ஐ.எஸ்.அமைப்பில் தொடர்புடைய 7 நபர்கள்: அதிரடி நடவடிக்கை எடுத்த ஸ்பெயின்…

ஸ்பெயின் நாட்டில் ஐ.எஸ்.அமைப்பில் தொடர்புடைய 7 நபர்கள் மீது அந்த நாட்டு பொலிசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் ஐ.எஸ்.அமைப்பு மற்றும் ஜபத் அல் நுஸ்ரா அமைப்புகளில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். Valencia and Alicante மாகாணத்தில் இருந்து செயல்பட்டு…

அகதிகளின் பாதுகாப்பிற்கு வந்த பொலிசாரை சரமாரியாக தாக்கிய போராட்டக்காரர்கள்: பிரான்ஸில்…

பிரான்ஸ் நாட்டில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள அகதிகளை பாதுகாக்க வந்த பொலிசாரை சுமார் 150 பேர் கொண்ட போராட்டக்காரர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு பிரான்ஸில் உள்ள கெலைஸ் என்ற பகுதியில் 2 அகதிகள் முகாம்கள் அமைந்துள்ளது. இங்கு சுமார் 3,700 அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.…

உலக நாடுகளை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்திய வடகொரியா!

நீண்டதூரம் இலக்கை கொண்ட ராக்கெட்டை வடகொரியா ஏவி உள்ளது உலகநாடுகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா.வின் தடையையும் மீறி வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. வடகொரியாவின் இச்செயல் ஆத்திரமூட்டும் செயலாகும் என்று அமெரிக்கா…

முடங்கியது ஐ.எஸ் அமைப்பின் டுவிட்டர் கணக்குகள்!

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகவும், ஆட்களை சேர்க்கவும் சமூக வலைதளங்களில் பலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவோரின் கணக்குகளை கண்காணிக்க டுவிட்டர் நிறுவனம் பல குழுக்களை அமைத்திருந்தது. இந்தக் குழுக்கள் கடந்த 8 மாதங்களுக்கும் மேல் டுவிட்டர் கணக்குகளை பயன்படுத்துவோரை கண்காணித்து வந்தது. இதையடுத்து…

வெளிஉலக தொடர்பு இல்லாமல் வாழ்ந்துவரும் பூர்வக்குடி மக்கள்

இந்தோனேசிய தீவுகளில் வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழ்ந்துவரும் ஆதிவாசிகள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளன. மலேசியாவின் கெலண்டன் பகுதியை சேர்ந்தவர் முகமது சாலே பின் டோலாஹ். புகைப்படத்துறை ஆர்வமுடைய இவர். பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்கள், சூழல் ஆகியவற்றை புகைப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்தோனேசியாவின்…

தைவானில் பயங்கர நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கி தவிப்பு

தைவான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின தைவான் நாட்டில் ரிக்டர் 6.4 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பெரும்பாலான கட்டிடங்கள் குலுங்கின. ஒரு சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில்…

சிரியாவில் இயல்பு நிலை திரும்ப 10 பில்லியன் டொலர் நன்கொடை:…

உள்நாட்டு யுத்தத்தால் சீர்குழைந்துள்ள சிரியாவில் இயல்பு நிலை திரும்புவதற்காக உலக நாடுகள் சுமார் 10 பில்லியன் டொலர் நன்கொடை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானிய தலைநகரமான லண்டனில் நேற்று நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற பிரித்தானிய பிரதமரான கமெரூன் பேசியபோது, ‘ஒரு நாளில்…

கொலை செய்வதற்கு முன்பு ஆங்கிலத்தில் எச்சரிக்கை விடுக்கும் ஐ.எஸ். சிறுவன்

ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த சிறுவன் ஒருவன் கொலை செய்வதற்கு முன்பு ஆங்கிலத்தில் எச்சரிக்கை விடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் அவ்வப்போது குழந்தைகள் மூலம் கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். அவர்களின் இச்செயலுக்கு உலகம் முழுவதிலுமிருந்து கண்டனங்கள் குவிந்தாலும் தொடர்ந்து இத்தகைய செயல்களில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் சிறுவன் ஒருவன்…

வான்வழித் தாக்குதலால் தரைமட்டமான ஐ.எஸ் வானொலி நிலையம்

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் இயக்கி வந்த வானொலி நிலையம் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டது. இது குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் நேற்று அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் "கலீபாவின் குரல்' (Voice of the Caliphate) என்ற…

அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ரஷ்ய…

அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் ராணுவத்தை விட ரஷ்யாவின் ராணுவம் பலம் பொருந்தியதாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் ராணுவப்படைகள் தொடர்பாக RAND கார்ப்ரேசன் நிறுவனம் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. கடந்த 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.…

எத்தியோப்பியாவில் தலைவிரித்தாடும் பஞ்சம்; தலைமுறை காணாத வறட்சி

எத்தியோப்பியாவில் பல தசாப்தங்களில் இல்லாத கடும் வறட்சி நிலவுகிறது. ஒரு கோடிக்கும் அதிகமானோர் பட்டினியால் வாடுகின்றனர். சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஐநா தலைமைச் செயலர் அங்கு சென்றுள்ளார். -BBC

மியன்மாரில் சிறுபான்மை மக்களை இலக்கு வைக்கும் இராணுவம்

மியன்மாரில் கடந்த ஐம்பது வருடங்களில் முதல் தடவையாக சுதந்திரமாக நடத்தப்பட்ட தேர்தலில் தேர்வான நாடாளுமன்றம் இன்று ஆரம்பமானது. ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி, போட்டியிட்டவற்றில் எண்பது வீதமான இடங்களை பெற்றது. கடந்த நவம்பர் மாதத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்றார்கள். மொத்த இடங்களில்…

