பிரதமரின் இலட்சியப் பாதையை சிதைக்காதே!

24.4.2012, பகல் 3 மணிக்கு மலேசிய அரசாங்க வானொலியான மின்னலில்  இசுலாமிய நிகழ்ச்சி இலட்சியப் பாதையிலே ஒலிபரப்பானது. சிறப்பு விருந்தினராக பேராசிரியர் அப்துல்லா பெரியார்தாசன் கலந்து கொண்டார். வானொலி இசுலாமிய பேரறிஞர் ஜமால் அப்துல் ஹமீது செவ்வியை வழிநடத்தினார். முகமன் கூறி; வானொலி சமயப் பேரறிஞர் சிறப்பு விருந்தினரை…

மே தினம் – கால்வயிற்றுக் கஞ்சி முதல்

ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் தேதி, உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர்களின் தினமாக (Day of the International Solidarity of Workers.) கொண்டாடப்படுகின்றது. இன, மத, மொழி, நாடு என்ற யாதொரு வேறுபாடுமின்றி உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. கால்வயிற்றுக் கஞ்சி…

பெர்சே 3.0: அரப் ஸ்பிரிங் முதல் மலேசிய ஸ்பிரிங் வரை!

24.02.2012 அன்று வியூக அறை/ இரவு நேரம்- கடிகாரம் ஆப்ரகாம் லிங்கன் இறந்த நேரமான 10.10-தைக் காட்டிக்கொண்டிருந்தது. முகநூலைத் திறந்தால், ஒரே பெர்சே 3.0 அலைதான். பாரிசான் தலைவர்களைக் (காவல்துறைத் தலைவர்களும் இதில் அடங்குவர்) கேட்டால், பெர்சே 3.0 நாட்டின் அமைதிக்கு பெரிய மிரட்டல் என்றனர். அம்பிகாவும் ஏ.சமாட்…

மிடுக்கான மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி தமிழர் மனதை குளிரவைக்கின்றது!

தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்துவதாகக் கூறி பிரதமர் அவர்கள் நாட்டை வலம் வந்துகொண்டிருக்கிறார். சிலாங்கூர் அரசாங்கமோ கல்லூரியைப் போல் காட்சி-யளிக்கும் ஒரு கம்பீரமான தமிழ்ப்பள்ளியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. (காணொளியை பார்வைியிட அழுத்தவும்) ஆம்! முன்னாள் மிட்லெண்ட்ஸ் தோட்டப் பள்ளிக்கு இப்போது மாற்று வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது! மலேசிய மண்ணில் மாநாட்டு…

நம் மக்கள் பிச்சைக்காரர்களா?

பெஸ்தாரி ஜெயா (பத்தாங் பெர்ஜுந்தை) தாமான் தென்னமரம் மைதானத்தில் நடைபெற்ற 'ஒரே மலேசியா' உதவித் திட்டம் குறைந்தபட்சம் இருவரின் உயிரைப் பலிகொண்டுள்ளது என்ற செய்தி தற்போது காட்டுத்தீ போல் பரவிவருகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தேசிய முன்னணி பேராளர்கள் அச்சம்பவத்தை எப்படியாவது மூடிமறைக்க வேண்டும் என்பதில்…

13வது பொதுத் தேர்தல்: வாக்காளர் முன்பு வைக்கப்பட்டுள்ள தேர்வுகள்

[-டெரன்ஸ் நெட்டோ] 13வது பொதுத் தேர்தல் எந்த மாதம் நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் போட்டிக் கூட்டணிகள் வழங்கப் போகும் தேர்தல் கொள்கை அறிக்கையின் உள்ளடக்கம் இப்போது தெளிவாகத் தெரிகிறது. அம்னோ / பிஎன் வழங்குவது இது தான்: பொருத்தமான முதலாளித்துவம் அவ்வப்போது சிரமப்படும் மக்களுக்கு பிச்சைகள்.…

500 = -1,000,000,000 x 2 ?

கட்டுரைத் தலைப்பின் கணக்கியலில் குற்றம் இல்லை. நாட்டில் இப்பொழுது நடை பெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால் அதன் தீர்வு இப்படிதான் இருக்கும் என்று உறுதியாகச் சொல்வேன். ஒரு குடும்பத்தின் மொத்த மாத வருமானம் ரி.ம. 3,000.00-க்கும் குறைவாகப் பெறுபவர்களுக்காக திடீர்ரென்று ஏற்படுத்தப்பட்ட உதவித் தொகைதான் ரி.ம. 500.00,…

சேமநிதி வாரியம் துரோகம் செய்யலாமா?

2011 வருடம் முடிய, ஊழியர் சேமநிதிவாரியம்.12 மில்லியன் சந்தாதாரர்களைகயும்  ரி.ம. 441 பில்லியன் சொத்து மதிப்புக் கொண்டுள்ளது., உலகத் தரத்தில் அதிக சொத்துக்கள் கொண்ட நிருவனங்களில் இவ்வாரியமும் அடங்கும். ஒரு காலத்தில் இதன் சந்தாதாரர்களுக்கு வருடத்திற்கு 10% வட்டியாக வழங்கி, 3% வரை வீழ்ச்சியடைந்து இப்பொழுது 6% வரை…

50 ஆண்டுகள் தூங்கிய மாஇகா; அபாக்கோ தோட்டத்தில் அலையுது

அண்மைக் காலமாக அபாக்கோ தோட்டத்தைப் பற்றி பத்திரிக்கையில் பல தரப்பினரால் பலவாறு பேசப்பட்டு வருகிறது. அபாக்கோ தோட்டம் ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே இங்கு இருந்து வந்தாலும், கடந்த மூன்று மாதமாகதான் அபாக்கோ தோட்ட பிரச்சனைகள் சுடச்சுட பேசப்பட்டு வருகிறது. தேர்தல் காலத்தில் இதெல்லாம் நாம் எதிர்ப்பார்த்த ஒன்றுதான்.…

மக்கள் நீதிமன்றத்தில் ராஜபக்சே தூக்கிலிடப்பட்டார்! (காணொளி இணைப்பு)

கடந்த 2009-ஆம் ஆண்டு அளவில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது ஈழத் தமிழர்கள் மீது இலங்கையின் சிங்கள அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலையைக் கண்டித்தும் தமிழர்களுக்கு நீதி வேண்டியும் கடந்த 22-ஆம் தேதி மாபெரும் கண்டனப் பேரணி கிள்ளானில் நடைபெற்றது. இப்பேரணியின்போது போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள மகிந்தா ராஜபக்சேவின் உருவபொம்மையை…

கல்வியில் இந்தியர்களின் நிலை, படுமோசம்; படு வீழ்ச்சி!

படித்த வேலைகள் இனிமேல் இந்தியர்களுக்கு கிடைக்காது. புதிதாக உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளுக்கு போட்டி போடும் அளவுக்கு தகுதி பெறும் மற்ற இனங்களை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்தியர்ளை 56 விழுக்காட்டிற்கு அதிகமாக உள்ளதே அதற்குக் காரணம். 2000-இல் வெளியிடப்பட்டு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புள்ளி விபரங்களின்படி கல்லூரி வரை கல்வி…

தமிழர்களின் போராட்டத்தில் அடுத்தக் கட்டம் தமிழீழம்!

-கா.ஆறுமுகம் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் பாணியாக அமைந்த ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் சிறீலங்கா மீதான தீர்மானம் உலக அளவில் மனித உரிமையை நேசிப்பவர்களுக்கும் சுவாசிப்பவர்களுக்கும் கிடைத்த ஒரு வெற்றியாகவே கருதக்கூடும். உலக அளவில் இன்று மனித உரிமைகள் சார்புடைய தீர்மானங்களை முடிவு செய்வது நுண்ணிய இராஜதந்திர…

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி ! (UPDATED)

ஐநா. மனித உரிமை ஆணையக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 24 உறுப்பு நாடுகளின் ஆதரவோடு வெற்றிபெற்றுள்ளது. (காணொளி : 05.43) இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் இன்று மனித உரிமை ஆணையத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அத்தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்பட 24…

சிறீலங்காவைப் போர் குற்றவாளியாக கூண்டிலேற்று!

ஐ.நா தலைமைச் செயலாளரை சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரும் மனு ஒன்று இன்று முற்பகல் மணி 11.30 அளவில் கோலாலம்பூர் விஸ்மா யுஎன்னில் ஐ.நா அதிகாரியிடம் 57 அரசு சார்பற்ற அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டது. (புகைப்படங்கள்) பல்வேறு அமைப்புகளைப் பிரதிநிதித்தும் தனிப்பட்ட முறையிலும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர்…

மலேசியா துங்குவை பின்பற்றி சிறீலங்கா மீதான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்

இந்த நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில்  40,000 க்கு மேற்பட்ட அதன் சொந்த குடிமக்களை - ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் - நாட்டின் குடிமக்களாகிய தமிழர்களின் உரிமைகளை பெரும்பான்மை சமூகமான சிங்களவர்கள் திட்டப்படி மறுத்து வந்ததால் தமிழ் மக்களுக்கு தனிநாடு கோரிய கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக…

தேர்தலில் வாக்குச் சீட்டின் வழி எங்கள் அதிருப்தியைக் காட்டுவோம்!

இம்மாத இறுதிக்குள் புதியத் தமிழ்ப்பள்ளி கட்டிட நிர்மாணிப்புப் பணி தொடங்கப்படாவிட்டால், தேர்த Read More

குற்றவாளிக் கூண்டில் இலங்கை! களம் இறங்கிய அமெரிக்கா!

கதறக் கதறக் கொலைகள் செய்த சிங்கள அரசு முதன்முத​லாகக் கதறு​கிறது. சாட்சிகளை அழித்து​விட்டால், கேட்பதற்கு நாதி இல்லை என்று நினைப்பில், மிகமோசமான இன அழிப்பு இலங்கையில் நடத்தப்பட்டது. இனஅழிப்புக்கு எதிராக உலகநாடுகள் ஒன்று சேர்ந்த அடையாளம்தான், கடந்த 7-ம் தேதி அமெரிக்கா கொண்டு​வந்துள்ள தீர்மானம். ஐக்கிய நாடுகள் மன்றத்தின்…

வேறுபாடற்ற தேசிய கல்வியாக தமிழ்ப்பள்ளியை உருவாக்க வேண்டும்!

-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன் இந்திய மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கல்லூரிகளின் மெட்ரி- குலேஷன் அதாவது புகுமுக வகுப்புகளில் சேர 1000 இடங்கள் ஒதுக்கப்படும் என 2011, செப்டம்பர் மாதம் நடைபெற்ற ம.இ.கா. ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் போது, அக்கட்சியின் தலைவர் ஜி. பழனிவேல் அறிவித்தார். மேலவையில் இது…

பிரதமரிடம் மனு: ‘‘கொலைகார அரசை ஆதரிக்காதே”

இன்று காலை 11 மணி அளவில் பிரதமர் பணிமனையின் முன் திரண்ட அரசியல் மற்றும் சமூக இயக்க பிரதிநிதிகள் இலங்கை போர்க்குற்றப் பதாகைகளை ஏந்தி, "கொலைகார அரசை ஆதரிக்காதே" என்ற கோசத்துடன் மலேசிய பிரதமருக்கு ஒரு கோரிக்கை மனுவை வழங்கினர். [காணொளியை பார்வையிட அழுத்தவும்] 26 பக்கங்கள் கொண்ட அந்த…

சலுகையா அல்லது உரிமையா?

கடந்த 14.02.2012-ல் 100 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கம் போலவே பிரதமருக்கு பாராட்டுகள் பலரிடமிருந்ந்து பலவிதத்தில். இந்திய சமுதாயத்திற்கு குடியுரிமைக் கிடைக்க நான் / நாங்கள் தான் காரணம் என்று இப்பொழுதே பத்திரிக்கைகளில் தனி துதிபாடும் அறிக்கைகள்போல் கூடிய விரைவில் அரை அல்லது முழுப் பக்கத்துடன்…

யாருக்காக, லினாஸ் யாருக்காக? மலேசியா கதிர் இயக்க குப்பை மேடா?

நேற்று காலையில் குவந்தான் திடலில் சுமார் ஆயிரம் காவல்துறையினர் முன்பு கூடிய 15,000 மலேசிய மக்கள், லினாஸ் என்ற கதிரியக்க சுத்தரிப்பு நிலையத்தை 24 மணிநேரத்திற்குள் பிரதமர் மூட அறிவிக்காவிட்டால் இதுபோன்ற மறியல்கள் தொடரும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். லினாஸ் நிறுவனம் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தது. அந்த நிறுவனமானது குவந்தான் அருகில்…