வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
என்ன
குறை வைத்தோம்
உன்னில்,
ஏது குறை சொன்னோம்.
பல பண்பாட்டுத்திருவிழாக்களை
ஆடிக்களித்திருந்த
ஊர்களில் இருந்தல்லவா
காவடிகள் தூக்கி வந்தோம்.
தீச்சட்டி ஏந்தி வந்தோம்.
பால்குடம் எடுத்து வந்தோம்.
எப்படித்தகும்?
கிரக பலன்கள் அவர்க்கும்
கிரக பாவங்கள் நமக்கும்.
தோஷங்கள் நமக்கும்
பரிகாரங்கள் அவர்க்கும்.
நீதி கேட்டு
மதுரை மாநகரை எரித்த
சோழ நாட்டாளே,
எதை எரித்து
நீதி கேட்பாள்
ஈழ நாட்டாள்?
உனைப்போல முடியாதம்மா.
எரிப்பதற்கு
உனக்காவது
மதுரை மாநகர் இருந்தது
நாடே இல்லா
ஏதிழையாள்
என் ஈழ நாட்டாள்.
யுத்தம் சுடுகாடு ஆக்கிய
ஊர்களுக்குள் நின்று கொண்டு
நீதி கேட்கிறாள்.
யுத்தம் சப்பித்துப்பிய
மனிதர்களுக்குள்
இருந்து கொண்டு
நீதி கேட்கிறாள்.
மரண ஓலமும் பிணவாடையும்
சுமந்து வரும் காற்றை
சுவாசித்தவாறு
நீதி கேட்கிறாள்.
அம்மா! தாயே! என
வாயெடுத்துப்பாடிய
அதே வாய்கள்தானே
அன்றும்,
ஐயோ! அம்மா! என
ஓலமிட்டன.
என் தாயே! ஏன் தாயே!
நீ இரங்கி வரவில்லையே.
ஆயிரம் கண்ணுடையாளே
உந்தன் ஒற்றைக்கண் கூட
திறக்கவில்லையே.
பனிச்சங்காயில் படை
விரட்டியவளே!
கந்தகவெடி அதிர்வில்
எங்கள் தாய்க்குலத்துக்கு
மடி கிழிந்து
குறைப்பிரசவம் நிகழ்ந்தபோது,
உந்தன் பனிச்சங்காய்களில்
ஒன்றுதானும் அவர்க்கு
சிராய்ப்புக்காயமேனும்
கொடுக்கவில்லையே.
களப்புக்குள்
எம் ஆடை களைந்து
கலங்கப்படுத்தி
கலவரப்படுத்தியபோது
ஒட்டுத்துணி கூடத்தந்து
நம் மானம் காக்கவில்லையே.
உப்பு நீரில் விளக்கெரியும்
அதிசயம் காட்டியவளே!
சுற்றி வளைத்து
வேலி கட்டி அடிக்கும்போது,
உப்புச்சப்பில்லாமல்
இருந்து விட்டாயே.
“ஓயாத அலைகள்”
தொடர் வெற்றிக்கான ஆசி
உன்னிடமிருந்தல்லவா
பெறப்பட்டது.
நான்கு வானோடிகளின் பறப்பில்
நாற்பது இலட்சம் தமிழனும்
உச்சிக்கிரங்கிக்கிடைக்கையில்,
தலைக்கு மேலே எழுந்தவர்
தலைக்கணமே இல்லாது
உன்னிடம் பணிந்து
விடைபெற்றுத்தானே போயினர்.
உந்தன் கோபுரகலசத்துக்கு
பூத்தூவும் பறப்புதானே
வான்படை கண்ட
முதல் தமிழனின் முதல் பறப்பு!
உலகுக்கு
முத்தாய்ப்பாய் முதல் செய்தி!
ஏன் தாயே?
எமைக்கைவிட்டு விட்டாய்.
ஏன் தாயே?
எமைக்கைதுசெய்ய விட்டாய்.
உண்மைக்குள் வாழ்தல்
எத்தினை அர்த்தம்.
வாழ்ந்துதான் பார்த்தல்
எத்தினை அழகு.
எதிரும் புதிருமான
மௌனத்தை ஏன் தாயே
எங்கும் பரப்பிக்கிடக்கிறாய்.
சென்.பீட்டர் தொடங்கி
செஞ்சோலை, மடு,
ஐயன்கண்குளம்,
முள்ளிவாய்க்கால் என நீளும்
எங்கள்
வண்ணத்துப்பூச்சிகளின்
இறக்கைகள் ஒடிக்கப்பட்டதும்,
அவற்றின்
பல வண்ணக்கனவுகளுக்கு
புலிச்சாயம் பூசப்பட்டதும்
நெஞ்சுக்கு நீதியா?
தேரோடும் வீதியில்
கொலு இருந்தவர்க்கே
கொள்ளி வைத்தார்
புத்தரின் பெயரால்,
போர்தான் வாழ்வென்று
வந்தெம் உறவுகளைத்தின்று
ஏப்பமிட்டவர்கள்.
நெஞ்சில் ஆயிரம்
தீயை வைத்தார்.
நடுநிசி நித்திரையை
மாற்றி வைத்தார்.
கண் கலங்க கதி கலங்க
ஊரெல்லாம் மரண ஓலம்
கேட்க வைத்தார்.
இந்தக்கருமமெல்லாம்
யார் தலைக்கு?
எல்லாம்… எல்லாமே…
வரலாறு மாறும்!
வண்டியும் ஓடத்தில்
ஏறும் என்று எதுவரை
சொல்லிக்கொண்டிருப்பேன்.
