நீங்கள் யார்?…….(சிவாலெனின்)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

பயங்கரவாதத்திற்கு எதிரான

போர் என சொல்லி

பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும்

குண்டு பொழிந்த

கயவர்களே

யார் பயங்கரவாதிகள்

தாய்மண்ணை காக்க புறப்பட்ட – எம்மின

மாவீரர்கள் பயங்கரவாதிகளா?

 

எம்மின பெண்களின்

கற்பை காக்கவும்

தமிழினத்திற்கு எதிரான

வன்கொடுமையை எதிர்க்கவும்

காடுகளிலும் மலைகளிலும்

திரிந்து தம் இளமையையும்

இன்னுயிரையும் தந்தார்களே

அவர்களா தீவிரவாதிகள்?

 

இனத்திற்காக போராடும்

அவர்கள் தீவிரவாதிகள்

என்றால்….

முள்ளிவாய்க்காலில் இலட்சகணக்கான

எம்சொந்தங்களை கொன்றுகுவித்த

நீங்கள் யார்?

 

இசைபிரியா போன்ற சகோதரிகளின்

உயிரற்ற உடலையும் சிதைத்தீர்கள்

பாலசந்திரன் போன்ற

அப்பாவி குழந்தைகளையும்

அழித்தொழித்தீர்களே

நீங்கள் யார்?

 

பசியாலும் வலியாலும் துடித்த

எம்மக்களை கண்டு

எள்ளினகையாடினீர்கள்

சொந்தநாட்டு மக்கள்

என்றும் பாராமல்

இரசாயன குண்டுமழை

பொழிந்தீர்களே

நீங்கள் யார்?

 

விசாரணை எனும் பெயரில்

சித்திரவதை முகாம்களில்

அணுவணுவாய் கொன்றுகுவித்த

நீங்கள் யார்?

 

சிங்கள தேசிய கொடியில்

வாளேந்தி இருப்பது

தமிழினத்தை அழிப்பதற்கா

சர்வதேச சமுகத்தின்

துரோகத்தால் இன்று

நாங்கள் வீழ்ந்திருக்கலாம்

அது தற்காலிகமே

நிரந்ரமில்லை………..

 

ஒழுக்கமும் நெறிதவறாத

வாழ்க்கையும்

தளராத மனமும்

அளப்பரியாத வீரமும்

எங்கள் தலைவர்

கற்றுத்தந்த பொக்கிசம்

நயவஞ்சகர்களை பழிதீர்ப்போம்

விரைவில்………………

 

தமிழினத்திற்கு நீங்கள்

செய்த வன்கொடுமைகளுக்கு

ஒருநாள் பதில்

சொல்லத்தான் வேண்டும்

உங்களது கொட்டம் அடக்கப்படும்

உன் ஆணவம் அழிக்கப்படும்

தமிழினத்தை அடிமைபடுத்தி

வென்று விட்டதாய்

நினையாதே சிங்களவனே

கடைசி தமிழன் வழும்வரை

தமிழீழம் சாத்தியமே!!!!!!!!!!!!!!!!!!!!!!!

-சிவாலெனின், சுங்கை,பேராக்.

TAGS: