கராச்சியில் தனியார் மருத்துவமனையில் 9 குழந்தைகள் இறந்த பரிதாபம்

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் போதுமான வசதியின்மை காரணமாக இரண்டு நாட்களில் 9 குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளது. பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர்கள் மின்சாரம் தடையால் வேலை செய்யாததால் குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் பரிதாபமாக இறந்துள்ளனர். 2 குழந்தைகள் நேற்றும்…

ஈராக்கின் மோசூல் நகரில் தீவிரவாதிகள்-பாதுகாப்பு படை மோதல்: 59 பேர்…

ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள மோசூல் நகரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையிலான கடும் மோதல் இன்று இரண்டாவது நாளாக நீடித்தது. ஜிகாதிக்கள் ராமடியில் உள்ள அன்பர் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஊழியர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டினர். அவர்களை மீட்க பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல்…

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: அதிபர் பதவி வேட்பாளர் உயிர் தப்பினார்

ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவி வேட்பாளர் அப்துல்லா அப்துல்லாவைக் குறிவைத்து வெள்ளிக்கிழமை இரு இடங்களில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் அவர் நூலிழையில் உயிர் தப்பினார். திருமண மண்டபம் ஒன்றில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு அவர் திரும்பியபோது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சேதிக்…

உக்ரைன் புதிய அதிபருடன் புதின் சந்திப்பு: பிரச்னைக்குத் தீர்வு காண…

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும், உக்ரைனில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெட்ரோ போரோஷென்கோவும் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து, உக்ரைனில் போர் நிறுத்தம் மோற்கொள்வதற்கான வாய்ப்புகளைக் குறித்து விவாதித்தனர். இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பிரான்ûஸ விடுவிக்க நேச நாடுகளின் படைகள் அந்நாட்டின் நார்மண்டி பகுதியில் நடவடிக்கை மேற்கொண்டதன் 70-ஆவது…

கழிவறை தொட்டியில் 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள்: அதிர்ச்சி தகவல்

அயர்லாந்தில் 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கழிவறை தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து நாட்டில் உள்ள டுவாம் என்ற இடத்தில் பெண்கள் பாதுகாப்பு இல்லம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த இல்லத்தை கன்னியாஸ்திரிகள் நடத்தி வந்தனர். பாதுகாப்பு இல்லத்தில் திருமணம் ஆகாமல் கர்ப்பிணியானவர்கள் மற்றும் திருமணம் ஆகாமல்…

அமெரிக்காவை பலவீனமாக்கிய ஒபாமா: கருத்துக்கணிப்பில் அம்பலம்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அந்நாட்டை பலவீனப்படுத்தி விட்டார் என 55 சதவீத அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, ‘ஒபாமாவின் ஆட்சியைப் பற்றி உங்களது கருத்து என்ன?’ என்று கடந்த முதல் தேதியில் இருந்து மூன்றாம் தேதி வரை நாடு தழுவிய அளவில்…

மலேசிய விமானம் தீப்பிடித்து எரிந்தது: இங்கிலாந்து பெண் பரபரப்பு தகவல்

மாயமான மலேசிய விமானம் தீப்பிடித்து எரிந்ததை இந்திய பெருங்கடல் பகுதியில் பார்த்ததாக இங்கிலாந்து பெண் ஒருவர் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் கோலாம்பூரில் இருந்து சீனா கிளம்பிய MH 370 மலேசிய விமானம் நடுவானில் மாயமானது. இதனையடுத்து அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்க உள்ளிட்ட…

ரஷ்யா மீதான உலக மனநிலை மோசமடைந்துள்ளது: பிபிசி ஆய்வு

உலக மக்கள் மத்தியில் ரஷ்யா தொடர்பான மனோபாவம் கடந்த ஆண்டில் மிகக் கடுமையாக மோசமடைந்துள்ளதாக பிபிசியினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது. யுக்ரேனின் கிரைமீயா பிராந்தியம் ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 45 வீதமான மக்களின் கருத்துக்கள் ரஷ்யாவுக்கு எதிரானவையாக உள்ளன. அமெரிக்கா மீதான…

சிரியா அதிபர் தேர்தல்: பஷார் அஸாதுக்கு வெற்றி வாய்ப்பு

சிரியா தலைநகர் டமாஸ்கஸிலுள்ள ஒரு வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமையன்று வாக்களிக்கும் அதிபர் பஷார் அல்-அஸாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா.  சிரியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், அரசின் கட்டுப்பாடுகளில் உள்ள பகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. சிரியாவில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக,…

மெர்ஸ் தொற்றில் இறந்தவர்கள் எண்ணிக்கை 282 என்கிறது சௌதி அரசு

சௌதி அரேபியாவில் 2012ம் ஆண்டிலிருந்து 'மெர்ஸ்' எனப்படும் சுவாசப்பை தொற்றினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 282 என்று அரசு உறுதி செய்திருக்கிறது. இது முன்பு கருதப்பட்டதை விட 100 பேர் அதிகம் இறந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்த நெருக்கடியைக் கையாண்ட விதம் குறித்து விமர்சனங்களுக்குள்ளான, சௌதி அரேபியாவின் துணை சுகாதார…

நைஜீரியா கால்பந்து மைதானத்தில் குண்டு வெடிப்பு: 40 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கால்பந்து மைதானத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 40 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் கூறியதாவது: நைஜீரியாவின் வடக்குப் பகுதியிலுள்ள ஆடமாவா மாகாணத்தின் முபி நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.…

அமெரிக்க உளவுத்துறையின் தந்திரம்: அம்பலமான இரகசியம்

உலக மக்களின் புகைப்படங்களை அமெரிக்க உளவுத்துறை இரகசியமாக சேகரிக்கிறது என அந்நாட்டின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் வசிக்கும் மக்களில் லட்சக்கணக்கானோரின் முகத்தோற்ற படங்கள் நாள்தோறும் இரகசியமாய் அமெரிக்க உளவுத்துறையால் சேகரப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம், மின்னஞ்சல்,கைபேசி மூலம் அனுப்பபடும்…

அழிந்து வரும் சிரியாவின் கோட்டை

சிரியா நாட்டின் உள்நாட்டுப் போரில், 900 வருட நினைவுச் சின்னமாக இருந்த சிரியாவின் கோட்டை “THE CRAC DES CHEVALIERS” என்று அழைக்கப்பட்ட நினைவு சின்னம் அழிக்கப்பட்டு வருகின்றது. இங்கு வாழும் உள்நாட்டு கிராம மக்களும், புரட்சியாளர்களும், சிரியா அரசாங்கத்தின் இராணுவ தாக்குதல்களிலுருந்து, தங்களது உயிரைக் காத்துக் கொள்ள…

தலிபான் கைதிகளை விடுதலை செய்தது சரியே என்கிறார் சக் ஹேகெல்

அமெரிக்க படைச் சிப்பாயான சார்ஜண்ட் போவே பேர்க்டல் அவர்களை விடுதலை செய்வதற்கு பதிலாக குவாண்டநாமோ தடுப்பு முகாமில் உள்ள 5 தலிபான் தீவிரவாதிகளை விடுதலை செய்வதற்கான தனது முடிவை அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் சக் ஹேகெல் நியாயப்படுத்தி பேசியுள்ளார். இந்த விடயம் குறித்து அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே…

திருமண பந்தத்தில் இணைந்த சகோதரங்கள் – பிரிந்து வைத்தது சவுதி…

மத்திய கிழக்கு நாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பாலூட்டும், வளர்ப்புத் தாய் முறைமை காணப்படுகிறது. வளர்ப்புத் தாயாக செயற்படுவர்களுக்கு பெருந் தொகை சம்பளமும் வழங்கப்படுகிறது. அத்துடன் தனக்கு பாலூட்டி, வளர்த்த பெண்ணை சொந்தத் தாயாகவே பிள்ளைகள் கருதுவதும், தன்னிடம் தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிள்ளைகளை தம் சொந்த மக்களாக அந்த…

மலேசியாவில் தாய்லாந்து எண்ணெய் கப்பல் கடத்தல்?

