கோசிகன் ராஜ்மதன் - இன்றைய சமூக சீர்கேடு, நம் எதிர்காலத்தின் தூண்களாக விளங்க வேண்டிய இளைஞர்களின் வாழ்க்கையை சீரளிக்க வைக்கும் ஒரு விஷமாக மாறியுள்ளது. போதைப் பழக்கம், தவறான தனிநபர் பழக்கவழக்கங்கள், மற்றும் சமூகவியல் சிக்கல்கள் ஆகியவை இதற்குக் காரணமாகும். போதைப் பழக்கத்தின் கொடூரம் போதைப் பொருட்கள் இன்று…
சாமானியரைக் கவனித்த சாமிவேலு, சமுதாயத்தை எவ்வாறு கவனித்தார்!
இராகவன் கருப்பையா - ம.இ.கா.வின் முன்னாள் தலைவர் மறைந்த சாமிவேலு அக்கட்சியின் கடந்த காலத் தலைவர்களிலேயே தனித்துவம் வாய்ந்த ஒருவர் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. தனது 31 ஆண்டுகாலத் தலைமைத்துவத்தில் நிறைய பேருக்குத் தனிப்பட்ட முறையில் உதவிகளை வாரி வழங்கியுள்ளார் என்பதும் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவருடைய…
ஹிண்ட்ராப் பேரணி உருவாக்கமும், சாமிவேலுவின் சரிவும்
இராகவன் கருப்பையா- கடந்த 2007ஆம் வருஷம் இந்நாட்டு இந்தியர்களின் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு ஆண்டாகும். ஏனெனில் அவ்வாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த இரு சம்பவங்கள் தெரிந்தோ தெரியாமலோ நம் சமூகத்தைச் சேர்ந்த பலருடைய வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியமைத்தது. தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 3 நாள்களே இருந்த வேளையில், சிலாங்கூரின் கிளேங் மாவட்டத்தில் உள்ள பாடாங் ஜாவா பகுதியில் அமைந்திருந்த மாரியம்மன் ஆலயம்…
நஜீப்பை மாமன்னர் மன்னிப்பாரா? – கி.சீலதாஸ்
நஜீப் ரசாக் பிரதமராக இருந்த காலத்தில் நிதி அமைச்சர் பதவியையும் தன் வசமே வைத்துக் கொண்டார். அச்சமயம் அவர் நம்பிக்கை மோசடி செய்தார் என்று உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு பன்னிரண்டு ஆண்டு காலம் சிறைத்தண்டனையும், இருநூற்றுப்பத்து மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. அவரின்…
இரும்புக் கரங்களில் ம.இ.கா: சாமிவேலு ஒரு சகாப்தம்தான்
இராகவன் கருப்பையா - தனது 86ஆவது வயதில் இயற்கை எய்திய முன்னால் ம.இ.கா. தலைவர் சாமிவேலு நம் சமுதாய மேம்பாட்டிற்குச் செய்த, செய்யாத சேவைகளை விட 31 ஆண்டுகளாக இரும்புக் கரங்களைக் கொண்டு எவ்வாறு கட்சியை வழிநடத்தினார் மற்றும் நாடாளுமன்றத்தில் எப்படிப் பேசுவார் என்பதை வைத்தே பலரும் அவரை…
மூடாவை புறக்கணித்தால் எதிர்மறை விளைவுகள்
இராகவன் கருப்பையா- அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிபெற வேண்டுமாயின் முடிந்த அளவுக்குத் தனது பலத்தை அது வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். பி.கே.ஆர்., ஜ.செ.க. அமானா மற்றும் கிழக்கு மலேசியாவின் அப்கோ, ஆகிய 4 கட்சிகள் உறுப்பியம் பெற்றுள்ள அக்கூட்டணியில் இணைவதற்கு 'மூடா' அண்மையில் செய்த விண்ணப்பம் இன்னமும்…
