ரஷியப் பிரிவினைக்கு அடித்தளம் அமைத்தவர் லெனின்: புதின் காட்டம்

இனவாரியாக மாகாண எல்லைகளை வரையறுத்தன் மூலம், ரஷியப் பிரிவினைக்கு லெனின் அடித்தளம் அமைத்ததாக ரஷிய அதிபர் புதின் கடுமையாகக் குற்றம் சாட்டினார். சோவியத் யூனியன் அமையக் காரணமாக இருந்தவர் லெனின். அவரது கொள்கைகளில் வேறுபாடு கொண்டவராக தற்போதைய ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இருந்தாலும், லெனின் குறித்த வெளிப்படையான…

சர்க்கரை கலந்த குடிபானங்கள் மீது அரசுகள் வரி விதிக்கவேண்டும்: உலக…

சர்க்கரை கலந்த பானங்கள் சிறார் உடல்பருமனை அதிகரிப்பதாக எச்சரிக்கை  ஆரோக்கியமற்ற உணவை சந்தைப்படுத்துவதை உலக அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சிறார்கள் மோசமாக குண்டாவதைத் தடுக்க சர்க்கரை கலந்த குடிபானங்கள் மீது அரசுகள் வரிவிதிப்பது பற்றி பரிசீலிக்கவேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குழந்தைப் பருவத்தில் உடல்…

கேமரூனில் தற்கொலைப் படை தாக்குதல்: 25 பேர் பலி; பலர்…

டுவலா: கேமரூன் நாட்டின் வடக்கு பகுதியில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். கேமரூனின் போடோ நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மத்திய மார்க்கெட் பகுதியில் 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் இந்த தாக்குதலில்…

ஏமனில் சவுதிப் படைகள் வான்வழி தாக்குதல்: நீதிபதி – குடும்பத்தார்…

சனா, ஜன.25- ஏமன் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக ஹவுத்திப் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சவுதி விமானப்படையின் துணையுடன் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் இதுவரை ஆறாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.…

எண்ணெய் கிணறுகளை தாக்கி அழித்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்: 3 மில்லியன் பீப்பாய்கள்…

லிபியாவில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் கிடங்குகள் மீது ஐ.எஸ்.தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. லிபியாவில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 5 எண்ணெய் கிடங்குகளின் மீது ஐ.எஸ்.தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். எண்ணெய் சேகரித்து வைத்திருக்கும் பகுதிக்கு திடீரென்று புகுந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் அங்கிருந்த பாதுகாப்புப் படையினருடன்…

85 மில்லியன் மக்கள் வீடுகளில் முடக்கம்… 8ஆயிரம் விமானங்கள் ரத்து:…

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனி புயல் காரணமாக 17 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் பனி பொழிந்து வருகிறது. ஜொனாஸ்(Janas) என்று பெயரிடப்பட்டுள்ள பனி புயலின் காரணமாக அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது் இந்த பனிபுயலுக்கு 17…

பிரான்ஸ் எல்லையில் பதற்றம்: பாதுகாப்பை மீறி துறைமுகத்துக்குள் நுழைந்த அகதிகள்

பிரான்ஸ் எல்லையில் வசித்துவரும் அகதிகள் கலேஸ் துறைமுகத்தை முற்றுகையிட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவின் உள்நாட்டு பாதுகாப்பை கருத்தில்கொண்டு அகதிகளுக்கு அந்நாட்டு கட்டுபாடு விதித்துள்ளது. இதன் காரணமாக பிரித்தானியாவுக்கு செல்ல முடியாத அகதிகள் பிரான்ஸின் எல்லையோரத்தில் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். மிகவும் மோசமான நிலையில் உள்ள இந்த…

கடும் குளிரை தாங்காமல் உடல் உறைந்து உயிரிழந்த நபர்: அதிகரிக்கும்…

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் வீசிய கடும் குளிரை எதிர்க்கொள்ள முடியாமல் உடல் உறைந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸ் நகரில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அதிக எண்ணிக்கையிலான வீடற்ற நபர்கள் இரவு பகல் என தங்கி வருகின்றனர்.…