20 ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து கொலை

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் உள்ள இடங்களை ஈராக் படைகள் ஒவ்வொன்றாக மீட்டு வருகின்றனர். சமீபத்தில் ரமாதி நகர் மீட்கப்பட்டது. தற்போது ஈராக்கின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மொசூல் நகரை மீட்பதற்கு ஈராக் படைகள்…

சீகா வைரஸ் தாக்கம் – உலகின் அவசர நிலையாகப் பிரகடனம்

உலக சுகாதார நிறுவனம் இன்று சீகா வைரஸ் தாக்கத்தை முழு உலகிற்குமான சுகாதார அவசரநிலையாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. WHO என அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளவையின் அங்கமான உலக சுகாதார நிறுவனம் தோற்றம் பெற்றதிலிருந்து இன்று விடுத்துள்ளதுடன் சேர்த்து நான்கு அவசர அழைப்புக்களையே விடுத்துள்ளது. லத்தீன் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில்…

ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்கும்: துருக்கி எச்சரிக்கை!

துருக்கி வான்பகுதியில் ரஷ்ய விமானம் மீண்டும் அத்துமீறி நுழைந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள துருக்கி அரசு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் அரங்கேறும் பட்சத்தில், ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று துருக்கி எச்சரித்துள்ளது. ரஷ்ய நாட்டின் போர் விமானம் ஒன்று, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தங்களது வான்…

முதல் முறையாக மசூதிக்கு செல்லும் ஒபாமா!

அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் மசூதிக்கு முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருகை தர உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மத்திய அட்லாண்டிக் பிரதேசத்தில் அமைந்துள்ள மேரிலாந்து மாநிலத்தில் உள்ள பாட்லிமோர் நகருக்கு விரைவில் சென்று அங்கு பெரும்பான்மையாக வாழும் இஸ்லாமிய மக்களை அங்குள்ள பிரபல மசூதியில் சந்தித்துப்…

தெருக்குழந்தைகள் களைகள் அல்ல கவனிக்கப்பட்டால் பயனுள்ள பயிர்களே!

சர்வதேச தெருக்குழந்தைகள் தினம் உலகின் எதிர்கால ஒளிமயத்திற்கான அடிப்படையை திரும்பிப்பார்க்கும் ஒரு திட்டம். தெருக்குழந்தை தினம் தெருக்குழந்தைகள் களைகள் அல்ல கவனிக்கப்பட்டால் பயனுள்ள பயிர்களே! இதை அறிந்தே சர்வதேச அமைப்பான ஐ.நா. ஜனவரி 31 ம் திகதியை தெருக்குழந்தைகள் தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது. பெருகிவரும் தெருக்குழந்தைகள் இந்தியாவில்…

கொலம்பியாவில் 2 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் தாக்குதல்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய ‘ஜிகா’ வைரசின் தாக்குதலுக்கு தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 2 ஆயிரம் கர்ப்பிணிகள் இலக்காயிருப்பதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிபீயன் நாடுகள் உட்பட இதுவரை 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ளது. இந்த நாடுகளில்…

95 வருடங்களாக புகைபிடிக்கும் 112 வயது மூதாட்டி: நீண்ட ஆயுளின்…

நேபாள் நாட்டை சேர்ந்த 112 வயதான மூதாட்டி ஒருவர் தொடர்ந்து 95 வருடங்களாக புகைபிடித்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள பெயர் வெளியிடப்படாத கிராமம் ஒன்றில் Batuli Lamichhane என்ற பெயருடைய 112 வயதான மூதாட்டி வசித்து வருகிறார். இவர் கடந்த 1903ம் ஆண்டு…

சவுதி பள்ளிவாயலில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பேர் பலி….18…

சவுதி அரேபியாவின் கிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள அல் அன்ஷாவில் அமைந்துள்ள ஷீயா பள்ளிவாயல் ஒன்றில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கி பிரயோகம் செய்ததில் குறைந்த பட்சம் 4 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடிச்சத்தம் ஒன்றுடன் சுமார் ஐந்து ஆயுததாரிகள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியதில் 4 பேர்…

ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை திருமணம் செய்ய வேண்டும்! எதற்காக…

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எரித்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றும், மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. எரித்திரிய அரசாங்கத்தின் உயரிய மத அமைப்பான கிராண்ட் மஃப்ட்டி(Grand Mufti) இந்த அதிரடி…

80,000 அகதிகளை உடனடியாக நாடுகடத்த சுவீடன் அரசு முடிவு!

சுவீடன் நாட்டில் 2015ம் ஆண்டில் குடியேறிய அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களில் சுமார் 80,000 நபர்களை உடனடியாக அவர்களது தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப அரசு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 9.8 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சுவீடன் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக அதிக எண்ணிக்கையில்…

ஹிட்லர் காலத்துக்கு பிறகு மீண்டும் ஆபத்தை சந்திக்கும் யூதர்கள்

ஜேர்மனியில் அதிகரித்து வரும் அகதிகளின் எண்ணிக்கையால் யூதர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. ஜேர்மனியின் தஞ்சமடையும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. மேலும் அகதிகளில் பெரும்பாலானோர் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருவதால் ஜேர்மனியில் உள்ள யூதர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அகதிகளாக…