அழிந்து கொண்டிருக்கும் கோலசிலாங்கூரின் அலையாத்தி காடுகள் – ம. நவீன்
மலேசியாவின் கடலோரப்பகுதிகளில் காணப்படும் அலையாத்தி காடுகள் (மாங்குரோவ் காடுகள்) நமது நாட்டுக்கு இயற்கை கொடுத்த ஒரு பாதுகாப்பு அம்சமாகும். இவை சூறாவளி போன்ற இயற்கை பேரிடர்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அதோடு நில அரிப்புகளை நிவர்த்தி செய்கின்றன, காற்றில் உள்ள கரியமிலவாயுவை வடிகட்டுகின்றன, எண்ணற்ற கடலோர உயிரியலின் பன்முகத்தன்மையைப் பாதுகாத்து…
ஆட்சியைக் கைப்பற்ற மீண்டும் பக்காத்தானுக்கு ஒரு வாய்ப்பு
இராகவன் கருப்பையா - கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் 1MDB ஊழல் தொடர்பான சர்ச்சை முக்கியப் பங்காற்றியது என்பது நாடறியும். இன்னும் சொல்லப் போனால் பாரிசான் வீழ்ந்ததற்கு அந்த ஒரு விவகாரம்தான் பிரதானக் காரணமாக இருந்தது. முன்னாள் பிரதமர் நஜிப்தான் அதற்குக் காரணகர்த்தா…
இஸ்லாமிய நீதியில் எந்த சலுகைகளும் விதிவிலக்குகளும் இல்லை
இஸ்லாமிய நீதியானது, தவறு செய்யும் நபர், யாராக இருந்தாலும், அவர்களுக்காகவோ, நெருங்கிய நண்பர்களுக்கோ , குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது பெற்றோராகவோ இருந்தாலும் எந்தச் சலுகையையும் விதிவிலக்கையும் அளிக்காது என்பதை நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு யாங் டி-பெர்துவான் அகோங், சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா நினைவூட்டியுள்ளார். இஸ்லாமிய நீதியின் கொள்கை…
மகாபாரதம் முதல் மலேசியா வரை – நீதி வெற்றி பெற…
கி.சீலதாஸ் - நாம் எப்பொழுதும் வெற்றியை மட்டும்தான் விரும்புகிறோம், எதிர்பார்க்கிறோம். அது மனிதனின் இயல்பான குணம், மனிதனின் தனி பண்பாகும். தோல்வியை வெறுக்கிறோம். தோல்விதான் வெற்றிக்கு வித்திடுகிறது என வெற்றி பெற்றவர்கள் சொல்வார்கள். ஏனெனில், அவர்கள் தோல்வியைக் கடந்தவர்கள். ஒரு செயலில் இறங்கும்போது முடிவைத்தான் எண்ணுகிறோம். அதை அடையும்…
நஜிப் வழக்கில் வரம்பு மீறிய வழக்கறிஞர்கள்
இராகவன் கருப்பையா - காலங்காலமாக மருத்துவத் தொழிலை மட்டுமே புனிதமான தொழில் என்று நாம் போற்றி புகழ்ந்து வருகிறோம். சில முக்கியமான தருணங்களில், நோயுற்றிருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ தீவிர சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை கடவுளாகக் கூட சிலர் பார்ப்பதுண்டு. அதே போல சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களும் உன்னதமான தொழில்தான் செய்கின்றனர் என்பதை மறுக்கலாகாது. அத்துறையிலும்…
சிறகொடிந்த நிலையிலும் கூட ஆணவம் அடங்காத அம்னோ
இராகவன் கருப்பையா- முன்னாள் பிரதமர் நஜிப் கடந்த வாரம் சிறை சென்றதிலிருந்து கொஞ்சம் நிலை தடுமாறிச் சிறகொடிந்த பறவையைப் போல் இருக்கும் அம்னோ நீதித் துறை மீதும் தலைமை நீதிபதி மீதும் சட்டத் துறை தலைவர் மீதும் தொடர்ந்தாற் போல் தாக்குதல் நடத்தி நாட்டிற்கே இழுக்கைத் தேடிக் கொண்டிருக்கிறது. அம்னோ…
நீதித்துறையைக் களங்கப்படுத்துவதா?- கி.சீலதாஸ்
நீதி உலகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளது ஏனென்றால் அதை எவரும் தங்கள் வீட்டில் தங்க இடம் தருவதில்லை என்பது மால்டீஸ் பழமொழி. சுவீடிஷ் பழமொழி ஒன்று நீதியைப் புகழாதவர்கள் இல்லை. ஆனால், அது வரும்போது கதவை மூடுகின்றனர் என்பதாகும். ஜனநாயகத்தில் நீதித்துறை ஒரு தூணாக விளங்குகிறது. நமது அரசமைப்புச் சட்டமும்…
நஸ்ரியின் கேவலமான சீற்றத்தை ம.இ.கா. சவாலாக ஏற்கவேண்டும்
இராகவன் கருப்பையா - சமீப காலமாக நாட்டிலுள்ள இந்தியர்களின் ஆதரவு ம.இ.கா.வுக்குத் திரும்பியுள்ளது எனவும் அவர்களில் 70 விழுக்காட்டினரைக் கவர்ந்து இழுக்கத் தாங்கள் இலக்கு கொண்டுள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் விக்னேஸ்வரன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். உண்மையைச் சொல்லப் போனால் அரசியல் நோக்கத்திற்காக வெறுமனே ஒரு மாயையில்தான் அக்கட்சியினர் இவ்வாறு பேசித்திரிகிறார்கள் எனும் விவரம் நம் சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்குமே தெரியும். ஆனால்…
நஜிப்பிற்கு மன்னிப்பு வழங்குவது நீதித்துறையை கேலிக்கூத்தாக்கிவிடும்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அரசு மன்னிப்பு வழங்குவது நீதித்துறையை கேலிக்கூத்தாக்குவதாக அமையும் என சார்லஸ் சாந்தியாகோ தெரிவித்துள்ளார். இன்னும் சில நாட்களில் நாடு 65 வயதை எட்டவுள்ள நிலையில், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது முக்கியம் என்கிறார் கிள்ளான் எம்.பி. "மெர்டேக்கா தினத்தை நெருங்கும் போது…
நாடாளுமன்றத்தை யாரால் கலைக்க முடியும் – அகோங், பிரதமர் அல்லது…
கிம் குவேக் - பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீதுதான் தற்போது அனைத்து கவனமும் குவிந்துள்ளது. காரணம், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு அவரின் குரல் வழிதான் வரும் என்ற அதற்கான தனிச்சிறப்பு அவருக்கு உள்ளது என்பது பொதுவான அனுமானம். ஆனால் அவரிடம் இருக்கிறதா? அல்லது சிலர்…
பக்காத்தான் பிடித்தது சுறா, பாரிசான் பிடித்தது நெத்திலி
இராகவன் கருப்பையா -கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட புதுவிதமான ஒரு உற்சாக உணர்வு தற்போது மீண்டும் பிறந்துள்ளதைப் பரவலாகக் காண முடிகிறது. அன்றைய தினம் பாக்காத்தான் ஹராப்பான் அடைந்த மகத்தான வெற்றியானது ஊழலற்ற நல்லாட்சிக்காக ஏங்கித் தவித்த வெகு சன…
நாட்டின் ஊழல் அவலத்திற்கு முஸ்லிம் அல்லாதார் காரணமா!
இராகவன் கருப்பையா -நம் நாட்டில் ஊழல் நிலை தற்போது எந்த அளவுக்கு வரலாறு காணாத வகையில் மலிந்துக் கிடக்கிறது என்பது வெள்ளிடை மலை. அது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. மில்லியன் எனும் நிலை தாண்டி தற்போது பில்லியன் கணக்கில் மக்கள் பணத்தை மூட்டை மூட்டையாகக் கொள்ளையடிக்கத் தொடங்கிவிட்டார்கள்…
நீதித்துறையின் நிமிர்வுக்கு வெகுசன மக்களே காரணம்
இராகவன் கருப்பையா- நாட்டின் நீதித்துறை இன்று தலை நிமிர்ந்து நிற்பதற்குக் கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தல்தான் காரணம் என்பதில் சிறிதளவும் ஐயத்திற்கு இடமில்லை. வீறுகொண்டு எழுந்து ஊழல் படிந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்குப் பொது மக்கள் அன்று செய்த தீர்க்கமான முடிவானது இன்று நமது நீதித்துறை வரலாறு…
பிரேஸர் மலையிலும் செழித்தோங்கும் தமிழ்!
இராகவன் கருப்பையா- சுமார்1,400 மீட்டர் உயரத்தில்,10கும் குறைவான இந்தியக் குடும்பங்களே வசிக்கும ஒரு பகுதியில் அதிகச் சிரத்தையெடுத்து தமிழுக்கு உரமூட்டி வருகிறார்கள் அர்ப்பணிப்பு உணர்வுமிக்க 7 தமிழாசிரியர்கள். பஹாங் மாநிலத்தின் ரவுப் மாவட்டத்தில் உள்ள ஃபிரேஸர் மலையில்தான் இந்த அற்புதம் நிகழ்கிறது. கடந்த 1935ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்று நம்பப்படும்…
வைரஸா பாக்டிரியாவா எது மோசமானது? – கவிதா கருணாநிதி
அறிவியல் கட்டுரை- நம் அன்றாட வாழ்க்கையில் காய்ச்சல், சலி, இருமல், வயிற்று வலியெனப் பல காரணங்களால் நாம் மருத்துவரிடம் செல்கிறோம். அவரும் பரிசோதனைக்குப் பிறகு மாத்திரை மருந்துகளைக் கொடுத்து அல்லது மருத்தவமனையில் அனுமதித்து நம்மைக் குணப்படுத்துகிறார். நாம் நோய் நொடிக்கு ஆளாவதன் முக்கியக் காரணம் வைரஸ் மற்றும் பாக்டிரியா…
கட்சித் தலைவரின் ஏகவசனத்தால், மாசு படிகிறது மஇகா-வில்
இராகவன் கருப்பையா- ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரன் எதிர்க்கட்சி தலைவர்களை சரமாரியாக மரியாதைக் குறைவாக வசைபாடியுள்ளது ஒரு மூத்த அரசியல் கட்சியானா மஇகா-வின் தோற்றதிற்கு ஏற்புடைய செயலல்ல, மாறாக அது ஒரு படி மண்ணை தன் தலையில் போட்டு கொண்டது போலாகிவிட்டது. வார இறுதியில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில் ம.இ.கா. மாநாட்டில்…
பாஸ் கட்சி ஆட்சியமைத்தால் நாட்டின் நிலை என்னவாகும்!
இராகவன் கருப்பையா- தீவிரச் சமயக் கோட்பாடுகளை மட்டுமே ஆயுதமாக வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் பாஸ் கட்சி அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் முஸ்லிம் அல்லாதாரின் சுதந்திரம் இந்நாட்டில் எப்படி இருக்கும் என்று தெளிவாகச் சொல்ல முடியாது. சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியில்…
பேச்சு சுதந்திரம் சமயங்களைக் கொச்சப்படுத்த அல்ல!
கி. சீலதாஸ் - நமது பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா பிலா ஷா நடந்து முடிந்த வீரர்கள் தின விழாவில் தமது உரையில் சமயங்களைச் சிறுமைப்படுத்துவது, கேலி செய்வது, அவமதிப்பது போன்ற நடவடிக்கைகள் கூடாது என்ற ஆணையை வெளியிட்டார். தகவல் ஊடகங்களில் “ஆணை” என்று…