ஒரு குழந்தை திட்டத்தால் சீனாவில் பலியான குழந்தை

பீஜிங் : சீனாவில், ஒரு குழந்தை திட்டத்தை செயல்படுத்துவதில் கண்டிப்பு காட்டிய அதிகாரிகளால், 13 மாத குழந்தை, வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம், அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில், மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், 1979ல் 'ஒரு குழந்தை திட்டம்', அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, நகர்ப்பறங்களில் இருக்கும் தம்பதிகள், ஒரு…

சுனாமியால் சாலமன் தீவில் ஐந்து கிராமங்களை காணோம்

சிட்னி : பசிபிக் கடலில் உள்ள, சாலமன் தீவில், சுனாமி தாக்கியதில், ஐந்து கிராமங்கள் அழிந்துள்ளன. தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள சாலமன் தீவில், நேற்றுமுன்தினம், 8 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதனால், இந்த தீவில் உள்ள பல பகுதிகள் அதிர்ந்தன. 100க்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாயின.…

சென்னை விடுதியில் பறந்த சிங்கள கொடி தமிழ் உணர்வாளர்களால் அகற்றப்பட்டது

சென்னை பாண்டி பஜாரில் அமைந்துள்ள விடுதியின் வெளியே பறந்த சிங்கள கொடியை தமிழர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் இன்று அகற்றி உள்ளனர். இது குறித்து தமிழர் எழுச்சி இயக்கம் பொதுச் செயலாளர் வேலுமணி கருத்துத் தெரிவிக்கையில், இன்று காலை நடைபெற்ற திருப்பதி தேவஸ்தானம் இழுத்து மூடும் போராட்டத்தை…

ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 54 பேர் கைது

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 54 பேர் இலங்கையின் கிழக்கு கடலில் வைத்து அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்ந ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட முதல் குழுவினர் இவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு கல்குடா கடலிலிருந்து 12 மைல் தொலைவில் வைத்து குறித்த நபர்…

இலங்கை வங்கியின் சென்னைக் கிளை மீது தாக்குதல்

சென்னை எழும்பூரில் உள்ள, இலங்கை வங்கியின் கிளைக்குள் நேற்று வியாழன் மதியம் முகமூடி அணிந்த சிலர் புகுந்து, கண்ணாடி ஜன்னல்களைத் தடியால் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். சுவர் கடிகாரம் போன்ற சில பொருட்களும் சேதமடைந்திருக்கின்றன. ஊழியர் இருவரும் தாக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன, ஆனால் எவரும் தாக்கப்படவில்லை என…

காஷ்மீர் : பெண்கள் இசைக்குழுவை மிரட்டியவர்கள் கைது

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் முழுவதும் பெண்களைக் கொண்ட றொக் இசைக்குழுவைப் பற்றி இணையத்தில் மிரட்டும் கருத்துக்களை வெளியிட்ட சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் மூவரைக் கைது செய்திருக்கிறார்கள். இரு மாதங்களுக்கு முன்னதாக ஒரு இசை விழாவில் தாம் நேரடி நிகழ்ச்சி நடத்தியதை அடுத்து, தமக்கு இணையத்தில் வெறுப்பைக் கக்கும்…

இந்தியாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிக்கிறது

இந்தியாவில் சிறார்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறுகிறது என்று ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் அமைப்பு கூறுகிறது. குறிப்பாக பள்ளிக்கூடங்களிலும், அரசு நடத்தும் சிறார் நல மையங்களிலும் சிறார் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அது தெரிவித்துள்ளது. இந்தியாவில்…

அன்வாருடன் விவாத மேடை – 14.2.2013

தேர்தலுக்குப் பிறகு மாற்றுக் கூட்டணி ஆட்சி அமைத்தால்  அரசியல் கொள்கைகள் எவ்வாறு அமையும் என்பதை எதிரணியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் விளக்கக் கோரும்  விவாத மேடையொன்றை  செம்பருத்தி.கொம் இணையத்தளம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி வரும் 14.2.2013 வியாழக்கிழமை  மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி மாநாட்டு மையத்தில் மாலை மணி 7.30-க்கு நடைபெறும் என…

ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே இந்தியாவில் கால் வைக்கக் கூடாது :…

இலங்கை அதிபர் ராஜபக்சே, தனது சொந்த மக்கள் மீது போர் தொடுத்து,  நரபலியில் ஹிட்லரை பின்னுக்கு தள்ளி உள்ளார். இப்படி பட்ட ஒரு மனித மிருகம் இந்தியாவிற்கு வருவது பாரத நாட்டிற்கே அவமானம். ஆகவே, அவர் இந்தியா வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிறார் பீகார் ஒபரா தொகுதி…

ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது: விக்ரமபாகு

ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளவே இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருவதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசாங்கம் இனவாதத்தை தூண்டி வருகின்றது. சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க முடியாத நிலைமை இந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. மனித உரிமைப்…

சி.பாண்டிதுரைக்குச் சூடா ஒரு ‘டத்தோ’ பட்டம் பார்ர்ர்சல் ! (…

-ம. நவீன் அண்மையில் ஓவியர் சந்திரனின் நூல் வெளியீட்டு விழா கோலாலம்பூரில் நடைபெற்றது. டாக்டர் Read More

இந்தியாவில் தேவையற்ற கர்ப்பப்பை அறுவை சிகிச்சைகள்

இந்தியாவில், அறுவை சிகிச்சைகளிலிருந்து மேலும் கூடுதலாக பணம் பண்ணுவதற்காக, மோசடி டாக்டர்கள் , பெண் நோயாளிகளின் உடலிலிருந்து கர்ப்பப் பைகளை தேவையற்ற நிலையிலும் அகற்றிவிடுகிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது போல கர்ப்பப்பைகள் அகற்றப்பட்ட சில பெண்கள் பிபிசியிடம் பேசுகையில், இது போல கர்ப்பப்பை அகற்றப்படாவிட்டால், அவர்களுக்கு புற்று…

தமிழன் பண்பாட்டில் தடுமாற்றம்… (ஓவியா)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

சொலமன் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மூன்று கிராமங்களில் சுனாமி!

தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருக்கும் சொலமோன் தீவுகளில் இன்று காலை (புதன்கிழமை) ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 90 செ.மீ., உயரம் கொண்ட சிறிய அளவு சுனாமி சொலமோன் தீவை தாக்கியதாகவும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனையடுத்து அவுஸ்திரேலியா,…

ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். சேலம் நீதிமன்ற வளாகத்தில் கூடிய சேலம் சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே, தமிழர்களுக்கு தன்னாட்சி தர இயலாது என்று கூறியதற்கு கடும் கண்டனமும்…

தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகளை சந்திக்கிறார் இலங்கை எம்.பி ஜயலத்

தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழ் அகதிகளைச் சந்திப்பதற்காக இலங்கையின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தனா நேற்று தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ளார். ஒருவார காலம் தமிழ்நாட்டில் தங்கிருந்து அங்குள்ள அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களைச் சந்தித்து அவர்களின் தற்போதைய நிலைமைகள்…

ஆஸ்திரேலியா ஜீலோங் நகரில் ஏற்றப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி!

ஆஸ்திரேலியா, மெல்பேர்ண் நகரிலிருந்து நூறு கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் பிரசித்தமான ஜீலோங் (Geelong)  நகரிலுள்ள தொழிற்சங்கக் கட்டடத்தின் கொடிக் கம்பத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. சிறி லங்காவின் சுதந்திர நாளைப் புறக்கணித்து, தமிழ் மக்களின் இறைமையை வலியுறுத்தி தமிழீழத் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை (04.02.2013) அன்று நடைபெற்றது.…

பங்களாதேஷ் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை

பங்களாதேஷின் பிரதான இஸ்லாமியக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் , பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற , 40 ஆண்டுகளுக்கு முன்னர், நாட்டில் விடுதலைப் போர் நடந்த கால கட்டத்தில், இழைக்கப்பட்ட கொடுஞ்செயல்களில் ஈடுபட்டதற்காக , சிறப்பு போர்க்குற்றங்கள் தீர்ப்பாயம் ஒன்று அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. ஜமாத் இ…

வீட்டு வேலைக்காக இலங்கை பெண்கள் சவுதி அரேபியா செல்ல தடை

துபாய் : இலங்கை பெண்கள், சவுதி அரேபியாவில், வீட்டு வேலை செய்ய செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில், இலங்கையை சேர்ந்த, ஐந்து லட்சம் பெண்கள், வீட்டு வேலை செய்கின்றனர். இவர்கள், அந்நாட்டு எஜமானர்களால் பல்வேறு கொடுமைக்கு ஆளாகின்றனர். வீட்டு வேலை செய்யும் பெண்களின் உடலில் ஆணி அடிப்பது,…

“பழனிவேலுவினால ரோட்டத் தாண்ட முடிஞ்சா… நான் மொட்டை போடுறேன் முருகா!”

முருகா, தைப்பூசம் முடிஞ்சி ஒரு வாரத்துக்குப் பிறகு இதை நான் வேண்ட சில காரணம் இருக்கு. கூட்டம் குறையுமுன்னு பார்த்தா 'ஒற்றுமை பொங்கலுக்கு' எங்க பிரதமர் தந்த ஓஸி பேருந்தால பத்துமலையில கடுமையான நெரிசல். உன்னைப் பார்க்க மக்கள் 'ஒற்றுமை பொங்கல்' பேருந்தைப் பயன்படுத்திக்கிட்டதைப் பத்தி எங்க பிரதமருக்கு…

தோட்டப்புற இந்திய மாணவர்களுக்கு 5 மில்லியன் செலவில் தங்கும் விடுதி

மலேசிய தோட்டங்களில் வாழும் இந்திய மலேசியர்களின் குழந்தைகள் புதியதோர் சூழ்நிலையில் கல்வி கற்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும் என்ற திட்டத்தின் முதல் கட்டமாக சிலாங்கூர் மாநிலத்தில் தோட்டப்புற மாணவர்களுக்கு 5 மில்லியன் செலவில் தங்கும் விடுதி கட்டும் திட்டம் கடந்த சனிக்கிழமை 2-ஆம் அதிகாரப்பூர்வமாக…

ஈரானில் பிடிப்பட்ட 29 குமரி மீனவர்கள் விடுவிப்பு

நாகர்கோவில்: வழி தவறிச் சென்று ஈரானில் பிடிபட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 29 மீனவர்களை அந்த நாடு விடுவித்துள்ளது. கத்தார் நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி மீன் பிடித்து கொண்டிருந்தபோது இயற்கை சீற்றத்தால் வழி தவறி சென்ற குமரி மாவட்டம் கேரளாவை சேர்ந்த 29…