நடுக்கடலில் படகுகள் விபத்து:20 குழந்தைகள் உள்பட 42 பேர் கடலில்…

ஐரோப்பிய நாடுகளில் புகலிடத்திற்காக சட்டவிரோதமாக பயணம் செய்த புலம்பெயர்ந்தவர்களின் படகுகள் விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள் உள்பட 42 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரேக்க நாடு வழியாக பிற ஐரோப்பா நாடுகளில் தஞ்சம் எதிர்பார்த்து சுமார் 100 பேர் அடங்கிய இரண்டு படகுகள் நேற்று நள்ளிரவு…

எகிப்தில் வெடி குண்டு தாக்குதல்: 7 போலீஸார்கள் உட்பட 10…

எகிப்தின் கிசா மாகாணத்தில் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 7 போலீஸார்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டே மறைந்திருந்து பயங்கரவாத குழு இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக, எகிப்து…

எல் நினோ தாக்கத்தால் 2016 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவே…

பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 2015ஆம் வருடமே அதிக வெப்பம் பதிவான வருடமாக இருந்ததாக நாசா தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: - 1880 ஆம் ஆண்டில் இருந்து உலகத்தில் பதிவாகும் வெப்பம் குறிக்கப்பட்டு வருகிறது. கடந்த 136 வருடங்களில் கடந்த 2015 ஆம்…

தொடர் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக களையிழந்த பாரீஸ் நகரம்

பிரான்ஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக அந்நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நாகரீகம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றுக்கு புகழ் பெற்ற இடமாக திகழ்ந்து வருகிறது. மேலும் அங்குள்ள ஈஃபில் கோபுரம் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய…

ஆப்கானில் ரஷ்ய தூதரகம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: 7…

ஆப்கான் தலைநகர் காபூலில் ரஷ்ய தூதரகம் அருகே தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா, சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த வாரம் நடைபெறவுள்ள பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ள…

பாகிஸ்தானில் பல்கலை.க்குள் புகுந்து தீவிரவாதிகள் சரமாரி தாக்குதல்.. 70 மாணவர்கள்…

பெஷாவர்: பாகிஸ்தானின் பச்சாகான் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள், மாணவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியும், குண்டு வீசியும் தாக்குதல் நடத்திவருகிறார்கள். இந்த கோர தாக்குதலில் 70 மாணவர்கள் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானின் சர்சத்தா நகரிலுள்ளது பச்சாகான் பல்கலைக்கழகம். இன்று காலை பல்கலைக்கழகத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள்…

மனைவியின் மூக்கை அறுத்த கணவர்: ஆப்கானில் தொடரும் பெண்களுக்கு எதிரான…

ஆப்கானிஸ்தானில் மனைவியை மூக்கை அறுத்த கணவரின் செயலுக்கு உலகமுழுவதிலும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆப்கானிஸ்தானின் ஃபர்யாப் மாகாணத்தை சேர்ந்தவர் முகமத் கான். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் 15 வயதேயான ரீஷா குல் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.…

சீனாவின் நிலை கண்டு உலக நாடுகள் கடும் அதிர்ச்சி

சீனாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த, 25 ஆண்டுகளில் மிகக்குறைவாக, 2015ல், 6.9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இதனால், உலகளவில் பொருளாதார நிலை பற்றிய கவலை தொற்றிக் கொண்டுள்ளது.சீனாவின் தேசிய புள்ளியியல் மையம், நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கை விவரம்:கடந்த, 2015ல், நான்காம் காலாண்டில், சீன பொருளாதார வளர்ச்சி, 6.8 சதவீதமாக…

பிரான்சில் பொருளாதார அவசர நிலை: அதிபர் ஹாலண்டே அறிவிப்பு

பிரான்சில் பொருளாதார அவசர நிலையை அந்நாட்டு அதிபர் ஹாலண்டே அறிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று தொழிலதிபர்களுடனான ஆண்டு கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் பிரான்ஸில் பொருளாதார அவசர நிலையை அறிவித்தார். மேலும் வேலையில்லா திண்டாட்டத்ததை தவிர்ப்பதற்காக 1.5 பில்லியன் பவுண்ட்…

சவுதி அரேபியா – ஈரான் போர் மூளும் சூழல்! பின்புலத்…

வளை குடா தேசத்தில் சவுதி அரேபியாவும், ஈரானும் ராணுவத்தில் சக்தி வாய்ந்த நாடுகளாகும். ஈரானிடம் அணுகுண்டு உள்ளது .கொள்கை அடிப்படையில் இவ்விரு நாடுகளும் எதிரெதிர் கொள்கை கொண்ட கீரியும் பாம்பும் நாடுகளாகும். ராணுவத்தில் சக்தி வாய்ந்த இவ்விரு நாடுகளும் மோதிக் கொண்டால் இவ்விரு நாடுகளுக்கும் பெருமளவு சேதாரம் ஏற்படும்.…

வெறியாட்டம் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள்: 135 பேர் பலி, 400…

சிரியாவில் அரசு படைகளுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 135 பேர் வரை பலியாகியுள்ளதாகவும், பெண்கள், சிறுமிகள் உட்பட 400 பேரை கடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் இணைப்பு: இதற்கிடையில், பெண்கள், சிறுமிகள் உள்பட 400 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். அவர்ளை பிணைகைதிகளாக பிடித்து வைத்து…

’அலுவலக வேலையை விட பிச்சை எடுப்பதில் அதிக வருமானம் கிடைக்கிறது’:…

பிரித்தானிய நாட்டில் அலுவலக வேலையில் கிடைக்கும் வருமானத்தை விட பிச்சை எடுப்பதில் அதிக வருமானம் கிடைப்பதால் தான் வேலைக்கு செல்ல மாட்டேன் என பிச்சைக்காரர் ஒரு நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள Nottingham நகரில் Craig Atkinson (36) என்ற வீடு இல்லாத நபர் அங்குள்ளவர்களிடம் பிச்சை எடுத்து…

போதை மருந்தில் வருவாய் ஈட்டும் ஐ.எஸ்: முக்கிய பங்கு வகிக்கும்…

அல்பேனியாவில் இருந்து வரும் போதை மருத்தை பிரித்தானியாவில் விற்று ஐ.எஸ்.தீவிரவாத குழுவினர் வருவாய் ஈட்டுவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அல்பேனியா கிராமப்புற மலைப்பிரதேசங்களில் செயல்பட்டு வந்த போதை மருந்து கும்பல்களை மிரட்டி ஐ.எஸ் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதில் இருந்து ஆண்டிற்கு 4 பில்லியன் பவுண்டு மதிப்பிலான…

ஐஎஸ் தீவிரவாதிகளின் கருவூலத்தை அழித்த அமெரிக்க விமானங்கள்: வீடியோ வெளியானது

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் சேர்த்து வைத்திருந்த மொத்த பணத்தையும் அமெரிக்க போர் விமானங்கள் தாக்கி அழிப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள முகாம் ஒன்றில் பணத்தை சேமித்து வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் பாதுகாத்து வந்தனர். உலகம் முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் கைக்கூலிகள் மற்றும்…

உணவு விடுதிக்குள் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: 20 பேர் பலி,…

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்க்கினா பாசோவில் உள்ள உணவு விடுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டு பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாம் இணைப்பு: பர்க்கினா பாசோவின் தலைநகரான Ouagadougou நகரில் ஸ்ப்லெண்டிட் என்ற நட்சத்திர ஹொட்டல் அமைந்துள்ளது. இந்த ஹொட்டலில்…