சிங்கப்பூரில் இருந்து மலேசியா வழியாக இந்தோனேசியா நோக்கி தாய்லாந்து நாட்டு எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 14 சிப்பந்திகளுடன் பயணித்த  ‘எம்.டி. ஆரபின்–4‘  என்ற கப்பலே காணாமல் போயுள்ளது. சிங்கப்பூர் முனையத்தில் இருந்து புறப்பட்டுச்சென்றதை தொடர்ந்து அதிகாரிகளுடனான தொடர்பை இழந்து விட்டது. இந்த கப்பல் கடற்கொள்ளையர்களால்…

ஸ்காட்லாந்து சுதந்திரம்: பிரச்சாரம் இன்று தொடக்கம்

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு பிரச்சாரம் தொடங்குகிறது   ஸ்காட்லாந்து பிரிட்டனிடமிருந்து பிரிந்து போகவேண்டுமா என்பது குறித்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான அதிகார பூர்வ பிரச்சாரக் கட்டம் இன்று தொடங்குகிறது. இந்த கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரச்சாரப் பருவம் செப்டம்பர் 18ம் தேதி வரை அமலில் இருக்கும். செப்டம்பர் 18ம் நாள், ஸ்காட்லாந்தின்…

புதிய கூட்டமைப்பு துவக்கியது ரஷ்யா

மாஸ்கோ: ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, தங்களின் பொருளாதார மற்றும் வர்த்தக வசதிக்காக, ஐரோப்பிய யூனியன் என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. 28 நாடுகள், இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளுக்காக, 'யூரோ' என்ற நாணய முறையும் அமலில் உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவும், இது போன்ற கூட்டமைப்பை தற்போது…

ஹெலிகாப்டரை வீழ்த்தியஉக்ரைன் போராட்டக்காரர்கள்

ஸ்லோயன்ஸ்க்:முந்தைய, 'சோவியத் ரஷ்யா' அமைப்பிலிருந்து வெளியேறிய உக்ரைன் நாட்டில், ரஷ்ய ஆதரவு போராட்டக்காரர்களுக்கும், உக்ரைன் அரசு படைகளுக்கும் இடையே நடந்த சண்டையில், ஸ்லோயன்ஸ்க் நகருக்கு அருகில், ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை போராட்டக்காரர்கள் சுட்டு வீழ்த்தினர்.'போராட்டக்காரர்கள், எளிதில் எடுத்துச் செல்லும், விமான எதிர்ப்பு பீரங்கிகளை பயன்படுத்தினர்' என, உக்ரைன் அதிகாரிகள்…

எகிப்து ஜனாதிபதி தேர்தல் – இராணுவ தளபதி அமோக வெற்றி

எகிப்தில் ஹோஸ்னி முபாரக் பல்லாண்டு காலம் சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்தார். எனினும் மக்கள் புரட்சியின் மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து எகிப்தில் நடந்த தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி ஆட்சியைப் பிடித்து, முகமது மோர்சி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். ஆனால் கடந்த ஆண்டு முகமது மோர்சிக்கு…

கர்ப்பிணிப் பெண் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் – பாகிஸ்தான்…

பாகிஸ்தானில் நீதிமன்றத்தின் முன்னால் கர்ப்பிணிப் பெண்ணொருவர் குடும்பத்தவர்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கோர சம்வத்தை முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ள முடியாதென பாகிஸ்தானிய பிரதம மந்திரி நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பர்ஸானா பர்வீன் என்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி பற்றி முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு…

சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ராணுவப் பயிற்சி?

சிரியாவில் அதிபர் அல்-அசாதுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மிதவாதத் தன்மை கொண்ட அமைப்புகளுக்கு ராணுவப் பயிற்சி வழங்க அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் ஒப்புதல் வழங்குவார் என கூறப்படுகிறது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: அதிபர் ஒபாமா ஒப்புதல் அளிக்க உத்தேசித்துள்ள திட்டத்தின்படி, சுதந்திர சிரியா ராணுவத்திலிருந்து (கிளர்ச்சியாளர்கள்…

மாபியா கும்பல்களையும் ‘பாதிக்கும்’ பொருளாதார நெருக்கடி

உலகப் புகழ் பெற்ற " காட் பாதர்" என்ற நாவலை எழுதிய மரியோ புஸோ கூட இந்த நிலையை கற்பனை செய்திருக்க மாட்டார் ! உலகில் தொடரும் பொருளாதாரப் நெருக்கடி இத்தாலியின் மாபியா ( சட்டவிரோதக் கிரிமினல்) கும்பல்களையும் பாதித்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. இத்தாலியின் மூத்த போலிஸ் அதிகாரி…