நாட்டு மக்களோ,
ஆட்டு மந்தைகள் போல,
அவர்களை மேய்ப்பர்களோ,
தவறாக வழிநடத்திச்செல்லும்,
பரிதாபம்!
நாட்டுத் தலைவர்களோ, ஏமாற்றுபவர்களாக,
கலங்கமற்றவர்களோ, ஊமையாக,
மதவெறியர்களோ அலைவரிசையை வேட்டையாடும்,
பரிதாபம்!
நாட்டுக்கென குரல் ஏதுமில்லை,
ஆள்பவரைப் போற்றும் குரல் மட்டும் ஓய்ந்ததில்லை
வதைப்பவன் இங்கு வீரனாக,
அவனின் இலக்கோ கொடுங்கோல்
உபயோகித்து உலகை ஆள,
பரிதாபம்!
நாடு அதன் சொந்த மொழியையும்,
சொந்த கலாச்சாரத்தையும் தவிர
வேறேதும் அறிந்ததில்லை,
பரிதாபம்!
பணத்தையே சுவாசிக்கும் நாடு,
நன்கு உண்டுவிட்டு உறங்குபவன் உறக்கத்தில் திளைக்கும்,
பரிதாபம்!
பரிதாபமான நாடு – பரிதாபத்திற்குரிய மக்கள்
தங்கள் உரிமைகள் சரிக்கப்படவும்,
தங்கள் சுதந்திரம் மூழ்கடிக்கப்படவும் விட்டுவிட்ட,
பரிதாபம்!
என் நாடே, உம் கண்ணீர்,
இவ்வினிய சுதந்திர மண்ணில்.
– ஆக்கம் : லாரன்ஸ் ஃபெர்லிங்ஹெட்டி
– மொழிபெயர்ப்பு : மோனாலிசா முனியாண்டி