந்திர தின விழா மேடையில் பேசிய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ, இனபேதம் போலவே மதபேதமும் நாட்டில் பிரிவினை உருவாக…

பிரிட்டன் வழக்கறிஞர்களுக்கு இலங்கை அரசு தடை

இலங்கை தலைமை நீதிபதியை நீக்கியது தொடர்பாக, விசாரிக்க திட்டமிட்ட பிரிட்டன், வழக்கறிஞர்கள் குழுவுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இலங்கை தலைமை நீதிபதியாக இருந்தவர், ஷிரானி பண்டாரநாயகே. அந்நாட்டின் முதல் பெண், தலைமை நீதிபதியும் இவர் தான். அரசியல் குற்றச்சாட்டுகளின் பேரில், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானத்தின்…

கருணாநிதியை சும்மா விட மாட்டேன்; ஜெயலலிதா ஆவேசம்

சென்னை: விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக நான் கமலுக்கு எதிராக நடந்து கொண்டதாகவும், எம்.ஜி.ஆரிடம் கமல்ஹாசன் குறித்து கடிதம் எழுதியதாகவும் கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அவரை அப்படியே விட்டு விட முடியாது. அவர் மீது உரிய வகையில் அவதூறு வழக்குகள் போடப்படும் என்று எச்சரித்துள்ளார்…

இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஒத்தாசை வழங்குவதற்கு இலங்கையில் தடை!

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளான அல்-குவைதா மற்றும் தலிபான் அடங்கலாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி ஒத்தாசை வழங்குவதை தடை செய்யும் திருத்தச் சட்டமூலமொன்று இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கடப்பாடு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தால் மேற்படி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது…

‘கருப்பு ஜனவரி’ ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஊடகவியலாளர்கள்

கடந்த சில ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில்  ஊடகவியலாளர்களுக்கு எதிராக இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களை நினைவுகூரும் நோக்கில் "கருப்பு ஜனவரி" என்ற பெயரில் இலங்கை தலைநகர் கொழும்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும், சிவில் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் 17…

அனைத்துலுக போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்: அமெரிக்க செனட் சபை

இலங்கைக்கு எதிராக அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என அமெரிக்காவின் இரண்டு செனட்டர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். போர்க்குற்ற விடயத்தில் இலங்கை போதிய கவனத்தை செலுத்தவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையிலான ஜனநாயக கட்சியின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய பதவியைக் கொண்டுள்ள…

‘யாழ்ப்பாணத்தில் அமெரிக்க துணைத் தூதரகம் வேண்டும்’

ஏழுநாள் பயணமாக இலங்கை சென்றுள்ள மூவரடங்கிய அமெரிக்க தூதுக்குழுவினரிடம் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க துணைத் தூதரக அலுவலகம் ஒன்று திறக்கப்பட வேண்டும் என்று யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். போர் முடிவடைந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்ட போதிலும், அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்…

இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் கொண்டுவரப்படும் : அமெரிக்கா

ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவரவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. போர்க்கால குற்றங்கள் தொடர்பில் இலங்கைப் படையினர் மீது விசாரணை நடத்த வேண்டுமென்று இலங்கை அரசைப் பலவந்தப்படுத்தும் நோக்கோடு இந்த தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அமெரிக்கா உயர்மட்ட இராஜதந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் மார்ச்…

நாடுகடந்த தமிழீழ அரசைப் பார்த்து அஞ்சும் இலங்கை அதிபர் ராஜபக்ச

தமிழீழம் என்ற இலட்சியத்தை அனைத்துலக அரசியல் வடிவத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டை பார்த்து இலங்கை அதிபரும் போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்சே அஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ தனிநாட்டுக்காக அனைத்துலக ரீதியில் ஆதரவை திரட்ட அமரிக்காவில் இருந்து விடுதலைப் புலிகளின் உருத்ரகுமாரன் செயற்படுவது பிரச்னைக்குரிய விடயம் என்று…

இலங்கை இராணுவ அதிகாரிக்கு பயிற்சியளிக்க அமெரிக்கா மறுப்பு

இலங்கை இராணுவ அதிகாரி ஒருவருக்கு இராணுவ பயிற்சியளிக்க அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது. இலங்கை இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணிபுரிபவர் சுதானந்த ரனசிங்கே. இவருக்கு அமெரிக்காவில் இராணுவ பயிற்சியளிக்க அந்நாடு மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு இலங்கை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜபக்சேவின்…

சிங்கள இனவெறியின் உச்சம்… இலங்கையில் 367 இந்து கோவில்கள் எரிப்பு!

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் தடயங்கயை அழிக்கும் முயற்சியில் ராஜபக்சே அரசு ஈடுபட்டு வருகிறது. அங்கு சிங்களர்களின் குடியேற்றம் ஒருபுறம் நடப்பதைப்போல அங்கிருந்த இந்து ஆலயங்கள் சத்தமில்லாமல் அழிக்கப்பட்டுவிட்டன. தமிழகர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்த 367 கோவில்கள் எரிக்கப்பட்டுவிட்டதாக இண்டர்நேசனல் பாலிசி டைஜெஸ்ட் இதழில் அதிர்ச்சியூட்டும் தகவல்…

‘இலங்கைப் போரில் மக்களின் இழப்பை தவிர்க்க இராணுவம் முயற்சித்ததாம்’

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவம் பொதுமக்களின் இழப்பை தவிர்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று இராணுவ உள்ளக விசாரணை அறிக்கை ஒன்று பரிந்துரைத்துள்ளது. இலங்கைப் போரின் இறுதிக்கட்டம் குறித்து ஆராய்ந்த நல்லிணக்க ஆணைக்குழு இந்த போர் நிகழ்வுகள் குறித்து இலங்கை இராணுவமும் ஒரு…

‘தமிழர்களின் சம உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’

இலங்கைத் தமிழ் மக்களின் சம உரிமைகளை உறுதி செய்ய ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து அந்த சமூகத்தினருடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென இந்தியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. அத்துடன், போர் காரணமாக இடம்பெயர்ந்த…

தடுத்துவைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களில் இருவர் விடுதலை

இலங்கையில் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக கைது செய்யப்பட்ட இரண்டு பல்கலைக்கழக மாணவர்களை சிங்கள அரசு விடுதலை செய்துள்ளது. விடுதலைப் போரில் சாவினை தழுவிய விடுதலைப் புலிகளின் நினைவாக வீரவணக்க நாள் கூட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் கடந்த நவம்பர் மாதத்தில் நடத்தினர். அப்போது புலிகள் ஆதரவுப்…

தமிழரின் மக்கள்தொகை 11 விழுக்காடு உயர்வு; சிங்களவரின் மக்கள்தொகையில் வீழ்ச்சி

இலங்கையின் மத்திய மாநிலம் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மக்களின் மக்கள்தொகை 11 விழுக்காட்டால் உயர்வடைந்துள்ளதோடு சிங்கள இனத்தவரின் மக்கள் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை மக்கள் தொகை கணிப்பீட்டுத் துறையால், 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணிப்பீட்டின் மூலம் மேற்படி தகவல் தெரியவந்துள்ளது. 2007-ஆம் ஆண்டில் சிங்கள் மக்களின்…

தமிழ்க் கிராமங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்ற முயற்சி!

இலங்கையில் தமிழ் மொழி, தமிழ்க் கலாசாரம், ஹிந்து மதம் மற்றும் தமிழர் பண்பாடுகளை திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்ப் பகுதிகளையும், தமிழர்களையும் அழிக்கும் முயற்சியிலும் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. தமிழ்க் கிராமங்களின் பெயர்களுக்கு சிங்களப் பெயர்கள் மாற்றி…

இலங்கையின் கிழக்கே அருகிவரும் நண்டுகளும் பாடும் மீன்களும்

இலங்கையில் அருகிவரும் பலவகையான நன்னீர் உயிரினங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றில் நன்னீர் நண்டு வகைகள் பலவும் அடங்குவதாகவும் செய்திகள் வருகின்றன. இலங்கைக்கு மாத்திரமே உரித்தான இந்த நன்னீர் உயிரினங்கள் பல இவ்வாறு அருகுவதற்கு அவை கடத்தப்படுவது மாத்திரமன்றி, வேறு காரணங்களும் இருப்பதாக மட்டக்களப்பு, கிழக்குப் பல்கலைக்கழகத்தின்…

இலங்கை அரசு ஐ.நா சபைக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை

இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எவ்வகையிலும் நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்கவில்லை என்று…

புலிகளின் தலைவர் பிரபாகரனை புகழ்ந்த சிங்களப் படைச் சிப்பாய்!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் ஆட்சி வன்னியில் நீடித்தால் அங்கு எந்தவிதமான சீர்கேடுகளும் நடந்திருக்காது என்று சிங்களப் படைச் சிப்பாய் ஒருவர் ஒப்புக்கொண்ட உண்மைச் சம்பவமொன்றை வவுனியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் சிறிலங்காவிலிருந்து ஒலிபரப்பாகும் சூரியன் எவ்.எம் அலைவரிசை மூலமாக அம்பலப்படுத்தியுள்ளார். இச் சம்பவமானது ஒட்டுமொத்த…

தலைமை நீதிபதி நீக்கப்பட்டது குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது

இலங்கையின் தலைமை தலைமை நீதிபதி ஷிராணி பண்டார நாயக்காவை , ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம் பதவி நீக்கியது குறித்து அமெரிக்கா தனது அதிருப்தியினை தெரிவித்துள்ளது. பதவியிறக்குவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நிபந்தனைகளின் அடிப்படையில் திருப்திகரமானவை அல்ல என்று அமெரிக்க அரசுத்துறையின் பேச்சாளரான விக்டோரியா நூலண்ட்…

ராஜபக்சேவிற்கு எதிராக ஒன்றுசேரும் இரு சிங்கள தலைவர்கள்!

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக முன்னாள் தலைமை நீதிபதி சிராணி பண்டாரநாயக்கவுடன் இணைந்து செயற்பட தயார் என்று இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிராணி பண்டாரநாயக்க ராஜபக்சே தலைமையிலான அரசினால் பழிவாங்கப்பட்டு அவருக்கும் தமது நிலையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மறைந்துபோய் கொண்டிருக்கும் ஜனநாயகத்தை நிலைநாட்ட பண்டாரநாயக்கவுடன்…