விழித்திடு மானிடா… வினை உன்றன் விரல்களில்… (ஓவியா)

உலகில் நாள்தோறும் அதிகரித்து வரும் போதைப் பழகத்தையும் அதனால் ஏற்படும் தாக்கத்தையும் தடுப்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல பன்னாட்டு சமூக அமைப்புகளும் பல நாடுகளும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை ஈடுபட்டு வந்தாலும் புகைபிடித்தலின் தாக்கம் குறைந்தபாடில்லை. புகைபிடித்தலுக்கு அடிமையானவர்கள் தங்களது அன்றாட தேவைகளில் ஒன்றாக ‘வெண்சுருட்டை’ பயன்படுத்தி வருவது மனித குலத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கு ஆபத்தை ஏற்படுத்தப்போகும் என்பதில் ஐயமில்லை. போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தங்களுக்காக ஒரு காரணத்தையும் உருவாக்கிக் கொண்டு தங்களது அழிவை நோக்கி நகர்ந்துகொண்டிப்பது அவர்களின் அறியாமையின் அறிகுறியே….

TAGS: