கட்டுப்பாட்டை இழந்து விட்ட சிரியா அதிபர் : ரஷ்ய வெளியுறவு…

டமாஸ்கஸ்: சிரியாவில், அதிபர், பஷர் அல் ஆசாத் கட்டுப்பாட்டை இழந்து விட்டார். இதனால், கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலக கோரி எதிர்கட்சியினர் பல மாதங்களாக போராடி வருகின்றனர். சிரியா ராணுவத்தினர், கிளர்ச்சியாளர்களை ஒடுக்கி வருகின்றனர். 21 மாதங்களாக…

அத்துமீறி நுழைந்த சீன விமானத்தை விரட்டியடித்த ஜப்பான் போர் விமானங்கள்

டோக்கியோ: சர்ச்சைக்குரிய தீவில், சீன விமானம் ஒன்று அத்துமீறி பறந்ததால் ஜப்பானிய போர் விமானங்கள் அதிரடியாக சென்று அந்த விமானத்தை விரட்டியடித்தன. சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே உள்ளது, ஷென்காகு தீவு. இந்த தீவை சீனா, 'டையாயூ' என்றழைக்கிறது. பண்டை காலம் தொட்டு, இந்த தீவு தங்கள் எல்லைக்குட்பட்டு இருப்பதாக…

பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஸ்ட்ராஸ்கான்

பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடக்க முயன்ற குற்றச்சாட்டிலிருந்து சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்கான் விடுவிக்கப்பட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக இருந்த டொமினிக் ஸ்ட்ராஸ்கான், நியூயார்க் சென்றிருந்த போது அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பணிப்பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றார் என்று…

எச்சரிக்கையை மீறி ராக்கெட்டை ஏவியது வடகொரியா

சியோல்: அண்டை நாடுகளின் எதிர்ப்பை மீறி, வட கொரியா, நேற்று, ராக்கெட்டை விண்ணில், வெற்றிகரமாக ஏவியது. சட்டவிரோதமாக, அணு ஆயுதம் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில், ஈரான், வடகொரியா இடம் பெற்றுள்ளன. வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும், நீண்ட நாட்கள் சண்டை நடந்தது. ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள்,…

உளவு பார்த்த இஸ்ரேலிய கழுகு சூடானில் சிறை பிடிப்பு

கர்த்தூம்:இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக, பிணம் தின்னி கழுகு, சூடானில் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேல் நாட்டுக்கும், பாலஸ்தீனத்துக்கும் பகைமை நிலவுகிறது. பாலஸ்தீனத்துக்கு, ஆப்ரிக்காவில் உள்ள சூடான் நாடு, ஆயுத சப்ளை செய்வதாக இஸ்ரேல் கூறுகிறது. இதற்கிடையே, சூடான் நாட்டின் டார்பர் நகரில், பிணம் தின்னி கழுகு பறந்தது. இதை அந்நாட்டு…

45 ஆண்டுகளுக்கு பின் பாலஸ்தீனம் திரும்பிய ஹமாஸ் தலைவர்

காசா: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்க தலைவர், 45 ஆண்டுகளுக்கு பின், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் நீண்ட நாட்களாக பகைமை நிலவி வரு கிறது. பாலஸ்தீனத்தின் பல பகுதிகளை, இஸ்ரேல் இன்னும் தன் வசம் வைத்திருக்கிறது. இந்த பகுதிகளில், குடியிருப்புகளை கட்டவும் இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது. தங்கள்…

கேட் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையை ஏமாற்றிய வானொலி நிலையம்

இளவரசர் வில்லியம்ஸின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி கேத்தரின், கர்ப்பமுற்றிருக்கும் நிலையில், அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் இலண்டன் மருத்துவமனையை ஆஸ்திரேலிய வானொலி நிலையம் ஒன்று, அரச குடும்பத்தினரைப் போல நடித்து தொடர்பு கொண்டு, கேத்தரினின் உடல் நிலை குறித்த தகவல்களை வாங்கியதாக மருத்துவமனை ஒப்புகொண்டிருக்கிறது. இந்த வானொலி நிலையத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்,…

