மனிக்பாம் முகாமுக்கு திருப்பி அனுப்பப்பட்ட முல்லைத்தீவு மக்கள்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் திருமுறிகண்டி பிரதேசத்தில் மீள்குடியேற்றுவதற்காக மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் இருந்து அழைத்து வரப்பட்ட 49 குடும்பங்களில் ஒரு தொகுதியினரை மீண்டும் மனிக்பாம் முகாமுக்கே கொண்டு செல்வத்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்திருக்கின்றார். கடந்த சனிக்கிழமை அழைத்து வரப்பட்டு முறிகண்டி…

மும்பாய் தாக்குதல் சூத்திரதாரி அபு ஹம்ஸா கைதானார்

மும்பாய் நகரின் மீது 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களை திட்டமிட்ட முக்கிய இந்திய சந்தேக நபர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அபு ஹம்ஸா என்று அழைக்கப்படும், சையது சபியுதீன், மும்பாய் மீது தாக்குதல் நடத்திய 10 துப்பாக்கிதாரிகளை, தொலைபேசி மூலம் பாகிஸ்தானின்…

உரிமைகளை மீட்க கிள்ளானில் அமைதி ஊர்வலம்

இந்நாட்டில் தொடர்ந்து மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டு வரும் மலேசிய இந்தியர்களின் அடிப்படை உரிமைக்கான கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் உடனடியாக அமல்படுத்தவேண்டும் எனக் கோரி நேற்று மாலை கிள்ளானில் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. (படங்கள்) சிலாங்கூர் மாநில நடவடிக்கை குழு ஏற்பாடு செய்திருந்த இந்த அமைதி ஊர்வலத்தில் சிறுவர்கள் தொடக்கம்…

எல்லையில் பறந்த துருக்கி போர் விமானத்தை சிரியா சுட்டு வீழ்த்தியது

துருக்கியின் எப்-4 ஜெட் போர் விமானம் சிரியா கடற்கரை பகுதியில் உள்ள ஹாடே மாகாணத்தில் பறந்தது. அப்போது திடீரென சிரியா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து விட்டது. இதை கண்காணித்த சிரியா இராணுவம் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அதில் விமானி உள்பட 2 பேர் இருந்தனர். அவர்கள் அதிர்ஷ்டவசமாக…

சிரியாவில் பயங்கர கலவரம்: ஒரே நாளில் 170 பேர் பலி

சிரியா அதிபர் பஷார் கல்-அஸ்ஸாத்துக்கு எதிராக பொது மக்களில் ஒரு பகுதியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய போராட்டம் இன்று வரை ஓயாமல் நீடித்து வருகிறது. போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக கலவரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் ராணுவத்துக்கும்- போராட்டக்காரர்களுக்கும் பயங்கர…

Malaysia Mentioned 3 Times at UN Human Rights…

Special Rapporteur for Freedom of Assembly and Association, Maina Kiai’s reporting session resumed today where he mentioned Malaysia on numerous occasions in his closing speech. Maina Kiai affirmed his intention to continue constructive dialogue and…

படகு விபத்தில் காப்பற்றப்பட்டவர்களில் இலங்கையர் எவரும் இல்லை

ஆஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவுப் பகுதியில் விபத்துக்குள்ளான படகில் இருந்து காப்பாற்றப்பட்ட 110 பேரில் இலங்கையர்கள் எவரும் இல்லை என இந்தோனேசியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் என நம்பப்படும் 200 அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று நேற்று கிறிஸ்மஸ் தீவுப் பகுதியில் விபத்துக்குள்ளானது.…

குடியரசுத் தலைவர் தேர்தல்: சாங்மாவுக்கு பாஜக, பிரணாபுக்கு சிபிஎம் ஆதரவு

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி சாங்மாவை ஆதரிப்பதாக அறிவித்தாலும், தேசிய ஜனநாயக முன்னணியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அந்தக் கூட்டணியில் இருக்கும் ஒரு பிரதான கட்சியான ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியால் முன்நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு தனது ஆதரவை…

ஆஸி. செல்ல முயன்ற அகதிகள் படகு கவிழ்ந்துள்ளது

ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரும் நோக்கில் சுமார் 200 பேரை ஏற்றிச் சென்ற ஒரு படகு, இந்தோனேஷியத் தீவான ஜாவாவுக்கு தெற்கே கடலில் கவிழ்ந்துள்ளது. அந்தப் படகில் இருந்தவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக கருதப்படுகிறது. விபத்து நடந்த இடத்துக்கு இருநாட்டு கடற்படை மற்றும்…

கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் ஆழத்துக்கு சென்று சீனர்கள் சாதனை

கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் ஆழத்துக்குச் சென்று, சீனர்கள் சாதனை படைத்துள்ளனர். கடலுக்கு அடியில் ஏராளமான கனிமங்களும், இன்னும் சில அற்புதங்களும் புதைந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கடலின் மிக அதிக ஆழம் வரை செல்லும் வீரர்களின் துணையோடு, சில ஆராய்ச்சிகள்…

