எட்டு சிறார்கள் மரணமும், காரோட்டியின் விடுதலையும்

கி.சீலதாஸ் - சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் ஒருவர் இறந்தார் அல்லது பலத்த காயமடைந்தார் என்ற செய்தி வெளிவந்தால் அது அதிர்ச்சியைத் தந்தது. பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது. அவர்களின் அனுதாபம் பரவலாகவே இருந்தது. அந்தக் காலகட்டத்தில் சாதாரண சாலை விபத்து கூட கடுமையானதாகக் கருதப்பட்டது என்றால்…

காவல் துறையினரின் சேவைகளை தவறாக பயன்படுத்தும் வாகனங்கள்!

இராகவன் கருப்பையா - காவல் படையினரின் துணையுடனும் சிறப்பு அவசர சமிக்ஞை விளக்குகளுடனும் சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அண்மைய காலமாக அதிகரித்துள்ளதைப் போல் தோன்றுகிறது குறிப்பாக சில அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலத்திற்காக இச்சேவையை பயன்படுத்திக் கொள்கின்றனர் எனும் குறைபாடு பொது மக்களிடையே இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார அமைச்சர்…

மத நல்லிணக்கத்தில் ஒளி வீசும் புக்கிட் ரோதான்

ஆடிலாதா கொண்டாட்டத்தில் ஒரு இந்து பாதிரியார் முக்கிய பங்கு வகிப்பார் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள், ஆனால் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு புக்கிட் ரோட்டனில் அதுதான் நடந்தது. அன்-நூரியா பள்ளிவாசலில் இருந்து தப்பி ஓடிய பசுவை, மறுநாள் பலியிடப்பட இருந்த இடத்தில், குடியிருப்பாளர்கள் தேடி வந்தனர். அதிகாலை 3…

ஊழலில் சிக்கிய முன்னாள் பிரதமர்கள்

இராகவன் கருப்பையா - அண்மையில் முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் வரலாற்றில் ஊழல் குற்றங்களுக்காக நீதிமன்றம் ஏறும் 2ஆவது பிரதமராக அவர் திகழ்கிறார். மற்றொரு முன்னாள் பிரதமரான நஜிப் ரஸாக் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளது உலகறியும். இந்நிலையில் தற்பொழுது முஹிடினும் நீதிமன்ற வாசலை மிதித்துள்ளதானது,…

மரணம் எனும் துயரம் நல்ல நேரத்திலா வரும்?

இராகவன் கருப்பையா - ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது அவருடைய குடும்பத்தினரும் உற்றார் உறவினர்களும் நண்பர்களும் சொல்லொண்ணா துயருக்கு ஆளாகின்றனர். ஏனெனில் மனிதனாய் பிறந்த அத்தனை பேருக்கும் நெருக்கமான ஒருவரின் மரணத்தினால் ஏற்படும் சோகத்தைவிட வேறொரு துயரம் இருக்க முடியாது. எனவே மரணம் எனும் ஒரு சம்பவம் நல்ல…

அரசியலில் நாவடக்கம் தேவை – கி.சீலதாஸ்

நன்றாகச் சிந்தித்தப் பிறகு வாயைத் திறந்தால் நல்லது என்கின்ற கட்டுப்பாட்டை அரசியல்வாதிகளிடம் காண்பது அரிதாகும். நம் நாட்டில் மட்டுமல்ல பேச்சில் கட்டுப்பாடற்றத் தரத்தைப் பல நாடுகளில் காணலாம். குறிப்பாக, ஜனநாயகக் கோட்பாட்டைப் பேணும் நாடுகள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் இப்படிப்பட்ட போக்கு சர்வசாதாரணம். இதைப் பேச்சு…

இரு காதுகள், ஒரு வாய் – சொல்லும் அரசியல்  

கி.சீலதாஸ் - இறைவன் நமக்கு இரு காதுகளையும் ஒரு வாயைக் கொடுத்திருப்பதானது நாம் பேசுவதைக் குறைத்து, காது கொடுத்து கேட்க வேண்டும் என்ற பழக்கத்தைக் கைவிடக்கூடாது என்பதை உற்சாகப்படுத்தவே. ஜனநாயக நெறிகளைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் பேச்சுரிமைக்கு மதிப்பளிக்கப்படுகிறது என்று சொல்கிறோம். ஆனால், முழு சுதந்திரப் பேச்சுரிமை அனுமதிக்கப்படுகிறதா…

 அன்வார், ஜாஹித் அல்லது நஜிப்? யார்தான் பொறுப்பு

 மரியம் மொக்தார் - திடீரென்று ஒரு திருப்பம். அது  தண்டனை பெற்ற குற்றவாளியான நஜிப் அப்துல் ரசாக்  வழக்கில். அவருக்கு எப்படியாவது அரசு மன்னிப்பு கொடுக்கலாம் என்பதாகும்.. இதற்கு காரணம், ஐந்து தலைமை நீதிபதிகள் கொண்ட கூட்டரசு நீதிமன்றம் அவரின் 12 ஆண்டிகள் சிறைத் தண்டனையை உறுதி படுத்திய போது, அதில் ஒரு நீதிபதி மட்டும் முரணான வகையில் நஜிப் விடுதலை செய்யப்படலாம் என்ற வகையில் தனது…

யுக்ரேன் அகதிகளை காப்பாற்றிய சாதனையாளர் டாக்டர் முருக ராஜ்

இராகவன் கருப்பையா - அனைத்துலக மருத்துவர் தினத்தையொட்டி சிறப்பு நேர்காணல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்ய-யுக்ரேன் போர் வெடித்ததைத் தொடர்ந்து போலந்து எல்லைக்குள் நுழைந்த இலட்சக்கணக்கான அகதிகளுக்கு அவசர மருத்துவ உதவிகள் தேவைப்பட்ட போது உடனே களமிறங்கிய டாக்டர் முருகராஜ் ராஜதுரையின் சேவைகள் அளப்பறியது. அவருடைய மூன்று  பிள்ளைகளும்…

மலாய் இனத்தின் தன்மானத்தை சூறையாடும் மகாதீர்   

இராகவன் கருப்பையா- கடந்த வார இறுதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மலாய் பிரகடனம்' எனும் ஒரு நிகழ்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதானது நாட்டின் வெகுசன மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை. அந்த நிகழ்வு நடைபெறவிருந்த இரு மண்டபங்களின் நிர்வாகங்களும் காரணங்கள் எதனையும் குறிப்பிடாமல் நிகழ்ச்சிக்கான பதிவுகளை ரத்து…

இன, சமய அரசியல் பித்தலாட்டதில் மலேசியா

கி.சீலதாஸ் - ஒரு காலத்தில் (சுமார் எழுபது ஆண்டுகள் வரை) அகண்ட பிரிட்டிஷ் வல்லரசின்மீது ஆதவன் மறைவு நிகழாது என்ற பெருமை ஊன்றி இருந்தது. இன்று அது அடிபட்டுவிட்டது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் மனிதர்கள் மனிதர்களாக நடத்தப்படவில்லை. மனித நேயம் மறுக்கப்பட்ட மக்கள் பல இழிவுகளுக்கு, இன்னல்களுக்கு…

தமிழ் ஊடகங்களை அங்கீகரிக்கும் ஒருமைப்பாட்டு அரசு

கடந்த திங்களன்று (6.3.2023) ஒருமைப்பாட்டு அரசின் துணையமைச்சர்கள் தமிழ் ஊடகங்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினர். இதில் கலந்து கொண்ட தரப்பிணர்கள்,   சிக்கல் மிகுந்த அரசியல் வழி நாட்டை வழி நடத்தும் போது, அதில் மக்களின் ஈடுபட்டை இணைப்பதில் ஊடகம் ஒரு முக்கிய பங்கை ஆற்ற இயலும் என்றனர். அதற்கு…

இனத்துவேசத்தைத் தூண்டுவதில் அப்பாவும் மகனும் போட்டா போட்டி!

இராகவன் கருப்பையா - இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் கடந்த சில நாள்களாக விஷக் கருத்துகளை உமிழ்ந்து வரும் முன்னாள் பிரதமர் மகாதீருக்கு ஏற்றவாறு அவருடைய மகன் முக்ரீஸும் பேசத் தொடங்கிவிட்டார். அவர்கள் இருவருமே தற்போது நீரில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட மீன்களைப் போல அரசியலில்…

உலகத்தரமான மலேசியாவின் ஊழல் வழக்குகள் – கி.சீலதாஸ்

கையூட்டு என்பதன் பொருள் செய்யும் குற்றச்செயல்களைச் சட்டத்திலிருந்து மறைக்க, தப்பிக்க கொடுக்கப்படும் கைக்கூலி ஆகும். வேண்டுமென்றே மனச்சாட்சிக்கு எதிராக, முறைக்கேடான செயல்களுக்கு அங்கீகாரம் பெறுவதற்காக, மக்களின் பணத்தை மோசடி செய்வதற்காகக் கையாளப்படும் சட்டவிரோதச் செயல். அப்படிப்பட்ட கீழ்த்தரமான செயல்களில் இறங்குவோரின் பிரதான குறிக்கோள் பணம். ஆனால், அது வஞ்சக…

எந்த வேலையிலும் லட்சியத்தை தேடுவதும் நாடுவதும் நலமே!

கி.சீலதாஸ் - எங்கள் ஊரில் நடுத்தர வயதுடைய இந்தியப் பெண்மணி ஒருவர் வாகனங்களைக் கழுவும் தொழில் செய்கிறார். சில நாட்களில் உதவிக்கு ஆள் இல்லை என்ற காரணத்தால் கடையைத் திறக்க மாட்டார். எவரும் இந்த விதமான தொழிலில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். அதே சமயத்தில், ஒரு சில வாகனம் கழுவும்…

ஊழலற்ற பெருந்தொற்று நிவாரணத்திற்கு தயார் நிலை தேவை

இராகவன் கருப்பையா - உலகை நாசப்படுத்திய கோறனி நச்சிலைப் போன்ற ஒரு பெருந்தொற்று மீண்டும் ஏற்படுமாயின் அதனை எதிர் கொள்வதற்கு நமது அரசாங்கம் எந்த அளவுக்கு தயார் நிலையில் உள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. கடந்த 2020ஆம் ஆண்டு முற்பகுதியிலிருந்து 2 ஆண்டுகளுக்கும் மேல் நாட்டை உலுக்கிய அக்கிருமியின் கொடூரத்தால்…

அரசாங்க அலுவலகங்களுக்கு எப்படிதான் உடுத்திச் செல்வது?

இராகவன் கருப்பையா - அலுவல் நிமித்தம் நாம் அரசாங்க அலுவலகங்களுக்குச் செல்லும் போது எவ்வாறான உடைகளணிந்துச் செல்ல வேண்டும் என்பதில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த மாதம் சிலாங்கூர், காஜாங்கில் உள்ள காவல் நிலையத்திலும், இம்மாத மத்தியில் பேராக், கம்பார் மருத்துவமனையிலும், பிறகு ஜொகூர், பாசிர் கூடாங்…

அன்வாரின் நம்பிக்கை அரசை நாம் நம்பத்தான் வேண்டும்

இராகவன் கருப்பையா - கடந்த மாதத் தொடக்கத்தில் தமது புதல்வி நூருல் இஸாவை உயர் பொருளாதார ஆலோசகராக நியமித்த பிரதமர் அன்வார் இன்று வரையிலும் கூட பல்வேறுத் தரப்பினரின் கண்டனங்களுக்கு இலக்காகி வருகிறார். நூருல் பொருளாதாரத் துறையில் பட்டப்படிபை முடித்தவர் என்றும் அவருக்கு அதீதத் திறமை இருக்கிறது எனவும் அவர் சம்பளம்…

அரசாங்க வேலைகளும், இலவு காத்த கிளிகளாகும் இந்தியர்களும்

இராகவன் கருப்பையா - அண்மைய வாரங்களாக நாட்டில் நடந்து வரும் சம்பவங்களை வைத்துப் பார்த்தால், "கோழி மேய்த்தாலும் கும்பனியில் மேய்க்க வேண்டும்" எனும் எதிர்பார்ப்பைத் தாண்டி நம் சமூகம் யதார்த்த நிலைக்குத் திரும்ப வேண்டியத் தருணம் வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பொதுச் சேவைத் துறையை பிரதமர் அன்வார் சீர்திருத்தம்…

கணினி யுகத்தை மிஞ்சியுள்ள மோப்ப நாய்களின் சேவைகள்

இராகவன் கருப்பையா  - "மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான், வாழும் வகை புரிந்து கொண்டான், இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை ஹோ.....", என 60 ஆண்டுகளுக்கு முன் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலில் ஆயிரம் உண்மைகள் புதைந்துள்ளன! அகில உலகமே கணினி யுகத்தில் மூழ்கிக் கிடக்கும் தற்போதைய…

இனத்துவேசத்திற்கு எதிராக சட்டம்: சரியானத் தருணம் வந்துவிட்டதா?

இராகவன் கருப்பையா - இனவாதமும் மதவாதமும் ஒருங்கிணைந்து நாட்டின் ஆட்சியை கைபற்ற முனைந்த நிலையில், நட்டின் நல்ல காலம் ஒரு பல்லின கட்சிகளின் கூட்டணி ஒரு தகுதியான பிரமரின் கீழ் ஆட்சி அமைக்க முடிந்தது. நம் நாட்டில் இனத்துவேசம் தொடர்பான சம்பவங்கள், அண்மைய காலமாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு,…

அம்னோவை ஆட்டி வைக்கும் ஸாஹிட்டின் அதிரடி முடிவுகள்

இராகவன் கருப்பையா - அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் கடந்த ஒரு வார காலமாக கட்சியில் மேற்கொண்டு வரும் பல அதிரடி நடவடிக்கைகள் அவருக்கு சாதகமாக அமையுமா அல்லது அவருக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த அரசாங்கத்தையும் பாதிக்குமா என பலவாறான ஆரூடங்கள் எழுந்துள்ளன. இதுவரையில் இருந்த அம்னோ தலைவர்களிலேயே பலம்…

அன்வாரின் கொள்கைகள் – ஓர் அலசல், அவை சரியா, தவறா?

கி.சீலதாஸ் - மதச் சார்பற்ற கொள்கை, கம்யூனிஸம் மற்றும் ஓர் இனப் பால் இணைதல், திருநங்கை, திருநம்பி போன்றவற்றை மலேசியா ஒருபோதும் அங்கீகரிக்காது என்று கூறியுள்ளார் பிரதமர் அன்வர் இபுராஹீம். கம்யூனிஸம் இனிமேல் தலைதூக்குவது கடினம் என்று சொல்வதைக் காட்டிலும் இந்நாட்டில் அது எடுபட வழியில்லை எனலாம். அப்படி…