மலேசியவாழ் தமிழ் மக்களுக்கு வணக்கம் நலம் மலர்க! தயவுசெய்து எமது தனிப்பட்ட இக்கருத்தை கல்வி மற்ற மாணவர்கனின் மனநிலையில் எழுதப்படுகிறது என்பதை முன்னவே தெரிவித்துக் கொள்வதோடு பொறுமையுடன் படிக்கவும் .
சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் யு.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப பெற்ற அதாவது 6-8ஏக்கள் பெற்ற மாணவர்கள் சிறந்த ஆசிரியர்கள் சிறந்த பள்ளிகள் போன்றவைகளை சிறப்பிக்கும் நிகழ்ச்சி புலனத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பிப்பது தவறு என்று சொல்ல வரவில்லை ஆனால் மாணவர்களை சிறப்பிப்பதில்தான் முரண்பாடு உள்ளது. மாணவர்கள் கல்வியைக் கற்பது என்பது அவர்களின் அடிப்படை கடமையாகும். அதற்காக மாணவர்களை சிறந்தவர்கள் என்றும் சிறந்தவர்கள் அல்லாதவர்கள் என்றும் பிரிப்பதும் வேற்றுமைப் படுத்துவதுடன் சிறப்புத் தேர்ச்சிப் பெறாத மாணவர்களைத் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாக்குவது முறையல்ல.
6-8ஏக்கள் பெற்ற மாணவர்கள் அறிவாளிகள் என்றும் 1-5ஏக்கள் பெற்றவர்களும் அல்லது ஏக்களே பெறாமல் பிக்களும்(Bs) அல்லது இன்னும் குறைந்த மதிப்பெண்களை பெற்றவர்களும் அறிவற்றவர்கள் (முட்டாள்கள்) என்று பொருளாகுமா? தொடக்கப் பள்ளிகளிலேயே மாணவ மணிகளை சிறந்தவர்கள் முட்டாள்கள் என்ற வேற்றுமை என்பது “முதாலாளித்துவ” அடிப்படையிலான பிரிவினைக் கொள்ளகையாகும்.
மேலும் தமிழ்ப்பள்ளிகளின் தேர்வுகளில் சிறப்பத் தேர்ச்சிப் பெறும் மாணவர்கள் பெரும்பான்மை வசதியுடைய குடும்ங்களை சார்ந்த மாணவர்களாகும். இத்தகையக் குடும்பங்களை சார்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் டியூசனுக்காக செலவிடும் வசதிகள் உண்டு.
ஆனால் சாதாரன குடும்பங்களை சார்ந்த மாணவர்களுக்கு அவ்வாறு கிடையாது. இவ்வாறு இயலாத குடும்பங்களை சார்ந்த ஏதோ சில பெற்றோர்களின் முயற்சியால் அவர்களின் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்களை பெறுகிறார்கள் . எனவே ஆறாம் ஆண்டிலேயே நம் மாணவ மணிகளுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி தாழ்வு மனப்பான்மை, பிரிவினை, வேற்றுமைகளை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
இல்லாதவர்களுக்கு உதவுவதே மனித நேயம், அறம். இவ்வாறு சிறப்பித்தலுக்கு செலவிடும் தொகையை இல்லாத பிள்ளைகளின் கல்விக்கும் அதாவது டியூசன் போன்றவைக்கு மாநில அரசு உதவலாம அல்லவா? இதுபோன்ற நிகழ்ச்சிகள் சில ஆண்டுகளுக்கு முன் பரவலாக நடைபெற்றது.
ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகள நடத்தி மாணவர்களின் மனநிலையைப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாதென்று ஒரு சில ஆண்டுகளுக்கு முன் கல்வி இலாக்காவின் முதன்மை அதிகாரி அறிவித்தபின் இத்தகைய நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி வாழ்க வளமுடன்!