என்னைத்தேடும் நான்

இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

எழுதிய எழுத்துக்கள் என்னுடையது என்றாலும் 
அதன் பொருளிலும் நான் இல்லை 

நீ சிந்திய புன்னகைகளை அள்ளி 
நான் சிந்தும் கண்ணீரிலும் நான் இல்லை 

உனக்கக நான் கட்டிய மன கூட்டில் 
தனி பறவையாய் நான் இல்லை 

வரிகள் நான் பேச உன் ஒரு 
வார்த்தை பதிலிலும் நான் இல்லை 

வாய்விட்டு சிரிக்கும் என் புன்னகையிலும் 
புன்னகை மறந்த நான் இல்லை 

வாய் மொழி பகிரும் சிலரிடமும் 
வாய்மையையாய் நான் இல்லை 

சிந்திய கண்ணீருக்கும் பலன் இல்லை 
சிந்தும் கண்ணீரும் பதில் இல்லை 

உன்னுள் தொலைந்த என்னை 
எங்கும் தேடும் அறிவிழி நான்

Kavitha

eluthu.com

TAGS: