வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
என் விழிப்பின் சன்னதியில்
தமிழனின் புலம்பல் ஓசை
சவால்களை சந்திக்க எவனுமில்லை
முளைப்பவன் எல்லாம்
தனக்காக முட்டிக்கொள்கிறான்
கேட்டால் அவன் அப்படி எங்கிறான் !
தூங்கும் இன்றைய இளைஞர்கள்
பதப்படுத்த மேடை இல்லை
ஆக்கமும் ஊக்கமும் தந்தால்
அதையும் குறை என்றான் மூத்தவன்
தமிழன் புதைந்து விடலாகா
7ம் அறிவில் சொன்னான்….
உயிர் துடிப்பில் பேசியது போச்சி
அவன் அப்பனும் அறம் அகரம் என்றான்
நம்பிக்கையில் தீ போல
வியர்வையில் வந்த சூடும்
தணிந்த தடம் காணோம் என்
காலத்தை வென்ற நிலையில்
இளைஞனே நான் கூப்பிடும்
சத்தம் கேக்கிறதா ? இளமை
துள்ளும் வயதில் தமிழா உன்
இனத்தை மறப்பது ஏன்?
உன் பின்னால் வந்தவன் உன்னை
கண்டு ஏறிப்போனான் நீ மட்டும் ஏன்
இறக்கத்தில் நின்று ஏங்குகிறாய்
அது முடிவான பாதாலமல்ல
மெல்ல விழித்து எழுந்திடு.. சோம்பி
அடிப்பட்ட பூனையல்ல நீ புலிதான்
என்றால் மயக்கமா?
நீ இறந்து போக வில்லை நறுங்கிவிட
உலகத்தை உணர்வை இழந்தவனும் சாகட்டும்
இனத்தை மறுப்பவனை நீ கொன்று விடு
இதய தாக்கத்தை நீ தேக்கி வைக்காதே
அது உன் தாய் மரணத்துக்கு சமம்
மயக்கத்தில் மடியில் மதி மயங்காதே
அது உன் உடன் உறவை அழிக்கும்
அடியாத மாடு படியாது நீ என்ன அடி மாடா
உனக்கு விதி மேல் அப்படி ஒரு பயம்
விதி மதி சதி என்கிறாய்
நீ பிறந்த மண்ணை உன் கருத்தில் கழுவு
உன் ரத்த கரையை உன் விழியில் தெளித்திடு
உன் இருளை அது மாற்றட்டும்
நீ துடிப்பு மிக்க ஓடம்
ஒளிமிக்க விளக்கு உன் தமிழன்
ரத்தம் சூரியனே வெக்கப்பட வேண்டாமா?
நீ உனக்குள் சூடேட்ற உன்னால் மட்டுமே முடியும்
உலகத்தின் படைப்பை பார்
உனக்கு மட்டும் இந்தியன்தான் எதிரி
உன் முன்னோடிகள் தோற்ற விந்தை
நீயும் அதில் மங்கிவிடாதே
உன் உண்மை உணர்வை கிளறி
கீதம் பாடு சோதனை சாலையில் சொர்க்கம்தேடு
நீ அடிமையில்லை கொடியவனுமில்லை
புதிய அகராதியை இனத்துக்கு புரட்டி போடு
தமிழன் என்ற உச்சத்தில் ஊஞ்சலாட வா
என்னோடு வா நீ தமிழன் இன வெறியன்
என்றால் நான் வர வழி காட்டு
இது என் புலம்பல் அல்ல பூபங்கம்
தோற்று விட்ட காலங்கள் நம்மை
தட்டி எழுப்பி உள்ளது
எழு விழும் முன் எழு
நீ நம் வெற்றிக்கு ஒரு விதி செய்
நானும் வருகிறேன் அதை உரக்கசெய்வோம்!!!
– பொன் ரங்கன்
போதிதர்மன் தமிழனா,இந்தியனா,வாழ்க நாராயண நாமம்.
என்ன பூரி கிழங்கு வடை அப்பளம் சாப்பிட்டால் நன்று
புரிய வில்லை யா இப்படிதான் இருக்குது வெங்காயம் அது பெரியார் சொன்னது உ.ப .த புலம்பி தள்ளு கீரர் ….
“தமிழன் வெற்றிக்கு ஒரு விதி செய் ! தமிழா” என்றால் என்ன. கடந்தக் காலங்களில் அடிக்கடி வலியுறுத்தியதுப் போன்று அரசியலில் நம் பங்கை முதலில் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்; வலிமைப் படுத்திக் கொள்ளவும் வேண்டும். இதற்குப் பிறகுதான் மற்றதெல்லாம். இன்று நம்மவர்களில் ஒவ்வொருவனும் மலேசியனா? 21 வயதை அடைந்து விட்டார்களா? தகுதியிருந்தும் இன்னும் வாக்காளர்களாக பதிவு செய்யவில்லையா? அப்படியானால் அருகிலுள்ள தபால் நிலையம் சென்று வாக்காளர்களாக பதிவு செய்துக் கொள்ளுங்கள். தேசிய அளவில் மாநிலத்திலும், மத்தியிலும் வலிமையான வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்வோம். அரசியலில் நம் பங்கு வலிமையாக இருந்தால்தான் நம் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மற்றவர்கள் மரியாதை செய்வார்கள். மதிக்கவும் செய்வார்கள். நம் உரிமைகளுக்காக நாம் நியாயமானப் போராட்டங்கள் நடத்துவது வரவேற்க்கதக்கதுதான். ஆனால் அதைவிட முக்கியம் நாம் தேசிய அளவில் வலிமையான வாக்கு வங்கியை முதற்க் கடமையாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.நம்மால் முடியாதது எதுவுமில்லை;
ஆடினேன் ஆடினேன்
பாடினேன் பாடினேன்
ஆட்டம் முடிநது ஓடினேன்
ஒட்டு போட வில்லை அடங்கினேன்
தேடினேன் தேடினேன்
தெருவெல்லாம் தேடினேன்
தேவைகள் காணமல் தடவினேன்
விடியல் வரும்வரை வாடினேன்
கூடினேன் கூடினேன்
கோட்டான்கள் கூட்டத்தில்
ஓட்டுபோட ஓடினேன்
பேர காணல பதியிலே பதியிலே
எல்லாம் தெரியும் சொன்னேன்
ஏதும் தெரியாது சமுகத்தில்
ஏங்கி தவிக்குது அரசியல்
ஓட்டு உரிமை இல்லையா நீட்டுலா
நாட்டில் உனக்கு வீடு வேண்டும்
நாக்கில் உனக்கு ருசி வேண்டும்
வீட்டில் உனக்கு உப்பு இல
அரசிடம் போய் சப்பிக்கோ
துப்பி அனுப்புவான் வாங்கிக்கோ
மடமையினால் ஏமாளி நீ
மண்ணில் கல்லறையும் ஏற்க மறுக்குது
எரித்த சாம்பல் கரைய அழுகுது
திடமா மனம் உனக்கு வேண்டும்
திருந்த ஒன்றுமில்லை பதிந்துக்கொள்
சுயமான சரித்திர சுருதி சேர்
ஓட்டு போட்டு முன்னேறி நில்
தமிழா தமிழா ரத்தம் சிந்தடா
யுத்தம் வந்தால் வரட்டும் நீ ஓட்டு போடடா
மயக்கமில்லை முயற்சி வேண்டாம்
ஓட்டு போட முடிவை நீ முழுதாய் எடுடா
அயோயோ போன்ரங்கம் நல்லாதனே இருந்தார். இப்படி ஆயிட்டாரே!
பொன் ரங்கன் ……வாழ்துகிறேன் …உங்கள்…உளறலை ….
விதியை விட மதியே வெல்லும்!