இந்தியாவில் அதிகரிக்கும் இளவயது தற்கொலைகள்

அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாகவும், தற்கொலை செய்துகொள்பவர்களில் 60 சதவீதம் பேர் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளம்பருவத்தினர் என்றும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. உலக அளவில் மக்கள் தொகை அடிப்படையில், அதிகபட்சமானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகள் குறித்து லான்செட் என்கிற மருத்துவ…

மன்மோகனை மஹிந்த ராஜபக்சே றியோடிஜெனிரோவில் சந்தித்தார்

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிறேஸிலின் றியோடிஜெனிரோ நகரில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பிறேஸிலில் நடைபெறும் 'றியோ பிளஸ் 20" மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ள இந்திய - இலங்கைத் தலைவர்களின் இந்தச் சந்திப்பு குறுகிய நேரமே இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரது செயலர்…

போரினால் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மலேசிய அரசாங்கம் நிதியுதவி

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற போரினால் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மலேசிய அரசாங்கம் 3.2 மில்லியன் வெள்ளியை நிதியுதவியாக வழங்கியுள்ளது. (காணொளி) சுமார் 40 பொது இயக்கங்களை பிரதிநிதித்து மலேசிய தமிழர் பேரவை இந்நிதியை பொறுப்பேற்றுள்ளது. இந்நிதியுதவிற்கான மாதிரி காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று காலை கோலாலம்பூர் மாநகராட்சி…

குடியரசு தலைவர் தேர்தலைப் புறக்கணிக்க தேமுதிக முடிவு

நடிகர் விஜயகாந்த தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அஇஅதிமுக குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் மக்களவைத் தலைவர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்கப்போவதாகவும், திமுக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கப்போவதாகவும் அறிவித்திருக்கும் சூழலில், தொடர்ந்து தமிழகத்தின் நலன்களைப் புறக்கணிக்கப்படுகின்றன.…

மகள் மீது பாலியல் பலாத்காரம்:பிரெஞ்சு அதிகாரி கைது

தென் இந்திய மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவிலுள்ள பிரெஞ்சு துணைத் தூதரக அதிகாரி பஸ்கால் மசூரியே, தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி காவல்துறையினரிடம் புகார் செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்…

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை: பிரதமருக்கு ஜெ. கடிதம்

முல்லைப் பெரியாற்றை அடுத்து கேரளாவுடன் இன்னொரு முனையிலும் தமிழகத்திற்குப் பிரச்சினை துவங்கிவிட்டது. கேரள அரசு சிறுவாணியாற்றின் குறுக்கே அணை ஒன்றைக் கட்டவிருப்பதாக செய்திகள் வந்திருப்பதாகவும் அவ்வாறு அணை ஏதும் கட்டப்பட்டால் கோவை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அச்சம் தெரிவித்தும்…

பர்மிய இன மோதல்: 90,000 பேர் இடம்பெயர்ந்தனர்

பர்மாவின் மேற்கில் பௌத்த மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வன்முறை மோதல்களில், 90,000 பேர் வரை தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக உதவி நிறுவன பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு தாம் அவசரகால உணவு உதவிகளை வழங்கியுள்ளதாக உலக உனவுத்திட்ட…

200 இலங்கை அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து

ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரிச் சென்ற 200 இலங்கைத் தமிழ் அகதிகளின் படகு கிறிஸ்மஸ் தீவிற்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தின்போது 75-க்கும் மேற்பட்டோர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. படகு விபத்தில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் எண்ணிக்கை விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை…

வவுனியா சிறைச்சாலையில் இரு குழுக்களிடையே மோதல்

வவுனியா சிறைச்சாலையில் இன்று இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக எழுவர் காயமடைந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இரு குழுக்களிடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் மோதலில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பி. டபிள்யூ…

ஆப்கான் ஹொட்டல் தாக்குதலில் 15 பொதுமக்கள் பலி

ஆப்ஹானிஸ்தானில் ஒரு ஆடம்பர ஹொட்டலில் தலிபான் தீவிரவாதிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடந்த 12 மணிநேர சண்டையில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் படையினர், பொலிஸார் மற்றும் தீவிரவாதிகளும் இதில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தலைநகர் காபூலுக்கு அருகே லேக்சைட் ஹொட்டலின் மீது தலிபான்கள் வியாழனன்று பிற்பகலில் தாக்குதலை…

Sue KL mayor instead, says Suaram

PETALING JAYA: Kuala Lumpur City Hall (DBKL) should sue Kuala Lumpur Mayor Ahmad Fuad Ismail instead of Bersih leader S Ambiga for alleged losses incurred during the April 28 rally for clean and fair elections.…