தருமத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும் தருமம்
மறுபடியும் வெல்லும் என்று
எதுவரை நம்பிக்கொண்டிருப்பேன்.
இன்று போய் நாளைவரும்.
நெஞ்சறைக்கூட்டுக்குள்
அப்பழுக்கில்லாமல்
அப்படியே
அப்பிப்போய்க்கிடக்கிற
சோகங்களோடு,
பழுதில்லா உணர்வுகளோடு,
நாளை நானும் வருவேன்
நீதி கேட்டு.
நீ தீயாகச்சுடும் வரை…
***
இலங்கை முல்லைத்தீவிலிருந்து…
தாயக கவிஞர்,
-அ.ஈழம் சேகுவேரா-
கருத்துகள் மற்றும் பகிர்வுகளுக்கு:
[email protected]
[email protected]
என் மரணம்
நிகழ்ந்து விட்டதாக
என் எதிரிகள் தான்
தொலைக்காட்சியில்
முதலில் அறிவித்தார்கள்
ஒரு பிணத்தின்
கழுத்தருகே
என் முகத்தையும்
வைத்துக் காட்டினார்கள்
எனக்கு
அந்நியமானவர்கள் முதல்
அன்னியோன்னியமானவர்கள் வரை
அனைவருமே
என் மரணத்துக்கு
இரங்கல் தெரிவித்தார்கள்
என் மரணத்தை
அவர்கள்
உள்ளூர விரும்பியிருக்கிறார்கள்
என் மனத்தின்
அடியாழத்தில்
ஏதோவோர் ஓரத்தில்
ஒரு சிறு நம்பிக்கையின்
கீற்று
நான் மரணிக்கவில்லையென்று
சொல்கிறவரை
என் மரணத்தை
எப்படி நான் நம்ப முடியும்.
என் அடையாளம்
அவன்.
அவன் வேறு
நான் வேறோ?
எழுநூறு கோடி மனிதர்கள்
இருப்பதாய் நம்பும்
கடவுள்
இருக்கிறாரா என்று
எப்படி சந்தேகிப்பதில்லையோ
தமிழக கீற்றில் மின்னிய
தேடி எடுத்த கவிதை…. அந்த
நீ ( தி) தீ க்கு ஆறுதல் பாடுவோம்
—————————————————
அப்படியே
எட்டு கோடி தமிழர்கள்
நம்பும்
ஒரு மனிதன்
இருப்பதை நாங்கள்
சந்தேகிப்பதில்லை.
நீ என் பள்ளி வழி சுமந்தாய் …
———————————————-
அப்பா ,,,,குருதியாய் முட்டையாய்
சிசுவாய் குழந்தையாய்
பையனாய் மாணவனாய்
இளைஞனாய் முரடனாய்
மனிதனாய் காதலனாய்
அப்பனாய் மாமனாராய்
தத்தாவாய் முடமாய்
ஜடமாய் பிணமாய்
கட்டையாய் கொழுப்பாய்
கருப்பாய் சாம்பலாய்
நீராய் கடலாய்
இரையாய் மீண்டும்
உரமாய் வரத்தானே
நீ அப்பா !
அன்புள்ள அப்பாவுக்கு
நீ என் பள்ளி வழி சுமந்தாய்
தோல்களை தேடுகிறேன்
உன் தலைதான் பாதுகாப்பு
பிடிச்சுக்கோ என்றாய்
அந்த தலைமுறை தாகம்
தொடுரும் அப்பா நன்றி !
நீ என் பள்ளி வழி சுமந்தாய் …
———————————————-
அப்பா ,,,,குருதியாய் முட்டையாய்
சிசுவாய் குழந்தையாய்
பையனாய் மாணவனாய்
இளைஞனாய் முரடனாய்
மனிதனாய் காதலனாய்
அப்பனாய் மாமனாராய்
தத்தாவாய் முடமாய்
ஜடமாய் பிணமாய்
கட்டையாய் கொழுப்பாய்
கருப்பாய் சாம்பலாய்
நீராய் கடலாய்
இரையாய் மீண்டும்
உரமாய் வரத்தானே
நீ அப்பா !
அன்புள்ள அப்பாவுக்கு
நீ என் பள்ளி வழி சுமந்தாய்
தோல்களை தேடுகிறேன்
உன் தலைதான் பாதுகாப்பு
பிடிச்சுக்கோ என்றாய்
அந்த தலைமுறை தாகம்
தொடுரும் அப்பா நன்றி !
ஏன் கண்ணகி மதுரையை எரித்தாள்,அறம் செத்துவிட்டது / தர்மம் தழைக்கவில்லை மற்றும்2.வடக்கிலே முஸ்லிம் மக்கள் வாழ்ந்த பூமி,பேராசை விட்டதா நம்மவரை,அவர்களை கொடுமை செய்து விரட்டினர்.அறம் தவறும் போது அனைத்தும் துலைந்துவிடும் /கைவிட்டு போகும்.
இலங்கை தமிழ்/ஹிந்து சங்கம் திரு.ஜெயராஜ் சொல்லுவார்,ஆடு கோழியை கத்த,கதற அறுத்து தின்றுவிட்டு தன் குழந்தையை / குடும்பத்தை காபாற்று இறைவா என்று வேண்டுவாராம் ஒருவர்.அன்பு வேண்டும்,பொது நலத்தில் அக்கறை வேண்டும்.பேராசை,சுயநலம்.பொல்லாதது.திருக்குறளில் இல்லறத்தில் சமுதாயத்தில் அன்பும் பின் தியாகத்தையும் அருளையும் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க நாராயண நாமம்.