பிலிப்பைன்ஸில் சூறாவளி: சாவு எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு

தென் சீனக்கடல் பகுதியில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான மிண்டோனாவை நேற்று தைபூன் எனப்படும் சூறாவளிக் காற்று தாக்கியது. மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில், பலத்த மழையுடன் வீசிய இந்த சூறாவளிக்கு 'தைபூன் பூபா' என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மிண்டோனா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலை…

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற அமெரிக்க விண்வெளி நிறுவனம் திட்டம்

லண்டன் : செவ்வாய் கிரகத்தில், 80 ஆயிரம் பேரை குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த செவ்வாய் கிரகம், பூமியிலிருந்து, 57 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. இந்த சிவப்பு நிற கிரகத்தில், மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் குறித்து, அமெரிக்காவின் நாசா…

பாலஸ்தீனர்களுக்கு ஐநா சபையில் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்து

ஐநா சபையில் non-member observer state, அதாவது 'உறுப்புரிமை அற்ற பார்வையாளர்' என்ற அந்தஸ்து கிடைத்துள்ளதை பாலஸ்தீனியர்கள் கொண்டாடுகிறார்கள். மேற்குகரையில் ரமல்லா நகரிலுள்ள யாசீர் அரபாத் சதுக்கத்தில் பாரம்பரிய இசைமுழங்க, பாரம்பரிய நடனங்களை ஆடியபடி,மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். காசா நகரிலும் மக்கள் வீதிகளில் ஆடிப்பாடி, வாகனங்களின் ஹோர்ன்களை…

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க ஐ.நா.-வில் வாக்கெடுப்பு; 126 நாடுகள் ஆதரவு!

நியூயார்க்: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் தொடர்பாக, ஐ.நா.-வில் நடந்த வாக்கெடுப்பில், அமெரிக்கா, ஜெர்மன், இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எதிர்த்து வாக்களித்துள்ளன - ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் கலந்து கொள்ளவில்லை. பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் நீண்ட காலமாகப் பகை நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தை, தனி நாடாக அங்கீகரிக்கக்…

எதிர்க்கட்சி தலைவர் மிட் ரோம்னிக்கு வெள்ளை மாளிகையில் ஒபாமா விருந்து

வாஷிங்டன்: தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட, குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரோம்னிக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகையில் நேற்று விருந்தளித்தார். அமெரிக்க அதிபர் தேர்தல், 6--ஆம் தேதி நடந்தது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஒபாமா மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து குடியரசு…

மனைவி ஆண் என 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்ட…

தன் மனைவி ஆண் என்பதை, 19 ஆண்டுகளுக்கு பிறகு புரிந்து கொண்டார், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜான் (வயது 64) என்பவர். ஜான், 93-ஆம் ஆண்டு இந்தோனேசியாவைச் சேர்ந்த மோனிகா என்பரை இரண்டாவம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். 48 வயதாகும் மோனிகாவுக்கு, குழந்தை இல்லை. இது குறித்து,…

பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!

உலகப் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே கால்பந்து இரசிகர்கள் மகிழ்ச்சியடையாமல் இருக்கமாட்டார்கள். உலகில் எங்கு சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக அலைமோதும் கூட்டம் ஒன்று எப்போதும் உண்டு. அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது…

விமானிக்கு திடீரென உடல் நலம் குன்றியதால் விமானியாக மாறிய பயணி

இலண்டன்: நடு வானில் பறந்த, பயணிகள் விமானத்தில் விமானிக்கு திடீரென உடல் நலம் குன்றியதால், பயணி ஒருவர் உதவியுடன் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அயர்லாந்து நாட்டிலிருந்து ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நோக்கி, 262 பயணிகளுடன் விமானம் பறந்து கொண்டிருந்தது. திடீரென, சக விமானிக்கு தலைவலி ஏற்பட்டு மேற்கொண்டு பணியை தொடர…

நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர்

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்த போர், நேற்று நள்ளிரவு முதல் முடிவுக்கு வந்தது. பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக விரோதம் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் சில பகுதிகளை, இஸ்ரேல் இன்னும், தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. கடந்த வாரம், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது…

டி.ஆர்.காங்கோ நாட்டிலுள்ள கோமா நகரை கைப்பற்றியது எம்-23 போராளிக்குழு

டி.ஆர்.காங்கோ நாட்டின் வளம் மிகுந்த பகுதியான கிழக்குப்பகுதியில் உள்ள கோமா நகரை எம்-23 போராளிக்குழுப் படையினார் கைப்பற்றியுள்ளனர். இராணுவம் மற்றும் ஐ.நா. அமைதிப்படையின் தடையையும் மீறி அந்த நகரை போராளிகள் கைப்பற்றியுள்ளனர். பழங்குடியின டுட்சிஸ் இனம் ஆளும் பக்கத்து நாடான ருவாண்டா நாட்டின் ஆதரவு இந்த எம்-23 போராளிகளுக்கு…

குரான் எரிப்பு வழக்கு : பாகிஸ்தான் சிறுமி விடுதலை

பாகிஸ்தானில் குரானின் சில பக்கங்களை எரித்ததாக, ரிம்ஷா என்ற 14 வயது கிறிஸ்த்துவ சிறுமி மீது சுமத்தப்பட்டிருந்த மத நிந்தனை வழக்கை அந்நாட்டின் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட அந்தப் பெண் அப்பாவி என்றும், இந்த வழக்கு சட்டத்தின் துஷ்பிரயோகம் என்றும் அவரது வழக்கறிஞர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். கடந்த…

கொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்

ஓட்டுப் போடும் மக்களின் வாழ்க்கைத் தரத்திலிருந்து பெரிதும் விலகிப்போய் அரசியல் தலைவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்ற மக்களின் பொறுமலை சாதாரணமாக பல நாடுகளிலும் கேட்க முடியும். ஆனால் உருகுவே நாட்டில் அதுவல்ல நிலைமை. அந்நாட்டின் அதிபர் திறந்த வெளியில் தகரக் கொட்டகையில் வாழ்கிறார். (காணொளியை பார்வையிட இங்கே…

குப்பைத் தொட்டிக்குள் மாண்ட ஐந்து ஏழைச் சிறார்கள்; சீனாவில் மனதை…

சீனாவின் தென்மேற்கே வீடின்றி வீதியில் வாழ்ந்து வந்த சிறார் ஐந்து பேர் பெரிய குப்பைத் தொட்டி ஒன்றுக்குள்ளிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. குளிர் தாங்கமுடியாமல் கதகதப்புக்காக குப்பைத் தொட்டிக்குள் இறங்கிய இந்தச் சிறார் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புகின்றனர். சுமார் பத்து வயதுடைய இந்த…

காசா மீதான இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் விரிவுபடுத்தும் : இஸ்ரேல்…

மத்திய கிழக்கின் காசாவில் ஹமாஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான தமது இராணுவ நடவடிக்கைகளை கணிசமான அளவில் விரிவுபடுத்த தான் தயாராக இருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹு கூறுகிறார். காசாவில் இருந்து இஸ்ரேலிய நிலப்பரப்பில் ராக்கெட் குண்டுகளை ஹமாஸ் ஆயுததாரிகள் தொடர்ந்து வீசிவரும் அதேவேளை, காசா மீதான இஸ்ரேலின் வான்…

ஜப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது; பொதுத் தேர்தல் அறிவிப்பு

ஜப்பானின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருந்த நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடியும் முன்பாகவே அது கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்தல் தேதி வெளியாகவில்லை. இருந்தாலும் அடுத்த ஒரு மாதத்துக்குள் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ளத் தேர்தலில், முன்னாள் வலதுசாரி பிரதமர் மீண்டும்…

ஹமாஸ் இராணுவ தளபதி இஸ்ரேலிய வான் தாக்குதலில் படுகொலை

பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸின் இராணுவத் தலைவர் அஹ்மட் ஜபாரி அவர்கள் காசாவில் வைத்து இஸ்ரேலிய வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். காசாவுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்கள் 4 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்ட மிகவும் உயரிய ஹமாஸ் தலைவர் ஜபாரி ஆவார். அவரது சகா…