நாஜிப் காப்பாரா! பொங்க வேண்டும் மக்கள்!

தொன்மை மிக்க நம் பாரம்பரியத்தின், கலை, கலாச்சாரம், சம்பிரதாயங்கள், பண்டிகைகள் ஆகியவற்றின்   உட்கூறுகளையும்  தாத்பரியங்களையும்  நாம் இன்று உணராமல் வெறும் வேடிக்கை கேளிக்கையாக்கி கொண்டிருக்கிறோம். உலக பிரசித்திப் பெற்ற பத்துமலை தைபூச திருவிழாவிற்கு பிரதமர் நஜிப் வரவழைக்கப்பட்டார். அந்த சமய விழாவில் ஹிந்துக்களுக்கும் மலேசிய இந்தியர்களுக்கும் அவர் விடுத்த…

கலாச்சார அதிர்வும் ‘திடாக் ஆப்பாவும்’

தமிழ்ப் பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் தரத்தைச் சோதனையிடுவதற்காக வட்டாரக் கல்வி இலாக்காவிலிருந்து அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் அனைவரும் மலாய் அதிகாரிகள்! தமிழ்ப் பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் போதனா முறையை இவர்களால் எவ்வகையில் மதிப்பிட முடியும்? அவ்வதிகாரிகள் ஆசிரியரின் பாடத்திட்டப் பதிவுப் புத்தகத்தைப் புரட்டி விட்டு, மாணவர்களின்…

“தமிழால் வளர்ந்தேன்” – தாய்மொழி தமிழின் சிறப்புகள்

இன்று உலக தாய்மொழி தினம்.எ ன் தாயின் மொழி செம்மொழி   தமிழால் வளர்ந்தேன். என் தாயின் மொழியின் பெருமை கூறுவது என் தாயின் பெருமை கூறுவது போலாகும். தமிழின் சிறப்பென்றால் அனைவர் எண்ணங்களில் முன்வருவது அதன் லகர ழகரங்கள், வாழ்க்கையில் எப்படி வாழவேண்டும் வாழக்கூடாது என்று கூறும் நூல்…

தாய்மொழிக் கல்விக்கு எதிரான அனைத்து வேறுபாடுகளும் அகற்றப்பட வேண்டும்

எந்த நாட்டின் ஒற்றுமையின்மைக்கும் தாய்மொழிக் கல்வி காரணமாக இருந்ததே இல்லை. இது மலேசியாவுக்கும் பொருந்தும். அவ்வாறே, ஒரே மொழிக்கல்வி எந்த நாட்டிலும் ஒற்றுமையை உறுதிப்படுத்தி அதனை நிரந்தரமாக்கியதில்லை. நேற்று இரவு மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்துலக தாய்மொழி தினம் 2012 நிகழ்வில் உரையாற்றியவர்கள் இக்கருத்தை வலியுறுத்தினர். ஒற்றுமையின்மைக்கு வித்திடும்…

“முழுமை அடைவதற்கு முன் இந்த வெற்றிவிழாவும் நியட் கலைப்பும் ஏன்?”

- முனைவர் நாகப்பன் ஆறுமுகம் நியட்டுக்குப் பாராட்டு. தவறு இல்லை. ஆனால் வரலாற்றைப் பாதியிலிருந்து படிக்கக் கூடாது. முதலில் மக்கள் ஓசை செய்தி வெளியிட்டது. அன்றே மக்கள் ஒசை தேவேந்திரன் என்னை அழைத்து இண்டர்லோக் நாவலைக் கையில் கொடுத்து உங்கள் கருத்தை எழுதுங்கள் என்றார். நாவலைப் படித்த நான்…

விழிப்புடன் இருக்க வேண்டும்: பத்துமலைக்கு பத்து ஆராங் தமிழ்ப்பள்ளி கதி…

நேர்காணல்: முருகன் திருத்தலத்தில் முருகன் மட்டுமே முதல்வன்! மீனாட்சி: இரண்டு வருடங்களுக்கு முன்பு பத்துமலை பற்றி ஒரு முக்கியமான கருத்து தெரிவிக்கப்பட்டது. பத்துமலை ஒரு வழிபாட்டுத் தலம். அங்கு தமிழ்ப்பள்ளி இருக்கிறது. வழிபாட்டுத்தலத்தின் புனிதத்தன்மையையும் மாணவர்களின் கட்டொழுங்கையும் நிலைநிறுத்த வேண்டும், பாதுக்காக்க வேண்டும். ஆகவே, பத்துமலை ஒரு சுற்றுப்பயண…

நஜிப்புக்கு நடராஜாவின் சோதனை!

-ஜீவி காத்தையா, 8.2.2012 நஜிப் ரசாக் அம்னோவின் தலைவராகவும் பிரதமராகவும் பதவி ஏற்ற நாளிலிருந்து சீன மற்றும் இந்திய மலேசியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக நடத்தும் பேரத்தில் ஒரு சூழ்ச்சியைக் கையாண்டு வருகிறார். அது இதுதான்: சீனர்களும் இந்தியர்களும் பாரிசானுக்கு வாக்களித்தால், அவர் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் உதவ முடியும் ("You…

பக்தியை கேளிக்கையாக்கும் பத்துமலை!

"இது என்ன பக்தி பரவசமூட்டும் பத்து மலையா? அல்லது பணத்திற்காக கேளிக்கையில் திகைக்கும் வியாபாரத் தளமா?" என வினவுகிறார் தனது மனைவி, மூன்று குழந்தைகளுடன் மற்றும் தாயாருடன் வந்திருந்த சுந்தரம், (வயது 43) என்பவர். கடந்த ஆண்டுகளை விட தற்போது நிலமை மிகவும் மோசமாகி விட்டதாக குறைபடும் அவர், கேளிக்கையில்…

நஜிப் ரசாக் மீது “நம்பிக்கை” வைப்பதா? மேலும் நாசமாக வேண்டுமா?

-ஜீவி காத்தையா,  6.2.2012. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்று கூறுவார்கள். இப்போதெல்லாம், தேர்தல் வரும் பின்னே, மான்யம் வரும் முன்னே என்று சில ஆண்டுகளுக்கு முன்பு சிறம்பானில் நடந்த ஓர் நிகழ்ச்சியில் ஒருவர் கூறினார். இது நாடறிந்த உண்மை. இன்று, மானியம் மட்டுமல்ல.…

தமிழ்ப்பள்ளிகளை மாற்றான் தாய்ப்பிள்ளையாக நடத்துவதை நிறுத்துவீர்!

[கா. ஆறுமுகம்] இன்று கோலாலம்பூரில் கின்ராரா தேசிய வகைத் தமிழ்ப் பள்ளியில் மலேசியத் தமிழ்ப் பள்ளிக்கூட சமூகத்தை சந்தித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இந்த நாட்டில் இந்தியர்களுக்கு தமிழ்ப் பள்ளிகள் முக்கியம் என்பதை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாகவும், தமிழ்ப்பள்ளிக் கூடங்களின் எதிர்காலம் பற்றி விவாதிக்கவும்  நகல் பெருந்திட்டத்தை தயாரிக்கவும்…

முகநூலில் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் காதலா?

நான் ஷர்மிளா. எனக்கு வயது 17. நான் கிள்ளான் மாவட்டத்தில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். நான் கெட்டிக்கார மாணவி. வகுப்பில் கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்கும் மாணவி நான்தான். இருந்தப்போதும் எனக்கு தொழில்நுடபத்தில் அதிக ஈடுப்பாடுக் கிடையாது. எங்கள் வகுப்பில் நன்னெறிக்…

இந்திய மலேசியர் சமூகம் சிறுபான்மைச் சமூகமா?, ஜீவி காத்தையா

எதிர்வரும் பொதுத்தேர்தல் வேட்பாளர்களுக்கு ஓர் இறுதிக் கேள்வி: இந்நாட்டில் இந்தியர்கள் சிறுபான்மைச் Read More

அரசியல் கைதியாக 32 வருடங்கள்! எதற்காக?

ஆசியா வரலாற்றிலேயே நெடுநாள் அரசியல் கைதியாக 32 வருடங்கள் இருந்த சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சியா தை போ (70) என்பவர் யார்? எதற்காக இந்த தண்டனை? 1963-ல் பல அரசியல் போராளிகள் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டனர். அப்படி தடுத்துவைக்கபட்டவர்களில் ஒருவருக்கு மாற்றாக தேர்தலில் நின்ற …

கல்வி என்பது எதற்கு?

நமது அடிப்படை கல்வி   அமைப்பையே அவமதிக்கும் வகையில் புது வருடத்தன்று நமது மாணவர்கள் மோசமாக தாக்கப்பட்டதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். இது ஒன்றும் ஒரே இரவில் நிகழவில்லை. பல வருடங்கள் அடக்கி ஆளப்பட்டதால் திரண்ட ஆவேசம்தான். மனித உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளையே அம்மாணவர்கள் கோரினர். இனியும் சக்கரத்தின் பற்களில்…

நாடோடிகளாகி.. அகதிகளாகி… எதிர்காலம் கேள்விக் குறியாகி

உள்நாட்டின் போரினால் 1976 மற்றும் 1977 களில் அகதிகளாக வந்த வியட்னாமியர்களுக்கு, மறு குடியேற்றம் நிச்சயிக்கப்படும் வரை எல்லா வசதிகளையும் செய்துக் கொடுத்தோம். காரணம் அமெரிக்காவின் ஆதிக்கம் இருந்தது. அதன் பிறகு, வந்த போஸ்னியா, பாலஸ்தீன், மியன்மார் மக்களுக்கும், வெளிநாட்டினர் மெச்சும்படி எல்லாவசதிகளோடு பலருக்கு நிறந்தர வசிப்பிடத் தகுதி…

வேலைச் சட்டம் 1955 திருத்தம்: தொழிற்சங்கங்களைக் கருவறுக்கும் திட்டம்

ஜீவி காத்தையா, மலேசிய அரசாங்கம் கடந்த அக்டோபர் மாதம் நடப்பிலிருக்கும் வேலைச் சட்டம் 1955 க்கு இருபதுக்கு மேற்பட்ட சட்டத் திருத்தங்களை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது. அவை எவ்வித மாற்றமுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மேலவை அத்திருத்தங்களை டிசம்பர் 22 இல் ஏற்றுக்கொண்டது. இச்சட்டத் திருத்தத்தினால் தொழிலாளர்களின் உரிமைப்…

அமலாக்க பிரிவுக்கு ஒரு வெளிப்படையான சவால்!

வட்டி முதலைகளைப் பற்றி புகார்கள் ஆயிரக் கணக்கில் செய்தாயிற்று. கடன் வாங்குபவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் தொல்லைகள் எண்ணில் அடங்கா. இந்த முதலைகள் ஆரம்பத்தில் தெரிந்தவர்களிடம் வாய் வழி விளம்பரம் செய்தார்கள். அடுத்தது அறிமுக அட்டையைப் (business card) பயன்படுத்தினார்கள். பின்பு சின்ன அளவில் துண்டு விளம்பரம் விநியோகித்தனர். பிறகு…

இண்டர்லோக்: மயங்கிவிட வேண்டாம், ஜா.சுகிதா

மரண பயம் கண்டவர்கள் ஏதேதோ கூறுவார்கள்; ஏதேதோ செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு, அதிலும் கோணல் புத்தி படைத்த அரசியல்வாதிகளுக்கு, தேர்தல் தோல்வி பயம் வந்து விட்டால் எந்த "லோக்கையும்" திறந்து விடுவார்கள். இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்படும் என்ற திடீர் அறிவிப்பு, அதுவும் முதலில் மஇகா அமைச்சர்கள் மூலமாக…

கோயில் போராட்டத்தில் விவேகமற்ற வீரம்!

[சமூகநலன்விரும்பி : க] 25 ஆண்டுகளுக்கு முன் ம.இ.காவால் கைவிடப்பட்ட கோயில் பிரச்னையைத் தீர்த்து வைத்துள்ள இன்றைய பக்காத்தான் மக்கள் கூட்டணி அரசுக்கும் குறிப்பாக டாக்டர் சேவியர் சட்டமன்ற உறுப்பினர் ரோசியா, நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் மற்றும் மந்திரி புசார் காலிட் இப்ராஹிம் அவர்களுக்கும் இப்பகுதி வாழ் மக்கள் சார்பில்…

நிரந்தர தீர்வு காண வேண்டுமே தவிர பொம்மலாட்டங்கள் தேவை இல்லை

மலேசிய சிறுபான்மை இந்திய ஹிந்துக்களின் மனித உரிமை மீறல்களை அர்ச்சகர்களின் துணைக் கொண்டு திசை திருப்பும் போக்கை ஹிண்ட்ராப் மக்கள் சக்தி வண்மையாக கண்டிக்கிறது. ஹிந்து அர்ச்சகர்களையும் , மலேசிய ஹிந்து சங்கத்தையும் முன்னிறுத்தி பாரிசான் அரசை போலவே பக்காத்தான் அரசும் நாட்டாமை அரசியல் நாடகம் ஆடுகிறது. ஹிந்து…

“நினைத்த இடத்தில் கட்டி வைப்பதற்கு மக்கள் கால்நடைகளா?”, ஜீவி காத்தையா

தெருப் பேரணி நடத்துவதற்கான மலேசிய மக்களின் உரிமையைப் பறிக்க வகை செய்யும் புதிய அமைதியாகக் கூடுதல் மசோதா 2011 ஐ கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 29) மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவை ஏற்றுக்கொண்டது. டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற மேலவை அம்மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பின்னர் அது சட்டமாகும். இச்சட்டம் மலேசியாவை…