நஜிப் : 3.7 மில்லியன் மலேசியர்கள் இன்னும் வாக்காளராக பதியவில்லை

14-வது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், 3.7 மில்லியன் மலேசியர்கள் இன்னும் வாக்காளராகப் பதியாமல் இருப்பதாக பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார். நாட்டின் எதிர்காலம் வாக்காளர்களின் கைகளில் இருப்பதால், உடனடியாக வாக்காளராகப் பதியும்படி நஜிப் அவர்களைக் கேட்டுக்கொண்டார். “உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வாய்ப்பை மற்றவர்களுக்குக் கொடுத்துவிடாதீர்கள். அவர்களின்…

மாணவி வளர்மதியை விடுதலை செய்க, ‘சிறகுகள்’ மாணவர் அமைப்பு கோரிக்கை

கடந்த ஜூலை 12-ல் கைது செய்யப்பட்ட, தமிழ்நாடு, பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ‘சிறகுகள்’ மாணவர் அமைப்பு கேட்டுகொண்டது. வளர்மதிக்கு ஆதரவாக, அமைதி ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று சற்றுமுன் சுங்கை சிப்புட்டில் நடந்தது. சமூக விழிப்புணர்வுக்கான மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த…

ஹிஷாமுடின் : மகாதீருக்கு சிந்தனை வறட்சி ஏற்பட்டுவிட்டது

நஜிப் பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும், தான் அம்னோவில் இணையப்போவதில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் கூறியுள்ளது, அவருக்குச் சிந்தனை வறட்சி ஏற்பட்டுள்ளதையேக் காட்டுகிறது என ஹிஷாமுடின் உசேன் கூறினார். அம்னோவிலிருந்து பதவி விலகுவதும், மீண்டும் சேர்ந்துகொள்வதும் மகாதீருக்குப் புதியதல்ல. இதற்கு முன் பலமுறை இது நிகழ்ந்துள்ளது என…

ஜசெக-விடம் ஏமாறாதீர்கள், சீன வாக்காளர்களுக்குத் துணைப் பிரதமர் அறிவுரை

ஜனநாயக செயற்கட்சியினால் (ஜசெக) தொடர்ந்து ஏமாற்றப்படுவதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும்படி, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஷாஹிட் ஹமிடி சீன வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார். கடந்த 12 மற்றும் 13-ம் பொதுத் தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத சூழ்நிலையில், இன்னும் அக்கட்சியைத் தொடர்ந்து நம்பியிருக்க வேண்டாமென அம்னோ…

சரவாக்கில் நுழைய, ‘லிசன்’ கே.எஸ்.பவானிக்குத் தடை!

இன்று காலை, மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்) தேசியத் துணைச் செயலாளர் பவானி கன்னியப்பன் சரவாக் விமான நிலையத்தில், குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். சரவாக் மாநிலத்தினுள் நுழைய அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவ்வதிகாரிகள் தெரிவித்ததாக கே.எஸ்.பவானி கூறினார். பேராக் , கம்பாரிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக தனது போக்குவரத்து…

சுஹாகாம் : ஜி25-ன் இஸ்லாமியப் புத்தகத்தின் தடையை அகற்றுக

மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்), ஜி25 வெளியிட்டுள்ள ‘மௌனத்தை உடைப்போம் : மிதவாதக் குரல்கள் - அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இஸ்லாமியம்’ (Breaking the Silence: Voices of Moderation - Islam in a Constitutional Democracy) எனும் புத்தகத்தின் தடையை அகற்றும்படி உள்துறை அமைச்சைக் கேட்டுக்கொண்டது.…

2013 இல் பேராக் சட்டமன்றப் பேரவையில் அளித்த வாக்குறுதி என்னவானது?

துரோனோவில் தங்கமீன்கள் வளர்க்கும் 39 விவசாயிகள், தாங்கள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சனைக்குத் தீர்வு காண, இரண்டாவது முறையாக பேராக் முதல்வருக்கு மகஜர் வழங்கியுள்ளனர். பத்துகாஜா தொகுதியில் உள்ள துரோனோ, கம்போங் பாலி எனும்  கிராமத்தின் அருகிலுள்ள அரசு நிலத்தில், 1980-ஆம் ஆண்டு முதல்,  தங்கமீன்கள் வளர்த்து வரும் இவ்விவசாயிகளின்…

ஜி25-ன் புத்தகம் தடைசெய்யப்பட்டது

‘ஜி25’ எனும் நாடறிந்த மலாய் குழுவினர் வெளியிட்ட ஒரு புத்தகத்தை அரசாங்கம் தடைசெய்துள்ளது. அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இஸ்லாமியம் தொடர்பான பல விவாதக் கட்டுரைகள் அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. ‘மௌனத்தை உடைப்போம் : மிதவாதக் குரல்கள் - அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இஸ்லாமியம்’ (Breaking the Silence: Voices of…

