தமிழ்ப்பள்ளிக்குச் சரிவா…? சாவா…? (ஓவியா)

மொழி ஒரு கலாச்சாரத்தின் அடித்தளம். மொழி அழிந்தால் அந்தக் கலாச்சாரம் அடையாளம் காணமுடியாமல் அழிந்துபோவதோடு இனமும் அழிந்துவிடும் – இது வரலாறு கண்ட உண்மை. இந்நாட்டில் தமிழ்க் கலாச்சாரத்தின் அடித்தளம் தமிழ்மொழி. அக்கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதில் முதன்மையாக விளங்குவது தமிழ்ப்பள்ளிகள்.

ஆனால், மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் இன்றைய நிலை மற்றும் அவற்றின் எதிர்காலம் சவக்குழியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை….

“உன் தாய் மொழி தமிழ் மொழி.. நீயும் நன்கு படித்தாய் தமிழ் வழி.. உன் பிள்ளைக்கு மட்டும் ஏனடா வேறு மொழி..?” என தமிழர்களது உணர்வுகளை கவிதை வரிகள் மூலம் தட்டியெழுப்புகிறார் தமிழ்ப்பள்ளி ஆசிரியையும் வளர்ந்து வரும் இளம் கவிதாயினியுமான செல்வி. வாணி உமாபதி. [இது போன்ற ஆக்கங்களை எழுதி அனுப்ப விரும்புவோர்  [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.]

TAGS: