பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கடத்தப்பட்ட 600 யசிதி சிறுவர்கள்: தற்கொலைப்படையினராக பயன்படுத்தும் ஐ.எஸ்
ஈராக்கில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட யசிதி சிறுவர்களை தற்கொலைப்படையினராக மாற்றி வருவதாக குர்து அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஈராக்கின் சிஞ்சர் பகுதியில் இருந்து ஐ.எஸ்.தீவிரவாதிகள் 600 சிறுவர்களை கடத்தி சென்றுள்ளதாக குர்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 200 சிறுவர்கள் ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்துள்ளதாகவும் எஞ்சியவர்களை அவர்கள்…
80 பேருக்கு ஒரு கழிவறை.. சேற்றில் வளரும் குழந்தைகள்: மிகவும்…
பிரான்ஸ் நாட்டின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் சேறு ,சகதிகளுக்கு இடையில் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் காரணமாக பாதிக்கப்பட்ட அகதிகள் பிரித்தானியா செல்வதற்காக ஐரோப்பாவை நோக்கி படையெடுக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானொர் பிரான்ஸ் எல்லையில் தடுத்து…
தோல்வியுற்றதால் கோபம் கொண்ட ஐ.எஸ் அமைப்பு: தனது வீரர்களை உயிருடன்…
ஈராக்கில் நடைபெற்ற போரில் ரமாடி நகரத்தை இழந்துவிட்டதன் காரணமாக கோபம் கொண்ட ஐ.ஸ் அமைப்பு தனது படைவீரர்களை உயிருடன் எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கின் அன்பர் மாகாணத்தில் உள்ள ரமாடி நகரை கடந்த ஆண்டு மே மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர், அந்நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட…
இஸ்தான்புல் நகரை உலுக்கிய பாரிய குண்டு வெடிப்பு (வீடியோ இணைப்பு)
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சுல்தானாமெட் பகுதியில் இன்று சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. புளூ மசூதியின் அருகே நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. https://youtu.be/YEyspHDst3g…
நம்பிக்கையற்ற பெற்றோரை கொன்று விடுங்கள்: சிறுவர் படையினருக்கு கட்டளையிட்ட ஐ.எஸ்
ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு மீது நம்பிக்கை இல்லாத பெற்றோரை கொன்று விடுங்கள் என சிறுவர் படையினருக்கு அந்த அமைப்பு கட்டளையிட்டுள்ளது. சிரியா மற்றும் ஈராக் பகுதிகளில் உள்ள சிறுவர்களை அவர்களின் குடும்பங்களில் இருந்து பிரித்து ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்கள் குழுவில் கட்டாயமாக இணைத்து வருகின்றனர். தீவிரவாத குழுவில் இணைய மறுக்கும் சிறுவர்களை…
30 தீவிரவாதிகளை சுட்டுத் தள்ளிய ஆப்கான் ராணுவம்
ஆப்கானிஸ்தானில் வடக்கில் உள்ள குண்டூஷ் மற்றும் ஹெல்மண்ட் மாகாணத்தின் தென் பகுதியையும் கடந்த ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். அவற்றை மீட்க ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் உதவி வருகின்றன. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் ராணுவம், போலீசாரும்…
36,000 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்ட குகை ஓவியங்கள்: மெய்சிலிர்க்க வைக்கும்…
எரிமலை வெடித்த குகைகளுக்குள் 36,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பழங்கால மனிதர்கள் வரைந்த அற்புதமான ஓவியங்களை தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தென் கிழக்கு பிரான்ஸில் உள்ள Ardeche பகுதியில் Chauvet என்ற பழங்கால குகைகளை ஆராய்ச்சியாளர்கள் கடந்த 1994ம் ஆண்டு கண்டுபிடித்தனர். சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்னதாக…
வரலாற்றில் முதன் முறையாக ஸ்பெயின் இளவரசி மீது வரி ஏய்ப்பு…
ஸ்பெயின் நாட்டு வரலாற்றில் முதன் முதலாக மன்னரின் சகோதரியும் இளவரசியுமான கிறிஸ்டினா மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால் அவருக்கு 8 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்பெயின் மன்னரான ஃபெலிப்பிற்கு இளவரசி கிறிஸ்டினா (50) என்ற சகோதரி உள்ளார். இளவரசிக்கும் ஸ்பெயின் நாட்டு…
கொரிய தீபகற்பத்தில் போர் சூழல்: அணு ஆயுத விமானத்தை பறக்கவிட்ட…
தென்கொரியாவின் வான் எல்லையில் அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் பறந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாகவே வடகொரியாவுக்கு தென் கொரியாவுக்கும் இடையே தீரா பகை இருந்துவருகிறது இந்நிலையில் கடந்த 6ம் திகதி அணுவை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜனை வெடித்து வெற்றிகரமாக சோதனை செய்ததாக…
தென் கொரிய ஒலிபெருக்கிப் பிரசாரத்தால் போர் வெடிக்கும்:வட கொரியா மிரட்டல்
வட கொரிய எல்லை அருகே அந்த நாட்டுக்கு எதிராக தென் கொரியா தொடங்கியுள்ள ஒலிபெருக்கிப் பிரசாரத்தால் போர் வெடிக்கும் என வட கொரியா மிரட்டல் விடுத்துள்ளது. வட கொரியா கடந்த புதன்கிழமை ஹைட்ரஜன் அணுகுண்டு பரிசோதனை நிகழ்த்தியது. அதற்குப் பதிலடியாக, தென் கொரியா ஒலிபெருக்கிப் பிரசாரத்தை மீண்டும் வெள்ளிக்கிழமை…
இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம்:பயங்கரவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையை சீர்குலைக்க எந்த பயங்கரவாதக் குழுக்களையும் தங்களது நாடு அனுமதிக்காது என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து ஜியோ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையைச் சீர்குலைப்பதற்கு எந்த பயங்கரவாத குழுவையும்…
ஹைட்ரஜன் வெடிகுண்டு பரிசோதனையின் எதிரொலி: வட கொரியா மீது பொருளாதார…
ஹைட்ரஜன் வெடிகுண்டை சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 5 ஆம் திகதி அணு குண்டை விட அதி பயங்கரமான ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக வடகொரியா பரிசோதித்தது. இது குறித்து அந்நாட்டு தொலைக் காட்சியில் வெளியான…
சொந்த தாயாரை படுகொலை செய்த ஐ.எஸ்.தீவிரவாதி: காரணம் என்ன?
சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதி ஒருவர் பெரும் கூட்டத்தின் மத்தியில் தனது சொந்த தாயாரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் பெரும் கூட்டத்தின் மத்தியில் வைத்து அந்த தீவிரவாதி இந்தப் படுகொலையை செய்துள்ளார். சிரியாவின் ரக்கா பகுதியில் அமைந்துள்ள தபால் நிலையம்…
ஈராக்கில் முக்கிய நகரை கைப்பற்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் கடும் சண்டை
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதலை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த அன்பார் மாகாணத்தின் தலைநகரும் ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றுமான ரமாடி நகரை நீண்டநாள் போராட்டத்துக்கு பின் அமெரிக்க கூட்டுப்படையின் உதவியுடன் ஈராக் ராணுவம் சமீபத்தில் மீட்டது. இது…
பசி பட்டினியால் மரணமடையும் மக்கள்: வயிற்றுப்பசிக்காக இலைகளை அவித்து சாப்பிடும்…
சிரியாவில் நிலவிவரும் உள்நாட்டுப்போர் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே. ஒருபுறம் ஐஎஸ் தீவிரவாகதிகள் போரிட்டு வருகிறார்கள், மறுபுறம் சிரிய ஜனாதிபதிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். இந்த குண்டுவீச்சு தாக்குதலால், பாதிக்கப்படும் மக்கள் உடமைகளை இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு அண்டை நாடுகளை…
உலக நாடுகளை மிரள வைக்கும் ஐ.எஸ் அமைப்பின் ஆராய்ச்சி மையம்!…
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் அமைப்பு தொழில்நுட்ப வளர்ச்சியில் வளர்ந்து வருகிறது. அதனை நிரூபிக்கும் விதமாக, மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள புதிய ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியுள்ளது. சிரியா ராணுவம் கைப்பற்றிய 8 மணி நேர வீடியோவை அது ஸ்கை நியூஸ் சேனலுக்கு அளித்துள்ளது.…
லிபியாவில் போலீஸ் பயிற்சி மையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு… 65 பேர்…
ஜிலிதென்: லிபியாவில் போலீஸ் பயிற்சி மையத்தில் இன்று நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். லிபியாவின் முர்குப் பகுதி ஜிலிதென் பிராந்தியத்தில் போலீஸ் பயிற்சி மையம் மீது வெடிகுண்டுகள் நிரம்பிய டிரக் ஒன்று மோதியது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் சம்பவ இடத்திலேயே…
வட கொரியா வெடிகுண்டு சோதனை: இன்று அவசரமாக கூடுகிறது ஐ.நா.…
நியூயார்க்: வடகொரியா நடத்திய ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை காரணமாக ஆலோசனை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை இன்று அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. வடகொரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கில்ஜு என்ற பகுதியில் வடகொரியாவின் அணுகுண்டு சோதனை மையம் அமைந்துள்ளது. முன்னதாக, மூன்று முறை வட கொரியா…
கனடாவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் பிரதமர் ட்ரூடே: சர்வதேச ஒப்பந்தங்களில் சிக்கலை…
கனடாவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் பிரதமர் ட்ரூடேவின் முடிவு உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கனடா பிரதமர் ஜெஸ்டின் ரூடோ, கஞ்சா போதை பொருளை சட்ட பூர்வமாக்க மூடிவு செய்துள்ளார். அவரது இந்த முடிவு உள்நாட்டில் பல்வேறு சிக்கல்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது…
லண்டன் பொலிசாரிடம் 6 முறை மாட்டியும் தப்பித்த கமரூனை மிரட்டும்…
சமீபத்தில் பிரித்தானிய உளவாளிகளை சுட்டுக் கொன்றது மட்டுமல்லாது, பிரித்தானியப் பிரதமை மிரட்டி அறிவித்தல் விட்ட நபரின் பெயர் சித்தார்த் டாக்ஹார் என்று அறியப்பட்டுள்ளது. இவருக்கு வயது 32. இவர் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட முஸ்லீம் அமைப்பு ஒன்றுக்காக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு, சுமார் 6 தடவை கைதாகி பின்னர் பிணையில்…
ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க ரஷ்யா எடுத்துள்ள புது ஆயுதம் என்ன…
ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க ரஷ்ய ராணுவம் திறமை வாய்ந்த ’எலிகள் ராணுவ படையை’ தயார்படுத்தி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் Rostov-on-Don நகர அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த திட்டத்தில் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். எலிகளுக்கு நுகரும் சகதி அதிகமாக உள்ளதால், அவற்றை ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான…
மதகுருவுக்கு மரண தண்டனை: சவுதி அரேபியா-ஈரான் மோதல் முற்றியது! ராஜாங்க…
ரியாத்: ஷியா பிரிவு மதகுருவுக்கு உள்ளிட்ட 47 பேருக்கு சவுதி அரேபியா மரணதண்டனை அளித்தது தொடர்பான சர்ச்சையால் ஈரானுடன் அந்த நாட்டுக்கு மோதல் போக்கு உருவாகியுள்ளது. இதை தொடர்ந்து, ஈரானுடனான அரசு ரீதியான உறவுகளை முறித்துக் கொள்வதாக சவுதி அரேபியாவும், பஹ்ரைன் நாடும் அறிவித்துள்ளன. அல்-கொய்தா தீவிரவாதிகளுடன் சேர்ந்து…
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் புதிய ஜிகாதி ஜான் உருவாகிவிட்டானா? வெளியான…
2016 ஆம் ஆண்டு ஆரம்பித்த கையோடு ஐ.எஸ் தீவிரவாதிகளும் தங்கள் வசம் சிக்கும் கைதிகளை கொலை செய்யும் வேலையை தொடங்கிவிட்டார்கள். இதன் முதட்கட்டமாக 5 நபர்கள், பிரித்தானிய பாதுகாப்பு சேவைக்கு உளவு வேலை பார்த்த குற்றத்திற்காக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோவை வெளியிட்ட ஐ.எஸ் அமைப்பு, அதில் பிரித்தானிய…