உபர் & எஎம்பி; கிரேப்கார் மின்-போக்குவரத்துச் சேவை சட்டப்பூர்வமானது

கிரேப்கார் மற்றும் உபர்  மின் - போக்குவரத்துச் சேவையைச் சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடாக மலேசியா விளங்குகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் நான்சி ஷுக்ரி கூறியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில், நிலப் பொது போக்குவரத்து (திருத்தம்) 2017 மற்றும் வணிக வாகனங்கள் உரிமம் வழங்கும் சபை (திருத்தம்) 2017 ஆகியவை…

காவல்துறை லோட்டஸ் நிறுவனத்தின் கைக்கூலியா, பி.எஸ்.எம். இளைஞர் பிரிவு கேட்கிறது

கட்கோ குடியேறிகள் 30 பேரைக் கைது செய்த அரச மலேசியக் காவல்துறையின் போக்கை, மலேசிய சோசலிசக் கட்சியின் இளைஞர் பிரிவு கண்டிப்பதாக, அதன் துணைத் தலைவர் சரண் ராஜ் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார். கடந்த ஜூலை 18-ம் தேதி, லோட்டஸ் நிறுவனம் தங்கள் நிலத்தில் அத்துமீறி நுழைந்து,…

தி.சி.பி. சிமெண்ட் தொழிற்சாலைக்கு எதிராக, தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்

முறையான காரணங்கள் ஏதும் கூறாமல், தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்த, தாசேக் சிமெண்டு பெர்ஹாட் (தி.சி.பி.) குழுமத்திற்கு எதிராக, தீபகற்ப மலேசியா சிமெண்டு தொழிற்சாலை தொழிலாளர் சங்க (கே.பி.பி.பி.எஸ்.) , தாசேக் கிளையினர் உதவியுடன் தொழிலாளர்கள் இன்று காலை ஒரு மறியலில் இறங்கினர். ஈப்போ, தாசேக் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள…

வான் ஷாம் ஷைடி : தொழிலாளர் காப்புறுதி திட்டத்தை உடனடியாக…

இன்று  தொடங்கவிருக்கும் இரண்டாம் தவணை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்  அரசாங்கம் முன்மொழிந்துள்ள தொழிலாளர் காப்புறுதித் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்திய செயலவை உறுப்பினர் வான் ஷாம்ஷைடி வான் ஷாஹிட் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். “பி.எஸ்.எம். கோரும் வேலை இழப்பு நிதி, அரசாங்கத்தின்…

பினாங்கு மாநிலத்திற்குப் பாரிசானின் சிறப்பு தேர்தல் அறிக்கை

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலுக்கு, பினாங்கு மாநிலத்திற்குத் தனியாக ஒரு தேர்தல் அறிக்கையைத் தேசிய முன்னணி தயாரிக்குமென, தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறுகிறார். பாரிசான் அல்லது பக்காத்தான் ஹராப்பான் ஆகிய இரு கூட்டணி கட்சிகளுக்கிடையே எதைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க, மாநில…

குடும்ப வதைச் சட்டத்தில் புதிய மாற்றங்கள் தாக்கல், மலேசிய சோசலிசக்…

எதிர்வரும் திங்கட்கிழமை கூடவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், குடும்ப வதைச் சட்டத்தில் சில புதிய சட்டத் திருத்தங்கள் செய்யப்படவிருப்பதை, தாம் வரவேற்பதாக மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்) தேசியத் துணைத்  தலைவர் மு.சரஸ்வதி  கூறியுள்ளார். மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் முயற்சியில், இரண்டாவது முறையாக நாடாளுமன்ற வாசிப்பில்,…

பெர்காசா : மற்ற இன முஸ்லிம்களும் பூமிபுத்ரா அந்தஸ்துக்குத் தகுதி…

இந்திய முஸ்லிம்களுக்குப் பூமிபுத்ரா அந்தஸ்து வழங்கும் பரிசீலனையில் அரசாங்கம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என, மலாய்க்காரர்கள் உரிமை குழு (பெர்காசா) புத்ரா ஜெயாவைக் கேட்டுக்கொண்டது. தற்போது , பூமிபுத்ரா அந்தஸ்து (மண்ணின் மைந்தர்கள்) மத அடிப்படையில் இல்லாமல், ஒரு நிலத்தின் பூர்வீக உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையிலேயே,…

ஷாரிசாத்: பக்காத்தான் ஹராப்பான் தலைவராக மகாதீர் நியமனம் ஒரு ‘நாடகம்’

பக்காத்தான் ஹராப்பானின் தலைவராக டாக்டர் மகாதிர் நியமனம், எதிர்க்கட்சி கூட்டணி அரங்கேற்றும் ஒரு ‘நாடகம்’ என அம்னோ மகளிர் பிரிவு தலைவி,  ஷாரிசாத் அப்துல் ஜாலில் வர்ணித்தார். இன்று, ஜொகூர் கேலாங் பாத்தாவில், அம்னோ மகளிர் பிரிவு பிரதிநிதிகள் மாநாட்டைத் தொடக்கி வைத்தப்பின், செய்தியாளர்களிடையே அவர் பேசினார். உண்மை…

மனித உரிமை ஆர்வலர் மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

வங்காளத் தேச மனித உரிமைகள் ஆர்வலர், அடிலுர் ரஹ்மான் கான் மலேசியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டார். இன்று காலை, சுமார் 4 மணியளவில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு, நாட்டில் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மரணத் தண்டனைக்கு எதிரான ஆசியப் பிணையம் (Anti Death Penalty Asia…

கைதான 28 கட்கோ குடியிருப்பாளர்களுக்கும் 3 நாட்கள் தடுப்புக் காவல்…

நேற்று மாலை, கைதான 27 கட்கோ குடியிருப்பாளர்களுக்கும் பாஹாவ் நீதிமன்றத்தில் 3 நாட்கள் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டது. கைதானவர்களிடம் விசாரணை மேற்கொள்ள தங்களுக்குக் கால அவகாசம் தேவை எனக் காவல்துறையினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இத்தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை, சுமார் 9 மணியளவில் கைதான 27 பேரும், கைவிலங்கிடப்பட்டு…

13 பெண்கள் உட்பட, 28 கட்கோ குடியிருப்பாளர்கள் கைது

நெகிரி செம்பிலான், கட்கோ கிராமத்திலிருந்து ரப்பர் மரங்களை ஏற்றிச் சென்ற லாரிகளைத் தடுத்து நிறுத்திய 13 பெண்கள் உட்பட, 27 கட்கோ குடியிருப்பாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இன்று மதியம் 2 மணியளவில், லாரிகளை வழிமறித்த கட்கோ குடியிருப்பாளர்களைச் சுமார் 60 பேர் அடங்கிய காவல்துறை குழுவினர் கைது…

பி.எஸ்.எம். தேசியத் தலைவராக டாக்டர் நசீர் மீண்டும் தேர்வு

மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் தலைவராக டாக்டர் முகமட் நசீர் ஹசிம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று நடந்துமுடிந்த கட்சி உள்தேர்தலில், டாக்டர் நசீர் பெரும்பான்மை பேராளர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்வு பெற்றார். சிரம்பானில் நடந்த கட்சியின் 19-வது தேசிய மாநாட்டில், 2017/2019-ம் ஆண்டுக்கான புதிய செயலவையினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சரஸ்வதி முத்து…

14-வது பொதுத் தேர்தல்: 20 க்கும் அதிகமான இடங்களில் பி.எஸ்.எம்.…

  எதிர்வரும் 14  ஆவது பொதுத் தேர்தலில், 8 நாடாளுமன்ற தொகுதிகள் , 16 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) முடிவெடுத்துள்ளது. இன்று,  சிரம்பானில் நடந்த,  கட்சியின்  19-வது  மாநாட்டின் தொடக்க விழாவில், பி.எஸ்.எம். தனது கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்தது. டாக்டர் ஜெயக்குமார், டாக்டர்…

இடதுசாரி அரசியலே மக்களின் தேர்வு : பி.எஸ்.எம். தேசிய மாநாடு

மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) 19-வது தேசிய மாநாடு, ‘இடதுசாரி அரசியலே மக்களின் தேர்வு’ எனும் கருப்பொருளோடு இன்று தொடங்கியது. இவ்வாண்டு மாநாடு ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடப்போகும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார் யாரெனக் கலந்துபேசி, முடிவெடுக்கப்படும் எனக் கட்சியின் தலைமைச் செயலாளர்…

நஜிப் : மலேசிய இந்தியர் பெருந்திட்டம் மாயை அல்ல, நிஜம்

மலேசிய இந்தியர் பெருந்திட்டம் (எம்.ஐ.பி.) வெறும் மாயையோ அர்த்தமற்றதோ அல்ல; மாறாக, இந்திய சமூக மேம்பாட்டுக்கான ஓர் உண்மையான திட்டம் அது என நஜிப் கூறுகிறார். வடிவமைக்கப்பட்ட அத்திட்டம் இந்திய சமூகத்திற்கு முழுமையான பலனைக் கொடுப்பதோடு, அரசாங்கத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை வலுப்பெற செய்வதையும் அரசாங்கம் உறுதிபடுத்தும். “இத்திட்டம்…